Saturday 22 February 2014

சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டை தமக்கு தரச்சொல்லி கேட்க, 

அவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆடுகள்' என்று கூறி தரமறுக்க, 

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட கேட்க... 

அவரோ... '200,000 ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க தரமாட்டேன்' என்று கூற, 

அந்த சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் யாரும் உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் பயம் கொள்கிறீர்?' என்று வறுபுறுத்த, 

அதற்கு அந்த முஸ்லிம் சகோதரன் கூறியவார்த்தை... 'அல்லாஹ் எங்கு சென்றான்... 

அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... 

அவன் நம்மை பார்க்கிறானே... " என்று பதில் கூறி ஆட்டை தர/விற்க திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய காணொளி யூ ட்யூபில் வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.



ஆம்..! அந்த சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் 200,000 சவூதி ரியால் பணத்தை அந்த சகோதரனுக்கு பரிசாக கொடுத்துள்ளது. 

மாஷா அல்லாஹ். 

இன்னொரு இடத்தில் 20,000 சவூதி ரியால் வெகுமதி கிடைத்துள்ளது. 

மேலும் 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் கிடைத்துள்ளது.


அல்லாஹ் தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான்.

"(அல்லாஹுவை அஞ்சினால் )அவர் எண்ணியிராத விதத்தில் வாழ்வாதரங்களை அல்லாஹ் வழங்குவான் எவர் அல்லாஹுவின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் "(63 - 3 )

இறைவா..! வறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும் அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

Wednesday 19 February 2014

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு, அவரது மகனும், காங்கிரஸ் 
துணைத்தலைவருமான ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்தால், சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள் என கூறியுள்ளார்.

///தந்தையை பறிகொடுத்த மகனாக உங்கள் வலியை உணர்கிறோம். அதேநேரத்தில் அவசரகதியில் எங்கள் சகோதரன் அப்ஸலை உங்க அரசு பலிகொடுத்து, திஹார ஜெயில் மரங்களுக்கு உரமாக்கியதே! அப்போது அப்ஸலின் பத்து வயது பாலகன் அடைந்த வலி இப்போது புரிந்திருக்கும்தானே! உங்களை குத்திக்காட்டுவதற்காக சொல்லவில்லை. எல்லா உயிர்களும் சமமானதுதான் என்பதை உங்கள் அரசு உணரவேண்டும் என்பதற்காகவே//


மாதா சிலை கண் திறந்தது உண்மையா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாதா சிலை கண் திறந்தது உண்மையா?
- சிந்திப்பார்களா மக்கள்?

#சென்னை பெரம்பூர் லூர்து மாதா கோவிலில் உள்ள மாதா சிலை திடீரென்று கண் திறந்தது என்று சொல்லி ஒரு செய்தியை பரப்பிவிட்டு வழக்கம்போல கிறித்தவ மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர் அதன் போதகர்கள்.

இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, பொய்யையும், பித்தலாட்டத்தையும் மூலதனமாகக் கொண்டு தங்களது மதத்திற்கு ஆள் பிடிப்பதுதான் இவர்களது வழமை.

அந்த வரிசையில்,
குருடர்கள் பார்க்கிறார்கள்…
செவிடர்கள் கேட்கின்றார்கள்…
ஊமைகள் பேசுகின்றார்கள்…
சப்பானியர்கள் நடக்கின்றார்கள்…..
செத்தப் பிணங்கள் எல்லாம் உயிரோடு எழும்பி நடக்கின்றது….
மாதாவின் சிலையில் இருந்து சப்தம் வந்தது….
#மாதா சிலை கண் சிமிட்டியது….
மாதாவின் வாய் அசைந்தது….
புனித தோமையரின் உடல் முழுவதும் அழுகினாலும் அவரது கை மட்டும் அழுகாமல் அப்படியே உள்ளது….

#இயேசு சிலையிலிருந்து புனித நீர் வழிகின்றது என்று இவர்களது பொய்கள் நீண்டு கொண்டே போகின்றன.

இதற்கும் பகுத்தறிவுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பதையும், மக்களை மடையர்களாக்கும் இவர்களது பொய், பித்தலாட்டங்களையும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும், அறிவுப்பூர்வமான வாதங்களுடனும் தோலுரித்துக்காட்டுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்…

வீடியோ காண:http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/


Paramakudi Thoufeeq

போங்கடா நீங்களும் உங்க பொடலங்கா நீதியும்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு நாட்டின் பிரதமராக பதவி வகித்தவரையும் அவரோடு இருந்த சுமார் 15 பேரையும் சேர்த்து படுகொலை செய்யப்பட்டவர்கள் என உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாம்!

விசாரணைக்கைதிகள் என்ற பெயரில் பல்லாண்டு காலமாக சிறையில் வாடி வரும் அப்பாவி முஸ்லிம்களை குறித்து மத்திய மாநில அரசுகள் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏனோ?

குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்ற போதிலும் கூட்டு மனசாட்சி என்ற அடிப்படையில் அப்சல் குருவுக்கு தூக்கு ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையாம்.

போங்கடா நீங்களும் உங்க பொடலங்கா நீதியும்!

மத்திய மாநில அரசுகளே! அரசியல் வியாபாரிகளே!!

உங்களின் அநீதமான ஒவ்வொரு செயலுக்குமுரிய விலையினை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பெரிய அளவில் கொடுக்க இருக்கிறீர்கள் என்பதனை இந்நேரம் நினைவுப்படுத்துகிறோம்.


We have not discussed about religion in this thread. We are discussing about the denial of justice to a section of people. We are condemning the discrimination and nothing more than that.

Tuesday 18 February 2014

சினிமா நடிப்பு ஆசையில் உலவும் பெண்களே உஷார்:-

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


ஒரு தமிழ் நடிகையின் அவலம் பாரீர்:-இவர் ஒரு முஸ்லீம் பெண்.80 களில் மிக முன்னணி நடிகை.தமிழ் திரைப்பட நடிகை.கமலுடன் டிக்,டிக்,டிக்,ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி,சுமனுடன் எனக்காகக் காத்திரு,போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இந்த நடிகை நிஷா.கொடிய நோயினால் அவதிபட்டு இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க கிடக்கிறார்.யாரும் கவனிக்க ஆளில்லை. சினிமா,சினிமா,என்று பித்து பிடித்து அலையும் பெண்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம்.




http://www.dooringtalkies.com/actress-nisha.html
 — 

Monday 17 February 2014

இஸ்லாம் பெண்களை ஒடுக்கும் மார்க்கமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாம் பெண்களை ஒடுக்கும் மார்க்கமா? இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பிரிட்டனை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரின் கருத்து என்ன ?

யுவான் ரிட்லி நம்மில் பலருக்கு தெரிந்த பெயர் .பிரிட்டனை சேர்ந்த வெள்ளைகார பெண். பத்திரிக்கையாளர், சமூக சேவகர் என்று பல பரிமாணங்களை கொண்டவர். புகழ் பெற்ற சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஆசிரியராக வேலை பார்த்தவர்..

தாலிபான்களால் சிறை ...

“நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்"

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்.

சிறையிலிருந்த போது...

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்..அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்ட பெண்’ என்று அழைத்தார்கள்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து விடுதலை ..

பின்னர் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?).

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம். அவர்களை பற்றிய உண்மையான தகவல்களை வெளியிட்டாலே போதுமானது என்பதே...
இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு ..

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.

மேலும் இஸ்லாத்தில் உள்ள எனது சந்தேகங்களை களைய பெரிதும் உதவியது, பிரிட்டன் ஊடகங்களால் அடிப்படைவாதி என்றும் தீவிரவாத எண்ணங்களை உருவாக்குபவர் என்றும் சொல்லப்பட்ட பின்ஸ்பரி பார்க் (Finsbury Park Mosque, North London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.
"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.

சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள்.

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.

அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார்.
இன்று! "இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

ஹிஜாபை பற்றி குறிப்பிடும் போது...

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.

மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.என்பதே ..

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ‘வாடகைக்கு’ என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் “பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே’ என்றும் “பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?’ என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் – அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! – அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்…. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பதே...

ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.

முஸ்லிம்களை பற்றி கூறும் போது..

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))" என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்" என்றார்..

ஹஜ்ஜை நிறைவேற்றியது பற்றி குறிப்பிடும் போது..

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை ஒருசில நொடிகளில் கொண்டுவரமுடியாது. பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"

தனது குடும்பத்தை பற்றி குறிப்பிடும் போது...

யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" என்றார் ..

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...
"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"
அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.
இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்..இதை தனது வாழ்கையின் பணிப்பினை ,மூலம் உணர்ந்த சகோதரி தான் யுவன் ரிட்லி..

இவரை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தது திருக்குர்ஆன் மட்டுமே.. ஒருவர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள சரியான அளவு கோள் திருக்குர்ஆன் மட்டும்.. இந்த குரான் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை ...

Sunday 16 February 2014

இது தான் மதச்சார்பற்ற நாடா ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இந்தியா என்பது மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று உலக மக்களுக்கு பறைசாற்றி கொண்டிருக்கிறது.

மதச்சார்பற்ற நாடு என்பது எந்த மதத்தையும் சாராத நாடு என்று உலக நாடுகளுக்கு அறிவித்து விட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையில் கோவிலின் படத்தை போட்டு நாட்டின் கொள்கைக்கு மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் அதே முத்திரையில் கோவில், மசூதி, கிறித்தவ ஆலயம் ஆகிய மூன்று மதத்தின் படங்களை போட்டாலும் அது நாட்டின் கொள்கைக்கு எதிரானது தான்.

ஆகையால் தமிழக அரசு கோவில் படத்தை நீக்கி விட்டு எந்த மதத்தையும் சாராத பொதுவான முத்திரையை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையாக அறிவிக்க வேண்டும்.

ரூபாய் நோட்டுக்களில் இருந்த அசோக சக்கரத்தை நீக்கிவிட்டு காந்தியின் புகைப்படத்தை காவிகள் போட்டனர்.

காவிகளுக்கு காந்தியின் மீது பற்றோ பாசமோ கிடையாது. அசோக சக்கரம் என்பது புத்த மதத்தின் அடையாளம் என்பதால் காவிகள் கங்கணம் கட்டிக்கொண்டு அசோக சக்கரத்தை நீக்கி விட்டு காந்தியின் படத்தை வைத்தார்கள்.

காவிகளை போல் மத ரீதியாக தமிழக அரசின் முத்திரையை நாம் நீக்க சொல்லவில்லை. நம் நாட்டின் கொள்கைக்கு எதிராக இருக்க வேண்டாம் என்ற தேசப்பற்றின் காரணமாக தான் கூறுகிறோம்.



அதேபோல ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மதம் சம்பந்தப்பட்ட வழிபாடு நடத்தப்பட கூடாது என்று சட்டம் இருக்கும் நிலையில்...

நிறைய அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மதம் சம்பந்தப்பட்ட வழிபாடுகளை நடத்தி நாட்டின் கொள்கைக்கு எதிராக நாம் போய்விடாமல் தேசத்தின் கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் நாம் வாழ வேண்டும்.

மேலும் இக்கோரிக்கையை நாம் மட்டும் கூறாமல், கிறித்தவர்கள், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள், தமிழ் உணர்வாளர்கள், தேச உணர்வாளர்கள் என ஒட்டு மொத்த இந்தியர்களும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்.

இரண்டாம் வகுப்பு மாணவி ஆஷிமா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
பொது அறிவுப் போட்டியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் சிறுமி சாதனை....!! 

மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஆஷிமா அதிவேகத்தில் பல தகவல்களை தெரிவித்து அறிவுப்போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (7). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே பொது அறிவில் மாணவி ஆஷிமா சாதனை படைத்தவர்.

இவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ரோட்டரி கிளப் சார்பில் நேற்று சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவி ஆஷிமா 196 நாடுகள், அதன் தலைநகரங்கள், இந்தியாவின் 26 மாநிலங்கள், அதன் தலைநகரங்கள் போன்றவற்றை நொடிப் பொழுதில் தெரிவித்து அசத்தினார்.

இதேபோல் 1947ம் ஆண்டு முதல் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள், பிரதமர்கள், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் ஆகியோரையும் அவர் 6 நிமிடத்தில் பட்டியலிட்டு சாதனை படைத்தார்.

பொது அறிவு தொடர்பாக பலர் கேட்ட கேள்விகளுக்கும், உடனுக்குடன் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

எல்லாம் வல்ல இறைவன் இக்குழந்தைக்கு பல்வேறு திறமைகளை வழங்கி சமுதாயத்தின் உயரிய அந்தஸ்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு அருள் புரிவானாக...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

யுவன் சங்கர் ராஜாவின் பிரத்யேக பேட்டி!

தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது.

இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது.

அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

அனுபமா சுப்ரமணியன்: ஒரு வதந்தி நிலவுகிறதே! டைரக்டர் அமீர் தான் உங்களின் மனமாற்றத்துக்கு காரணம் என்றும் அவர்தான் உங்களை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று இஸ்லாத்துக்கு மாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறதே!

யுவன் சங்கர்: (பலமாக சிரிக்கிறார்) நீங்கள் சொல்லும் அனைத்தும் தவறான தகவல்கள். என்னை யாரும் இஸ்லாத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. இது அவரவர்களின் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். உங்களின் உள் மனதில் இறை நம்பிக்கையில் ஏற்படும் சில மாற்றங்களே தற்போது என்னுள் நடந்துள்ளது. இது தான் உண்மையும் கூட.

அனுபமா சுப்ரமணியம்: உங்கள் தந்தை இந்து மத நம்பிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். உங்களின் இந்த மன மாற்றத்தை எவ்வாறு எடுத்துக் கொண்டார்?

யுவன் சங்கர்: ஒரு மகனாக, எனது இந்த மன மாற்றத்தை முதலில் எனது அப்பாவிடம் தான் சொன்னேன். ஆம். சொன்னவுடன் அவர் முதலில் அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு எனது முடிவை ஒத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக் கொண்டார். தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதையே அவர் விரும்பினார். எனது தங்கை பாவனாவிடமும், எனது அண்ணன் கார்த்திக்கிடமும் இதைப் பற்றி கூறினேன்.

அவர்கள் இருவரும் கூட என்னை நன்கு புரிந்து கொண்டு எனது முடிவை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கும் எனது தந்தைக்குமிடையே இந்த மன மாற்றம் சம்பந்தமாக பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற வதந்தி சில காலமாக மீடியாவில் உலவுகிறது. அனைத்து செய்திகளும் தவறானவை. நானும் எனது குடும்ப அங்கத்தினர்களும் எப்போதும் போலவே சந்தோஷமாக இருக்கிறோம்.

அனுபமா சுப்ரமணியம்: ஏ ஆர் ரஹ்மானை நீங்கள் பின்பற்றுவதாக சிலர் கூறுகின்றனரே!

யுவன் சங்கர்: அவரை நான் ஏன் பின்பற்ற வேண்டும்? என்னுள் ஏற்பட்ட சில மாற்றங்கள் இந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது. அவ்வளவுதான்.

அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

யுவன் சங்கர்: இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர். இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன். தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.

அனுபமா சுப்ரமணியம்: ’யுவன் சங்கர் ராஜா’ என்ற உங்களின் இந்த பெயரும் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா?

யுவன் சங்கர்: இது பற்றிய செய்தியை விரைவிலேயே வெளியிடுவேன்.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்” என்று கூறுவீராக!

குர்ஆன் : 49:17

ஆம். இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் ‘இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்’ என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.

வாளால் இஸ்லாம் உலகமெங்கும் பரப்பப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் பிடித்துக் கொண்டு ‘எது வேண்டும?’ என்று ஒளரங்கஜேப் கேட்டதாக நமது வரலாற்று புத்தகங்களில் ஏகத்துக்கும் கதை அளந்திருப்பார்கள். அந்த கதைகள் அனைத்தும் கற்பனைகளே என்பதற்கு இந்த பேட்டி மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

ஹூஸைனீ எனும் அன்ஸாரீ ஒருவருக்கு கிறிஸ்தவர்களான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் தொடர்ந்தும் இருக்கப் போவதாக பிடிவாதமாக இருந்தனர். எனவே, அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவ நிர்ப்பந்திக் கட்டுமா என நபி அவர்களிடம் அவர் வினவியபோது நபியவர்கள் அவரைத் தடுத்தார்கள். அப்போது இந்த வசனம் இறக்கப்பட்டது.

“மார்க்கத்தில் பலவந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழியானது தெளிவாகிவிட்டது”
குர்ஆன்: (2:256)

எனவே எவரையும் அவரின் வறுமையையும், சிரமத்தையும், இயலாமையையும் காரணமாக்கி அதன் மூலம் வலுக்கட்டாயமாக எவரையும் இஸ்லாத்தில் இணைக்க முற்படுவது குர்ஆனின் கட்டளைக்கே மாற்றமானது என்பதை விளங்குகிறோம்.
 — with Haja Nayeem.

பஹ்ரைனில் 11 வயது இந்து சகோதரியின் அபாரமான சாதனை ..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

K. சுவர்ண லஹரி என்கிற ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி , எதோ ஒரு உந்துதலால் குர்ஆன் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கி இருக்கிறது இதனை கவனித்த அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் இச்சிறுமியின் ஆர்வத்திற்கு உதவியுள்ளார்கள் ... இதன் விளைவாக மிக சரளமாக குர்ஆன் ஓத கற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமால் குர்ஆன் ஓதுதல் போட்டியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக ஓதி பார்வையாளர்களாக இருந்த முஸ்லிம்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் , மற்றும் அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் மேலும் இவருக்கு சிறப்பு பரிசும் அளிக்கப் பட்டுள்ளது .. மாஷா அல்லாஹ் .. தபாரக்கல்லாஹ்....

இவரது பெற்றோர்கள் இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது... மக்களுக்கிடையில் மதம் , மற்றும் மத நம்பிக்கைகள்ஒரு தடையாக இருக்க கூடாது என இச்சிறுமியின் அப்பா துர்கா பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார். இவரது அம்மா சுஜாதா அவர்கள் மகளை நினைத்து பெருமிதம் அடைந்துள்ளார்கள்

சிறுமி K. சுவர்ண லஹரி.. இனியும் குர்ஆனை ஓதுவதோடு இதன் அர்த்தங்களையும் புரிந்து கொள்வதற்கு முயற்ச்சி செய்வேன் என மகிழ்ச்சியாக சொல்லியுள்ளார் ... தனது ஆர்வத்தை செம்மைப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வந்தது தந்து ஆசிரியர்கள்தான் என மிகுந்த சந்தோஷத்துடன் சொன்னார் ....

" அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் "

எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ் , தான் நாடியவர்களுக்கு நல்ல நிலையையும் , நல்அருளையும் கொடுக்கிறான் ...
இச்சிறுமிக்கும் , இவரின் பெற்றோர் , மற்றும் உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நேர்வழியை கொடுப்பானாக என இந்தருணத்தில் துஆ செய்வோம் ..

யா அல்லாஹ்! ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு இச்சிறுமியையும் , இவரின் பெற்றோர்களையும் , உறவினர்களையும் அழகு படுத்துவாயாக! மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் இவர்களை ஆக்கியருள்வாயாக! ...ஆமீன்

குறிப்பு : அருமை சகோதரர்களே ! ஏராளமான முஸ்லிம்கள் இன்னும் குர் ஆனை ஓதாமலும் , உச்சரிப்புகளை சரிவர சொல்ல முடியாமலும் , போடும் போக்காகவே இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இப்பதிவு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ் .... பஹ்ரைனில் வாழும் முஸ்லிம்கள் , குர் ஆனை ஓத தெரியாதவர்கள் , உச்சரிப்பு கோளாறு உள்ளவர்கள் , அர்த்தம் தெரியாதவர்கள் , தமிழ் மக்களுக்கென்றே பணியாற்றி வரும் " மர்கஸ் இப்னு ஹத்தாப் " தாவா நிலையத்தை உடனே அணுகுங்கள் , பயன் பெறுங்கள் இன்ஷா அல்லாஹ் ....

தொலைபேசி : 17291373
Mobile Numbers : 39354312 , 39270997, 33355265

இன்ஷா அல்லாஹ் .. தொடர்பு கொள்ளுங்கள் ...நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள் ...

- தக்கலை கவுஸ் முஹம்மத்
 —