Saturday, 24 May 2014

துபாய் கிளை சார்பாக ART OF PARENTING குழந்தைகள் வளர்ப்பு முறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக ART OF PARENTING குழந்தைகள் வளர்ப்பு முறை நேற்று 23.05.2014 மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 மணிவரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் மாலை சரியாக 05:00 மணியளவில் ஆரம்பிக்க பட்டது. இதில் சகோதரர் ஹுசைன் பாசா  அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் சிறப்பான முறையில் பயிர்ச்சி அளித்தார்கள். இதில் ஆர்வமுடன் 60க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். இதில் குழ்ந்தை வளர்க்கும் விதம் கையாளும் முறை, குழ்ந்தைகளிடம் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் முறை போன்ற வற்றை சிறப்பான முறையில் எடுத்து கூறினார்கள்.  இந்த பயிற்சி வகுப்பில் அபுதாபியில் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர். முஹமது லாபிர், சீனி பாவா பஹுருதீன், பேட்டை தாதா பீர் முகம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். 

மேலும் கலந்து கெண்ட அனைத்து இது மாதிரியான பயிர்ச்சி வகுப்பு யு எ  இ அனைத்து இடத்திலும் நடத்த வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 


இறுதியாக சகோதரர் A.S.இபுராகிம்  அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 





Monday, 12 May 2014

துபாயில் கடந்த 6 மதமாக நடைபெற்ற பேச்சுப்பயிற்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 6 மதமாக நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று 12.05.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு ஆரம்பிக்க பட்டது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் குவைத் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர் அப்துல் பாசித் புஹாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கலந்து கெண்ட அனைத்து பேச்சாளர்களும் சுமார் 10 நிமிடம் அவர்களது தலைப்பின் கீழ் பேசினார்கள். சகோதரர் அப்துல் பாசித் புஹாரி அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களும் எவ்வாறு  தாவ பணி செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பு சுமார் ஆறுமாத காலமாக அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் சுமார் 100 மேற்ப்பட்ட  தலைப்புகளில் உரையாற்றபட்டது. 

மேலும் சகோதரர் அப்துல் பசித் புஹாரி அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் ஒரு சுருக்கமான உரை அளித்து இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு கலந்து கொண்டதுக்கான ஆவணம் பரமக்குடி.அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக கொடுக்க பட்டது.


சகோ. முஹம்மது ரபி 


சகோ. இர்பான் அலி 
சகோ. சபியுல்லாஹ் 
சகோ. மதுக்கூர் ராவுத்தர் ஷா 

சகோ. சையது முஹம்மது 



சகோ. அப்துல் ரஹ்மான் 


முகம்மது இர்பான் அலி 



சகோ. மதுக்கூர் ஹாஜா

மேலும்  சகோ. மதுக்கூர் ஹாஜா இந்த பணி இன்ன பிற இடங்களிலும் நடைபெறவேண்டும் என கேட்டு கொண்டார்கள்..


சகோ. இபுராகிம் 
இறுதியாக இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பின் அமீர் திருச்சி இர்சாத் அஹ்மது அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, 11 May 2014

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கிச் சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய்ப் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்துச் சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்துச் சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டு போன கண்களும்
இருண்டு போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசை பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குத்தானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய்த் துடைத்துவிட்டு;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

Thursday, 8 May 2014

உம்ரா செய்யும் முறை மற்றும் பயிற்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உம்ரா செய்யும் முறை மற்றும் பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹுவின் மாபெரும் உதவியால் பரமக்குடி அன்னை ஆயிஷா தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய தாவ பணிகள் செய்துகொண்டு இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்,



அதில் உம்ரா செல்பவர்களுக்கு அல்குரான் மற்றும் நபிவழிபடி உம்ரா செய்யும் முறை மற்றும் பயிற்ச்சி வகுப்பு நடைபெறும். துபாய் மற்றும் U.A.E லிருந்து உம்ரா செல்பவர்கள் தொடர்பு கொள்ளவும். 

தொடர்புக்கு இபுராஹிம் 971 50 2933713.

இன்ஷா அல்லாஹ் அதற்க்கு உரிய முறையில் பயிற்ச்சி ஏற்ப்பாடு செய்யப்படும். 

தலைவர்-துபாய்
அன்னை ஆயிஷா தர்ம அறக்கட்டளை
பரமக்குடி

Wednesday, 7 May 2014

அழைப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அழைப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

1) அழைப்பு பணி செய்பவர்கள் முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்பக் காலத்தில் இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

இதற்கு உதாரணமாக: -

அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.

தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.

இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.

எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.

நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

5 விஷயங்களை,5 விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்

5 விஷயங்களை,5 விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள்
1.முதுமைக்கு முன் இளமையையும்

2.நோயக்கு முன் உடல் நலத்தையும்

 3.வறுமைக்கு முன் செல்வத்தையும்


4.வேலையில் ஈடுபடும் முன் ஒய்வையும்
 5.மரணம் வரும்முன் வாழ்க்கையையும்
அரிதாகக்கருதி பயன்படுத்திக்கொள்ளுங்கள்

அன்புடன்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்

மோடியை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வந்து சிறையில் தள்ள வேண்டும் -

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மோடியை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வந்து சிறையில் தள்ள வேண்டும் - பெண் சிங்கம் மம்தா கர்ஜனை...!
இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள போங்கோவன் என்னும் இடத்தில் பேசிய மம்தா, மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெங்காலி பேசுபவர்களுக்கும் பெங்காலி மொழி பேசாதவர்களுக்கும் இடையே பிளவு உண்டாக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது.
மக்கள் மத்தியில் வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரம் உண்டாக்க திட்டமிடும் மோடிக்கு பிரதமர் ஆக எந்த தகுதியும் கிடையாது.
தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறும் இவரின் இடு
ப்பை சுற்றி கையிற்றை கட்டி சிறையில் அடைக்கவேண்டும்.
அவர் இங்கு பொதுக்கூட்டங்களில் பேச நான் அனுமதித்துள்ளேன். இதே நான் இவ்வாறு குஜராத்தில் பேசமுடியுமா? இவர் அரசியலில் ஈடுபடவே தகுதி அற்றவர் என மம்தா பேசியுள்ளார்.
ஒரு வகையில் பார்த்தால் மம்தா சொன்னது உண்மை தான், மேற்கு வங்கத்தில் சென்று பேசிய மோடி அங்குள்ள மக்கள் மத்தியில் மொழி வாரியாக பிரச்சனையை ஏற்படுத்தினார்.
இதே மம்தா குஜராத் சென்று கண்டிப்பாக இவ்வாறு பேச முடியாது. அண்டர் கிரவுன்டில் ஏற்பாடு செய்து அடியாட்களை கொண்டு கூட்டம் நடத்த விடாமல் செய்வார்.
கெஜ்ரிவால் அங்கே சென்று எத்தனை சிரமங்களை மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
மோடியின் ஆட்டம் இத்துடன் முடிந்து விடுமா ?.
இன்னும் தொடருமா ?.
என்பதை அறிய இன்னும் சிறிது நாட்களே உள்ளன.
அவனுடைய ஆட்டம் முடிய அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

Saturday, 3 May 2014

இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊடகம் எப்படி நடந்து கொள்கிறது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,





இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஊடகம் எப்படி நடந்து கொள்கிறது என்று பாருங்கள் எனது அருமை தொப்புள் கொடி உறவுகளே....
அசாமில் நேற்று நடந்த பயங்கரவாத சம்பவத்தை எந்த ஒரு பத்திரிகையும் பெரிது படுத்தி எழுதவில்லை என்ன காரணம் தெரியுமா ....?
பயங்கரவாத செயலால் இறந்த 30பேரும் எம் இஸ்லாமிய சமுகத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் ...
" ஊடகமும் ஒரு தூண் இந்தியவிற்கு என்று சொல்லை மாற்றி , தற்பொழுது பாசிச பயங்கரவாத கும்பலுக்கு ஒரு தூணாக விளங்குகிறது ஊடகம் "
-மதுக்கூர் ஃபவாஸ் தமுமுக .

Thursday, 1 May 2014

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு
ஒருவர் பலி வன்மையாக கண்டிக்கிறேன்
இதைச்செய்த காட்டுமிராண்டிதனத்தில் உள்ளவர்கள் மனிதகுல விரோதிகள்... யாராக இருந்தாலும் மிகக்கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்...."
கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
Like ·  · 

Saturday, 26 April 2014

துபாயில் இன்று 27.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு -MTTC

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி பல்வேறு இடங்களில் கடந்த 6 வருடமாக நடைபெற்று வருகிறது.

இன்ஷா அல்லாஹ் 
துபாயில் இன்று 27.04.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி  வகுப்பு மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெறும்.  

சகோதரர்கள் கட்டாயம் முன் அனுமதி பெற்று வரவும் தயவு செய்து அனுமதி இல்லாமல் வர வேண்டாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு. 

இந்த அறிய வாய்ப்பை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் .
அமீர் - மதுக்கூர் ஹாஜா 050-6989822


http://asibrahim.blogspot.ae/2010/12/starting-thuwa.html