Tuesday, 1 October 2019

மசூராவின் ஒழுங்குகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

மசூராவின் ஒழுங்குகள் மற்றும்  நோக்கம்


முக்கியமாக அமீரை நியமிக்க வேண்டும்.
1) அமீர் தலைமை இருக்க வேண்டும்.அமீருக்கு கட்டுப்படவேண்டும்.
2)வலது புறம் இருந்து கருத்துகளை சொல்ல வேண்டும்.
3)யார் கருத்து சொன்னாலும் இடையூறு செய்யக்கூடாது.
4)மனதில் பட்டது,குட்டி மஷோரா வேண்டாம்.

5)ஒரு ஒரு நபராக அமீர் அனுமதியுடன் கருத்து சொல்ல வேண்டும்.
6)நல்ல எண்ணத்தை கொண்டு செல்ல வேண்டும்.
7)மஷோராவில் முடிவு செய்துவிட்டால் கூச்சலிடக்கூடாது.
8)வெளியே போய் ஆலோசனை செய்யக்கூடாது.
9)நான் சொன்னதை கேட்டால் நல்லது நடந்து இருக்கும்.என கூறக்கூடாது.
10)மஷோராவில் கலந்து கொண்டதற்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
11)சமுதாய பணியில் இருந்தால் அல்லாஹ் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
12)யாரையும்,மரியாதை இல்லாமல் பேசுவது,சப்தத்தை உயர்த்தி பேசுவது,மேலும் அமீர் கூறியும் நிறுத்தாமல் பேசுபவர் அவையை விட்டு வெளியேற்றப்படுவார்.

13)கிண்டல் செய்வது ,அடுத்தவர் கூறிய கருத்துகளை ஏளனம் செய்வது சிரிப்பது கூடாது.
14)மஷோராவில் கலந்து கொண்டு நம்முடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.,ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் மஷோராவிற்கு கட்டுப்படுதல் வேண்டும்.
15)குர்ஆன் ,ஹதிஸ் மேற்கோள்காட்டி நம்முடைய கருத்துகளை கூற வேண்டும்.அமீர் அந்த கருத்துகளை உள் வாங்க வேண்டும்.

A.S.Ibrahim


Sent from my iPhone

Saturday, 21 September 2019

நாட்டை நாசம் செய்ய..! பங்காற்றிய ஊடகங்கள்..!

நாட்டை நாசம் செய்ய..! பங்காற்றிய ஊடகங்கள்..!

*அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா சொல்லியது..

*"எனக்கு பொருளாதாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் நான் உடனே கேட்பது,
Dr Singh இடம் தான்.."*

*தவறாக செயல்பட்ட ஊடகங்களால்..ஒரு நல்ல பிரதமரை தோற்கடித்து விட்டதே..இந்தியா..!!!*

*2009களில்..*
திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது..

சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.

உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது.

உலகம் முழுதும் சுமார் 8 கோடி பேர் வேலை இழந்தனர்.

உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.

சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன.

கச்சா எண்ணெய் விலை $160 டாலர்களை தொட்டு கொடூர முகம் கொண்டு பயமுறுத்தியது..

பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு..

ஆனால்

அப்போது.. இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது..!*

ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின.

இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை.

வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது.

மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் வராததால் தங்கள் ஊழியர்களை Layoff செய்தது.

வேறு யாரும் வேலை இழக்கவில்லை.

உணவு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்கள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல..!

இதற்கிடையில் ஊரக மேம்பாட்டுக்காக வாஜ்பாய் ஆட்சியின்..

உலக வங்கியில் வாங்கிய கடனும் அடைக்கப்படது.

இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்..!

பொருளாதார தேக்கநிலையை சமாளிக்க IMF நடத்திய கலந்தாய்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் அழைக்கப்பட்டார்.

ஆம்

உலகமே வியந்த அந்த தன்னிகரற்ற.. *பொருளாதார மாமேதை*

*Drமன்மோகன்சிங்..*

அப்படிப்பட்ட மாமேதையை தூக்கி எறிந்து விட்டு வளர்ச்சி என்ற பெயரில் மதவெறிக் கும்பல்களிடம் ஆட்சியைப் பறி கொடுத்துவிட்டு..

இன்று

ஒட்டுமொத்தமாக திவாலாகிக் கொண்டிருக்கின்றோம்..

வளர்ச்சி என்றப் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்....

இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலிருந்தே தூக்க வைத்து விட்டு..

பண மதிப்பு நீக்கம் மூலம் ஓட்டு மொத்த இந்திய மக்களையும் தன் நாட்டிலேயே அகதியாய் அலையவிட்டது தான் இன்றைக்கு ஆட்சியிலிருப்பவர்களின் சாதனை.

Thursday, 19 September 2019

பன்மைச் சமூகமும் இஸ்லாமும்*

*

*தொடர் 4⃣*

*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*

*எதிரிகளுக்கும் அடைக்கலம் தந்த ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்)*

*புனித ஜெருஸலம் நகர் கிறிஸ்தவர்களின் பிடியில் 90 ஆண்டு காலம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்கள் மட்டுமல்ல யூதர்களும் கூட அங்கு தினமும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிலுவை யுத்தம் நடந்த காலங்களில் ஜெருஸல நகரத் தெருக்களில் கரண்டைக் கால் அளவுக்கு மனித இரத்தம் ஓடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அத்தகையதொரு கொடுமையிலிருந்து அந்தப் புனிதப் பூமியை மீட்டதோடல்லாமல், தனது மனித நேயத்தால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த பண்பாளராகவும் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் திகழ்ந்தார்கள்.*

*இரண்டாம் சிலுவை போர் முஸ்லீம்களுக்கு வெற்றி:*

*பாலஸ்தீன் முழுமையாக இஸ்லாமியப் பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டது.*

*அதன்பின் ஜெருசலேத்தில் உள்ள மக்கள் அனைவரும் பேரரசின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்.*

*உள்ளூர் கிறிஸ்துவர்கள், பல ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கியிருக்கும் கிறிஸ்துவர்கள் அனைவருக்குமே இது பொருந்தும். மத வித்தியாசம் பார்க்கப்பட மாட்டாது. யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் அவர்கள் சமமாக அங்கே வாழலாம். ஆனால், இந்தச் சலுகை ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது. (அதாவது சிலுவைப்போர் வீரர்களுக்குப் பொருந்தாது.)*

*பினைதொகை பெற்று சிலுவை வீரர்கள் விடுதலை:*

*அவர்கள் மட்டும் தம் குடும்பத்தினருடன் நாற்பது தினங்களுக்குள் ஜெருசலேத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் உண்டு. நகரை விட்டு வெளியேறும் சிலுவைப்போர் வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அப்படி வெளியேறுவதற்குப் பிணையத் தொகையாக அவர்கள் தலைக்குப் பத்து தினார்கள் (இந்த தினார் என்பது அந்நாளைய சிரிய நாணயத்தைக் குறிக்கும்.) கட்ட வேண்டும். வீரர்களின் குடும்பப் பெண்கள் தலைக்கு ஐந்து சிரிய தினார் செலுத்தினால் போதும். குழந்தைகள் என்றால் ஒரு தினார்.*

*இந்தப் பிணையத் தொகையைச் செலுத்தாதவர்கள் சுல்தானின் அடிமைகளாகத் தொடர்ந்து இருக்க வேண்டியிருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது.*

*கைதிகளையும் ராணியையும் மரியாதையாக அனுப்பபட்டது:*

*ஜெருசலேத்தின் மன்னராக இருந்தவரின் பெயர் காட்ஃபிர்டி பொயிலான். அன்றைய தேதியில் ஒட்டுமொத்த மத்திய ஆசிய முஸ்லிம்களுக்கும் இந்த பொயிலான்தான் சரியான வில்லன். செய்த அட்டூழியங்களும் படுகொலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.*

*அத்தகைய மன்னனின் பட்டத்து ராணியான சிபில்லா, நகரை விட்டு வெளியேறியபோது ஒரு முஸ்லிம் வீரர்கூட அவமரியாதையாக நடந்துகொண்டுவிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் ஸலாஹுத்தீன். ராணிக்கு உரிய மரியாதைகள் செய்து, அவருடன் வந்த பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேண்டிய பண உதவிகள், ஆடைகள், உணவுப்பொருள்கள் போன்றவற்றை அளித்து, கௌரவமாகவே வழியனுப்பிவைத்தார்.*

*பேனர் கலாச்சாரமும்* *இஸ்லாமியத் தீர்வும்

*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*

*பாதையின் ஒழுக்கங்கள்*

*பாதையில் ஒரு முஸ்லி்ம் மற்றொரு முஸ்லிமை சந்தித்தால் சலாம் கூற வேண்டும்.*

*வாகனத்தில் இருப்பவர் நடந்துசெல்பவருக்கும், நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைவானவர் அதிகமானவருக்கும் சலாம் சொல்ல வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.* (புகாரி)

*வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது:*

*நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:*
*உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்கோ,கடைவீதிக்கோ சென்றால் அவருடைய வாகனத்தை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அதற்குரிய இடத்தில் நிறுத்தவும்.*
(புகாரி,முஸ்லிம்)

*பாதையில் இடையூரை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல்:*

*அபூபர்ஜா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் எனக்கு பயனுள்ள விஷயத்தை கற்றுத்தாருங்கள் எனக் கேட்கும் பொழுது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:*
*மக்களுக்கு இடையூரை உண்டாக்கும் பொருட்களை பாதையிலிருந்து நீ அகற்றி விடு*.(முஸ்லிம்,இப்னுமாஜா)

*பாதையிலிருந்து மக்களுக்கு இடையூரை உண்டாக்கும் பொருட்களை நீக்குவது தர்மமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.*

*பாதையை தூய்மையாக வைக்குதல்:*

*அபூமூஸல் அஸ்அரி ரலி அவர்கள் பஸராவிற்கு வந்த சமயத்தில் உமர் ரலி அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில் நீங்கள் குர்ஆனையும்,ஹதீஸையும் மக்களுக்கு கற்றுக் கொடுங்கள்.அத்துடன் பாதைகளை தூய்மையாக வைக்கும்படியும் கற்றுக் கொடுங்கள் என அக்கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.*(தாரமீ)

*வழிகாட்டுவது தர்மம்:*

*வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்கு சரியான பாதையை அறிவித்து தருவது தர்மமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.*(புகாரி)

*நடைபாதையில் வீடுகளை கட்ட வேண்டாம்:*

*நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.* (புகாரி)

*பாதையில் கண்டெடுத்த பொருளுக்கு என்ன சட்டம்?*

*ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்' என்று கூறினார்கள்.*
(ஸஹீஹ் புகாரி)

*வழிபோக்கர்களுக்கு தண்ணீரை ஏற்பாடு செய்ய வேண்டும்;தடுக்கக் கூடாது:*

*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*

*மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.*
*ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.*
(ஸஹீஹ் புகாரி)


Sent from my iPhone

Tuesday, 17 September 2019

சமுதாயத்திற்கு ஒரு விண்ணப்பம். ISRO என்பது பற்றி

ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு விண்ணப்பம். ISRO என்பது பற்றித் நமக்குத் தெரியும் ஆனால் தெரியாத ஒன்று உண்டு. பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் +2 தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணக்கில் தலா 65% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள். இதுவரை நான் என் பள்ளியில் 45 மாணவர்களை உருவாக்கியுள்ளேன். இது பெருமைக்காக அல்ல. இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து அவர்களும் சில ISRO விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம்தான்.
இது பற்றிய விவரம் வேண்டுவோர்
திரு. பாலமோகன். ISRO SCHOOL EDUCATIONAL DIRECTOR அவர்களை
78928 98919 மற்றும்
94814 22237 எண்ணில் தொடர்புகொள்ளலாம்
(படித்ததில் உருப்படியான பதிவு)

மண்ணில் முஹம்மது நபி ஸல் அவர்களின் பெயர்

மாஷா அல்லாஹ் .. இவரைப் பாராட்டியே ஆக வேண்டும் .,
மண்ணில் முஹம்மது நபி ஸல் அவர்களின் பெயர் எவ்வளவு அழகாக எழுதி உள்ளார் பிடித்து இருந்தால் மறக்காமல் லைக் செய்து பகிருங்கள் நண்பர்களே ♥️

அல்லாஹுத்தஆலா மிகச் சிறந்த படைப்பாளன்

Monday, 16 September 2019

பன்மைச் சமூகமும் இஸ்லாமும்*

*✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி*

*சிறுபான்மையினரின் பாதுகாவலர் ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள்*

*ஜெருசலம் கை மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக நகரத்தின் சாவி கலிபா உமர் (ரலி) அவர்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டது. நகரத்தின் பல்வேறு பகுதிகளையும் புதிய மன்னருக்குப் பாதிரியார் சுற்றிக் காட்டினார். விளக்கங்கள் கூறினார். கிருத்தவ தேவாலயங்களுக்குக் கூட்டிச் சென்றார்.*

*பாதிரியாருடன் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? " இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி எனது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.*

*ஜெரூஸல மக்களுடன் உமர் ரலி அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்*

*ஜெருசலம் நகரத்தை உமர் (ரலி) அவர்கள் பெற்றுக் கொண்டபோது அந்நகரில் அமைதி நிலவியது. அங்கு வாழ்ந்த கிருத்தவர்களுடன் கலிபா அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.அந்த ஒப்பந்தம்*

*"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ....*

*எலியா (ஜெருசலத்தின் மறுபெயர்) நகரத்தின் மக்களுக்கு, நம்பிக்கையாளர்களின் தளபதியும் இறைவனின் சேவகனுமாகிய உமர் அளிக்கும் வாக்குறுதி. நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்கள் மதத்துடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவைகள் அழிக்கப்படாது. சர்ச்சுகளின் இணைப்புப் பகுதிகளும் அழிக்கபடாது. இந்நகரில் வாழும் குடி மக்களின் சிலுவைகளும் உடமைகளும் அழிக்கபடாது. அவர்களது மத நம்பிக்கையில் எவ்வித முட்டுக்கட்டையும் போடப்படாது . அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் இழைக்கப்படாது." (பார்வை : கலிபாக்கள் வரலாறு – மஹ்மூத் அஹ்மத் கழன்பர் )*

*உமர் (ரலி) ஆட்சியில் மத சுதந்திரம்*

*கிருத்தவ மற்றும் யூத மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் வழிபாட்டு உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த மக்கள் அரசுக்கு வரியை மட்டும் செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டார்கள். பணக்காரர்கள் மீது ஆண்டுக்கு ஐந்து தீனார்களும் நடுத்தர மக்கள் மீது நான்கு தீனார்களும் அடித்தட்டு மக்கள் மீது மூன்று தீனார்களும் வரியாக விதிக்கப்பட்டது. கிருத்துவ தேவாலயங்களில், முஸ்லிம்களின் பள்ளிகளின் தொழுகைக்கான பாங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் தேவாலய மணிஓசை ஒலித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. கிருத்தவர்கள் தங்களின் சிலுவைகளைச் சுமந்து வீதிகளில் ஊர்வலம் வரவும் அனுமதியளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதவர்களின் சொத்துக்களை எவரும் சூறையாடவோ அத்துமீறி அனுபவிக்கவோ முயலக் கூடாதென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை ஒரு முஸ்லிம் கொலை செய்துவிட்டாலும் முஸ்லிம் அல்லாதவர்க்கு வழங்கப்பட்டதற்கு ஈடான அதே தண்டனையே முஸ்லிமுக்கும் வழங்கப்பட்டது. ஆடை அணிகலன்களை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய முறையில் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி அணிந்துகொள்ள உரிமை அளிக்கப்பட்டது. இதனால் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது.*

*தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து மத மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டுமென்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். தனக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களும் இந்த முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறி இருந்தார்கள்.*

Saturday, 14 September 2019

*பலருடைய உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்கும் ஒரு நபிமொழி

*பலருடைய உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்கும் ஒரு நபிமொழி.*

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
"எவரேனும் தவறிழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."

ஜாமிஉஅத் திர்மிதி 2325
ஸஹ்ஹஹுல் அல்பானி.

சில சோதனைகளின் பின்னணி தெரியாமல் நாம் இருப்போம், ஆனால் அதன் மூலம் பின்னால் எமது வாழ்க்கையே அழகாகும் என்பதை அல்லாஹ் மாத்திரமே அறிந்து வைத்துள்ளான்.

வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் அது மிக அழகானது, பொறுமை அந்த வாழ்க்கைக்கு கண்ணியத்தை தேடித் தரக்கூடியது.

சோதனைகள் எமது ரப்பு எம்மோடு பேசுகின்ற ஒரு மொழி, அதனைப் புரிந்து கொண்டு அதற்கு மிக அழகிய முறையில் விடையளித்தால் பின்னால் அவன் எமக்கு வழங்கும் வெகுமதிகள் விலை மதிக்க முடியாதவை.

எல்லோரும் கண்ணியத்தை விரைவில் அடைந்து கொள்ளவே உழைக்கின்றார்கள், ஆனால் எமது ரப்பு மக்களை பரசீலித்து விட்டு அதனை தன் நேசர்களுக்கு மாத்திரமே வழங்குகிறான்.

*முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி.*

Friday, 13 September 2019

நவம்பர் 7, 1966 ஆம் ஆண்டு தலைநகர்

நவம்பர் 7, 1966 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி இயல்பாக இல்லை.

இரண்டு நாட்களுக்கு அரசு மீட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

மக்கள் யாரும் வெளிவரவில்லை.

பிரதமர் இந்திரா காந்தி அதிகாரிகளுடன் பேசிய வண்ணம் இருந்தார்.

பரபரப்பாக இயங்க வேண்டிய நாடாளுமன்றம் அமைதியாக இருந்தது.

வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கில் காவல்துறை அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

துணை ராணுவ படையும் இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரின் பார்வையும் இந்திய பாராளுமன்றம் மீதே இருந்தது.

காரணம் இந்திய பாராளுமன்றதை தாக்க 1,25,000 பேருடன் தலைநகர் டெல்லியில் திரண்டிருந்தது இந்துத்துவா இயக்கங்கள்.

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வர சொல்லி

பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்

எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது

ஆர்.எஸ்.எஸ் யின் பசு பாதுகாப்பு பிரிவான சர்வதலியா கோரகூஷா மகா அபியான் சமிதி.

இந்த அழைப்பை ஏற்று RSS யின் ஜனசங்கம், விஸ்வ ஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம்

என நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ இயக்கங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் தலைநகர் டெல்லியில் வந்திருந்தனர்.

அவர்களின் நோக்கம் பாராளுமன்றத்தை தாக்குவது, காமராஜரை கொல்வது மட்டும் தான்.

2001 ஆம் ஆண்டு லக்ஸர்-ஐ-தொய்பா அமைப்பு நாடாளுமன்றத்தை தாக்கியதை போல முதன்முதலில் நாடாளுமன்றத்தை தாக்க ஆள் சேர்த்தது இந்துத்துவ இயக்கங்கள் தான்.

அந்த பேரணிக்கு வந்திருந்தவர்கள் கைகளில் வாள், கடப்பாரை, திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இருந்தது.

உடை அணியாத சாதுக்கள் அதிக அளவில் இருந்தனர்.

பாபர் மசூதியை இடிக்க வைத்திருந்த அதே ஆயுதங்களும், எண்ணங்களும் அவர்களிடம் இருந்தது.

பாராளுமன்ற தெருவில் கூடியிருந்த மக்கள் முன்பு இந்துத்துவ தலைவர்கள் ஒவ்வொருவராக பேசத் துவங்கினர்.

அதில் ஆர்.எஸ்.எஸ் யின் ஜன சங்க எம்.பி யும்,

நாடாளுமன்றத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி சஸ்பென்ட் ஆகியவருமான சுவாமி ரமேஷ்வர ஆனந்த்,

பாராளுமன்றத்தை முற்றுகை இடுங்கள் என்று கூறியவுடன்,

போலீஸ் தடுப்பை மீறி, பாராளுமன்றத்தை நோக்கி சென்றார்கள் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

தற்போது காஷ்மீரில் கல்லெறிவதை பற்றி பேசும் பா.ஜ.க வினர்,

அப்போது பாராளுமன்ற பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கல்லெறிந்தனர்.

கலவர கும்பலை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டையும், லத்திச் சார்ஜும் செய்தது.

அதையும் மீறி பாராளுமன்ற வாயில் கதவுகளை இடிக்க முயன்ற இந்துத்துவ இயக்கத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை.

உடனே

அங்கிருந்து ஓடிய இந்துத்துவ கலவர கும்பல்,

அருகில் இருக்கும் கார், கடைகள், அலுவலகங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் தாக்கத் துவங்கியது.

All india radio, Press trust of india, Press information bureau, Transport bhawan, shram bhawan போன்ற அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.

அது மட்டுமல்ல,

அரசு பேருந்துகள்,

post office வாகனங்கள்,

இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்,

டெல்லி அரசிற்கு சொந்தமான பால் பூத்துகளையும்

தீ வைத்து கொளுத்தியவர்கள் அங்கிருந்த டிராபிக் சிக்னல் லைட்டுகளை கூட விட்டு வைக்கவில்லை.

UNI அறிக்கையின் படி, 250 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இது நடந்தது அனைத்துமே பாராளுமன்ற வளாகத்தை சுற்றி தான்.

கிட்டதட்ட 90 லட்ச ரூபாய் அப்போதைய காலத்திற்கு நஷ்டமானது.

செல்லும் வழியெல்லாம் தீக்கரையாக்கிய இந்துத்துவ கலவர கும்பல்,

ஆயுதங்களுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அவர்களின் வீட்டை நோக்கி விரைந்தது.

காமராஜரை குறி வைத்ததற்கு பல காரணங்களை கூறினாலும் முக்கியமாக 3 காரணங்கள் இருந்தன.

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வருவதை நேரு எதிர்த்தார்.

நேரு இறந்த பிறகு அச்சட்டத்தை எதிர்த்தது காமராஜர்.

பசுவதைக்கு எதிராக இருந்த நேரு இறந்துவிட்டார்.

காமராஜரையும் காணாமல் ஆக்கிவிட்டால் பிரச்சனை இருக்காது என்று

ஆர்.எஸ்.எஸ் உடைய ஆர்கனைசர் இதழில் கார்டூன் படம் வரைந்து மிரட்டியது ஆர்.எஸ்.எஸ்.

இரண்டாவது காரணம்,

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையால் பள்ளிகள் மூடப்பட்டது.

இதனை எதிர்த்து முதலமைச்சர் பதவி வந்தவுடன்,

அனைத்து பள்ளிகளையும் திறந்தார் காமராஜர்.

அதுமட்டுமல்லாது, பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளின் வருகையை அதிகப்படுத்தும் விதமாக மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார்.

இதனால் ஏழை, பணக்காரன், சாதி மற்றும் மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைத்தது.

ஒரு சூத்திரன் கல்வி கற்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று

என்று சொல்பவரை வழிகாட்டியாக நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட உயர் சாதியினர் நடத்தும் இந்துத்துவ இயக்கங்களுக்கு

அது வெறுப்பை ஏற்படுத்தியது என்பதற்காகவும் குறி வைத்தார்கள்.

மூன்றாவது காரணம்,

1966 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்,

பசுவதை தடை கிளர்ச்சியை காமராஜர் வன்மையாக கண்டித்ததோடு,

அது சார்ந்து எந்த ஒரு தீர்மானத்தையும் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றவும் சம்மதிக்கவில்லை.

மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த கமிட்டி கூட்டத்தில் பேசியது வெளியில் கசிந்ததால்,

பசுவதை தடை கிளர்ச்சி ஆதரவாளர்களுக்கும்,

அதன் தலைவர்களுக்கும் காமராஜர் மீது கோபம் இருந்தது.

இது மட்டுமல்ல,

3.11.1966 யில் வெளியான நவசக்தி இதழில் காமராஜரின் பேச்சு வெளியானதும் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

பணக்காரனும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தான் சோசியலிசதிற்கு எதிரிகள்.

பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்க்கிறார்கள் தெரியுமா?

பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வரவிடாமல் தடுத்துவிட்டால்,

தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

நாம் விட்டு விடுவோமா என்ன? என்றார் காமராஜர்.

இன்று வளர்ச்சி என்ற பெயரில் வரும் கார்ப்ரேட் திட்டங்களை எல்லாம் மத்திய அரசும்,

பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் ஏன் ஆதரிக்கிறார்கள்

என்ற உண்மையை அன்றே சொன்னார் காமராஜர்.

காமராஜரை பழி தீர்க்கவே பசுவதை தடை பேரணியை நடத்தியதை போல ஏராளமானோர் காமராஜர் வீடு முன்பு ஆயுதங்களுடன் நின்று கொண்டு,

காமராஜர் எங்கே? வெளியே வா என்று அவரை தாக்க துடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டில் காமராஜர் இருந்தார்.

அவரை சந்திக்க வந்த ஒரு நண்பர் அவரை ஒரு அறையில் அடைத்து வெளியே பூட்டினார்.

நீங்கள் வெளியே வந்தால் உங்களை கொன்று விடுவார்கள் என்று அவர் கதவை திறக்கவே இல்லை.

இந்துத்துவ செயலால் கோபமடைந்த காமராஜர்,

வெளியே போய் நான் அவர்களிடம் பேசுகிறேன்.

என்னை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது,

வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிக்கு தீ வைத்தது கலவர கும்பல்.

காமராஜரின் வீடு சூறையாடப்பட்டது.

காமராஜரின் உதவியாளர் நிரஞ்சன்லால் இந்துத்துவ கலவர கும்பலால் தாக்கப்பட்டார்.

வீட்டை சூழ்ந்து கொண்டு கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.

காமராஜர் எங்கே என்று சொல்லப்போறியா இல்லையா என்று அங்கிருந்த அனைவரையும் தாக்கினர்.

குளிர்சாதன கருவிக்கு வைத்த தீயால்,

வீடே புகை மண்டலம் ஆனது.

காமராஜரின் வீட்டிற்குள் புகை வந்ததை பார்த்த,

அருகருகே குடியிருந்தவர்கள் அனைவரும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறை கலவரக்காரர்களை அடித்து விரட்டியது.

ஆனால் காவல்துறை வருவதற்குள் காமராஜரை உள்ளேயே வைத்து எரித்து விட வேண்டும் என்று வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் இந்துத்துவ இயக்கத்தினர்.

காமராஜர் அருகில் இருக்கும் எம்.பி கள் குடியிருப்பு பகுதிக்கு பின் வாசல் வழியாக அவரது ஆதரவாளர்களால் கொண்டு செல்லப்பட்டார்.

காமராஜர் வீடு மட்டுமல்லாது,

அருகில் இருந்த சமூக நலத்துறை உதவி மந்திரி ரகுராமையா வீட்டுக்கும் தீ வைத்து சென்றிருந்தார்கள் கலவரக்காரர்கள்.

இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் குன்சாரிலால் நந்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காமராஜரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற இந்துத்துவ கும்பலால் காமராஜர் பயப்படவில்லை.

மாறாக,

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு சவால் விட்டு சேலம் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

குறிப்பாக அவர்களுக்கு (இந்துத்துவ இயக்கத்தினர்) பயம் என்னைப் பற்றி தான்.

இந்த காமராஜர் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான்.

அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கிறான் என்கிறார்கள்.

என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான்.

ஆனால்

நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

கடமையை செய்தே தீருவேன் என்று 11/12/66 அன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார் காமராஜர்.

இதை நவசக்தி 15/12/66 அன்று வெளியிட்டது.

இதிலருந்தே காமராஜரை பசுவதை தடைக்கு மட்டும் கொல்ல நினைக்கவில்லை,

அவர் ஏழைகளை படிக்க வைத்தார்,

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தந்தை பெரியார் கொண்டு வர நினைக்கும் திட்டங்களை செயல்படுத்தினார் என்பதாலேயே

அவரை கொல்ல ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் குறி வைத்தது என்பதை

அவரின் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

உலகறிய நடந்த ஒன்றை செய்யவே இல்லை என்று மறுப்பதிலும்,

நடக்காத ஒன்றை நடந்ததற்கு நானே சாட்சி என்று வாதிடுவதிலும் திறமையானவர்களான இந்துத்துவ இயக்கத்தினர்,

தற்போது காமராஜரை தங்கள் அரசியல் வாழ்விற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

காமராஜரை கொல்ல முயற்சித்து விட்டு,

அவர் சார்ந்த நாடார் சமூகத்தை விளக்கு பூஜை போன்றவற்றை நடத்தி ஏமாற்றி வருகிறார்கள் என்பதே

உண்மையான வரலாறு அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை இந்துத்தவ இயக்கங்களை எதிர்த்து வந்தார் என்பதே

உண்மையான வரலாறாகும்.

Forwarded message.