Thursday, 28 March 2013

ஊளையிடும் ஊனமான ஊடகங்கள்... ''

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நாட்டில் எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகிறது அக்குற்றத்தை யார் செய்திருந்தாலும் அது குற்றம்தான்.அதி.ல் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதை நியாயப்படுத்தவும் முடியாது.

இந்து மதமாக இருந்தாலும் , இஸ்லாமிய மதமாக இருந்தாலும் , கிருஸ்தவ மதமாக இருந்தாலும் எந்த ஒரு மதமும் மனிதனை தவறு செய்யச்சொல்லி கற்றுக்கொடுப்பதில்லை. அதை ஊக்குவிப்பதும் இல்லை. எல்லா மதங்களுமே மனிதனை தவறிலிருந்து விடுவிக்கவே முயற்சிக்கிறது.

இதையும் மீறி மனிதன் தவறு செய்யக்கூடியவனாகவே இருக்கிறான் அவன் எந்த மதத்தைச்சார்ந்தவனாக இருந்தாலும்.

இது போன்று குற்றங்கள் செய்பவர்களை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவதில் ஊடகங்கள் முன்னிலை வகிக்கிறது. அது தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி, சினிமாத்துறையாக இருந்தாலும் சரி , பத்திரிக்கை துறையாக இருந்தாலும் சரி , இணைய தளங்களாக இருந்தாலும் சரி. இது போல மக்களிடம் செய்திகளை கொண்டு செல்லும் போது அவற்றிற்கென்று ஒரு இறையாண்மை உண்டு. அது என்ன இறையாண்மை ? எந்த ஒரு சாராருக்கும் பாதிப்பு வராத வகையில் காய்தல் உவத்தல் இன்றி நடு நிலையோடு செயல் படுவதுதான் ஊடகங்களுக்கென்று உள்ள இறையாண்மை. இது சரிவர கடை பிடிக்கப்பட்டால் எந்த ஒரு சாராரும் பாதிப்படைய மாட்டார்கள் இது பத்திரிக்கை துறையின் தலையாய கடமையும் கூட.

ஆனால் இந்தியாவில் உள்ள எந்த பத்திரிக்கையானாலும் தொலைக்காட்சியானாலும் சினிமாவானாலும் குற்றவாளிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தினாலும் சரி குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டாலும் சரி உருவகப்படுத்தினாலும் சரி ஒரு பக்கச்சார்பாக செயல்படுவதை கண்கூடாக காணலாம்.

ஒருவன் ஒரு குற்றத்தை செய்கிறான் என்றால் அது அவன் சார்ந்த தனிப்பட்ட விஷயமாக மாறி விடுகிறது. அக்குற்றம் சமுதாயத்தை பாதிக்குமானால் அவன் ஒட்டு மொத்த சமுதாயத்தின் விரோதியாகத்தான் கருதப்படுவான் அதுதான் நியதியும் கூட.

ஆனால் இந்தியாவில் ஒருவன் குற்றம் செய்தால் ஊடகங்கள் அவனின் பெயரை குறிப்பிட்டு இவன் இக்குற்றத்தில் ஈடுபட்டான் என நடுனிலையோடு செய்தியை வெளியிடுகிறது அவன் சார்ந்துள்ள சாதியையோ மதத்தையோ தொடர்பு படுத்துவதில்லை. அவன் அவன் சார்ந்துள்ள மதத்தில் எவ்வளவு முக்கியஸ்தராக இருந்தாலும் ஆன்மிகவாதியாக தன்னை அடையாளப்ப்டுத்திக்கொண்டாலும் சரியே..அதே போல் ஒரு கும்பல் திட்டமிட்டு பொது மக்களூக்கு பெரிட அளவில் பாதிப்பு ஏற்படும் வகையில் கூண்டுகள் வைத்து கொத்துக்கொத்தாக மக்களை கொன்று குவித்தாலும் அந்த கும்பல் சார்ந்துள்ள மதத்தை தொடர்பு படுத்தி செய்திகள் வெளியாவதில்லை அந்த மதத்தைச்சர்ந்தவர்கள்தான் குற்றவாளீகல் அந்த மதத்தைச்சார்ந்த ஆன்மிக வாதிகள்தான் இக்குற்றச்செயல்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் சரியே...எந்த ஒரு ஊடகமும் அவர்கள் சார்ந்துள்ள மதத்தை தொடர்பு படுத்துவதில்லை...

ஆனால் இது எல்லா மதத்துக்கும் பொருந்துமா? அங்குதான் இவர்களின் ஊனமான பார்வை வெளிப்படுகிறது... பெயர் தாங்கி இஸ்லாமியன் ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் அவன் பெயரை குறிப்பிட்டு இந்த பெயருடைய நபர் இக்குற்றத்தில் ஈடுபட்டான் எனசெய்திகள் வெளியாவதில்லை.ஒரு பெயர் தாங்கிய இஸ்லாமிய குழு மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலும் அல்லது அப்படி நடக்காத பட்சத்திலும் இந்த ஊனமான ஊடகங்களில் இஸ்லாம் மதத்துடன் உடனே செய்திகளை வெளியிட்டு தங்களின் ஜாதிப்ப்ற்றையும் மதப்பற்றையும் நிரூபிக்கும் வகையில் இஸ்லாத்தின் மீது புழுதியை வாரி வீசுவதை கண் கொண்டு காணலாம்.

இதில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள் தினமனி தினமலர் தினத்தந்தி இவைகள் முன்னணியில் இருப்பதைகாணலாம். அதே போல் வார இதழ்களில் நக்கீரன், ஜூனியர்விகடன், ரிப்போர்டர் இப்படி எதுவும் விதி விலக்கல்ல.

அந்த வரிசையில் ''நவீன நெற்றிக்கண்'' என தக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட கண்ணே இல்லாத ஒரு விலாசம் இல்லாத பத்திரிக்கை ஒன்று தனது அட்டைப்படத்தில் ''இளம்பெண்களைசூறையாடிய முஸ்லிம் மைனர்'' அதிர்ச்சி ரிப்போர்ட் என மூன்றாம்தர அளவிற்கு ஆபாச படத்தையும் படுக்கையறை காட்சிகளையும் காசுக்காக வெளியிட்டு தனது இஸ்லாமிய வெறுப்பை வெளிக்காட்டியுள்ளது.

நாகூர் என்ற ஊரில் ஒருவன் பெண்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறான் என்றால் அவன் பெயரை குறிப்பிட்டு போட வக்கில்லாமல் இஸ்லாத்தை ஏன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட வேண்டும்?

கடந்த மார்ச் 1 ம்தேதி தினமலர் பத்திரிக்கை தனது இணையதள பக்கத்தில் கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பற்றிய செய்தியை வெளியிடும்போது அக்குண்டுவெடிப்பில் பாகிஸ்தானைச்சார்ந்த தீவிரவாத அமைப்பு குண்டு வைத்ததாக செய்தியை வெளியிடுகிறது . அதே இணையதளத்தில் மார்ச் 6 ம் தேதி அதே செய்தியை தொடர்பு படுத்தி தமிழகம் தேனி பகுதியில் குண்டு வைக்கசதி என்று செய்தியை வெளியிடும்போது ஹைதராபாத்தில் குண்டு வைத்த நக்ஸல்பாரி இயக்கத்தினர் தேனி பகுதில் குண்டு வைக்க முயற்சி.என செய்தியை வெளியிடுகிறது இதில் எது உண்மை?

உளவுத்துறையின் செய்தியை மேற்கோள்காட்டியெல்லாம் செய்திகள் வெளியிட வேண்டுமென்ற அவசியம் இல்லை ஒரு மதத்தை இழிவு படுத்த தனது மனச்சாட்சியை தூக்கியெறிந்து விட்டாலே போதும் மனம் போன போக்கில் செய்தியை வெளியடலாம் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்.

இதையொட்டிதான் சினிமாக்கார கூத்தாடிகளும் தங்கள் பங்கிற்கு இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி வருகின்றனர். இனியும் இவர்கள் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்

டால்...

தமிழகத்தின் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் அனைத்து '' ஊளையிடும் ஊனமான ஊடகங்களுக்கு '' எதிராகவும் களம் காண வேண்டிய சூழல் ஏற்படும்...அல்லாஹ் நாடி விட்டால் இதை மாற்ற யாராலும் முடியாது.

No comments:

Post a Comment