Tuesday 26 March 2013

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


Dear Brother,


இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:

இந்திய ராணுவத்தில் ஆர்.ஆர்.டி.–72, ஆர்.ஆர்.டி.–73 பயிற்சி திட்டத்தின் கீழ் மதபோதகர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆர்.ஆர்.டி.–72 திட்டத்தில் 36 பேரும், ஆர்.ஆர்.டி.–73 திட்டத்தில் 24 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் எனும் பெயரில் அதிகாரி பணியிடங்களில் பணி நியமனம் பெறுவார்கள்.

இவர்கள் ராணுவ வீரர்களுக்கு மத போதனை செய்தல், காயம் அடைந்த வீரர்கள் மத்தியில் ஆறுதல் வழிபாடு செய்தல், இறந்த வீரர்களை அந்த மதத்தினரின் சடங்குகளுடன் அடக்கம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் இருக்கும் ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

பணியின் பெயர் : ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (ரிலிஜஸ் டீச்சர்)

பணியிடங்கள் : 60 இடங்கள்

வயது வரம்பு: 27 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்

கல்வித்தகுதி: பண்டிட், பத்ரி, மவுலவி போன்ற மத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பண்டிட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அத்துடன் சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூசண் அல்லது மண்டல மொழிகளில் இதற்கு இணையான மொழியறிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சமஸ்கிருதம் அல்லது இந்தியை முதன்மைப் பாடமாக எடுத்து இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் மொழியறிவு சான்றிதழ் படிப்பு அவசியமில்லை.

மவுலவி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புடன், அரபியில் மவுலவி ஆலிம், உருதுவில் ஆதிப் ஆலிம் அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அரபி மற்றும் உருது மொழியில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரபி ஆலிம், உருது ஆலிம் சான்றிதழ்கள் அவசியமில்லை.

பத்ரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புடன், பிஷப்பிடம் பாதிரியார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 8 நிமிடங்களில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்கும் உடற்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட முறையில் விண்ணப்பம் தயாரித்து அதனை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும்.

தமிழக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
HQ Ttg Zone.
Chennai
Fort Saint George
Chennai 600009

முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25–4–13
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 30–6–13
மேலும் விரிவான விவரங்களை அறிய http://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்
-- Thameem Ansari


No comments:

Post a Comment