முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Sunday, 9 February 2020
மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:-
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்
பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர். உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
உங்கள் நன்பனான AS
Saturday, 8 February 2020
ஹிட்லரைப் பாராட்டிய கோல்வால்கரை ஆதர்சமாகக் கருதும் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறதுq
ஹிட்லரைப் பாராட்டிய கோல்வால்கரை ஆதர்சமாகக் கருதும் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என விளக்கி வருகிறார். தமிழ்நாட்டின் அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் அவர் கூறியதை வழி மொழிந்திருக்கின்றன.
ஹிட்லரின் நியூரெம்பெர்க் சட்டம் யூத சமூகத்தைக் குறிவைத்து ஜெர்மானியர்களிடமிருந்து பிரித்தது. மோடி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் அண்டைநாட்டு அகதிகளில் முஸ்லிம் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்குகிறது. இதை ஒப்பிடுவதே தவறு என்று கருதலாம். எனினும், ஹிட்லரின் சட்டமும், மோடியின் சட்டமும், ஒரு அரசு தன் குடிமக்களை மத அடிப்படையில் பார்க்கின்றன; அரசின் முன் நிற்கும் ஒரு தனி மனிதன் தன் மத நம்பிக்கையின் அடிப்படையில், தான் வணங்கும் கடவுள் யார் என்ற அடிப்படையில் பார்க்கப்படுகிறான். இது இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல் என்பதோடு, 'இந்து ராஷ்ட்ரம்' என்ற கோல்வால்கரின் கனவை நிறைவேற்றுவதற்கு அவரின் சீடர்கள் போடும் அடித்தளம் என்றே எதிர்க்கட்சியினரும், சமூகச்செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்
சரி, குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன?
சரி, குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன?
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக, '1955 குடியுரிமை சட்டத்தைத் திருத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. 31.12.2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும்.
இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகள், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் (அவர்கள் இந்துக்களாகவே இருந்தாலும்), மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கு இது பொருந்தாது. இது Citizenship Amendment Act என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, CAA.
என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்என்.ஆர்.சி - குடியுரிமை சட்டத் திருத்தம்
இது அண்டை நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு மட்டுமான பிரச்னைதானே என்று எண்ணலாம். எனினும் இதை அஸ்ஸாமில் தற்போது கணக்கெடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது National Register of Citizens என்று அழைக்கப்படுகிறது. இதைச் சுருக்கமாக NRC என்று அழைக்கின்றனர்.
RC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டது.
நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து இல்லை என மத்தியஅரசு தற்போது வலியுறுத்தி வந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குள், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.
குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) ஆகியவை ஒரே நேர்க்கோட்டில், '
இந்த அடிப்படையில், குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) ஆகியவை ஒரே நேர்க்கோட்டில், 'குடியுரிமை' என்ற அம்சத்தின் கீழ் வருகின்றன. ஊரகப்பதிவேட்டில் அரசு அதிகாரிகளிடம் குடியுரிமை கோரும் நிலைக்கு சாதாரண குடிமக்கள் தள்ளப்படுவர். இந்தியாவில் பட்டியல் சாதி மக்களும், பழங்குடி மக்களும் அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்றிதழ் பெறுவதற்காக எவ்வளவு அலைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்கும். குடியுரிமை வழங்கப்படாத முஸ்லிம்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள நேரிடும்; நிரூபிக்கவில்லையெனில், தடுப்பு முகாம்களில் அடைபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்தியா போன்ற நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுபவர்களுக்குப் பணியென்று எதையும் அளிக்க முடியாது; மேலும், பின்னடைவில் இருக்கும் பொருளாதாரச் சூழலில், அவர்களுக்காக அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. ஆக, இது நேரடியாக எதில் சென்று முடியும் என்பதை எளிதாக யூகிக்கலாம்.
2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு பதவியேற்றவுடன், ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான டி.ஜே.எஸ்-ஸின் தலைவர் ராஜேஷ்வர் சிங், "2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31க்குள், இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் துடைத்தெறிவோம்" என்று பேசினார். அதை உண்மையாக்கும் முயற்சியாகவே இந்தச் சட்டத்திருத்தமும், கணக்கெடுப்பும் பார்க்கப்படுகிறது. ஹிட்லர் செய்ததைப் பாராட்டி, இந்தியாவிலும் அதை அமல்படுத்த வேண்டும் என்று எண்ணினார் கோல்வால்கர். அவரின் அமைப்பின் வழி வந்த சீடர்கள் அதை நடைமுறையாக்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
ஒரே வித்தியாசம்தான். ஹிட்லர் இனத்தூய்மை என்ற அடிப்படையில் அதை மேற்கொண்டார். மோடியும் அமித் ஷாவும், அண்டை நாட்டுச் சிறுபான்மை மத அகதிகளின் வாழ்க்கை என்ற 'மனிதாபிமான' அடிப்படையில் இதை மேற்கொள்கின்றனர்.
நம்மிடம் மனிதம் இல்லையெனில் நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம்...
உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து
கொண்டார் ஏன்?
கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.
இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது
சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய
படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு
பிரேமில் அடக்கிக் கொண்டு 'க்ளிக்' செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?
அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
'குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்;
ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.
முதல் வரி I am Really, Really Sorry...
நாம் எவராக இருந்தாலும்
சரி, நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்கே
ஒப்பாவோம்...
தமிழ் ஆதி
உங்கள் நன்பனான AS
BJP உங்களைப் போல் கேவலப்பட்ட ஜென்மங்கள் இந்த நாட்டில் யாரும் இல்லையடா?*
*CAA, க்கு ஆதரவு திரட்ட நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்து குள்ள நரி வேலையெல்லாம் செய்தாலும் அவ்வளவும் அம்பலத்தில் வந்து சந்தி சிரித்தாலும் நீங்கள் திருந்த மாட்டீர்களா? சங்கிகளே! உங்களைப் போல் கேவலப்பட்ட ஜென்மங்கள் இந்த நாட்டில் யாரும் இல்லையடா?*
உங்கள் நன்பனான AS
CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?
1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான நியூரெம்பெர்க்கில் நாஜி கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஜெர்மனியின் 'தூய ரத்தத்தைப்' பாதுகாக்க, புதிய சட்டங்களை அமல்படுத்தியது ஹிட்லரின் அரசு. அதன்படி ஜெர்மன் ரத்தத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க, ஜெர்மானியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் எனவும், ஜெர்மானியர்கள் அல்லாத சமூகங்களான யூத, ஜிப்ஸி, ரோமானிய சமூகங்கள் குடியுரிமையற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு, இந்தியாவில் வெள்ளையர்கள் வெளியேறி, இந்திய அரசு உருவான போது, அப்போதைய தலைவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மிகக் கவனமாக உருவாக்கினர். மதம், சாதி, பொருளாதாரம், மொழி, இனம் எனப் பல வழிகளில் பிரிந்து கிடந்த தேசங்களை இந்திய ஒன்றியத்தின் கீழ் கூட்டமைப்பாக மாற்றினர். முடியாட்சி கால வழக்கங்கள் ஒழிக்கப்பட்டு, ஒரு குடிமகனை அரசு எந்த பேதமுமின்றி அணுகும் எனச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியா `மதச்சார்பற்ற' நாடாகப் பிறந்தது. 70 ஆண்டுகளில், நடைமுறைகளில் மாற்றங்கள் இருந்திருக்கலாம்; ஆனால் அரசியலமைப்பின்படி, இந்தியா மிகவும் வலுவான மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது; இந்திய அரசியலமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சமம் என்பதே கொள்கை.