Saturday 5 October 2013

இங்கே இருக்குது சமத்துவம்...!





அன்புச் சகோதர, சகோதரிகளே...! 20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது. தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.
அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் இந்து மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள். தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர். ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள். மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.
தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும். ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக் காரனின் வீட்டில் நுழையலாம்... அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்... அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்... ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்...! அந்தோ பரிதாபம்...!!!
மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்... அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்...? அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும். இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக நடந்து வருபவை. அது மட்டுமல்ல! தாழ்த்தப்பட்ட இந்துப் பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். பரிதாபம்... பரிதாபம்... இந்திய அரசியல் சாசனச் சட்டத்தைத் தொகுத்துத்தந்த பெருமை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சாரும். ஆனால் அவரது சமுதாயமோ திக்குத் தெரியாத காட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம்... இந்த மக்கள் அண்ணல் அம்பேத்கர் மீது உயிரையே வைத்திருந்தபோதிலும் அவர் காட்டிய பாதையில் அடியெடுத்துச் செல்லாததுதான்!
கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம். தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்! பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை. இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது. அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...? மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ...!
ஜாதிகள் இல்லையடி பாப்பா...' இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு. ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.
முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே! பல தலைவர்கள் வந்தார்கள்... சென்றார்கள்... அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர, அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது. அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.
ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல! அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை. அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.
உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை. மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம். விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை. ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா... என்னே சமத்துவம்...!!! இந்த இழிவுகளிலிருந்தெல்லாம் நீங்கி, சமத்துவம் பெறலாம் என்று கிறிஸ்துவ மதத்தில் இணைவோரும் கூட அங்கே தலித் கிறிஸ்துவன் என்ற அடையாளத்துடனேயே வாழவேண்டியுள்ளது. 
எல்லாம் சரிதான்! சமத்துவத்துக்கு வேறு என்னதான் வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா...திருச்சி பெல் தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, எங்கு சென்றாலும் உங்களை இந்த ஜாதிப்பாகுபாடு விடாது! இந்த இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் நன்மருந்து என்று அவர் முழங்கினார். கொடிக்கால்பாளையத்தில், தாழ்த்தப்பட்டவராக இருந்தவர் கொடிக்கால் செல்லப்பா. இவர் ஒரு கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும், தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில் இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்துபுறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார். 
அரசியல்வாதியாகவும், பிரபல பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்த அடியார் என்பவர், இஸ்லாம் தவிர்த்து வேறு எதுவாலும், எவராலும் தம் சமுதாயத்தை உயர்வடையச் செய்ய முடியாது என்கிற நிலையில், நான் காதலிக்கும் இஸ்லாம் என்ற புத்தகத்தை தன் சமுதாயத்திற்குத் தந்த கையோடு தன் வாழ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், இங்குள்ள ஜாதிவெறி போல நிற வெறியும், இனவெறியும் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமையால் தாங்க முடியாத பாதிப்பிற்குள்ளான கறுப்பர் இன கிறிஸ்துவராக இருந்த மால்கம் எக்ஸ், குத்துச்சண்டையில் உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக வலம் வந்தும் நிற இழிவால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட க்ளேசியஸ் கிளே என்ற முஹம்மத் அலி க்ளேயும் இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடற்ற மார்க்கம் என்று உணர்ந்துகொண்டு தங்களை சமத்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவையெல்லாம், வேறு மதங்களிரிருந்து சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் நிலை. சரி, இந்த ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடுகளைக் களைய இஸ்லாம் என்னதான் கூறுகிறது என்று அறிய ஆவலா? உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாக உள்ள திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:
ஓ மனிதர்களே...! உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனை வரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்..... (திருக்குர்ஆன் 4:1)
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
மனிதர்களே...! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)
அது மட்டுமல்ல! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

(
இறைவனின் தூதரே...!) நீர் கூறும்...! இறைவன் ஒருவனே...! இறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்...! அவன் (யாரையும்) பெறவும் இல்லை....! (எவராலும்) பெறப்படவும் இல்லை...! அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை...!!! (திருக்குர்ஆன் 112:1 4) .
இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல! சில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவுகளிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்... இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அது மட்டுமல்ல! இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு நாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது. நேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். முந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது. அதுபோலவருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது. பல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.

1430
வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் காணும் இந்த வேறுபாடுகளை விட மோசமான பாகுபாடுகள் நிலவி வந்தன. இப்போதாவது இந்த தலித் மக்கள் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஓரளவாவது வாய்ப்புள்ளது.
ஆனால் அன்றைய அரபு சமுதாயத்தில் கறுப்பு இன மக்கள் அடிமைகளாக தனது முழு வாழ்வையும் இழந்து, மாட்டையும்விட கேவலமாக நடத்தப்பட்ட காலம் அது! அந்தப் பொழுதில்தான் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (முஹம்மது நபி) அவர்கள் மூலமாக உலகப் பொதுமறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு, அதனடிப்படையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியையே ஏற்படுத்தியது. அந்தப் புரட்சி இரண்டு விதமாக நடத்திக் காட்டப்பட்டது.
ஒன்று : இன்று கம்யூனிஸவாதிகளால் தோழர்களே! என்று அழைக்கப்படும் அந்தப் பதம் 1430 வருடங்களுக்கு முன்பே இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களால் மன உவப்புடன் செயல்படுத்திக் காட்டப்பட்டது.
அடுத்தது : ஒரு காலத்தில் பல புரட்சிகளையும், புதுமைகளையும், தத்துவங்களையும் பேச்சிலும், எழுத்திலும் காட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிய பல தலைவர்களுக்கு இன்று பொன்னாலும், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலும், பாறையாலும் சிலை வடித்து வழிபாடுகள் நடத்தப் படுகின்றன.
ஆனால், தான் சொன்னதைச் செய்து காட்டியவர்... செய்ததை மட்டுமே சொன்ன ஒரே தலைவர்... ஒரு அறிவுப்பூர்வமான மார்க்கத்தை உலக மக்களுக்கு விளக்கிக்காட்ட வந்த உத்தமர்... அப்பேற்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தான் வரும்போது மக்கள் தனக்காக எழுந்து நிற்பதையே தடுத்து நிறுத்திக் காட்டியவர்... காலில் விழுவதைக் கண்டித்தவர்...
தற்போது மொத்த உலகில் நான்கில் ஒருவரால் பின்பற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு சிறு சிலை கூட கிடையாது என்பது மாபெரும் புரட்சிதானே...? (சில வருடங்களுக்கு முன்னர் உலகின் பல உயர்ந்த தலைவர்களை மதிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிலைகளின் வரிசையில் நபிகள் நாயகம் அவர்களுக்கும் ஒரு சிலை வைத்தனர். பொதுவாகவே, இது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று. ஆனால் நபிகள் நாயகம் அவர்களால் உருவாக்கப் பட்ட இந்த முஸ்லிம் சமுதாயம், நபிகள் நாயகத்துக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றச் சொல்லி உலகம் முழுவதும் கொந்தளித்தது. முடிவில் அந்தச் சிலையும் அகற்றப்பட்டது. இந்தப் புரட்சியை எங்காவது காட்ட முடியுமா?
வெறும் பேச்சளவில் மட்டும் புரட்சி பேசாமல் செயல்படுத்தியும் காட்டினார்கள் நபிகள் நாயகம் அவர்கள்! அனைத்து மக்களையும் தொழுகைக்கு அழைக்கும் அழைப்போசையை (பாங்கு) முழங்கிட அன்றை அரபு சமுதாயத்திலேயே மகா மட்டமாகக் கருதப்பட்ட கறுப்பர் இன அடிமையான பிலால் என்ற ஒரு தோழரையே நபிகள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள். இதன் காரணமாக, அதுவரை அவரை அடிமையாகப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மக்கள் அன்று முதல் அவரை தலைவர் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர். இதுதான் இஸ்லாம் செயல்படுத்திக் காட்டும் சமத்துவம்.
எனவே, உயர்வுக்கு வழிவகுக்கும் சாதி, இன, நிற, மொழி மற்றும் இன்னபிற வேறுபாடுகள், மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்...! சமத்துவம் காணுங்கள்...!! வெற்றி பெருங்கள்...!!! படைத்த இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...!

நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)

துபாய் சோனாப்பூரில் நடைப்பெற்ற தியாகம் செய்வோம் வாருங்கள் இஸ்லாமிய நிகழ்ச்சி .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய்  04:10:13 வெள்ளிக் கிழமை அஷர் தொழுகைக்குப் பின் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத் தலைமை தாங்கினார், IPP பொறுப்பாளர் அதிரை அப்துல் காதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,இந்நிகழ்ச்சியில் சகோதரர் குணங்குடி முஹைதீன் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,அதைத்தொடர்ந்து சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்,
மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார் இந்நிகழ்ச்சியில் சோனாப்பூர் பலுதியா கேம்ப் சகோதரர்கள் திரளாக கலந்துக் கொண்டு பயன் அடைந்தார்கள். அமர்வு  நடைப்பெற பலுதியா கேம்ப் சகோதரர்கள் கடையநல்லூர்  அப்துல்ஹமீத்,பாதுஷா,அலி,முஹைதீன்,முஹம்மத்,மேலப்பாளையத்தைச் சார்ந்த காஜா உள்ளிட்ட சகோதரரர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள்,
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்புடன்,  முஹைதீன்,

New era in Islamic finance

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Patrick Michael and Mustafa Al Zarooni / 6 October 2013

Shaikh Mohammed, Shaikh Hamdan, Shaikh Maktoum, Shaikh Majid, other Shaikhs and business leaders at the ceremony in Dubai on Saturday. — Wam
 1/3 
An ambitious initiative to transform Dubai into the world capital of Islamic economy was launched on Saturday by b Vice-President and Prime Minister of the UAE and Ruler of DubaiThe timely initiative, led by a high-level task force, comes as the thriving global Islamic finance market is forecast to expand from $1.6 trillion in assets to between $2 trillion and $3 trillion by 2015.
The task force, the Higher Committee for the Development of Islamic Economy, has been given six months to draw up the strategy and 36 months to implement the blueprint with 46 strategic initiatives.
Shaikh Mohammed revealed seven of these initiatives at the launch of the ‘Dubai — Capital of Islamic Economy’ initiative in the presence of Shaikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum, Crown Prince of Dubai and Chairman of the Dubai Executive Council; and Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum, Deputy Ruler of Dubai and Chairman of Dubai Media Incorporated (DMI).
“The continued developments and changes in the global economy increase the need to constantly diversify the structure of our national economy. Our firm principle in the UAE is not to rely on one single economic resource or sector. The Islamic economy is not new to us. In fact we have accumulated considerable expertise in this field and our aim is the global arena,” said Shaikh Mohammed.
“In the UAE, we excel at the public-private sector partnership, where both sectors work as one team. Therefore, I am optimistic about the success of the Islamic economy sector and about placing Dubai on the international economic map as the global destination of choice that provides Islamic products, finance and services as well as raising the standards for the management and quality of this sector to new levels.
“Our aim from all economic initiatives we launch is to improve the quality of life and providing opportunities that ensure a prosperous future for coming generations,” added Shaikh Mohammed.
He directed all stakeholders to coordinate their efforts in light of the strategic plan for developing the Islamic economy sector and to support this sector by continuously launching strategic initiatives and programmes.
Mohammed Abdullah Al gergawi (centre) speaking at the ceremony. — Wam
The ceremony was attended by Federal National Council Chairman Mohammed Ahmed Al Murr, Dubai Culture and Arts Authority Chairman Shaikh Majid bin Mohammed bin Rashid Al Maktoum, Chief of Dubai Police Lt. General Dhahi Khalfan Tamim as well as a number of ministers, heads and directors of government departments, leaders of the business community and media representatives.
Shaikh Hamdan bin Mohammed said: “The strategic plan for developing the Islamic economy sector is a road map for the future which sets the frameworks for uniting the efforts of various institutions and parties operating in this sector in line with the vision of Shaikh Mohammed to position Dubai as the global capital of the Islamic economy.”
“When Shaikh Mohammed specified the goal, he wanted an Islamic economy sector with a global vision and with local human resources to serve our national economic interests. His vision was to turn Dubai into the future global capital of the Islamic economy,” he added.
“The vision is clear. The determination is high. The leadership is decisive. The operational teams are ready, and the obstacles ahead will be met by exceptional people,” said Shaikh Hamdan.
The Higher Committee for the Development of Islamic Economy has been formed under the patronage of Dubai Crown Prince Shaikh Hamdan.
The second quarter of 2014 will see the establishment of an Islamic Governance Centre in Dubai with other initiatives being:
— Establishing Dubai as the hub for sukuks or Islamic bonds and all Islamic financial services;
— Establishing the emirate as a trusted name and solution provider to the $4 trillion global halal food industry and its hub with an accreditation centre;
— Drawing a legal framework with legislative and regulatory bodies for the Islamic market. Currently, Dubai’s sukuk market attracts Dh46 billion and plans to reach Dh60 billion in the next three years;
— Promote Dubai’s position as a centre for family tourism;
— Be the pioneer of the Islamic digital economy, which will promote Dubai as an oasis and incubator for the development of electronic programmes, applications and games, a platform for Islamic e-Commerce, a global centre for Islamic media, and a pioneering and incubating environment for the Islamic digital economy;
— Cement Dubai’s position as a centre for Islamic design and architecture, a global destination for showcasing and trading of various types of Islamic arts, and a global centre for design, display and retail of conservative fashion and;
— Be the world-class centre for Islamic economy standards and certification.
“Islamic banking is not just for Muslims but for all. It will transcend religious and political differences,” Mohammed Abdullah Al Gergawi, Minister for Cabinet Affairs, told Khaleej Times on the sidelines of the conference.
“Islamic finance conforms to the principles of the Holy Quran which forbids the use of interest but allows Muslims to make use of financial products such as sukuks and takaful, or insurance, without fear of breaking religious laws.
“It is ethical and everyone can benefit from it,” said Al Gergawi. “It will also help build relationships between Islamic and non-Islamic economies.”
According to Eisa Kazim, Governor of the Dubai International Financial Centre, the total GDP of the world’s Islamic nations stands at $8 trillion.
The Dubai initiative will also help meet the needs of the global $1 trillion Awaqf market as also the re-takaful market that is worth $11 billion globally by establishing re-takaful companies.
At the eighth World Islamic Economic Forum in Malaysia in 2012, deals worth an estimated £5.8 billion ($9.2 billion) were struck. Now Dubai is set to host its Islamic Economy Summit in November immediately after London hosts the ninth forum — the first time the event has been held outside the Muslim world.
The top 20 Islamic banks in the Gulf region have grown some 20 per cent in the past 18 months compared with the nine per cent growth of conventional banks, as per a recent report. Across the entire supply chain of the Islamic banking industry, there are strong and positive growth vibes.
The sale of Islamic bonds, for example, rose exponentially to $5.7 billion as at May 2012, compared with only $500 million during the first five months of 2011.

The strategic plan “will not only diversify the national economy, but also enhance it by adding a new vital sector that will further enrich Dubai’s outstanding reputation in the economic field and establish it as the global capital of the Islamic economy,” said Shaikh Hamdan. -news@khaleejtimes.com

Personality Development Workshop Invitation

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


Wednesday 25 September 2013

முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
முதலுதவி விஷயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்...

# அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

# வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர்கள் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

# ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.

# காது, மூக்கு, கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும்பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

# சில நேரம் இரத்தம் தடை பட்டு, சுவாசம் நின்று விடும் வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, உணர்வு இருக்கின்றதா, இல்லையா என்பதை அறிய உடம்பின் மெல்லிய பகுதியில் கிள்ள வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய வாயை திறந்து உங்களுடைய மூச்சை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும்பொழுது மூச்சடைப்பு நிற்கும்.

முதலுதவி விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்...

# பெற்றோர்கள் சிறு சிறு காயங்களுக்கு கட்டுப் போடுவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

# உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவதுஎன்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

# இரத்தக் கசிவு, தொடர்ந்து இரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது போன்றவைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

# அதுபோன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீறல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.

இவ்வாறு, முதலுதவி விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதில், மற்றவர்களின் உடல்நிலைகளில் கவனம் செலுத்துவதில் முன்னணியில் நின்று செயல்பட வேண்டும்.

காஞ்சி சங்கரமடத்தில் ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சங்கராச்சாரியாரின் பாலியல் தொல்லை!
'
'1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்க
மாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.
அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.''- அனுராதா ரமணன்.
(அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.)

----பரிமள ராசன்---

வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன். ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன

வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன் ...
************************************************* 
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன்போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள்மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்துஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. ”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்…இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான்கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின்நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று உள்ளார் என்ற வெறும் மாய கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ததியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமிபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என்பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசிய

Rahman Sathik'photos

அன்று வெள்ளையனிடம் காட்டி கொடுத்த கும்பல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்று வெள்ளையனிடம் காட்டி கொடுத்த கும்பல் இன்று நம் நாட்டில் அமைதியாக அண்ணன் தம்பி மாமா மச்சான் என்ற உறவு கொண்டு வாழும் மக்களை பிரிக்க ( கலவரம் ) திட்டம் தீட்டி வருகிறார்கள் பதவி வேண்டாம் என்று வெளி உலகில் போலி குரல் கொடுக்கும் கயவனின் பக்கத்தில் இருந்து எடுத்த படம் இருங்கடா இன்னும் உங்களின் அதி பயங்கரமான் மட்டகரமான ரகசிய திட்டங்கள் அனைதிற்கும் மக்கள் தக்க பதில் தருவார்கள்...உங்கள் சூழ்ச்சி கலை எல்லாம் அறிந்தவன் வல்ல இறைவன் ...

வை(க்)கோ - காவி சிந்தனை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்று நீ பேசுவதற்கு என் உறவுகள் ஒலி வாங்கியின் உயரத்தை சரி செய்து 
கொடுத்தார்கள் இன்று இந்த தேசத்தின் கயவர்கள் பேசுவதற்கு நீ எழுந்து ஒலி வாங்கி யை சரி செய்யும் அளவு உன் வளர்ச்சி சென்று கொண்டு உள்ளது ....வை(க்)கோ உங்கள் வாயில் தாமரையின் காம்பு உள்ளது கடித்து துப்புங்கள் இல்லை என்றால் உங்கள் வாயிலை இந்த காவி சிந்தனை கொண்ட தேச துரோகிகளால் மூடப்படும் ....


நர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 17 இயக்கத்தினரின் கண்டணங்கல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நர மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 17 இயக்கத்தினரின் கண்டணங்கல்