அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான பரிந்துரைகளை உருவாக்க அமைச்சரவை குழுவை அமைப்பதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜ்ரிவால், "டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான பரிந்துரைகளை உருவாக்க அமைச்சரவை குழு அமைக்கப்படும்.
இந்தக் குழுவுக்கு மனீஷ் சிசோதியா தலைமை வகிப்பார். இந்தக் குழு மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பாலியல் பலாத்கார வழக்குகள் குறித்த தகவல்களைத் திரட்டும்.
மேலும், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையாக மரண தண்டனை அளிப்பதா; அல்லது, ஆயுள் தண்டனை அளிப்பதா என்பது குறித்த சாத்தியக்கூறுகளை இக்குழு விரிவாக ஆராயும். அதேபோல், இத்தகைய வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை சிறார்களாக பாவிக்கும் வயது வரம்பை தளர்த்துவது குறித்தும் இக்குழு ஆலோசிக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய பிரத்யேக காவல் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி போலீஸாரை சரமாரியாக சாடிய கேஜ்ரிவால், "டெல்லியில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு இல்லை. சமூத விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் அந்தக் குற்றங்களை செய்துவிட்டு எளிதாக தப்பிவிடலாம் என நினைக்கின்றனர்" என்றார்.
|
No comments:
Post a Comment