அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வகையில் தங்கச்சிமடத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவிடம் அருகே உள்ள பேய்க்கரும்பு கிராம மக்கள் ‘தங்கள் கிராமத்தில் வாடகை கட்டடத்தில் ரேசன்கடை இயங்கி வருகிறது. கடையை காலி செய்யும் நிலை தற்போது ஏற்பாட்டுள்ளது. அவ்வாறு கடையை காலி செய்யும் போது கிராமத்தை தாண்டி தூரமான இடத்தில் கடை அமைய வாய்ப்புள்ளது. இதனால் கிராம மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே எங்கள் கிராமத்திலேயே சொந்தமாக கட்டடம் கட்டி தர வேண்டும்’ என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த எம்.எல்.ஏ இந்த பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்ற இப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்திரவிட்டார்.
இராமநாதபுரம் நகர் 20வது வார்டு பாம்பூரணி பகுதி மக்களும் இதே போல் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இப்பகுதியில் ரேசன்கடை கட்ட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.00 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்ற இப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உத்திரவிட்டார்.
பாம்பன் ஊராட்சி தெற்குவாடி கிராம மீனவ மக்கள் இதே போல் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இப்பகுதியில் ரேசன்கடை கட்ட ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10.00 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெற்ற இப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உத்திரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment