Monday, 24 June 2024

அம்மாபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அம்மாபேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? 

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் 

#mmkitwing #jawahirullamla #பாபநாசம்#Papanasam
👇👇👇
https://www.facebook.com/share/v/EHEcAz1M1ECtrwFG/?mibextid=oFDknk
👇👇👇
https://x.com/mmkhqofficial/status/1805166973594321253?t=COWV5AENta5x4vOnAh5bAg&s=19

செய்தியின் கட்டமைப்பு

செய்தியின் கட்டமைப்பு

நாளிதழ்களில் செய்திகளைப் படிக்கும் பொழுது அவற்றில் ஒரு திட்டவட்டமான அமைப்பு இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு செய்தியிலும் தலைப்பு, முகப்பு, உடல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றிற்குச் செய்தியின் கட்டமைப்பு என்று பெயரிடப்படுகிறது.

செய்தியின் மையக் கருத்து அல்லது தலைமைக் கருத்து செய்தியின் தலைப்பில் இடம்பெறும். அதனை அடுத்து அமைவது தேதி வரி அல்லது நாள் வரி (Date line) என்பதாகும். இதில் நிகழ்ச்சி நடைபெற்ற நாளும், செய்தி வெளியாகும் ஊரின் பெயரும் தரப்படும். அடுத்து செய்தியின் சாரத்தைக் கூறும் முகப்பு (Lead) என்பது அமைகிறது. முகப்பை அடுத்து, செய்திகள் விவரமாகத் தரப்படுகின்றன. இப்பகுதி முழுவதும் உடல் (body) எனப்படுகிறது.

6.2.1 தலைப்பு

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் தலைப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைப்பு செய்தியின் சாரத்தைக் கூறுவதாகவும், செய்தியை விளம்பரப் படுத்துவதாகவும், அழகுபடுத்துவதாகவும் அமைகிறது. அது, தலைப்பை மட்டும் படிக்கும் வாசகர்க்குச் செய்தியைச் சுருக்கித் தருகின்றது. மேலும் படிக்கக் கூடியவர்களைச் செய்தியை நோக்கிக் கவர்ந்து இழுக்கிறது. அத்துடன் தலைப்புகள் செய்தித்தாளுக்கு ஓர் ஆளுமையைத் தருகின்றன. ஒரு செய்தித்தாள் பரபரப்பாகச் செய்தியைத் தரக் கூடியதா? நிதானமாக எழுதக் கூடியதா? கட்சிச் சார்புடையதா? நடுவுநிலையானதா? என்றெல்லாம் தலைப்புகளைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளலாம்.

* வகைகள்

தலைப்பு செய்தித்தாளின் பக்கத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்து, படிக்கத் தூண்டுகிறது. தலைப்புக்கும் பலவடிவங்கள் உண்டு. அவை பற்றி அறிவோமா?

* நெற்றித் தலைப்பு (Banner)

செய்தித்தாளின் அனைத்துப் பத்திகளையும் இணைத்து முதன்மைத் தலைப்பாக அமைப்பர்.

* ஒரு வரித் தலைப்பு (Single Line headline)

ஒரே வரியில் அமையும் இத்தலைப்பு வாசகர்களை எளிதில் கவர்ந்துவிடும். எடுத்துக்காட்டு: யார் பிரதமர் என்பதே கேள்வி : ஜெ (தினமணி பக்.9 நாள் 12.03.2003)

* இரு வரித் தலைப்பு (Two Lines headline)

பெரும்பாலான செய்தித்தாள்கள், இரண்டு வரிகளில் அமையும். இவ்வகைத் தலைப்பினைப் பயன்படுத்துகின்றன. சான்று : இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலையுடன் தமிழ் இணையப் பல்கலை. ஒப்பந்தம். (தினமணி, 12.03.2004, பக்.11)

* பிரமிடு வகைத் தலைப்பு

இவ்வகைத் தலைப்பு ஓர் அழகிய வடிவமைப்பினைத் தரும். இவ்வகைத் தலைப்பினையும் பெரும்பாலான பத்திரிகைகள் பயன்படுத்துகின்றன. இவ்வகைத் தலைப்பு இரண்டு வகைப்படும்.

1) மூன்று வரிசைப் பிரமிடு முறை

சான்று : அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா (தினமணி, 12.3.2004, பக்.2)

2) தலைகீழ்ப் பிரமிடு முறை

சான்று : தொலை நிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் வெளியீடு (தினமணி, 12.03.2004, பக்.3)

* தோள் தலைப்பு (Shoulder headline)
* இடது வரிசைத் தலைப்பு (Flush Left headline)
* வலது வரிசைத் தலைப்பு (Flush Right headline)
* ஓடு தலைப்பு (Run to headline)
* முகப்புக் கதைத் தலைப்பு (Lead story headline)
* பெட்டித் தலைப்பு (Boxed headline)

போன்று தலைப்புகள் பல வடிவங்களில் இருப்பினும் இவற்றை மிகவும் அரிதாகவே பயன்படுத்துகின்றனர்.

6.2.2 முகப்பு (lead)

தலைப்பிற்கும் செய்திக்கும் இடையில் அச்செய்தியினை எழுதியவர் பெயர் அமைந்திருக்கும். இதனை, பெயர் வரி (By-line) என்பர்.

முகப்பின் தொடக்கத்தில் எந்த ஊரில், என்ன நடந்தது என்பதைக் குறிக்கும் வகையில் நாள் வரி (Date Line) அமைக்க வேண்டும்.

முகப்பு (Lead) என்பது தலைப்பின் விளக்கமாக, செய்திகளின் சுருக்கமாக அமைய வேண்டும். அவை ஐந்து இலக்கணங்களைக் கொண்டு இருக்க வேண்டும்.

* அறிவிக்கும் பணியைச் செய்வதாக இருக்க வேண்டும்.
* சுருக்கமாக இருக்க வேண்டும்.
* சொற்கள் எளிமையாக இருப்பதுடன் தெளிவாகவும் இருக்க வேண்டும்.
* நேரடியாகச் சொல்ல வேண்டும்.
* சுவைபடச் சொல்ல வேண்டும்.

* வகைகள்

முகப்பு (lead) எழுதுவதில் பலவகையுண்டு. அவை:

* இணைப்பு முகப்பு அல்லது தொகுப்பு முகப்பு (summary lead)
* மதிப்பீட்டு முகப்பு (value judgment lead)
* நாடக அமைப்பு முகப்பு (dramatic lead)
* முரண் முகப்பு (contrast lead)
* மேற்கோள் முகப்பு (quotation lead)
* சிறப்பு முகப்பு (key note lead)
* ஆர்வமூட்டும் முகப்பு (suspended interest lead)

ஆகியனவாகும்.

செய்தியின் முக்கிய நிகழ்ச்சியைச் சுருக்கமாக அமைப்பதே முகப்பின் நோக்கம். ஏன், என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி, யார் என்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக அது இருக்க வேண்டும்.

செய்தியின் கருத்தை வலியுறுத்தும் வகையில் சொற்றொடரைத் தொடங்க வேண்டும்.

அவசரமாகப் படித்துச் செல்லும் வாசகர், முகப்பைப் படித்தே முழுச் செய்தியையும் அறிந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தும் வகையில் முகப்பை அமைக்க வேண்டும்.

செய்திகளை எழுதும் முன்னர், மேற்கண்ட வினாக்களுக்கு விடை கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னர் விவரங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பத்திரிகைகள், இணைப்பு முகப்பு அல்லது தொகுப்பு முகப்பைத்தான் கையாளும். காரணம் முக்கியச் செய்திகளை எளிமையாகச் சொல்ல முடியும்; அதனோடு மற்ற எல்லா முகப்புகளுக்கும் இதுவே அடிப்படையானதாக அமையும்.

6.2.3 செய்தியின் உடற்பகுதி

இது முகப்பின் விரிவாக்கமாக இருத்தல் வேண்டும். முகப்பில் காணப்படும் செய்திகளை விளக்கிக் கூறுவதாகவும், கூடுதலான விவரங்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஏன், எவ்வாறு, எப்பொழுது, எப்படி என்று விளக்கிக் கூறுவதாகவும் அமைய வேண்டும். இதில் முக்கியமான செய்திகளை முதலிலும், குறைந்த முக்கியத்துவம் உள்ள செய்திகளை இறுதியிலும் சொல்ல வேண்டும். இடப் பற்றாக்குறையின் காரணமாகக் கடைசிப் பத்திகளை நீக்க நேரிடலாம். அதனால் முக்கியமான விவரங்களை முதலிலேயே சொல்லி விடுவது சிறந்தது.

* செய்தியின் முடிவுரை

செய்தியின் கடைசிப் பத்தியைச் செய்தியின் முடிவு என்ற வகையில் அமைக்க வேண்டும்.

Dr. M. முஹம்மது அஸ்கர் தமிழ்த் துறை பேராசிரியர் மற்றும் ஆய்வு ஒருங்கிணைப்பாளர்

Dr. M. முஹம்மது அஸ்கர் 
தமிழ்த் துறை பேராசிரியர் மற்றும் 
ஆய்வு ஒருங்கிணைப்பாளர் 
முஸ்லிம் கலைக் கல்லூரி 
திருவிதாங்கோடு. 

Director 
Isaimurasu-fm. 

திட்ட இயக்குனர் மற்றும் 
பேராசிரியர் 
Aiman media studies. 
அபுதாபி அய்மான் சங்கம் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தி சாதிக்க நடத்தும் 
digital journalism class. 

திட்ட இயக்குனர் 
Hira Education consultant trainers program  
உயர்கல்விக்கு வழிகாட்டும் பயிற்சியாளர்களை 
"ஊருக்கு ஒரு கல்வி ஆலோசகர்" என்னும் திட்டத்தின் கீழ் 
தமிழகம் முழுவதும் உருவாக்கி வரும்
Hira foundation  
Hira skill development Academy Education consultant trainers program . 

Founder  
Youth Development Movement 
தகுதிமிக்க இளைஞர்களுக்கு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கி 
தனிமனித மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வழங்கும் 
tamil Nadu Islamic Youth Development Movement. 

நிறுவனர் மற்றும் 
ஒருங்கிணைப்பாளர் 
"வெற்றி மேடை" 
மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கு 
கட்டணம் செலுத்தி பயிற்சி பெற இயலாத இளைஞர்களுக்கும் 
வீடுகளில் இருந்து போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாகும் பெண்களுக்கும் 
இணைய வழியில் உரிய பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக தேர்வு பயிற்சிகள் வழங்கி வருகிறது 
வெற்றி மேடை. 

தேசிய துணைச் செயலாளர் 
அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நிருபர்கள் சங்கம் 
சென்னை. 

Lecturer 
Right Information Act (2005) 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில் 
குமரி மாவட்டத்தில் கருத்தரங்குகளை 
நடத்தி வரும் 
"என் தேசம்' என் உரிமை" இயக்கத்தின் விரிவுரையாளர் 

Field advisor 
 1098 Child helpline 
குழந்தைகள் உதவி மையத்திற்கு 
மாவட்ட அளவில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் 
கள ஆலோசகர். 

Advisory committee member & 
Project coordinator 
கல்விக் குழு 
அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு 
கன்னியாகுமரி மாவட்டம். 

துணைத் தலைவர் 
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தக்கலைக் கிளை. 

ஒருங்கிணைப்பாளர் 
அரசுப் பள்ளி முன்னேற்றச் சங்கம் 
ஆளூர் 
கன்னியாகுமரி மாவட்டம்.

செய்திகளின் வகைகள். 1.4 செய்தி வகைகள்

செய்திகளின் வகைகள். 

1.4 செய்தி வகைகள்

செய்திகளை அவற்றின் தன்மையைக் கருதிப் பலவகைகளாகப் பகுக்கலாம். அவற்றின் முக்கியமான வகைகளை இங்குக் காணலாம்.

1.4.1 குற்றச் செய்திகள் (Crime News)

குற்றச் செய்திகள் இடம் பெறாத செய்தித்தாள்களே இல்லை என்று கூறும் அளவுக்குக் குற்றச் செய்திகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குற்றச் செய்திகள் கதைகளைப் போல் அமைவதால் அவற்றைப் படிப்பதில் வாசகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதழ்கள் பொறுப்போடும் கவனத்தோடும் வெளியிட வேண்டிய செய்திகள் குற்றச் செய்திகளாகும்.

* குற்றச் செய்திகள் என்றால் என்ன?

பொதுவாக, சட்டத்திற்கு எதிராகவோ, மீறியோ, புறம்பாகவோ செய்யும் எந்தச் செயலையும் குற்றம் என்கிறோம். சட்டப்படி தண்டனைக்குரிய எந்தச் செயலும் குற்றமாகிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, ஏமாற்றுவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, அடிதடி, இலஞ்சம் வாங்குவது போன்றவை எல்லாம் குற்றங்களாகின்றன. இவைகள் பற்றிய விவரங்களைச் செய்தித்தாள்களில் வெளியிடும் போது அவை குற்றச் செய்தியாகின்றன.

குற்றச் செய்திகளை வெளியிடும் போது தக்க ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். ஐயப்பாட்டிற்குரிய எதனையும் செய்தியாக வெளியிடக்கூடாது. தீர விசாரித்து அறிந்தவற்றை, உண்மையானவற்றை எழுத வேண்டும். ஊகங்களுக்குக் குற்றச் செய்தியில் இடம் இல்லை. கற்பனை கலக்காத நாடகப் பாங்கில் குற்றச் செய்தியைக் கூறலாம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு குற்றச் செய்திகளை விசாரித்து அறிவார்கள்.

சட்டம், பண்பாடு, அறம், மரபு, நாகரிகம் ஆகிய உணர்வுகளோடு குற்றச் செய்திகளை எழுதுவதும் வெளியிடுவதும் தேவையாகும்.

1.4.2 அரசுச் செய்திகள் (Government News)

அரசின் கொள்கைகளும், நடைமுறைகளும், செயல்திட்டங்களும் மக்களின் வாழ்க்கையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து அரசின் நடவடிக்கைகளை மக்களுக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசுக்கும் எடுத்துக் கூறும் பணியைச் செய்தித்தாள்கள் செய்துவருகின்றன.

பொதுவாக, தகவல் - மக்கள் தொடர்புத் துறை, அமைச்சகங்களின் செய்திக் கூட்டங்கள்; செயலர்கள், துறைத் தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகள்; அரசு நடத்தும் இதழ்கள், அரசிடம் செல்லும் தூதுக் குழுக்கள், செய்திக் கசிவுகள் (Leakage) ஆகியவற்றின் மூலம் அரசின் செய்திகள் பத்திரிகைகளுக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வொரு அமைச்சகமும் தேவையை ஒட்டிச் செய்தியாளர் கூட்டங்களை நடத்தி, தங்களது கொள்கைகளை அறிவிக்கின்றது. தலைமை அமைச்சரும், பிற அமைச்சர்களும் தேவைப்படும்போது செய்தியாளர்களை அழைத்துச் செய்திகளைத் தருகின்றனர்.

பொதுவாக அரசுச் செய்திகளை வழங்க மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை பத்திரிகைக் கடிதம் (Press Communique), பத்திரிகைக் குறிப்பு (Press Note), பத்திரிகை வெளியீடு (Press Release) என்ற மூன்று ஆகும்.

அரசின் முக்கியமான கொள்கைத் தீர்மானங்களை மட்டுமே பத்திரிகைகளுக்குத் தெரிவிப்பது பத்திரிகைக் கடிதம் ஆகும். இது மிகவும் முக்கியமானதாகும்.

அரசுத் துறைகளின் தீர்மானங்கள், சில விவகாரங்களைப் பற்றிய அரசின் நிலை ஆகியவற்றைக் கூறுவது பத்திரிகைக் குறிப்பு ஆகும்.

அன்றாட நிர்வாகச் செய்திகளையும், அமைச்சகங்களின் நடவடிக்கைகளையும் நாள்தோறும் அரசு செய்தித்தாள்களுக்குத் தருகின்றது. அது பத்திரிகை வெளியீடு ஆகும்.

1.4.3 நீதிமன்றச் செய்திகள் (Court News)

மனித ஆர்வத்தைத் (Human Interest) தூண்டுகின்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் அன்றாடம் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட வழக்குகளின் விவரங்களையும் தீர்ப்புகளையும் அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதனால் செய்தித்தாள்கள் அவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றன. மேலும் சுவையான வழக்குகள் நல்ல வர்ணனையுடன் கட்டுரையாக இடம்பெறும் பொழுது வாசகர்களுக்கு அவை நல்ல தீனியாக அமைகின்றன.

நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் செய்தித்தாள்களில் எழுதும் பொழுது மிகக் கவனமாக எழுத வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகாமலும் (Contempt of Court), வழக்கின் போக்கினையோ, வழக்கோடு தொடர்புகொண்டவர்களையோ எந்த வகையிலும் பாதிக்காமலும் செய்திகளை எழுத வேண்டும்.

சட்டக் கலைச் சொற்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. வேண்டிய விளக்கங்களுடன் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களைப் பயன்படுத்தி வழக்கு மன்றச் செய்திகளை எழுத வேண்டும்.

வழக்கின் நடைமுறை பற்றிச் செய்தியாளர் தனது சொந்தக் கருத்துகளைக் கூறக் கூடாது. வழக்கு நடந்த முறையை நடுநிலையில் இருந்து விளக்க வேண்டும்.

சில நீதிமன்ற வழக்குகள் சுவை மிக்கதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கணவன் - மனைவி மணவிலக்கு வழக்கு, கற்பழிப்பு வழக்கு, வழுக்கி விழுந்த பெண்களின் வழக்கு ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் சமுதாய நலன் கருதி அவற்றை அப்படியே வெளியிடுவதை இதழ்களின் பத்திரிகை தர்மம் தடுக்கின்றது.

1.4.4 சட்டமன்ற, நாடாளு மன்றச் செய்திகள் (Legislative Assembly and Parliamentary News)

மக்களாட்சி செம்மையாக நடைபெற, சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் என்ன நடைபெறுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் இவற்றின் செய்திகளை வெளியிடுவது இதழ்களின் முக்கியக் கடமையாகின்றது. சட்டப் பேரவை, நாடாளுமன்றச் செய்திகளைத் திரட்டுகின்ற செய்தியாளர்கள் அவைகளின் அமைப்பு முறைகளையும், நடைமுறைகளையும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.

தீர்மானங்களின் மீதும், மசோதாக்களின் மீதும் நடைபெறக் கூடிய விவாதங்களையும், அமைச்சர்களின் பதில் உரைகளையும்; தீர்மானங்கள், மசோதாக்கள் நிறைவேற்றுவதனையும் செய்தியாளர் நன்கு கவனித்துச் செய்திகளாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

சட்டமன்ற, நாடாளுமன்றச் செய்திகளை எழுதும் பொழுது அவைகளின் நடைமுறைகளையும், சட்டங்களையும் அறிந்து எழுத வேண்டும். அவைத் தலைவர் பதிவேட்டிலிருந்து நீக்கிய நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் தண்டனைக்கு ஆட்பட நேரிடும்.

பேரவையின் உரிமை மீறலுக்கு ஆட்படாமல் செய்திகளைத் தர வேண்டும். பேரவையினை அவமதிக்கும் வகையில் செய்திகளைத் தரக் கூடாது. செய்தியாளர்கள் தவறு செய்தால் சட்ட மன்றம் நீதிமன்றமாக மாறித் தண்டனை வழங்கவும் செய்யும்.

தமிழ்நாட்டில் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் உரிமை மீறல் தன்மையுள்ள கேலிச் சித்திரத்தைப் போட்டுத் தமிழக அமைச்சர்களைக் கேலி செய்ததாக, அதன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியன் கைதாகி விடுதலையான செய்தி பத்திரிகை உலகில் பெரிதாகப் பேசப்பட்டது.

அண்மையில் தமிழ்நாட்டில் தி இந்து (THE HINDU), முரசொலி ஆகிய இரு பத்திரிகைகள் மீது உரிமை மீறல் குற்றம் சுமத்தி, அவற்றின் துணை ஆசிரியர்களை கைது செய்தமை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் போது கவனமாகச் செயல்பட வேண்டும்.

1.4.5 பொருளாதாரச் செய்திகள் (Economics News)

மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நிலையில் செய்தித்தாள்களில் இடம்பெறும் செய்திகளில் பொருளாதாரச் செய்தியும் ஒன்றாகும். நாட்டின் முன்னேற்றச் செய்திகளோடு சேர்ந்தவைகளாக, பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்களும், அவற்றின் விளக்கங்களும் அமைகின்றன.

பொருளாதாரச் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்காமல். விரிந்து பரந்து கிடக்கின்றன. வேளாண்மை, தொழில், போக்குவரத்து, வாணிபம், வேலை வாய்ப்புகள், மின்சாரம், உணவு நிலை, நிதி தொடர்பானவை, வரி விதிப்பு, விலைவாசிகள், பணப் புழக்கம், கிராம வளர்ச்சி ஆகியவை எல்லாம் பொருளாதாரச் செய்தியில் இடம்பெறும்.

அரசு தீட்டுகின்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், குறியீட்டளவுகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்வது நாட்டின் வளர்ச்சிக்குத் துணை புரியும்.

பொருளாதாரச் செய்திகளையும், புள்ளி விவரங்களையும் சாதாரண மக்களும் புரிந்து கொள்கின்ற வகையில் எளிமைப்படுத்தி விளக்கங்களுடன் வெளியிட வேண்டும். புள்ளி விவரங்களை மிகுதியாகக் கூறி வாசகர்களைக் குழப்பக் கூடாது.

பொருளாதாரச் செய்திகளை எழுதுகின்ற செய்தியாளர்களுக்குப் பொருளியல் பற்றிய அடிப்படை அறிவு தேவை. பொதுவாக நாட்டு வருவாய், வேளாண்மை, தொழில் ஏற்றுமதி, இறக்குமதி, வங்கி வைப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சி விகிதங்கள், விலைவாசிக் குறியீட்டு எண்கள், அந்நியச் செலாவணி செலுத்தும் நிலை, பல்வேறு வகையான வரிகள் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கோட்பாடுகளின் அடிப்படையில் செய்திகளை எளிமைப்படுத்தி விளக்கி எழுத முடியும்.

பொருளாதாரச் செய்திகளைப் பல செய்தித்தாள்கள் தனிப் பக்கச் செய்திகளாக வெளியிடுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கட்டுரை வடிவத்திலும், வினா-விடை வடிவிலும் இச்செய்திகள் வருகின்றன.

1.4.6 விளையாட்டுச் செய்திகள் (Sports News)

காலையில் எழுந்தவுடன் பத்திரிகைப் படிப்பு என்று கூறும் அளவிற்குப் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக வளர்ந்திருக்கிறது. சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று நாக்கு நாடும் ருசிக்கு ஏற்றாற்போலப் பண்டங்களை வாங்கி உண்பதைப் போல, செய்தித்தாள்கள் வாசகர்களின் ருசிக்கு ஏற்றாற் போலப் பல வகைச் செய்திகளைத் தீனியாகக் கொடுக்கின்றன.

அவற்றில் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரையிலும், பெரியோர் முதல் சிறியவர் வரையிலும், விரும்பிப் படிக்கும் செய்தியாக விளையாட்டுச் செய்திகள் விளங்குகின்றன. காலையில் வீட்டில் செய்தித்தாள் வந்து விழுந்தவுடன் அதன் கடைசி இரண்டு பக்கங்களை முதலில் பார்க்கும் அளவிற்கு விளையாட்டுச் செய்திகள் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றன.

இப்பொழுது தமிழ், ஆங்கிலம் மற்றும் எல்லா மொழிப் பத்திரிகைகளும் விளையாட்டுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. முதன்மையான பல ஆங்கிலப் பத்திரிகைகள் ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதில் பயிற்சியும், தெளிவும், அனுபவமும் கொண்ட (நிருபர்களை) செய்தியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன.

வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் 95 விழுக்காடு வாசகர்கள் விளையாட்டுச் செய்திகளை மிகவும் ஆர்வமாகப் படிக்கின்றனர் என்று கூறுகின்றன. நமது நாட்டிலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் விளையாட்டிற்குத் தனிஇடம் தருகின்றனர். வானொலியில் நேர்முக வர்ணனைகளைக் கேட்பதிலும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதிலும் மக்கள் ஈடுபடுவதைப் பார்த்து, எந்த அளவிற்கு மக்களுக்கு விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறியலாம்.

விளையாட்டுச் செய்திகளை எழுதுகின்ற செய்தியாளர்கள் பல்வேறு விளையாட்டுகளைப் பற்றியும், அவற்றின் விதிமுறைகளைப் பற்றியும், பயன்படுத்தப்படும் கலைச்சொற்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். விளையாட்டுச் செய்திகளைச் சராசரி வாசகரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும்.

செய்தியாளர் விளையாட்டுகளின் பழைய புள்ளி விவரங்களைத் திரட்டி வைத்திருக்க வேண்டும். நிகழ்காலச் சாதனைகளோடு முன் நாளைய சாதனைகளை ஒப்பிட்டு எழுதுதல் வேண்டும். செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரவேண்டும். ஏதாவது ஒரு பக்க ஆட்டக்காரர்களை ஆதரித்து எழுதக் கூடாது. செய்தியாளரின் விருப்பு வெறுப்புகள் வெளிப்படாமல் விளையாட்டுச் செய்திகளைத் தருவது நல்ல பணியாகும்.

விளையாட்டுச் செய்திகளை எழுதுவதற்கு உரிய நடை தனி வகையானது. வாசகர்கள் விளையாட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் தக்க அடைச்சொற்களையும், தனது விமர்சனத்தையும் இணைத்துச் செய்திகளைக் கூற வேண்டும். ஒரு வகையில் விளையாட்டுச் செய்தி நாடக விமர்சனம் போல் இருக்க வேண்டும்.

இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் 2002ஆம் ஆண்டு பங்கு பெற்று வெற்றியடைந்து நமது நாட்டிற்குப் புகழையும் பெருமையையும் சேர்த்துள்ளனர். இச்செய்திகளை நமது செய்தித்தாள்கள் படத்துடன் முதற்பக்கச் செய்திகளாக வெளியிட்டன.

இந்தியக் கிரிக்கெட் அணியினர் 22 ஆண்டுகளுக்குப்பின்பு, உலக சாம்பியன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அவர்கள் நாட்டிலேயே, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 4 விக்கட் வித்தியாசத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் வென்று வாகை சூடிய வரலாற்று நிகழ்ச்சியை அனைத்துப் பத்திரிகைகளும் சிறப்புச் செய்தியாக வெளியிட்டு இந்திய அணிக்குப் பாராட்டைத் தெரிவித்தன.

ஒவ்வொரு செய்தித்தாளும் வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் நாள் அந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வெளியிடுவது மரபு. அதன்படி தி இந்து (THE HINDU) நாளிதழ் இந்திய விளையாட்டு வீரர்கள் 2003ஆம் ஆண்டு நிகழ்த்திய சாதனைகளைப் படத்துடன் வெளியிட்டிருக்கிறது. சில செய்திகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன:

1) கோலாலம்பூரில் (KUALALUMPUR) நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியினர் பங்கு பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றினர்.

2) உலக ஸ்நூக்கர் சாம்பியன் போட்டி சீனாவில் ஜெய்ன்மென் (JAINMEN) என்ற இடத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் பங்கு பெற்று வாகை சூடி சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய வீரர் பங்கஜ்அத்வானி இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.

3) பாரிஸ் (PARIS) நகரில் நடைபெற்ற உலக மகளிர் தடகளப் போட்டியில் (Athletics) நீளம் தாண்டுதல் (LONG JUMP) பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்று வெண்கலப் பதக்கம் (BRONZE) வென்று இந்தியாவுக்குப் புகழ் தேடித்தந்தவர் அஞ்சு பாப்பிஜார்ஜ் (ANJU B GEORGE).

இவ்வாறு செய்தித்தாள்கள் விளையாட்டுச் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து, கவனித்து வெளியிடுகின்றன. மேலும் விளையாட்டிற்காகத் தனியாக இதழ்கள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும்.

1.4.7 பிற செய்தி வகைகள்

மேலும், எதிர்பார்க்கும் செய்திகள், எதிர்பாராத செய்திகள், நேரடிச் செய்திகள், விளக்கச் செய்திகள், கடினமான செய்திகள், மென்மையான செய்திகள், அறிவியல் செய்திகள் எனச் செய்திகள் பலவகைப்படும்.

* எதிர்பார்க்கும் செய்திகள் (Predictable News)

நிகழ்ச்சி ஒன்று இப்பொழுது நடைபெறும் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்போம். அது நடைபெறும் போது எதிர்பார்த்த செய்தியாகிறது. அதனால் இச்செய்தியை எதிர்பார்த்த செய்தி என்ற வகையில் சேர்க்கிறோம். இந்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடைபெறுவது; தமிழ்நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருகை; பாரதப் பிரதமர் வருகை; கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னையில் பலத்த மழை பெய்வது; பலத்த மழைக்குப் பிறகு வெள்ளம் வருவது போன்றவை எதிர்பார்த்த செய்திகளாகும்.

* எதிர்பாராத செய்திகள் (Unpredictable News)

யாரும் சிறிதும் எதிர்பாராத நிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எதிர்பாராத செய்திகளாகும். இரயில் விபத்து, புயல் வீசுவது; பூகம்பம் (நில நடுக்கம்), குண்டு வெடிப்பு, அரசியல் தலைவர்கள் கொலை போன்ற நிகழ்ச்சிகள் இச்செய்திகள் மலரக் காரணமாகின்றன. இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூட்டம் நடைபெறுகின்ற பொழுது, வளாகத்தில் தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிய நிகழ்ச்சியையும் முக்கிய உதாரணமாகக் காட்டலாம்.

மேலும் 10-02-2004 அன்று இரேனியன் கிஷ் நிறுவன வான ஊர்தி (IRANIAN KISH AIRLINE) சார்ஜா (SHARJAH) விமான நிலையத்தில் தரை இறங்கும் போது மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 44 பேர் பலியான சோக நிகழ்ச்சியும் எதிர்பாராத செய்திக்கு உதாரணமாகும்.

* நேரடிச் செய்தி; விளக்கச் செய்தி (Straight News; Explanatory News)

ஒரு நிகழ்ச்சி எப்படி நடைபெற்றதோ அதனை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல வெளியிடுவது நேரடிச் செய்தியாகும். சட்டமன்றத் தலைவர் சில உறுப்பினர்களைப் பதவி விலகும்படி கூறியதை, அப்படியே நடந்தது நடந்தபடி கூறினால் நேரடிச் செய்தியாகும். ஆனால் நடந்ததை விளக்கும் பொழுது, என்ன காரணம் கருதிச் சட்ட மன்ற அவைத் தலைவர் அந்த நடவடிக்கை எடுத்தார் என்றும் விளக்க வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்க அவருக்கு, அதிகாரம் இருக்கிறதா என்ற விளக்கத்தையும் சேர்த்து வெளியிடுவது விளக்கச் செய்தியாகும்.

* கடினமான செய்திகள்; மென்மையான செய்திகள் (Hard News; Soft News)

தமிழக அரசின் நிதி அமைச்சர் அவர்கள் 11-02-2004 அன்று சட்டப் பேரவையில் 2004-2005ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை அறிவித்தார். இது கடினமான செய்திக்கு உதாரணமாகும். அறிவியல் அறிஞர்கள் அறிவியல் மாநாடுகளில் வெளியிடும் செய்திகளும், தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கூறும் செய்திகளும் கடினமான செய்திகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

உடனடியாகப் பாமர வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை மென்மையான செய்திகளாகும். திரைப்பட வெளியீடு, தேர்தல் முடிவுகள், கிரிக்கெட் போட்டியின் முடிவுகள் ஆகியவற்றை மென்மையான செய்திகளாகக் கருதலாம். ஆனால் இவற்றைச் சூடான செய்திகள் (Hot News) என்று கூறுவதும் உண்டு. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப் போட்டியில் வெற்றியை இழந்தது என்ற சூடான செய்தி கேட்டவுடன் உயிரை விட்ட ஒருவரின் பரிதாபச் செய்தி நமது பத்திரிகைகளில் இடம் பெற்றதை மறக்க முடியுமா?

அமெரிக்காவில் செய்திகளை, கடினமான செய்திகள் என்றும் மென்மையான செய்திகள் என்றும் பிரிக்கின்றனர்.

* அறிவியல் செய்திகள் (Science News)

இன்றைய உலகம் அறிவியல் உலகமாகத் திகழ்கிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்கின்றன. அவை தொடர்பாகப் புதுப்புதுச் செய்திகள் வியக்கத் தக்க வகையில் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை அறிவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளைப் பத்திரிகைகள் தினமும் வெளியிடுவது தேவையாகின்றது.

அறிவியல், தொழில்நுட்பச் செய்திகள் மற்ற செய்திகளிலிருந்து வேறுபடுகின்றன. மற்ற செய்திகளைப் புரிந்து கொள்வது போல் அறிவியல் செய்திகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் பெரும்பான்மையினர் போதுமான அளவு அறிவியல் அறிவு பெற்றிருப்பதில்லை. எனவே தக்க விளக்கத்தோடு எளிமைப்படுத்தி அறிவியல் செய்திகளைத் தர வேண்டியது தேவையாகின்றது.

அடிப்படை அறிவியல் அறிவு பெற்றவர்கள்தான் இச்செய்திகளைத் தவறில்லாமல் வெளியிட முடியும். செய்தி அறிவியலின் எந்தப் பிரிவு சார்ந்தது என்பதையும், அதன் பின்புலத்தையும், தன்மையையும் புரிந்து கொண்டு அறிவியல் செய்திகளை எழுத வேண்டும்.

அறிவியல் இதழ்களும், தொழில்நுட்ப இதழ்களும் இன்று வெளிவருகின்றன. அவற்றில் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் வெளிவருகின்றன.

அறிவியல் செய்திகளை எழுதும் பொழுது பயன்படுத்துகின்ற கலைச்சொற்களுக்கு விளக்கம் தரவேண்டும். பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்திச் செய்திகளை வெளியிட வேண்டும்.

செய்தி என்றால் என்ன? விளக்கமும் வரையறையும்.

செய்தி என்றால் என்ன? 
விளக்கமும் வரையறையும். 

* சொல் - விளக்கம்

செய்தி என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் நியூஸ் (NEWS) என்று குறிக்கிறோம். நியூஸ் என்ற ஆங்கிலச் சொல் நான்கு ஆங்கில எழுத்துகளால் ஆனது. நான்கு எழுத்துகளும் நான்கு திசைகளைக் குறிக்கின்றன.

N என்ற எழுத்து வடக்குத் திசையைக் குறிக்கிறது (North). E என்ற எழுத்து கிழக்குத் திசையைக் குறிக்கிறது (East). W என்ற எழுத்து மேற்குத் திசையைக் குறிக்கிறது (West). S என்ற எழுத்து தெற்குத் திசையைக் குறிக்கிறது (South). அதாவது நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுவது செய்தி என்ற பொருளில் திசைகளைக் குறிக்கும் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு நியூஸ் (NEWS) என்ற ஆங்கிலச் சொல் உருவானதாகக் கூறுவார்கள்.

* பொருள்

நியூ (New) என்றால் புதியது என்று பொருள். இதனைப் பன்மையில் கூறும் பொழுது ‘நியூஸ்' (News) அதாவது புதியன என்று பொருள்படுகிறது. புகழ்பெற்ற சேம்பர்ஸ் ஆங்கில அகராதி நியூஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, புதிதாகக் கேட்கப்படுகின்ற ஒன்று: இப்பொழுதுதான் நடைபெற்ற, ஏதாவது ஒன்றைப் பற்றிய முதல் தகவல் என்று விளக்கம் தருகின்றது. செய்தி என்ற சொல்லுக்குப் பலர் இலக்கணம் வகுக்க முயன்றனர். ஆனால் எந்த இலக்கணமும் முழுமையானதாக அமையவில்லை. செய்திக்குத் தரும் விளக்கம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.

1.1.1 செய்தி பற்றிய விளக்கம்

செய்திக்குத் தரும் விளக்கத்தினைத் தொகுத்துக் கூறலாம். (1) எதனையாவது வெளிக்காட்டுவது செய்தி. (2) நடைமுறையிலிருந்து, சாதாரணமானவற்றிலிருந்து, மாறுபட்ட எதுவும் செய்தியாகும். (3) ஒரு சமுதாயத்தில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கின்ற, அவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியும், கருத்தும் செய்தியாக உருவம் பெறுகின்றன.

பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் செய்தியாக மலர்கின்றன. வாசகர்களுக்குச் சுவையூட்டும் நடப்பு, நிகழ்ச்சிகளின் உண்மைத் தொகுப்புகளே செய்திகள். வாழ்க்கைக்குச் சுவைதரும் எதுவும், அது வெளிப்படுத்தும் முறைகளில் செய்தியாக மலர்ந்து மணம் பரப்புகின்றது. மிகப்பெரிய, புகழ்பெற்ற பெயர்கள் செய்திகளாகின்றன. மக்களைப் பற்றி மக்களுக்காக மக்களால் எழுதப்படுபவை செய்திகள் ஆகும். இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறப்படுகிறது

* பழமையான விளக்கம்

பல ஆண்டுக் காலமாக, நாய் மனிதனைக் கடித்தால், அது செய்தி அல்ல, ஆனால் மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி என்று ஓர் ஆங்கில ஆசிரியர் கூறியதையும் செய்திக்கு விளக்கமாகப் பலரும் எடுத்துக் கூறுவதுண்டு.

இந்த எடுத்துக்காட்டு மூலம், நடைமுறைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட புதுமையான நிகழ்ச்சிகள் செய்தியாகின்றன என்று அழுத்தமாகக் கூறலாம்.

* பொது விளக்கம்

செய்தி பற்றிய எல்லா விளக்கங்களையும் உள்ளடக்கித் தரும் முறையில், செய்தியினை, ஒரு கருத்து, ஒரு நிகழ்ச்சி, சிக்கல் பற்றிய உண்மையான, சரியான, நடுவுநிலையான குறிப்பு, உண்மையானதாக, நிகழ்காலத்தோடு தொடர்புடையதாக, மக்களின் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் நடைமுறைக்கு மாறுபட்டதாக இருக்கும் சிலவற்றைப் பற்றிய விளக்கம் என்று இதழியல் ஆசிரியர் ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுகிறார்.

1.1.2 செய்தியின் சிறப்பு

செய்தித்தாள் வலிமை மிக்கது. நினைத்ததை முடிக்கும் வல்லமை வாய்ந்தது. செய்தியைக் கூறும் செய்தித்தாளின் பேராற்றலை மக்கள் எளிதில் உணரும் வகையில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கீழ்க்காணும் கவிதை மூலம் விளக்குகிறார்.

காரிருள் அகத்தில் நல்ல
    கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
    பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
    உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
    பிறந்தபத் திரிகைப் பெண்ணே

என்று போற்றிப் பாடுகிறார்

மேலும் அவர், இந்த உலகில் உள்ள இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரும் காலையில் கையில் செய்தித்தாளோடு வலம் வரவேண்டும் என்று மற்றொரு பாடல் மூலம் கூறுகிறார். குறுகிய எண்ணங்களை, செயல்களை நீக்கி இந்த உலகத்தினைப் புகழ்பெறச் செய்வாய்! நறுமணம் மிக்க இதழாகிய பெண்ணே! உனது சிறப்பைக் காணாதவர்கள் இந்த உலகினைக் காண மாட்டார்கள் என்கிறார்.

ஊடகம் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?

ஊடகம் என்றால் என்ன? 
அதன் வரலாறு என்ன? 

ஊடகங்கள் என்றால் என்ன?:

ஊடகங்கள் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? என்பதை நாம் அறிந்து கொண்டு இந்த தலைப்பினுள் நுழைந்தால் 
நமக்கும் ஊடகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவசியம் என்ன? முக்கியத் துவம் என்ன? என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

தகவல் தொடர்பு சாதனங்கள், மீடியாக் கள் வெகுஜன தொடர்பு சாதனங்கள் என்று பல பெயர்களில் இந்த ஊடகங்கள் அழைக்கப் படுகின்றன.

‘தனித்திருக்கும் தன்மையை மாற்றி ஐக்கியப்படுத்துதல்’ மீடியா எனலாம்.

‘தகவலை அனுப்புபவருக்கும் பெறுப வருக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற் படுத்துவது, இருவர் அல்லது இரு அமைப்புக் களுக்கிடையே நடைபெறுகின்ற செய்திப் பரிமாற்றமும் அதனால் ஏற்படும் தெளிவும் தகவல் தொடர்பு (மீடியா)’ என்பர்.

தொடர்பு என்பது மனிதர்கள் செய்தி களை அனுப்புவதும் அதனை பெற்றுக் கொள்ளுவதுமாகும்.

தகவல் தொடர்பை ‘கமியுனிக் கேஷன்’ என்பர். இது கம்மியுனிசி  எனும் இலத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதன் பொருள் பகிர்ந்து கொள், செயல் விளைவு, செய்தியைப் பரப்பு என்பதாகும். தொடர்பு என்பது செயல் முறையாகும். அது கருத்துள்ள செய்தியை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரப்புவதைக் குறிக்கும்.

இத்தகவல் தொடர்பு முறை மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்து வருகிறது. ஒரு சமுதாயம் வளர அடிப்படைத் தேவையாக கருதப்படுவது தொடர்பு ஆகும்.

தொடர்பியல் என்னும் சொல்லிற்குப் ‘பொதுமையாக்குதல்’ எனப் பொருள் கொள்ள லாம். அதாவது, பெறுபவருடைய மனதில் அனுப்புவரின் கருத்து அல்லது கருத்துப் படிவத்தை உருவாக்குவது பொதுமையாக்குதல் எனப்படும். அதாவது, ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில் செய்தி அனுப்புபவருக்கும் பெறுபவ ருக்கு மிடையே நிகழும் செய்திப் பரிமாற்றச் செயல் முறையே தொடர்பியல் எனப்படும்.

செய்திகள், எண்ணங்கள், உணர்ச்சி கள், திறமைகள் போன்றவற்றைக் குறியீடு, பேச்சு, எழுத்து, படம், வரைபடம் போன்றவற்றின் வழியாகப் பரப்புவதும் தொடர்பியல் என அழைக்கப்படும்.

ஊடகத்தின் வரலாறு:

பிறரைப் பற்றி அறிவதிலும் தன்னைச் சுற்றி நடக்கும் விசையங்களை அறிவதிலும் மனிதனுக்கு எப்போதும் அதிக ஈடுபாடு உண்டு. இக்குணமே தகவல் தொடர்பியல் அல்லது மீடியாக்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. கற்கால யுகம் சென்று கணனி யுகம் வளர்ந்த இக்காலம் வரை மனிதனின் ‘தேடல்’ குணமே மீடியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்!

விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு விண்ணை ஆராய்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் இது!

சாதனைகளில் சிகரம் தொடும் இக் காலத்தில், மனிதன் அன்று முதல் இன்றுவரை தன்னைச் சூழவுள்ள நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும் – அறிந்து கொள்ள கையாளும் படிமுறைகளிலும் முன்னேறி வருகின்றான்.

உலகம் உருண்டையானது என்று அறிவுலகம் நிரூபித்துக் காட்டியது போலவே உலகத் தொடர்புகளை ஒன்றுபடுத்தி ஒரு பந்து போல் தந்திருக்கிறது மீடியாக்கள்!

24 மணி நேரமும்  ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்ற அரசியல், சமூக, பொருளாதார, மற்றும் பிற விஷயங்களை எடுத்துக் காட்டுகின்ற நிலமைக்கு வெகுஜன தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி அடைந்து விட்டன.

தன்னைச் சூழ நடக்கும் விவகாரங் களையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் விவகாரங்களையும் அறிந்துகொள்ளும் நிலைக்கு மனிதன் உயர்ந்த போது வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் பரினாமமும் மாறத் தொடங்கியதுளூ வளர்ச்சியடையத் தொடங்கியது.

அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்த போது ஈராக்கில் என்ன நடக்கிறதுளூ உலக அரங்கில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக் கிறது என்ற செய்தியை அறிய மக்கள் ஆர்வம் காட்டினர்.

ஈராக் ஆக்கிரமிப்பிற்குப் பின் ஜனாதி பதி சதாம் ஹுஸைன் என்ன ஆனார்? அவரு டைய படைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டினர்.

சதாம் ஹுஸைன் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி வெளியாகியவுடன், உண்மையில் சதாம் ஹுஸைன் தான் கைது செய்யப்பட்டாரா? அல்லது வேறொருவர்தான் கைது செய்யப்பட்டாரா என மக்கள் சந்தேகம் கொண்டபோது,

சதாம் ஹுஸைன் அமெரிக்கப் படை யினரால் கைது செய்யப்பட்ட விதம் அதன் பின் சதாம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத் தப்படும் காட்சிகளை ஒளிபரப்பிய பின்புதான் மக்கள் அச்செய்தியை ஏற்றுக் கொண்டனர்.

சுனாமி வந்தபோது ஏற்பட்ட அழிவு களையும் இழப்புக்களையும் அறிந்து கொள்ள வும் உறவினர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவும் 24 மணி நேரமும் மீடியாக்களைப் பெரிதும் நம்பியிருந்தனர்.

தேர்தல் காலங்களில் முடிவுகளை எதிர்பார்த்தும் புதிய அரசாங்கத்தின் செயற் பாடுகளை அவதானிப்பதற்கும் மீடியாக்களை எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்று நடைபெறும் எல்லா நிகழ் வுகளையும் உடனுக்குடன் உறுதியாக அறிந்து கொள்ள மக்கள் இன்று வெகுஜனத் தொடர்பு சாதனங்களைப் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.

இன்று எந்தவொரு செய்தியையும் உடனுக்குடன் பார்த்து, அறிந்து கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன. அல்-ஜஸீரா இணை யம் போன்ற ஊடகங்கள் ஒவ்வொரு நாட்டிலும் 24 மணி நேரமும் ஒளிபரப் பாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அன்று ஒரு செய்தியை அறிந்துகொள்ள மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.

கொலம்பஸ் 12. 10. 1942 அன்று அமெரிக்காவை கண்டுபிடித்த செய்தியை ஐந்து மாதங்களுக்குப் பின்பு ஸ்பெயின் நாட்டு மன் னன் அறிந்து கொண்டார்.

ஆங்கில படைத்தளபதி நெல்சன் 21. 10. 1805 அன்று மரணித்த செய்தி பதினைந்து நாட்களுக்குப் பின்புதான் இங்கிலாந்துக்குத் தெரிந்தது.

04. 1865 அன்று அமெரிக்கா ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி ஐரோப்பா கண்டம் பன்னிரெண்டு நாட்களுக்குப் பின் தெரிந்து கொண்டது.
இன்று துருக்கியில் நடந்த பூகம்பம், பக்தாதில் நடக்கும் குண்டுவெடிப்பு பலஸ்தீனில் நடக்கும் ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுள் அதே நிமிடம் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக் கின்றன.

குகைகள்:

முதன் முதலில் மக்கள் செய்திகளை இன்னுமொருவருக்கு அறிவிப்பதற்கு குகை களைப் பயன்படுத்தினர்.

வேட்டைக்குச் செல்லும் மனிதர்கள் ஓலைச் சுவடிகளிலும், மட்டைகளிலும் செய்தி களைப் பரப்பிக் கொண்டார்கள்.

கூத்து – நாடகம்:

விசில் அடித்தல், பாறையடித்தல், மணி அடித்தல், ஓசை எழுப்புதல், தீ அம்புகளை வானத்தில் எறிதல், தீ பற்றவைத்தல், தெருக் கூத்து, நாட்டார் பாடல்கள், பட்டிமன்றங்கள், விவாத அரங்குகள், கிராமியப் பாடல்கள், நடனங்கள் மூலமாகவும் செய்திகளைப் பரப்பிக் கொண்டார்கள்.

வணிகர்கள், துறவிகள், முனிவர்கள், நாட்டுக்கு நாடு செல்லும் போது பெண்கள், ஆற்றில் குளத்தில், கிணற்றில் நீர் எடுக்கச் செல்லும் போதும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

கவிதைகள்:

சீனாவில் நெடுங்காலமாக கவிதை களினாலேயே செய்திகளைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

பறை அடித்தல்:

தசரதன், தனக்கு குழந்தை பிறந்த செய்தியை பறை அடித்து அறிவிக்குமாறு சொன்ன செய்தி கம்பராமாயணத்தில் உள்ளது.

‘வள்ளுவர் யானை மீகிசை நன்பறை அறைந்தனர்’ என்று கூறுகிறது கம்பராமாயா ணம். (294)

முதுகுடிப் பிறந்தோனாகிய வள்ளுவன் யானை மீதேறி ஊரையும் மன்னனையும் வாழ்த்தி முரசறைந்து செய்திகளை அறிவித் தான் என்று மணிமேகலை கூறுகிறது. (விழா 27-31)

கண்ணகி சிலைக்குக் கல் எடுக்கச் சென்றதை வள்ளுவர் பட்டத்து யானையின் மீதேறிப் பறை அறிவித்தான் என்று சிலம்பு கூறுகிறது.

‘இறையிக யானை யொருத்தத்தே லிற்றி. அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்’ (சிலம்பு – காட்சி 263-264)

ஆப்ரிக்கக் காடுகளில் வசித்துக் கொண்டிருந்த நீக்ரோ மக்களிடையே முர சறைந்து அக்குறிப்பினாலே பல கல்களுக்கும் அப்பாலிருக்கும் தங்கள் இனத்தவர்களுக்குச் செய்தி அனுப்புகிற முறை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அமெரிக்க நாட்டு காட்டு மக்களிடையே புகை, நெருப்பு ஆகியவற்றை மூட்டி அவற்றின் மூலம் சில செய்திகளைக் குறிப்பிடுகின்ற முறையும் இருந்திருக்கிறது.

அரசர், ஒருவருக்கு ஒரு இடத்தை அல்லது ஒரு பகுதியைப் பரிசாக கொடுத்ததை ஊராருக்குத் தெரிவிப்பதற்காக அந்த செய்தியை கல்லில் செதுக்கி வைப்பார்.

சங்க இலக்கியத்தில் நடுகல் பற்றிய செய்தி காணப்படுகிறது. போரில் வீரமரணம் எய்தியவர்களுக்கு நடுகல் நடுவர். அதில் வீரனின் பெயர் அவன் ஆற்றிய வீரச் செயல், பெருமை மடிந்ததற்குக் காரணம் போன்ற செய்திகள் எழுதப்பட்டிருக்கும்.

‘நடுகல்லில் வீரரது பெயரையும் சிறப்பு களையும் பொறித்து வைப்பர் என்று அகநானூறு (67:8-11) கூறுகிறது.

மகளிர் சுவரில் நாளைக் குறித்து வைக்கும் செய்தியைச் சங்க இலக்கியத்தில் (பதி:68:17-19 அகம் 61:45, 289:9-10) காணலாம்.

கொடிகள்:

ஜஹாங்கீர் மன்னர் தனக்குப் பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிவ தற்காக தில்லியிலிருந்து ஆக்ரா வரை வீரர் களை நிறுத்தி ஆண் குழந்தை பிறந்தால் சிவப்புக் கொடியும், பெண் குழந்தை பிறந்தால் பச்சைக் கொடியையும் காட்டும்படி உத்தர விட்டார்.

கிளிகள்:

அசோகர் காலத்தில் அரசக் கட்டளை களும், அறச் செயல்களும் புத்த சமயக் கொள்கைகளும் தூண்களிலும் கற்பாறைக ளிலும் செதுக்கி வைக்கப்பட்டன. ஒரிசா மாநிலத்தில் (மன்னர்கள் காலத்தில்) கிளிகள் மூலம் செய்திகள் கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெற்றன.

இறைத் தூதர் சுலைமான் நபி அவர் களின் ஹுத்ஹுத் எனும் பறவையின் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டன என அல்குர்ஆன் கூறுகின்றது.

இறை தூதர் முஹம்மது நபி(ச) அவர் களின் காலத்தில் இறைச் செய்தி (அல்லாஹ் வின் கட்டளையான அல்குர்ஆன்) ஈத்த மட்டைகளில், தோல்களில் எழுதி பரப்பப் பட்டன பாதுகாக்கப்பட்டன.

எழுதும் முறை கி.மு. 300 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த சுமேத்தியர் என்பவர்களால் எழுதும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகம் பூராகவும் நடைமுறையிலுள்ள உரோம எழுத்துக்கள் கி.மு. 4ம் நூற்றாண்டில் ஆரம்ப மானது.

கி.மு. 2400 ஆண்டளவில் பபிலோனி யாவில் களிமண் புத்தகங்கள் ஆப்பு போன்ற உருவிலமைந்த எழுத்துக்களில் பொறிக்கப் பட்டன. அந்த எழுத்து முறை அஸ்ஸிரியர்க ளின் எழுத்துமுறை எனப்படுகின்றது. அவற்றில் நீதித் தீர்ப்புக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

வரவு செலவுக் கணக்குகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. களிமண் பலகைகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, பின்பு சுடப் பட்டிருந்தன. களிமண் புத்தகங்கள் முட்டிகளில் போடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

மத்திய கிழக்கிலுள்ள நினேவா என்னுமிடத்தில் கி.மு. 700ஆம் ஆண்டளவில் களிமண் பலகைகளைக் கொண்ட நூலகம் ஒன்று இருந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன.

கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த இறைத் தூதர் மோஸேவுக்கு ‘போதனைகள் அடங்கிய மரப்பலகை’ ஒன்று இறைவனால் வழங்கப் பட்டது என அல்குர்ஆன் கூறுகிறது.

அதன் பின்பு ஓலைச் சுவடிகள் வழக்கிலிருந்தன. இந்தியா, இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஓலைச் சுவடிகள் வழக்கிலிருந்தன.

கடதாசி கண்டு பிடிப்பு அச்சுக் கலைக்கு வழிவகுத்தது. எகிப்தில் வளரும் ஒருவித களையிலிருந்து தான் கடதாசி ஆரம்பத்தில் செய்யப்பட்டது. ‘பப்பிரஸ்’ என்று அந்த கடதாசியை எகிப்தியர் அழைத்தனர்.

கி.மு. 4000 ஆண்டளவில் பப்பிரஸ் உபயோகிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அன்று முதல் இன்று வரை பல்வேறு பெயர்களில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வார மாத இதழ்கள் வெளிவந்து கொண்டிருக் கின்றன.

இசை முரசு FM இணைய வானொலி ஜூன் 17 தியாகத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.

இசை முரசு FM 
இணைய வானொலி 
ஜூன் 17 
தியாகத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள். 

காலை 6 மணி 
"மெக்காவை நோக்கி" இசைப் பயணம் 
ஹஜ்ஜுப் பாடல்களின் தொகுப்பு 

காலை 7 மணி 
"திருமறையின் அருள் மொழியில்" 
தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களை கேட்கலாம் 

காலை 8 மணி 
"வெற்றியின் பக்கம்" 
தர்பியா கேட்கலாம் 

காலை 9 மணிக்கு 
"தியாகம் என்பதே குர்பான்" 
ஆளூர் முஸ்லிம் ஜமாஅத் இமாம் 
அலி பாதுஷா ரஹ்மானி வழங்கும் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு 

காலை 10 மணி 
"வாழ்த்தலாம் வாங்க" 
நேயர்கள் தொலைபேசி வழியாக பங்கு பெற்ற வாழ்த்து நிகழ்ச்சி. 

காலை 11 மணி 
"பெருநாள் கதம்பம்" 
மேலப்பாளையம் அல்ஹிதாயத்துல் நிஸ்வான் 
அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் 
பங்குபெற்ற பல் சுவை நிகழ்ச்சி 

மதியம் 12 மணி 
"ஹஜ்ஜின் அனுபவம்" 
வெவ்வேறு காலங்களில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி திரும்பிய ஹாஜிகள் தங்கள் நினைவுகளில் பூத்திருக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி  

மதியம் 1 மணி 
"நடையும் கதையும்" புனித காபாவை சுற்றி இருக்கும் இடங்கள் குறித்த வரலாற்று நிகழ்வு 

மதியம் 2 மணிக்கு "மகளிர் மஜ்லிஸ்" நவீன பெருநாள் கொண்டாட்டங்களால் பெரிதும் ஏற்பட்டு இருப்பது என்ன? பேராசிரியர் ஆயிஷா இஸ்மாயில் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் உறுப்பினர்கள் பங்குபெறும் கலகலப்பான உரையாடல் நிகழ்ச்சி 

மாலை 4 மணிக்கு "பெருநாள் பூக்கள்" பள்ளி மாணவ மாணவியர் பங்குபெறும் பல் சுவை நிகழ்ச்சி 

மாலை 5 மணிக்கு "வாழ்த்துக்கள் ஆயிரம்"
இசை முரசு இணைய வானொலி இணை இயக்குனர் திருமதி நசீபா அஸ்கர் தொகுத்து வழங்கும் வாட்ஸ் அப் வழியிலான வாழ்த்து நிகழ்ச்சி 

மாலை  6 மணி நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை கூறும் சிறப்பு நிகழ்ச்சி 

மாலை 7 மணி "பெருநாள் மேடை" தமிழகத்தில் நடைபெற்ற தியாகத் திருநாள் சிறப்பு சொற்பொழிவுகளின் தொகுப்பு

மாலை 8:30 மணி "அமீரின் அனுபவம்" ஹஜ் பயணத்திற்கு ஹாஜிகளை வழிநடத்திய சுவாரஸ்யமான அனுபவங்களை பேசுகிறார் மௌலானா மௌலவி மன்சூர் காசிபி அவர்கள்

இரவு 9 மணி "இன்னிசை பெருநாள்" இஸ்லாமிய இன்னிசை பாடகர் தேரழுந்தூர் தாஜுதீன் ஃபைஜி அவர்களுடன் ஓர் இஸ்லாமிய இசை உரையாடல் 

நேயர்களே 
தியாகத்திருநாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேளுங்கள் 
தியாகத்தை போற்றுங்கள். 

ISAIMURASU ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...

Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.isaimurasu.fm 

I Phone பயனாளர்கள் இசைமுரசு FM 
இணைய வானொலியை பதிவிறக்கம் செய்ய 

https://apps.apple.com/in/app/isaimurasu-fm/id1574944891

தியாக திருநாள் ** கஃபா காட்டும் விந்தை தினம்

தியாக திருநாள்
**
கஃபா காட்டும் விந்தை தினம்
கனவில் வந்துப் போனது தினமும்
வலம் வர ஏங்கி கால்கள் 
தவிக்கிறது
கண்ணில் கண்ணீர் தாரை தாரையானது
இதயம் படபடுத்து நின்றும்  போனது
நான் கண்ட கனவு எனது
வாழ்நாளில் நிறைவேறுமா இறைவன் அறிவானோ
உலக மக்கள் ஒன்றாய் கூடும்
மக்கா மாநகரின் பெருமையை சென்றவர்
மூலம் கேட்டு தெரிந்துக் கொண்டேன்
வற்றாத ஜம்ஜம் நீர் நீரூற்றாய்
சபா மர்வாவின் புகழ் ஆரம்
இறைமை பொழிகிறது அங்கு நீந்தும்
விழிகள் ஏங்கி பார்க்க ஏங்கியது
நபிகள் வாழும் மதீனாவில் சலவாத்
ஓதுவது எனது காதில் ஒலிக்கிறது
ஹஜ்ஜில் கூட்டம் கூட உள்ளம்
துடியாய் துடிக்கிறது அதைக் காண
ஆன்மா விழிக்கிறது வற்றாத இறை அருளை வேண்டி
நானும் துடிக்கிறேன் நிறைவேறுமா
எனது ஆசை அடுத்த தியாக திருநாளில் ஹஜ்ஜை நோக்கி ....
இசை முரசு வானொலியில் நாளை கேட்டு மகிழுங்கள்
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்

எழுத்தாளர் அருந்ததிராய் மீது உபா சட்டம் பாய்ந்திருப்பதன் பின்னணி பற்றி,

எழுத்தாளர் அருந்ததிராய் மீது உபா சட்டம் பாய்ந்திருப்பதன் பின்னணி பற்றி, 

14 ஆண்டுக்கு பிறகு ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னணி பற்றி நமது 
Aiman media studies digital journalism 
பத்திரிக்கை பயிற்சி பெறுவோர் சுருக்கமாக உள்வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரு சின்ன பதிவு

ஸ்ரீநகரில் 2010-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி. ‘ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பு’ சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹுசைன், சையத் அலி ஷா கிலானி, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில்,  ‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவின் ஆயுதப்படைகளால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டது’ என்று அருந்ததி ராய் பேசினார்.  
அதன் பிறகு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘ஆஸாதி (சுதந்திரம்) – ஒரே வழி’ என்ற தலைப்பில் டெல்லியில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்தரங்கத்திலும், காஷ்மீர் பற்றிய தனது கருத்தை அவர் எடுத்துவைத்தார். அதைத்தொடர்ந்து, தேசத்துரோக கருத்துக்களை அருந்ததி ராய்  பேசியதாக சர்சசை எழுந்தது.
’அருந்ததி ராய் உள்ளிட்டோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினர்’ என்று சுஷில் பண்டிட் என்ற  வலதுசாரி செயற்பாட்டாளர், காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆகவே, அருந்ததி ராய் கைது செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்ளும், தி கார்டியன் உள்ளிட்ட சர்வதேச ஏடுகளும் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. 
அன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘அருந்ததி ராய் மீது டெல்லி போலீஸ் வழக்கு எதுவும் பதிவுசெய்யவில்லை’ என்று பதிலளித்தார்.
தேசத்துரோகச் சட்டம், ’உபா’ சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் ஜாமீன் கிடைக்காமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அருந்ததி ராயும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அப்படித்தான், கடந்த ஆண்டு ‘உபா’ சட்டத்தின் கீழ் அருந்ததி ராய் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீதுதான் ‘உபா’ போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவார்கள். ஆனால், தனிநபர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி, இத்தகைய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நிலையை 2018-ம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்தது.
அதன் பிறகுதான், சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். மற்ற வழக்குகளில் விசாரணை நடைபெற்ற பிறகுதான், தண்டனை வழங்கப்படும். ஆனால், உபா சட்டத்தில் தண்டனைக்குப் பிறகுதான் விசாரணையே நடைபெறும். அப்படியொரு கொடூரமான, ஜனநாயகத்துக்கு விரோதமான ஒரு சட்டம் இது. சுதந்திரமான சிந்தனையை முடக்குவதற்கான ஆயுதமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களும் செல்லரித்துவிட்ட நிலையில், இந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது நல்ல சமிக்ஞை அல்ல”