அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.
கேள்வி : இறந்த
ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட
மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடு கிறீர்கள் என்று என்
பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார்.-இராயப்பேட்டை அஸ்ரப்
சென்னை.
பதில் : நீர் வாழ்
உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம்
இருக்கிறது.
நீர் வாழ் உயிரினங்களுக்கு
ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம்
சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை
இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.
ஆடு, மாடு
போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிருந்து இரத்தம்
வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச்
சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இது மார்க்க
ரீதியான காரணம்.
இரத்தத்தில்
மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ
இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம். பிராணிகள் செத்தவுடன்
இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற
பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க
முடியாது. மீன்களில் அந்த நிலைமை கிடையாது.
t-f] �
f m �"
pj s New Roman"'>தடை
செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.
இது பக்தியின் அடிப்படையில்
கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.
பான்பராக் விற்கக் கூடாது என்று
ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை
செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம்
அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.
ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில்
படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள
அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன்
அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.
இன்று அவ்வாறு செய்வதைத் தடை
செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை
செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.
தடை செய்யப்படுவதற்கு முன்
செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய
யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
No comments:
Post a Comment