Wednesday, 9 April 2014

இந்தத் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக வேண்டும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியபோதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பதுபோலத் தெரிகிறது. ‘வளர்ச்சி நாயகன்' என்று அழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறு திசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டது. ‘மோடி மந்திரம்' கையில் இருக்கும்போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.
தாமதத்தின் உண்மையான பின்னணி
ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை பா.ஜ.க-வால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன?
இது தொடர்பாக பா.ஜ.க. தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பா.ஜ.க. சார்புள்ளவர்கள்' முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18' குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கைதான்; கனமான இன்னொரு அறிக்கை பா.ஜ.க-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார். கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.”
இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறிவிடக்கூடும்' என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்' இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங்கப் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா' என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை – உள்பட பல.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க. என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டதுதான் சங்கப் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்' என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும்.
ஒரு இணையதளம் சொல்கிறது: “சங்கப் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி… இந்திய வரலாறு எது என்பதில் சங்கப் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக் கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”
அடிநாதம் இந்துத்துவமே
பா.ஜ.க. 1980-86 காலகட்டத்தில் அதன் ‘சாதாரணமான' வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான' இந்துத்துவக் கருத்து களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கையைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.
பா.ஜ.க-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது. “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.
“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. “இதைச் செய்ய சட்டபூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது.
அடுத்த பொதுத்தேர்தலில் – அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்' வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன.
அடுத்த பொதுத்தேர்தலில் பல கட்சிகளையும் உள்ளடக்கி விரிவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டபோதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்' என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் இறுகிய இந்துத்துவா
மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியாவில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரிய நிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடி யுரிமைச் சட்டம் தயாரிக்கப்படும் என்றும் அது கூறியது.

முன்தயாரிப்புகள்
இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கி விட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க-வினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித் ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன? பா.ஜ.க-வின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.
- என். ராம், மூத்த பத்திரிகையாளர், 
தொடர்புக்கு: nram@thehindu.co.in

© ‘தி ஹிந்து' (ஆங்கிலம்), தமிழில்: சாரி

Sunday, 6 April 2014

ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை சொல்ல பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...

அவாள் எல்லாம் தெளிவா இருக்காள் !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அவாள் எல்லாம் தெளிவா இருக்காள் !
நம்மவாள் தான் ஆளுக்காள் வாள் எடுத்து
வெட்டிக்காத குறையா அடிச்சிகறாள்!
மோடி பிரதமராக முடியவில்லை எனில் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க வேண்டும்! -துக்ளக் சோ.
ஜெயலலிதா - மோடி இருவரின் கொள்கையும் ஒன்றுதான்!
-அர்ஜுன் சம்பத்
மோடியை விமர்சிக்க கூடாது மேடம் உத்தரவு!
-நடிகர் செந்தில்
அதிமுக வுக்கு நாற்பது தொகுதியிலும் சிவசேனா ஆதரவு !
-தமிழக சிவசேனா
பாஜக போட்டியிடும் தொகுதிகள் தவிர அதிமுகவுக்கு ஆதரவு!
-தமிழ்நாடு பிராமணர் சங்கம்
அவாள் எல்லாம் தெளிவா இருக்கா !
நம்மவாள் தான் ஆளுக்காள் வாள் எடுத்து
வெட்டிக்காத குறையா அடிச்சிகறாள்!
Sengis khan

சமுதாய உறவுகள் இணையும் நாள் விரைவில் வரும் இறைவன் நாடினால்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தன்னுடைய குடும்பம்,வேலையெல்லாம் விட்டுவிட்டு சுயநலம் பாராமல் சமுதாய நலனுக்காக தமுமுக,மமக தொண்டர்கள் மயிலாடுதுறை மண்ணிலே களமாடிகொண்டு இருகிறார்கள்.ஆனால் நேற்று வரை தோழனாய் இருந்து இன்று இயக்க வெறியால் வசைபாட இங்கே வந்து எமது தொண்டர்களின் மனதை வேதனை படுத்திய சகோதர்களே!இதயம் கனக்கிறது, ஒரு rss செய்து இருந்தால் வலித்து இருக்காது ! ஒரு பிஜேபி,செய்து இருந்தால் வலித்து இருக்காது!ஆனால் மார்க்கம் பேசிய வாயால் கீழ்த்தரமான வார்த்தைகளை பேசியாதல் எமது சமுதாய தொண்டன் வேதனை அடைகிறான் உறவே ..தங்களின் நேர்வழிக்கு இறைவனிடம் பிரார்த்திக்குறேன் மிகுந்த மன வேதனையோடு..இயக்க உறவுகளே கவலைபடாதீர்கள் அபுசுபியான் கூட இஸ்லாத்திற்கு மாறிய வரலாறு உண்டு ..நிலைமை மாறும் சமுதாய உறவுகள் இணையும் நாள் விரைவில் வரும் இறைவன் நாடினால்.

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

தமுமுக மாநில மாணவர் அணி செயலாளர் ...
முஹம்மது சர்வத்கான்

நம முஸ்லிம்் சமூகத்திற்க்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை. . ??

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நம முஸ்லிம்் சமூகத்திற்க்கு மட்டும்
ஏன் இந்த அவல நிலை. . ??
அனைத்து சகோதரர்களும்
கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. .
ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ?
இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்
என இப்போது புரிகிறதா . .
( சகோ. ராஜேஷ் தினாவுடைய பதிவவில் இருந்து )
நம் முஸ்லிம் சமூகமும் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்றால்
ஒரே வழி் இடஒதுக்கீடு தான். .்

5 எஸ் என்னும் அருமையான திட்டம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வாழ்வியல் :

  உலகப் போருக்குப் பின் உருக்குலைந்து போன நாடு ஜப்பான். இன்று உலக நாடுகள் வியப்புடன் அதிசயமாய்ப்பார்க்கும் அளவுக்கு அபாரமான வெற்றி பெற்றுள்ள நாடும் அது தான். தரக்குழுக்கள் முதலான பல்வேறு நடவடிக்கைகள் அந்த நாட்டை அந்த அளவுக்கு உயர்த்தியுள்ளன. அவற்றுள் ஒரு திட்டம்தான் 5எஸ்.
  Seiri, seiton, seioso, seyketsu, shitsuke எனும் ஐந்து ஜப்பான் சொற்களை ஆங்கிலத்தில் sort, set in order, shine, standardise, sustain என்றும் தமிழில் ‘5ப’ என்றும் சொல்லலாம்.
1. பயனற்றவற்றை நீக்குதல்
2. பாங்காய் அமைத்தல்
3. பளிச்சென வைத்தல்
4. பக்குவமான சூழ்நிலை
5. பயிற்சியும் தன்னொழுக்கமும்



1. பயனற்றவற்றை நீக்குதல்
  நாம் பணியாற்றும் இடமோ வீடோ அந்த இடத்தில் தேவையான பொருள்களுடன் தேவையற்ற பொருள்களும் கலந்துகிடக்கும்போது நாம் ஏதாவது ஒரு பொருளைத் தேடி எடுக்க முயன்றால் கால தாமதம் ஆகும். அவசர நேரமாய் இருந்தால் டென்ஷன் ஆகிவிடுவோம். தேவையற்ற, பயனற்ற பொருள்களை நீக்கிவிடுவது முதல் தேவையாகும். தேவையற்ற பொருள்களை நீக்கிவிட்டாலே நமது டென்ஷன் பாதியளவு குறைந்துவிடும்.

2. பாங்காய் அமைத்தல்
  பயனற்றப் பொருள்களை நீக்கிவிட்டோம். தேவையான பொருள்கள் மட்டுமே இருக்கின்றன என்றாலும் அவற்றைச் சீராக, ஓர் ஒழுங்குமுறையுடன் பார்த்தால் உடனே தெரியுமளவிற்குச் சரியாக வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டும். அவ்வாறு அடுக்கி வைத்து விடும்போது அவற்றில் ஏதாவது ஒரு பொருள் இல்லாவிட்டாலோ காணாமல் போய் விட்டாலோ உடனடியாக நமது கவனத்துக்கு வந்துவிடும்.

3. பளிச்சென வைத்தல்
  பொருள்களைத் தூய்மைப்படுத்தி பளிச்சென வைத்துக் கொள்ளுதல். வார நாள்களில் ஒரு நாளை ஒரு பகுதி என ஒதுக்கி வைத்துக்கொண்டு அந்தந்தப் பகுதியிலுள்ள பொருள்களைத் தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், வரவேற்பு அறை, முன்னறை மட்டுமின்றி, அடுப்பங்கரையையும் குளியலறை, கழிவறையையும் கூட தூய்மையாக வைத்துக்கொள்ளல்.

4. பக்குவமான சூழ்நிலை
  ஒரு செயலை அல்லது பணியை இந்த முறையில்தான் செய்வோம் என்று நிலைப்படுத்திக் கொள்ளுதல். ஒவ்வொரு முறையும் அவ்வாறே செய்வோம் என்று நிர்ணயித்துக் கொள்ளுதல். செயல்முறை சரியானால் உற்பத்தியாகும் பொருளும் சரியாகத்தானே இருக்கும்.
  இந்த இடத்தில் ஒரு சுவையான தகவலைப் பகிர்ந்துகொள்ளுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும். தொழில்ரீதியான கட்டடக்கலைப் பொறியாளர் ஒருவர் தற்செயலாகப் பிரியாணி செய்யத் தொடங்கினார். அந்தச் சுவை நன்றாக இருக்கிறதே என நண்பர்கள், உறவினர்கள் பாராட்ட அதைத் துணைத்தொழிலாகவே ஆக்கிவிட்டார். அவரிடம் எப்போது வாங்கினாலும் சுவையில் மாற்றமே தெரிவதில்லை என்பது வியப்பான உண்மையாகும்.
  என்னதான் தொழில்முறை சமையல்காரராக இருந்தாலும் ஒருநாள் சற்று உப்பு கூடுதலாகிவிடும். ஒரு நாள் சற்று காரம் அதிகமாகிவிடும் என்பது நாம் அறிந்ததே. பெரிய அளவில் செய்யும்போது இவ்வாறு ஏற்படுவது இயற்கையானதே என்று நாமும் சமாதானம் சொல்லிக் கொள்வது உண்டு.
  ஆனால் இந்த நண்பரின் பிரியாணியில் எப்போதும் சுவை மாறாததன் தொழில் இரகசியம் இதுதான். ஒரு கிலோவுக்கு இவ்வளவு உப்பு, இவ்வளவு பூண்டு, இவ்வளவு இஞ்சி என்றால் அவை ஒவ்வொன்றையும் மின்தராசு கொண்டு துல்லியமாக அதே அளவு போட்டுச் சமைப்பதால் 5 கிலோ என்றாலும் 500 கிலோ என்றாலும் சுவையில் மாற்றமே ஏற்படுவதில்லை என்பது அனுபவ ரீதியான உண்மை.
  அடுத்து நாம் பி’ யை விட்டுவிட்டு 5வது ‘ப’ வுக்கு வருவோம்.


5. பயிற்சியும் தன்னொழுக்கமும்
  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
  சொல்லிய வண்ணம் செய்தல்
  என்றார் வள்ளுவர். ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்வது நடக்கும். ஆனால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது எளிதல்ல. ஒரு வேலையை அல்லது செயலைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நமக்கு அவ்வளவு பழக்கமான வேலையல்ல. எனவே அவ்வாறு தொடர்ந்து கடைப்பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். நாமும் சுயமாகவே தன்னொழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே 5வது ப உணர்த்துகிறது.

  5எஸ் கொள்கையைப் பணியிடத்தில் பின்பற்றினால் உற்பத்தித்திறன் உயரும். தரம் பாதுகாக்கப்படும் எனப் பல நன்மைகள் உண்டு. இதே கொள்கையை வீடுகளில் கடைப்பிடித்தால் வீடு ஒரு முன்மாதிரியான இல்லமாகத் திகழும். ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம்; அந்தந்தப் பொருளும் அதனதன் இடத்தில் என்று முறையாகப் பின்பற்றும் வீடுகள் இன்றும் உண்டு.

  சில சமையல் அறைகளில் மசாலா சாமான்களுக்கு ஒரே மாதிரியான டப்பாக்களை வைத்திருப்பார்கள். வெளியே கடுகு, மிளகு, சீரகம், சோம்பு என்று எழுதி ஒட்டி வைத்திருப்பார்கள். இவ்வாறு இருக்கும் வீடுகளில் புதிதாய் வந்த மருமகள்கூட முதல் நாளிலேயே ‘மாமி, மிளகாய் எங்கே இருக்கிறது’ என்று கேட்காமலேயே சமையல் செய்துவிட முடியும்.

  5எஸ் எனும் 5ப வைப் பின்பற்றுவோம். வீட்டையும் நாட்டையும் உயர்த்துவோம்.

                   5 ‘ப’ வும் கலிமாவும்

 5எஸ் என்றால் 5ப
1.   பயனற்றவற்றை நீக்குதல் 2. பாங்காய் அமைத்தல், 3. பளிச்சென வைத்தல், 4. பக்குவமான சூழ்நிலை, 5. பயிற்சியும் தன்னொழுக்கமும்.
 கலிமா தய்யிபா – லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ், வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனைத் தவிர யாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார் என்பது இஸ்லாத்தின் தலையாய, அடிப்படையான விஷயமாகும்.
  இந்த அடிப்படையான விஷயம் எவ்வாறு 5எஸ் (5ப) வுடன் ஒத்துப்போகிறது என்பதைக் காண்போம். கலிமா ‘லா இலாஹ’ என்று தொடங்குகிறது. ‘இல்லை கடவுள்’ என்பது அதன் பொருள். உலகத்தில் மனிதர்கள் யார் யாரை எல்லாம் அல்லது எந்தப் பொருள்களையெல்லாம் கடவுள் என்று கூறிக் கொள்கிறார்களோ அவற்றை எல்லாம் நீக்குவது – அதாவது முதல் ‘ப’.
  அடுத்ததாக இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர. மனிதர்கள் அனைவரையும் படைத்த, பரிபாலிக்கின்ற, மரணிக்கச் செய்கின்ற, மீண்டும் எழுப்பக்கூடிய ஆற்றல் உள்ள ஒரே இறைவனைத் தவிர என்று பாங்காக எடுத்துக் கூறப்படுகிறது. இது இரண்டாவது ‘ப’ ஆகும்.
  முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த இறைவனுடைய திருத்தூதர் ஆவார் என்பதைப் பளிச்செனக் கூறுவது 3-வது ப’ ஆகும்.
  மனிதர்கள் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்டுள்ள அந்த மாமனிதர், மனிதப் புனிதர் இந்த உலகின் அமைதி பெறுவதற்காகவும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் வெற்றி பெறுவதற்காகவும் திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தையும் தமது வாழ்வியல் நடைமுறைகளான நபிவழியையும் நமக்களித்து ஒரு பக்குவமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளார்கள் என்பது 4வது ப’ ஆகும்.
  எரி விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பது போல் மேற்கண்ட விஷயங்களை அறிந்து செயல்படுவதற்குப் பயிற்சியும் (தர்பியா), சுயமாக நம்மை நாமே சீர்திருத்திக் கொண்டு (இஹ்திஸாப்) தன்னொழுக்கத்துடன் செயல்படுதலும் வேண்டும் இதுவே 5வது ப’ ஆகும்.
  எனவே 5எஸ் (5ப) என்பது கலிமா தய்யிபாவோடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.


                               கருத்துரு : ஹபீபுர் ரஹ்மான், ஜித்தா  

Friday, 14 March 2014

துயமனதுடன் இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றேன் என கூறி தன் பெயரை அஹ்மது என மாற்றிகொண்டர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடிஅல்லாஹ்வின் 
மாபெரும்  கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் இறைகோட்பாடு பற்றியும் சகோதரர் கோகுல் குமார் என்ற சகேதரருக்கு எடுத்து கூறப்பட்டது . அதன் அடிப்படையில் அவர் துயமனதுடன் இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றேன்  என கூறி தன் பெயரை அஹ்மது என மாற்றிகொண்டர். அல்ஹம்துலில்லாஹ் .

சகேதரர் A.S.இப்ராகிம் கலிமா சொல்லி கொடுத்தார் 

அந்த சகோதரரிடம் நமக்காக துவா செய்யும்படி கேட்டுகொண்டோம் 

அல்லாஹ்  நம்முடைய  அழைப்பு பணியை ஏற்றுக்கொள்வானாக 





Wednesday, 12 March 2014

பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்ப்பனிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில்


துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 3 மதமாக நடைபெற்று வருகிறது.



சபியுல்லாஹ்


இர்ஷாத் அஹ்மது


அப்துல் ரஹ்மான்

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் 12.03.2014 அன்று இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Monday, 10 March 2014

சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


சாதிக்க வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்றால் வயது ஒரு தடை இல்லை.

உலகின் சிறு வயது பேராசிரியர் என்ற பட்டத்தை வென்று கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவை சேர்ந்த 13 வயது முஸ்லீம் சிறுவன்.

உலகின் மிகவும் வயது குறைந்த பேராசிரியராக இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.



இவர் தன்னைவிட இருமடங்கு வயது உடையவர்களுக்கு அனிமேஷன் குறித்த பாடங்களை சொல்லி கொடுக்கின்றார்.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டோராடூன் என்ற நகரை சேர்ந்த அமன் ரஹ்மான் தான் இந்த சாதனையாளர்.

இவர் தனது எட்டாவது வயதிலேயே பேராசிரியராக அதிகாரபூர்வமற்ற முறையில் பணிபுரிந்துள்ளாராம். தற்போது 13 வயதாகும் இவருக்கு பேராசிரியர் பதவி சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இவர் கரும்பலகையின் உயரம் கூட இல்லாத நிலையில் நாற்காலியின் மீது ஏறி கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுத்துள்ளார்.



கம்ப்யூட்டர் அனிமேஷன் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியராக இருக்கும் இவர் அனிமேஷனில் பல புதிய யுக்திகளை மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் கற்றுத்தருகிறார்.

இவருக்கு டேராடூன் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

இவர் தனது 18 வயதை பூர்த்தி செய்தவுடன் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் கல்லூரியில் சேர்ந்து தனது அனிமேஷன் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டு பின்னர் இந்தியா வந்து சொந்தமாக அனிமேஷன் கல்வி நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்.

மாணவர்களே, படிப்பில் கவனம் செலுத்துங்கள் அல்லாஹ் நாடினால் உங்கள் ஒவ்வொருவரையும் இதுபோன்ற சாதனையாளராக ஆக்குவான்.

விழுந்து விழுந்து சிரித்து ரசித்த பதிவு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விழுந்து விழுந்து சிரித்து ரசித்த பதிவு:

தமுமுக வினர் திமுக வில் இருப்பதால் தான் நீங்கள் அதிமுக வை ஆதரித்ததாக பேசப்படுகிறதே அதைப்பற்றிய கருத்து என்ன ??

சகோ பீஜே பதில்:

தேர்தல் ஆதரவிற்காக நாங்கள் கணக்கிடுவது சமுதாய நன்மைகளை மட்டுமே..அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை..

தமுமுக வினரை நாங்கள் கணக்கிலே எடுத்துக் கொள்ளவுமில்லை....

மேலும் தமுமுக வை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை...

உண்மையா 

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் , அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி கொள்ளுங்கள்