Friday 31 May 2013

தொழுகை நடத்திவரும் புரட்சிகள்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.
  • உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறைப்  பள்ளியான கஅபா வை நோக்கியே தொழுகை நிகழ்த்துகிறார்கள். இதன் சூட்சுமம் அளவிலடங்காதது= படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற கொள்கை முழக்கம் பூமி உருண்டையின் மீது அயராது ஒலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா?
என் உடல்,பொருள் ஆவி அனைத்தும் உனக்கே சொந்தம்! இறைவா நீயே  மிகப்பெரியவன்! என்று அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி விட்டு  இறைவிசுவாசிகள் உலகெங்கும் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களுக்கு விரையும் காலடி ஓசை உங்களுக்குக் கேட்கிறதா?
  • ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் என்று நம்மைப் பிரித்து வைத்திருந்த தடைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கையின் கீழ் உலகோர் அனைவரும் ஒருங்கிணையும் காட்சி உங்களுக்குப் புலப்படவில்லையா?
  • ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
  •  சிதறிக்கிடக்கும் பாமரனையும் படித்தவனையும் ஏழையையும் செல்வந்தனையும் பெரியவர்களையும் சிறுவர்களையும் பாகுபாடின்றி ஒருசில நொடிகளில் உலகெங்கும் ஆங்காங்கே சீராக அணிவகுக்கச் செய்யும் விந்தையை எந்த இராணுவமும் செய்யக் கண்டிருக்கிறீர்களா?  
  •  ஒவ்வொரு தொழுகைக்கும்  ஒழு (அதாவது அங்கத்தூய்மை) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?
  •  தொழுகையாளிகளின் வாழ்விலிருந்து சோம்பலை விரட்டி அவர்களது வாழ்வை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள தொழுகை வழிவகுப்பதைக் கண்டீர்களா?
  •  ஐவேளை இறைவனோடு தொடர்பு கொள்வதன் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இருக்கும் வண்ணம் நடுநிலையான வாழ்க்கைத் திட்டத்தை தொழுகை அமுல் படுத்துவதைக் கண்டீர்களா?
  •  தொழுகையாளிகளின் வாழ்வில் சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை அன்றாடம் அடைந்து கொண்டிருப்பதை கவனித்தீர்களா?.
  • தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் ஆன்மீக ரீதியாக அடையும் பெரும்பலன்களுடன் நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா (சாஷ்டாங்கம்) செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
  • உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார். இவ்வாறு தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் தொழுகையாளிகளுக்குள்ளன..
இவ்வளவு புரட்சிகளை நிகழ்த்தி மானிடர்க்கு அளவில்லா நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும் இவ்வுலகளாவிய இயக்கத்தில் இணையாமல் நீங்கள் ஒதுங்கி நிற்கலாமா? சிந்தியுங்கள்...

Inline image 2

Inline image 1
-- 
Parangi Pettai

Khaleel Baaqavee

Sunday 5 May 2013

காந்திய தேசம் , அஹிம்சை தேசம் ..!! காவிமயமான காவல் துறை....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


காந்திய தேசம் , அஹிம்சை தேசம் ..!!

(அழகான காஷ்மீரின் சித்திரம் .. ) ஜெய் ஹிந்த் ..!!


எல்லை கோட்டை விரிவக்கவே எங்களுக்கு காஷ்மீர் நிலம் தேவை .அங்குள்ள மனிதர்கள் எங்களுக்கு தேவை 

இல்லை என்று நமது இந்தியா அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள்ள? ,,இல்லை ?இந்தியாவில் அனைத்து 

துறைகளிலும் காவிகள் கைகுளிகள் நுழைந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படம் ஓரு உதாரம்....


துபாய் அதிபர் ஷேக் முஹம்மத்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


துபாய் அதிபர் ஷேக் முஹம்மத்...பொது இடங்களில் சர்வ சாதாரணமாக 

இவரை பார்க்கலாம்,மிக அற்புதமான மனிதர் மட்டும் அல்ல சிறந்த 

தலைவரும் கூட பத்திரிக்கைக்காக இதுபோல் போஸ் கொடுக்கும் நம்மூர் 

அரசியல் வா(ந்)திகள் எங்கே? பிறப்பிலேயே ராஜவம்சத்தில் பிறந்து இது 

போன்று மனிதநேய பிறவிகள் எங்கே?

நிச்சயமாக இவரை போன்ற ஒரு தன்னடக்கம் மற்றும் எழிமையான ஒரு 

அரசரை அரபு நாடுகளில் பார்க்க முடியாது. ஒரு முறை மக்களோடு, 

மக்களாக இவர் சாதாரண பேருந்தில் கூட பயணம் செய்ததும் உண்டு, 

நகர சாலைகளை சுத்தபடுத்தும் கடமையும் எங்களுக்கு உள்ளது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வருடா வருடம் அமீரகத்தின் தேசிய தினத்தை கோலாகலமாக கொண்டாடுவார்கள் அமீரக மக்கள்.அதிலும் துபாயில் நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் துபாய் மக்களின் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக இருக்கும் .இதில் நான் பார்த்து வியந்த விடயம்,முதல் நாள் கொண்டாடத்தின் பொழுது தாங்களால் அசுத்த படுத்த பட்ட சாலைகளை அந்த மக்களே குடும்பம் குடும்பமாக சென்று மறுநாள் சுத்தபடுத்துவது.அதாவது எங்கள் நாட்டின் சாலைகளில் சந்தோஷ ஊர்வலம் நடத்த எவ்வளவு உரிமை உள்ளதே அதே போன்று எங்கள் நகர சாலைகளை சுத்தபடுத்தும் கடமையும் எங்களுக்கு உள்ளது என்பதில் அந்த மக்கள் தெளிவாய் உள்ளனர்.இந்த புரிதலும் கடமை உணர்வும் நம் மக்களுக்கு வருவதெப்போ???

துபாய் அதிபர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மக்களுடன் மக்களாய் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,இன்று உலகமே 
திரும்பி பார்க்கும் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபர் என்ற கர்வம் 
இல்லாமல்சாதாரணமாய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் துபாய் 
அதிபர். 


முன்ததார் அமெரிக்க முன்னாள் அதிபர் மேல் சூ வீசியவர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இவர்தான் முன்ததார் அமெரிக்க முன்னாள் அதிபர் மேல் சூ வீசியவர்.

சிறையில் இருந்து விடுதலை ஆகும் பொழுது சிறைவாயில் வைத்து அவருடைய தாய் கட்டி அணைத்து அழும் காட்சி.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது இராக்கில் செருப்பை வீசிய பத்திரிக்கையாளர்.இராக்கில் ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று பொய் கூறி அந்நாட்டை ஆக்கிரமித்து அப்பாவி மக்கள் இலச்சக்கனக்கில் கொன்ற பயங்கரவாதி புஷ்ஷிற்கு ஈராக் மக்களால் கொடுக்கப்பட்ட தண்டனை செருப்படி...

இன்றுவரை உலகம் இந்த பயங்கரவாதியை தண்டிக்காமல் வேடிக்கை மட்டும் பார்ப்பது பத்திரிக்கைகளும் இவன் செய்த படுகொலைகளை பற்றி ஒரு செய்திகளும் வெளியிடாமல் மறைப்பது என்பது .உலகத்திற்கு இவர்கள் கூறும் ஜனநாயகம் என்ன என்பதை தெளிவாக காட்டுகிறது???


பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கூச்சல் போடும் கோட்டான்கள்... 

வேட்டிய மடித்துக்கட்டிக்கொண்டு ..உயரத்தில் உட்கார்ந்து கொண்டு பெண்களை கீழே உட்காரச்சொல்லி.......ஆபாசத்தின் உச்சக்கட்டம்....

இவர்கள்தான் பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாத்தை .....இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் உள்ளது என்று கூச்சல் போடும் கோட்டான்கள்...

Friday 5 April 2013

இறைவனின் மன்னிக்கும் குணம

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்  துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும், 
39:53

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
SURA 39-53
__._,_.___

சவூதி அரேபியாவின் தற்போதைய நிலவரம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
                                                                   


எனதருமை தமிழ் சொந்தங்களே,

நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம்.

நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும்,பலர் விசிட்விசா அல்லது FREE விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம்.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.விசிட் விசா மற்றும் FREE  விசாவில் வருபவர்களுக்குத்தான் சிக்கல்கள் அதிகம்.

விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும்,FREE விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதிஅரேபியாவின் நிலை.

நம்மில் சிலர் நான் சொந்த விசாவில் தான் சவூதிக்கு வந்திருக்கேன் என சொல்வதுண்டு.அவர்களின் அறியாமையால் அப்படி சொல்வதை காலம் கடந்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அது சரி சொந்த விசா என்றால் என்ன?என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது.இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும்.அந்தளவுக்குFREE விசா ஆபத்தானது,

இப்போது விஷயத்திற்கு வருகிறேன்,சவூதிஅரேபியாவை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு ஓட்டுனர் விசா வேண்டுமென்றோ,அல்லது தனது கடை மற்றும் கம்பெனிகளுக்கு தொழிலாளர் விசா வேண்டுமென்றோ அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட விசாவை பெற்றுக்கொண்டு அதை இங்குள்ள சில புரோக்கர்கள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த விசாவை வெளிநாட்டு மோகம் கொண்ட அப்பாவி மக்களிடம் விற்று விடுவார்கள்.

அது மாதிரி விசாவில் வருபவர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலையில் சிக்கியவர்கள் வீட்டை விற்று நகைகளை விற்று ஒரு வழியா சவூதிக்கு வந்ததும் மெடிக்கல் செக்கப்புக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3ஆயிரம்,இன்சூரன்ஸ் மற்றும் இகாமா எடுப்பதற்கு 30ஆயிரம் என மொத்தம் 33ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். 

இந்த செலவுகள் அனைத்துமே அவரவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இகாமா கிடைத்ததும் அவர்களே வேலையும் தேடிக்கொள்ள வேண்டும்.

வேலை கிடைத்ததோ? இல்லையோ?மாசம் தவறாமல் விசா கொடுத்த அரபிக்கு 300ரியால் அதாவது இந்தியரூபாய் மதிப்பில் 4300 கொடுத்தாக வேண்டும்.

இது தவிர சாப்பாடு மற்றும் தங்குமிடமும் அவரவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இது மாதிரி விசாவில் வருபவர்கள் சராசரியாக 2000ரியாலிலிருந்து2500ரியால் வரைக்குமே மாதச்சம்பளமாக பெறமுடிகிறது.

ஒவ்வொரு வருஷமும் 2500+2400=4900ரியால் செலவழித்து இகாமாவையும் புதுப்பிக்க வேண்டும்.ஒரு மாதச்சம்பளம் 2500 ரியால்.

செலவினங்களின் வகைகள்:

தங்குமிடம் -         300 ரியால்
சாப்பாடு -            400 ரியால்
அரபிக்கு கொடுப்பது   300 ரியால்
இகாமா ரினீவல்    - 400 ரியால்
போக்குவரத்துசெலவு- 150 ரியால்
போன் செலவு       - 150 ரியால்
                     ------------
மொத்தம்        -   1700 ரியால்
                     ------------
இதில் 2000 ரியால் சம்பளமாக இருந்தால் 300 ரியாலும்,2500 ரியால் சம்பளமாக இருந்தால் 800 ரியாலும் செலவினங்கள் போக மிஞ்சும்.

மொத்தத்தில் மாதம் 5000 திலிருந்து 10,000 ரூபாய் மட்டுமே குடும்பத்தாருக்கு அனுப்பமுடியும்.

இதையும் கூட சுதந்திரமாக பெறமுடியாது!ஜவசாத் என்னும் காவல்துறைக்கு பயந்தே சம்பாதிக்கவேண்டும்.

காரணம் ஹவுஸ் டிரைவர் விசா அல்லது மற்ற   FREE விசாக்களில் வெளியில் வேலை பார்ப்பது சட்டவிரோதமாகும். 

இப்போது  இத்தகைய தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக ஜவசாத் எனும் காவல்துறை அதிரடியாக ஹவுஸ் டிரைவர் விசாவில் வெளியில் வேலை பார்ப்பவர்களையும்,FREE விசாவில் வந்து வெளியில் வேலை பார்ப்பவர்களையும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

பாவம், விசாவுக்காக லட்சக்கணக்கில் முதலீடு செய்து வந்திருக்கும் நமது சகோதரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை நினைக்கும்போது வேதனையே மிஞ்சி நிற்கிறது.

எனதருமை சொந்தங்களே,இனியாவது வெளிநாட்டு மோகத்தில் மற்றவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் தீரவிசாரித்து கூடுமானவரை கம்பெனி விசாக்களில் வந்து வேலை பார்ப்பது போல் அமைத்துக்கொள்ளுங்கள். 

பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு சோதனையை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும்,பொறுமையையும்,பாதுகாப்பையும் எல்லாம் வல்ல ரஹ்மான் கொடுத்தருள அவர்களுக்காக நாம் அனைவரும் து ஆ செய்வோம்.
--------------

 கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

Thursday 28 March 2013

தின மலத்தின் அயோக்கியத்தனம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தின மலத்தின் அயோக்கியத்தனம் ஹைதராபாத் குண்டு வெடிப்பு பற்றிய மார்ச் 1 ம்தேதி இணையதளத்தில் வந்த செய்தி பாக் தீவிர வாத அமைப்பு தொடர்பு என்று அதே இணைய தளத்தில் அதே குண்டு வெடிப்பு பற்றிய செய்தி மார்ச் 6 ம்தேதி நக்ஸல்கள் தொடர்பு என்று