விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்..
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்று நடந்த இந்தியா&பாகிஸ்தான் இடையேயான மோதலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருக்கும் விமானி அபிநந்தனும், படுகாயமடைந்துள்ள மற்றொரு விமானியும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, ஒவ்வோர் அரசும் போர் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு மனிதாபிமான அடிப்படையில் நடத்தவேண்டும் என்றும், விமானியை உடனடியாக பத்திரமாக்க மீட்க ராஜாங்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு,
(எம்.எச்.ஜவாஹிருல்லா)
No comments:
Post a Comment