11.03.2024
https://www.facebook.com/share/p/Mg3bRDbsDomeWJ5W/?mibextid=ox5AEW
திமுக சமூகநீதி அரசு என்றால்
மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவேண்டும்- ம.ம.க பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் செங்குன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய வெல்லட்டும் ஜனநாயகம் வீழட்டும் பாசிசம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் A.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமது MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர்.புழல் S.A. சேக் முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் பேசிய ப.அப்துல் சமது MLA அவர்கள் திமுக சமூகநீதி அரசு என்றால் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவேண்டும் என பேசினார்
மேலும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#mmkitwing









