Saturday, 1 August 2015

சிறப்புற நடைபெற்ற சமாதானக் கலைவிழா 2015!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆர்ட் ஆஃப் பீஸ் பவுன்டேஷன் சாா்பாக சென்னை மயிலாப்பூாில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா -2015 என்ற நிகழ்ச்சி 26.07.2015 அன்று நடந்தது. இதில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், உணா்வாய் உன்னை புத்தக வெளியீடு, அவள் குறும்படம் வெளியீடு, இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கல் மற்றும் புதிய மூன்று குறும்படங்கள் தொடக்கவிழா நடந்நது. இந்த விழாவிற்கு முனைவா் பேரா. ஹாஜா கனி அவா்கள் தலைமை வகிக்க, ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ஹூஸைன் பாஷா  விழாவைத் துவக்கிவைத்து அறிமுகவுரையாற்றினார். அனைவரையும் ஷாமிலா பாத்திமா வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை நிறுவனர் ஜனாப் அப்துல் கபூர் , தினமணி பத்திரிரையின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமுமுக-வின் தலைவர் மௌலவி ஜெ.எஸ்.ரிபாயி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் சிக்கந்தர், செய்தியாளர் மனோபாரதி, கல்கி பிரியன், இமயம் டிவியின் சுஃப்யான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
விழாவிற்கான ஒருங்கிணைப்பை குறும்பட இயக்குனர் காஜாமைதீன் அஹ்சனி தலைமையிலான குழுவினருடன், மீடியா 7, ஆர்.எஸ்.டி வீடியோஸ், ஷா ஸ்டுடியாஸ், யுனிவர்சல் சிண்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப்ஸ் நிறுவனத்தினர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இறுதியில் பொறியாளர் முஹம்மது ஹனிபா நன்றியுரையாற்றினார்.
s2 s1 s15 s13 s12 s6 s7 s8 s9 s10 s11 s5 s4 s3

Wednesday, 29 July 2015

கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கூகுளையும் கரைய வைத்த மாமனிதர்- முகப்புப் பக்கத்தில் கருப்பு ரிப்பன் கட்டி அஞ்சலி! Posted by: Vijayalakshmi Published: Wednesday, July 29, 2015, 17:24 
Google pays tribute to Kalam
சென்னை: மறைந்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழும் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமிற்கு உலகின் தலைசிறந்த தேடல் பொறியான கூகுளும் அஞ்சலி செலுத்தி வருகின்றது. மேதகு மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், நேற்று முன் தினம் தனக்கு மிகவும் பிடித்த மாணவர்களுடன், ஐஐஎம் கல்வி நிறுவனம் மேகாலயாவில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். உலகம் முழுவதும் அனைவரது உள்ளங்களிலும் நீங்காமல் நிறைந்து வியாபித்தவராய் திகழும் அப்துல் கலாமிற்கு உலகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மாணவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், அவரது மாண்பு எத்தகையது என்பதற்கு சான்றாக உலகில் அனைவராலும் உபயோகிக்கப்படும் முதன்மையான சர்ச் எஞ்சினான கூகுளும் "கருப்பு ரிப்பன்" மூலமாக தன்னுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றது. கூகுளின் முதன்மை பக்கத்தின் கீழாக அமைந்துள்ள அந்த கருப்பு ரிப்பன் "டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் சுட்டிக் காட்டுகின்றது. மக்கள் மனதிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் நீங்க இடம் பிடித்துள்ள அம்மாமனிதர் கலாம் மகாத்மாவிற்கு அடுத்தபடியான இடத்தை வரலாற்றின் பக்கங்களில் பெற்றுள்ளார் என்றால் மிகையில்லை. அதற்கு இந்த கூகுள் பக்கமே சாட்சி!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/google-pays-tribute-kalam-232166.html

Sunday, 26 July 2015

துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 வெள்ளியன்று ரமலான் சிறப்பு சொற்பொழிவு- Makkal urimai

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Thursday, 23 July 2015

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள் 107

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
மக்கீ, வசனங்கள்: 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
107:1   اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏ 
107:1(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2   فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏ 
107:2பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3   وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏ 
107:3மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4   فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ 
107:4இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5   الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ 
107:5அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6   الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏ 
107:6அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7   وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ‏ 
107:7மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

 துபாய் : துபாய் ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேசன் அருகில் உள்ள தம்பே மருத்துவமனையில் இலவச பல் மருத்துவ முகாம் ஜுலை 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது

ஜுலை 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஜுலை 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்க இருக்கிறது

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு 04 6030698,  050 2984424, 056 9583264, 055 7368941 ஆகிய எண்களை தொடர்பு  கொண்டு விபரம் பெறலாம்

  
Free Dental Camp on 23rd and 24th July (Thursday and Friday) @ Thumbay Hospital, Al Qusais, Dubai. Please find below details of the camp. 



For any assistance on transportation or any details  please feel free to call 046030698,  0502984424, 0569583264, 0557368941


Wednesday, 22 July 2015

திருமண பதிவு கட்டாயமல்ல; உயர்நீதிமன்ற தீர்ப்பு - தமுமுக வரவேற்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

22/07/15 8:04:57 pm: 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை

 திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமில்லை என்றும் திருமணத்தை  பதிவு செய்யவில்லை என்பதை காரணம் காட்டி ஒருவருடைய  உரிமையை  பறிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி எஸ். வைத்திய நாதன் வழங்கியுள்ள தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது. இந்த தீர்ப்பு ஆறுதலையும் தெளிவையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது.
  
 முஸ்லிம் திருமணங்கள் ஜமாத்துக்களில் பதிவு செய்யப்பட்டு  வருவது  நூற்றாண்டுகளாமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். இந்த  யதார்த்த  நிலைக்கு  மாறாக கடந்த சில ஆண்டுகளாக திருமணபதிவு செய்யவேண்டும்  என கட்டாயப்படுத்தலால் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுவந்தது இந்த  சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தமுமுக சார்பாகவும் திருமண பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி வைத்திய  நாதனின் இந்த தீர்ப்பு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதுகிறோம். திருமணப் பதிவு கட்டாயம் இல்லை என்ற தீர்ப்பால் கையூட்டு, கால தாமதம், தேவையற்ற அலைச்சல் போன்றவற்றால் ஏற்படும் மனஉளைச்சல் உள்ளிட்ட அவலம் அகன்றிட வழி பிறந்துள்ளது. அந்த வகையில் இந்த தீர்ப்பை தமுமுக வரவேற்கின்றது.

 அன்புடன்


(ஜே.எஸ்.ரிபாயீ)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 


பெண்னுரிமை பேணிய இஸ்லாம் – ஹோர் அல் அன்ஸ் கிளை பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக கடந்த 06-06-2015 அன்று பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் ”பெண்னுரிமை பேணிய இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அலஹம்துலில்லாஹ்!……………

புறம்.. குறும்படம் தயாரிப்பு சம்பந்தமாக 26.07.2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர் .எஸ்.இபுராஹிம் - பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் அவர்களுக்கு,

பொருள் : புறம்.. குறும்படம் தயாரிப்பு சம்பந்தமாக

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக..

ஷா ஸ்டுடியோஸ் மேற்பார்வையில் உருவாகவுள்ள புறம்.. என்ற இஸ்லாமிய குறும்படத்தை தாங்கள் பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் சார்பாக தயாரிக்க முன்வந்தமைக்காக எங்களுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். இக்குறும்படத்தின் தொடக்கவிழாவை 26.07.2015, ஞாயிறு அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடத்தவிருப்பதால் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தினரோ கலந்துக்கொண்டு அந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் படத்திற்கான திரைக்கதையை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  
அன்புடன்,

காஜா மைதீன் அஹ்சனி
இயக்குநர்

எனவே நமது சகோதரர்கள் இதையே அழைப்பிதலாக வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு  ரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் சார்பாக கேட்டு கொள்கிறோம்.  



"Please don't print this e-mail unless you r

Tuesday, 21 July 2015

அல்ஹம்துலில்லாஹ்! குகன் மனம் மாறினார்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்! குகன் மனம் மாறினார்!!
====================================================
கடந்த 17-07-2015 சனியன்று சார்ஷா சஜா கேம்பிற்கு மார்க்க நிகழ்ச்சிக்காக  சகோதரர் கபீர் அவர்கள் சென்றார்கள் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட சகோதரர் ஒருவர் தன் நண்பர்  தங்கி இருக்கும் அறையில் மாற்றுமத நண்பர் ஒருவர் உள்ளார் அவரிடத்தில் இஸ்லாமிய அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூற அதன் அடிப்படையில் 18-07-2015 ஞாயிறு அன்று தலைவர் A.S.இப்ராஹீம், கபீர் மற்றும் இம்ரான் ஆகியோர் திருவாரூர் குகன்  என்ற சகோதரரை சந்தித்தோம். 

தனது குடும்பத்தார்களை பற்றி சிறிதுநேரம் எங்களிடம் உரையாடினார் தனது குடும்பம் கள்ளர்  சாதியை சேர்ந்தவர்கள் என பேசத் தொடங்கினார், நாங்களும் எங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறி பேசத்தொடங்கினோம் சரியாக மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த எங்களின் உரையாடல் இறைவன் என்பவன் யார்? என்பதில் இருந்து தொடங்கி இறுதியில் மறுமை வாழ்க்கை வரை சென்று சரியாக 7.00 மணிவரை நீடித்தது, ,
குகண் அவர்களும் தான் நண்பர்களிடம் இஸ்லாம் பற்றி கேட்டு வருவதாகவும் கூறினார்,இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே தான் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்க விரும்புவதாக கருத்தை கூற, உடனே நாங்கள் மூவரும் நல்ல காரியத்தை செய்ய காலம் கடத்தாதீர், மனிதன் மரணிக்க கூடியவன் மரணம் நமக்கு வரும் முன் நாம் நல்ல காரியத்தை செய்யவேண்டும் இப்போதே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே என்றுக் கூற அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் உடனடியாக ஒளுச் செய்து சத்திய ஏகத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு மனம் மாறினார் சகோதரர் குகன் அப்துல்லாஹ் வாக 
மனம் மாறிய சகோதரர் அப்துல்லாஹ் அடுத்தக் கட்டமாக தனது பெற்றோர்ளையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பக்கம் அழைப்புக் கொடுக்க தயாராகிவிட்டார் அவரின் நோக்கம் நிறைவேற சகோதரர்கள் அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம், எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்

A.S.இபுராஹிம் - துபாய் 

2015 ஈத் பெருநாள் சந்திப்பு ஜனாப் ஆரிப் ரஹ்மான் உடன் A.S.இபுராஹிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

2015 ஈத் பெருநாள் சந்திப்பு ஜனாப் ஆரிப் ரஹ்மான் உடன் A.S.இபுராஹிம்


Honorable V.C son respected AARIF REHMAN sir ......2015 EID wishes