Tuesday, 21 July 2015

2015 திருமறை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு இலவசமாக கொடுக்கபட்டது


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

அதில் இந்த வருடம் 2015 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருமறை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு முஸ்லிம்களுக்கும் மாற்று மத சகோதர்களுக்கு இலவசமாக கொடுக்கபட்டது .













9 வருட பயணத்திற்குப் பின்னர் புளூட்டோவை நெருங்கும் நியூ ஹாரிஸான்ஸ்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாஷிங்டன்: மனித குல வரலாற்றில் முதல் முறையாக, மனிதனால் நமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விண்பகுதிக்கு அனுப்பப்பட்டு, நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வரும் பெருமை படைத்த அமெரிக்காவின் நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது, நாளை புளூட்டோ கிரகத்தைக் கடந்து செல்லவுள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டு காலமாக புளூட்டோவை நோக்கி பயணித்து வந்தது நியூ ஹாரிஸான்ஸ். சமீபத்தில் அது கிரகத்தை நெருங்கியது. இதன் மூலம் பல வியத்தகு புகைப்படங்கள் நமக்குக் கிடைத்தன. இந்த நிலையில் தனது ஆய்வின் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நியூ ஹாரிஸான்ஸ் விண்கலமானது நாளை புளூட்டோ கிரகத்தை 10,000 கி.மீ அளவுக்கு நெருங்கிச் செல்ல உள்ளது. இது மனித இனத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Monday, 20 July 2015

பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.



மேலும் பரமக்குடி  நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 10 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கதுரமலான் 27 அன்று 15-07-2015 பித்ரா  200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  விநியோகிக்கபட்டது 

























Monday, 13 July 2015

துபாய் தமுமுக தலைவர் AS இப்ராகிம் அவர்கள் அஸ்கான் D பிளாக்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

  1. துபை தமுமுகவின் தேரா ... - YouTube

    www.youtube.com/watch?v=FTIDjMM6AVw
    Apr 19, 2015 - Uploaded by Jainul Abdeen
    துபாய் தமுமுக தலைவர் AS இப்ராகிம் அவர்கள் அஸ்கான் D பிளாக்கில்  ...

ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நாள் : Nov 8 2011 8:14PM

பிஸ்மில்லாஹ் ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

துபை நவம்பர் - 06 - 2011 மாலை 7.00 மணி அளவிள்

ஸ்டார் இன்டெர் நேஷனல் ஸ்கூல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா நடுக்கடை, முகம்மது பந்தர், கண்டியூர், திருப்பந்துருத்தி ஜமாத்தார்கள் ஒருங்கினைந்து நடத்தினார்கள். முஸ்லிம் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த E.T.A. MELCO நிறுவனத்தில் பணிபுரியும் A.S. இப்ராகிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஷார்ஜா பிளாக் துளிப் கம்பெனி உரிமையாளர் யஹ்யா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலத்திருப்பந்துருத்தி துக்காச்சி காஜாமைதீன் அவர்கள் துவக்கி வைத்து பேசினார்கள்.

முகம்மது பந்தர் ஹாபிஸ் முகம்மது முஸ்தபா அவர்கள் கிராத் ஓதினார்கள்.

மேலத்திருப்பந்துருத்தி P. லியாகத் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து கண்ணியமிக்க சி.த. அப்துல் காதர் காக்கா அவர்களும் சென்னை தானிஷ் அகமது கல்லூரியின் பேராசிரியர் காதர்ஷா அவர்களும் மற்றும் முதுவை ஹிதாயத் , திருப்பனந்தால் தாஹா

அவர்களும் கல்வியின் விழிப்புணர்வை பற்றி விரிவாக பெசினார்கள். தாஹா அவர்கள் பேசும் போது

அமீரகத்தில் யாருக்கும் எந்த உதவிகள் அவசியப்பட்டாலும் எங்களை நாடுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என கூட்டத்தில் வாக்களித்தார்கள். அதை தொடர்ந்து நடுக்கடை A.P. முகம்மது (தம்பி ராஜா) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதில் நடுக்கடை ஜனாப் சாதிக் பாய் அவர்கள் ஒரு ஏக்கர் நிலம் பள்ளிக்காக நிதியாக வழங்குவதாக அறிவித்தார்கள்.

மேலத்திருப்பந்துருத்தி அகமது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

அதில் இந்த முயற்ச்சிக்கு உறுதுனையாக இருந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்து மேலும் பள்ளி வசதிவாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு முழுவதும் ஷாரிட்டி மூலம் நடைபெரும் என்ற விளக்கத்தையும் தந்தார்கள். முஹம்மது பந்தர் ஆரிப் பாய் அவர்கள் போர்முதல் மற்றம் வாட்டர்கணக்ஷன் அனைத்தையும் செய்து தருவாதாக அறிவித்தார்கள்.

துக்காச்சா ஹாஜா அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நாண்கு தவனைமுறையாக தருவாக வாக்களித்துள்ளார்கள். மற்றும் கூட்டத்திற்க்கு திரளாக வந்திருந்த அனைத்து பகுதி ஜமாத்தார்களுக்கும் மற்றும் இக்கூட்டம் நடைபெருவதற்க்கு உறுதுனாயக இருந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

அதன் பிறகு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய A.S. இப்ராகிம் அவர்கள் துவா ஓதினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருடைய மனதிலும் பெரும் ஆறுதலாக இருந்த விசயம் என்ன வெனில்

மார்க்க கல்வியுடன் கூடிய ஒரு பொது கல்வி நிறுவனம் நம்முடைய பகுதிக்கு அதி விரைவில் அமைய உள்ள செய்தி அறிந்து அனைவரும் சந்தோசமாக விடை பெற்று சென்றனர்.

அல்லாஹு அக்பர் .

செய்தித்தொகுப்பு

ஹாஜா மைதீன்

Sunday, 12 July 2015

துபாய் வருகை தந்த தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் வருகை தந்த தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி



இன்று துபாய் வருகை தந்த தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி ரஷாதி அவர்களையும், மாநில பேச்சாளர் கோவை ஜெய்னுல் ஆபிதீன் அவர்களையும் துபாய் விமானநிலையத்தில் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி. அவர்களும், துபாய் மண்டல தலைவர் பரமக்குடி இபுறாகீம்.MBA., அவர்களும், அதிரை சாகுல் ஹமீது, அடியற்கை சேக் தாவூது மதுகூர்  ஹாஜா  மற்றும் துபாய் மண்டல  நிர்வாகிகள் வரவேற்றனர்

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 ரமாலன் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 ரமாலன் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது,

தலைவர் மௌலவி ரிபாய் ரஷாதி அவர்களின் உரை


இறைவனின் கிருபையால் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 வெள்ளியன்று மாலை 5:00 மணியளவில் தேரா லேன்ட் மார்க் ஹோட்டலில் ரமாலன் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது,




 தமுமுக துபை மண்டல தலைவர் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்,




தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றி ரமலான் மாதத்தின் சிறப்புகளையும் ரமாலனில் நாம் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்,

மஹ்ரிப் தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டு சமுதாய  பேரியக்கத்தின் தலைவர் மௌலவி ரிபாய் ரஷாதி அவர்கள் கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், ஆரம்ப உரையில் தமுமுகவின் பணிகளை சகோதரர்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து உரையை ஆரம்பித்த தலைவர் அவர்கள், இறைமறை குர்ஆனை நாம் ஓதுவதின் நன்மைகளையும் குரானிய சமுகமாக வாழவேண்டியதின் அவசியத்தையும் குறிப்பிட்டார்கள், ஒவ்வொரு முஸ்லிம்களும் குர்ஆனுக்கு உயிரோட்டம் கொடுத்து இம்மை, மறுமை வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினார் கள்,

இந்நிகழ்ச்சியில் அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹதி,செயலாளர் சகோதரர் யாசீன் நூருல்லாஹ்,,துணைத் தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா ஆகியோரும் உரையாற்றினார்கள்,அமீரகத்தில் உள்ள அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்,





சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல ஒருங்கிணப்பாளர் சகோதரர் மதுக்கூர் ஹாஜா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது �

23-06-2015 துபாயில் முத்துப்பேட்டை சகோதரர்களால் இஃப்தார் நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

23-06-2015 துபாயில் முத்துப்பேட்டை சகோதரர்களால் இஃப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மாநில தலைவர் J.S.ரிஃபாயி மற்றும் மமக மாநில பொது செயலாளர் தமிமுன் அண்சாரி



ன்று 23-06-2015 துபாயில் முத்துப்பேட்டை சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மாநில தலைவர் J.S.ரிஃபாயி ரஷாதி , மமக மாநில பொது செயலாளர் தமிமுன் அண்சாரி,TVS கார்கோ நிறுவனர்  S.M.ஹைதர் அலி, TVS கார்கோ மேனேஜர்  அலாவுதீன் மற்றும் துபாய்,மண்டல தலைவர்  AS இப்ராஹிம், துணை தலைவர் குணகுடி முஹைதீன் துணை செயலாளர் கீழக்கரை ஜெய்னுல் அப்தீன்  பாரூக் மற்றும் ஷார்ஜா மண்டல நிர்வாகிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Monday, 6 July 2015

துபாய் – தோராவில் AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக ரமலான் நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் – தோராவில் AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக ரமலான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துபாய் வாழ் தமிழ் மக்களுக்காக துபாய் அரசாங்கத்தால் வருடந்தோரும் நடத்தப்படுகிறது.
AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக துபாயில் வாழம் தமிழக மக்களுக்காக இஸ்லாமிய அழைப்பு பணி சேவைகளில் AL MANAR தமிழ் விங்ஸ் தன்னை ஈடுபடுத்திகொள்கிறது.

AL MANAR தமிழ் விங்ஸ் சார்பாக ரமலான் நிகழ்ச்சி வருடந்தோரும் நடத்தபடுவதையொட்டி தமிழகத்தில் தலைசிறந்த உலமாக்களை துபாய் அரசாங்கம் தேர்தெடுத்து விழாவில் பங்கேற்க வைக்கிறது.
இந்த வருடம் தமிழக உலமாக்களில் தேர்த்டுக்கபட்டவர் மொளவி கமலாத்தீன் மதனி அவர்கள் ஆவார். மொளவி கமலாத்தீன் மதனி அவர்கள் 02.07.2015 அன்று அல் பரஹா மருத்துவமனையில்வுள்ள அல் வுவசை அரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமையும் ரமலானின் சிறப்புகளும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள்



மேலும் தமிழக துபாய் வாழ் மக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.


Sunday, 5 July 2015

பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் - நற்பணிகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.


1. அல் குர் ஆன் இலவசமாக விநியோகிக்கபடுகிறது

2. இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கபடுகிறது

3. ரமலான் 27 அன்று பித்ரா விநியோகிக்கபடுகிறது 200 க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் பயனடைகிறது.

4. கல்வி உதவி அளிக்கப்படுகிறது

5. ஷிர்க்க்கு எதிரான பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு

6. அல் குர் ஆன் மற்றும் நபி வழிப்படி பிரச்சாரம்

7. பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய பிரச்சாரம்

8. பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி 'அகமும் புறமும்'

9. உணர்வாய் உன்னை! என்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

10. TIME MANAGEMENT

11. குழந்தை வளர்ப்பு கலை பயிற்சி முகாம்

12. பேச்சுப்பயிற்சி வகுப்பு  ( 6 மாதம்)

மேலும் பரமக்குடி,   பார்த்திபனூர்  & எமனேஸ்வரம் நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு  பித்ரா கடந்த 10 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

எனவே தங்களுடைய பித்ரா மற்றும் ஸக்காத்தை கொடுத்து ஏழைகளுக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

A.S.Ibrahim

971 50-5814268