Saturday 13 April 2019

Indian law




1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)  2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217  3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404  4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166  5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.   6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)  7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.  8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம்.  9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43  10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல்



Thursday 4 April 2019

Father respect is must

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்
.
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!

*ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டிய பதிவு*.

--படித்து மனம் கலங்கியது.

Saturday 23 March 2019

இவ்வளவு இயக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

இவ்வளவு இயக்கம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா?
----------------------------------------------------

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களின் பட்டியல்,

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

2. இந்திய தேசியலீக்

3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்

4. தமிழ் மாநில தேசிய லீக் ( அல்தாப் )

5. தமிழ் மாநில முஸ்லிம் லீக் ( ஷேக் தாவூத் )

6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான் )

7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன் )

8. மனிதநேய மக்கள் கட்சி

9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்

12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் (இடிமுரசு இஸ்மாயில்)

13. மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.)

14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் ( பாலை ரபீக் )

15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)

16. ஜனநாயக மக்கள் கட்சி

17. இந்திய தேசிய மக்கள் கட்சி

18. இந்திய தேசிய மக்கள் கட்சி ( குத்புதீன் ஐபக் )

19. தேசியலீக் கட்சி

20. இந்திய தவ்ஹீது ஜமாத்

21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்

22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் ( இணையதளம் )

23. ஜமாத் இ இஸ்லாமி

24. ஜமாத்துல் உலமா

25. ஷரியத் பாதுகாப்பு பேரவை

26. இஸ்லாமிய இலக்கிய பேரவை

27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா

28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா

29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி ( சித்தீக் )

30. மில்லி கவுன்ஸில்

31. மஜ்லிஸே முஷாவரத்

32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்

33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்

34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்

35. ஜம்மியத்துல் உலாமா ( அர்ஷத் மதனி )

36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்

37. சிறுபான்மை புரட்சி இயக்கம் ( லியாகத்அலிக்கான் )

38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு

39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை ( ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி )

40. மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் ( உமர் பாருக் )

41. மறுமலர்ச்சி த மு மு க

42.ஹாமிது பக்ரியின் ஐக்கிய சமாதான பேரவை.

ஐம்பதை தொட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Saturday 9 March 2019

20அடி மரத்திலிருந்து அருள் சொல்லும் சாமியார் தவறி விழுந்து உயிரிழப்பு!

20அடி மரத்திலிருந்து அருள் சொல்லும் சாமியார் தவறி விழுந்து உயிரிழப்பு!

கோவை பேரூர் அருகே சுண்டக்காமுத்தூர் பகுதியில் பழமையான கோயில் அமைந்துள்ளது. இங்கே
பூஜை செய்யப்பட்ட 20 அடி மரத்தின் மீது படுத்துக்கொண்டு ஐயாசாமி என்ற பூசாரி பக்தர்களுக்கு வாக்கு கூறினார். ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்த அவர் திடீரென நிலைதடுமாறி அங்கிருந்து கீழே விழுந்தார்.

Wednesday 27 February 2019

Pilot abhinathan

விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்..
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்று நடந்த இந்தியா&பாகிஸ்தான் இடையேயான மோதலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருக்கும் விமானி அபிநந்தனும், படுகாயமடைந்துள்ள மற்றொரு விமானியும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, ஒவ்வோர் அரசும் போர் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு மனிதாபிமான அடிப்படையில் நடத்தவேண்டும் என்றும், விமானியை உடனடியாக பத்திரமாக்க மீட்க ராஜாங்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இப்படிக்கு,
(எம்.எச்.ஜவாஹிருல்லா)

Thirubuvanam ramalingam

Thinathanthi danger

Friday 15 February 2019

எண்ணங்கள்

> 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
> (ஸஹீஹுல் புகாரி: 1. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)