அல்லாஹூ தஆலாவின் பேரருளால், IWF சவூதி கிழக்கு மண்டலத்தின் 67வது செயற்குழு, சென்ற வெள்ளிக்கிழமை (08/03/24) அன்று அல்கோபாரில் தர்பியா அமர்வுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது.
மண்டல நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள், செயற்குழு சிறப்பு உறுப்பினர்கள், விருந்தினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சவூதி IWF மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளரும், ரியாத் மத்திய மண்டலத்தின் தலைவருமான சகோ. மீமிசல் நூர் முஹம்மது சிறப்புரையாற்றினார்.
மாநிலத்தலைவர் பேரா. முனைவர். M.H. ஜவாஹிருல்லாஹ் ச.ம.உ அவர்கள் இணைய வழியில் பேருரை ஆற்றினார்.
இந்தியாவின் தற்போதைய சூழல், தேர்தல் கள நிலவரங்கள், பலம் வாய்ந்த அமைப்பாக சமூக அரசியல் அரங்கில் தன்னை நிலைநாட்டி உள்ள தமுமுக-மமக வின் பெருகும் செல்வாக்கு, அதற்காக நாம் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற கருத்துகள் அனைத்து உரைகளிலும் எதிரொலித்தன.
மேலும் கீழ்கண்ட மூன்று தீர்மானங்கள் இயற்றப்பட்டன:
1) இந்தியாவின் கல்வித் தந்தையும், முதலாவது ஒன்றிய கல்வி அமைச்சருமான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களது பெயரால் இயங்கி வந்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையை மீண்டும் துவங்க வேண்டும். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை NCERT போன்ற பாடத்திட்டங்களில் மீண்டும் இணைக்க வேண்டும்.
2) புதுச்சேரியில் 9 வயது சிறுமி போதை ஆசாமிகளால் கொல்லப்பட்ட துயர நிகழ்வை கண்டிப்பதுடன், போதைப்பொருள் புழக்கத்திற்கு துணைப்போகிற அத்தனை சக்திகளும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்ட வேண்டும்.
3) திமுக கூட்டணியில் மமகவுக்கு ஒரு தொகுதியாவது கட்டாயம் பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு தவறும் பட்சத்தில் மாநிலத் தலைமையின் எந்த முடிவுக்கும் ஆதரவு அளிப்போம்.
மவ்லவி பொறியாளர் ஜக்கரியா அவர்களது நஸீஹாவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது.