அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக தேரா பகுதியில் ரமாலானை வரவேற்போம் என்ற சிறப்பு நிகழ்ச்சி 27:6:2014 வெள்ளியன்று M T C T மர்கசில் நடைப்பெற்றது,
துபை தமுமுகவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் மதுக்கூர் ஹாஜா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தாயகத்தில் இருந்து ரமலான் மாதத்தின் அழைப்பு பணிக்காக வருகைதந்துள்ள இஸ்லாமிய அழைப்பாளரும் கழகத்தின் பேச்சாளருமான
சகோதரர் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ரமாலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்,ரமலான் மாதத்தின் சிறப்பையும் நோன்பின் மாண்புகளையும் இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய அமல்களையும் நினைவு கூர்ந்தார்,
முஜிபுர் ரஹ்மான் அவர்களின் உரையோடு முதல் அமர்வு முடிக்கப்பட்டு இஷா தொழுகைக்குப் பிறகு இரண்டாவது அமர்வு ஆரம்பமானது துபை தமுமுகவின் தலைவர் சகோதரர் பரமக்குடி A.S.இப்ராஹிம் அவர்கள் நபிவழியை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,
நபி [ஸல்] அவர்களை நபித் தோழர்கள் எவ்வாறு பின் பற்றினார்களோ அதைபோன்று நாமும் பின்பற்ற வேண்டும் என்றும், நபி [ஸல்] அவர்களின் வழி நடந்தால் நரகமில்லை என்றும் தனது உரையில் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் உபதேசம் செய்தார்,
நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல செயலாளர் சகோதரர் அதிரை S.M.A.அப்துல் அமீத் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேரா மர்கஸ் சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!

என்றும் சமூக பணியில்
தமுமுக
துபை மண்டலம்

No comments:
Post a Comment