Saturday 2 February 2019

அர்ஜுன் சம்பத் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்
சம்பத் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்

முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள் ! முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள்!

பள்ளிவாசலை நோக்கி கதறி ஓடிவந்த (தலித் சமூகம்) இந்து சமுதாய மக்கள்!

கோவையில் ஜுமுஆ தொழுகை நேரத்தில் திரண்டு வந்த தலித் சமூக மக்கள் பள்ளிவாசல் முன்பு வந்து ஜமாத்தார்களிடம் முறையிட்டதால் பரபரப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கலவரத்தை உருவாக்க எந்த சமூக மக்களை காவல்துறையினர் பயன்படுத்தினார்களோ அதே சமூக மக்கள் காவல்துறையினரால் விரட்டப்பட்டு முஸ்லிம்களே எங்களை காப்பாற்றுங்கள் எங்கள் வீடுகளை அபகரிக்கிறார்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கூக்குரல் இட்டு முஸ்லிம் பகுதிகளுக்குள் ஓடிவந்து பள்ளிவாசல் முன்பு வந்து முஸ்லிம்களே உதவி செய்யுங்கள், காப்பாற்றுங்கள் என - 01/02/2019 நேற்று ஜும்ஆ தொழுகை நேரத்தில் முஸ்லிம்களிடம் உதவி கேட்டனர்!

கோவை உக்கடம் பகுதியில் கெம்பட்டி காலனி, மற்றும் CMC காலனி, கீரைக்கார வீதி, ராமர் கோவில் வீதி உட்பட சுமார் (3000) மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது, மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், அதற்குத் தேவையான சாலை விரிவாக்கத்திற்காக ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது!

நேற்றைய தினம் திடீரென 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலித் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து அங்கே பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை வீடுகளைக் காலி செய்யச் சொல்லி மிரட்டியுள்ளனர்..

அப்போது பல காலமாக அங்கே குடியிருந்து வரும் தலித் மக்கள் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கே தான் வசித்து வருகிறோம் எங்கள் அனைவருக்கும் மாற்றுக் குடியிருப்பு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர், 1,500 வீடுகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டதால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த சூழ்நிலையில் 1,500 வீடுகளை மட்டுமே அரசு தரப்பில் ஒதுக்க முடியும் என்று அதிகாரிகள் சொன்னதால், ஆத்திரமடைந்த தலித் மக்கள் எங்கள் அனைவருக்கும் வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர்!

அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று கூறி காவல்துறையினர் அவர்களை சூழ்ந்து மிரட்டியுள்ளனர், அதனால் அச்சமடைந்த தலித் மக்கள் அனைவரும் உக்கடம் கோட்டை மேடை நோக்கி முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள் என கோசமிட்டபடி ஓடிவந்தனர்!

நாங்கள் எங்களுக்கான நியாயத்தை நீதியை ஜமாத்தார்கள், பள்ளிவாசல் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்து, மக்களுக்கும் தெரியப்படுத்தி நியாயத்தைப் பெற்றுக் கொள்கிறோம் என்று கோசமிட்டவாறே கோட்டை மேட்டுக்குள் நுழைந்து பள்ளிவாசல் முன்பு திரண்டு வந்து நின்றனர்!

இச்சம்பவம் முந்தைய வரலாற்றை நினைவுபடுத்தித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

இவர்கள் குடியிருக்கும் பகுதியில்தான் இந்து சமுதாயத்தின் பாதுகாவலர் என தன்னைத் தானே கூறிக் கொண்டு தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் குடியிருப்பும் உள்ளது, ஆனால் அர்ஜுன் சம்பத் குடியிருப்பது மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட்!

இந்த தலித் மக்களை வைத்துதான் அர்ஜுன்சம்பத் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல் பிழைப்பு நடத்தி வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை!

ஆனால் தற்போது அர்ஜுன் சம்பத்திற்கு இந்து சமுதாயம் மற்றும் தலித் மக்களைப் பற்றிய கவலையோ அக்கறையோ சிறிதளவும் இல்லை, அர்ஜுன் சம்பத்தின் நோக்கம் அனைத்தும் பார்ப்பனர்களை புகழ்வதும், பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர்களுக்காக குரல் கொடுப்பதும், RSS, BJP உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி கும்பல்களுக்கு வக்காலத்து வாங்குவதும்தான்!

அர்ஜூன் சம்பத் வசிக்கும் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தன் சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் என்பதும், இந்து சமூக மக்கள்தான் என்பதையும் உணர்ந்துள்ள அர்ஜுன் சம்பத் இந்து மதத்தின் காவலர் என தன்னைத் தானே கூறிக் கொள்வதும், பார்ப்பனர்களுக்கும், RSS, BJP உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி கும்பல்களுக்கும் தொடர்ந்து வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது அனைத்தையும் பார்க்கும் பொழுது அர்ஜுன் சம்பத்தின் அரசியல் பச்சோந்தி தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது!

1997 ல் கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து CMC காலனி, கெம்பட்டிக் காலனி, கீரைக்கார வீதி போன்ற இப்பகுதி மக்களைத்தான் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுத்த அர்ஜூன் சம்பத் மூலம் பயன்படுத்தினார்கள் என்பதும், இப்பகுதியில் வசித்து வரும் தலித் மக்களைத்தான் கடைவீதியில் ஷோபா துணிக்கடை உட்பட முஸ்லிம்களின் அனைத்து வியாபாரக் கடைகளையும், வணிக நிறுவனங்களையும் சூறையாடப் பயன்படுத்தினார்கள் என்பதும் வரலாறு!

காவல்துறையினரே கலவரத்தில் ஈடுபட்டதால், மத்திய அரசால் கோவைக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு - கலவரத்தில் சூறையாடப்பட்ட பொருட்களையும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் அர்ஜுன் சம்பத் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு பின்புறம் உள்ள பழைய லட்சுமி தியேட்டரில் கொண்டுவந்து வைக்குமாறு காவல்துறையினரால் மைக்கில் உத்தரவிட்டதின் பேரில் சூறையாடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியை கொண்டு வந்து அந்த மக்கள் அந்த தியேட்டரில் வைத்தனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்!

அர்ஜுன் சம்பத் போன்ற முகவரியில்லாமல் இருந்த தருதலைகள், கேடு கெட்டவர்கள் மற்றும் இந்துத்துவ மத வெறி இயக்கங்கள் எல்லாம் இந்தப் பகுதி மக்களை வைத்து அரசியல் லாபம் அடைந்த பின்னர் வழக்கம்போல் இந்த தலித் மக்களையும் கைவிட்டு விட்டனர்!

இங்கே கோவையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை உருவாக்குவதற்கும், RSS, VHP, பஜ்ரங்தள், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி கொண்ட, பாசிஸ வர்க்கத்தினர் பயன்படுத்துவது இந்த தலித் சமூக மக்களைத்தான், கலவரம் உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் தலித் சமூக மக்களின் நலனுக்காக ஒருபோதும் பாசிஸ பயங்கரவாத கும்பல் குரல் கொடுப்பது கிடையாது!

ஒட்டுமொத்த ஹிந்துத்துவா இயக்கங்களும் பார்ப்பணர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு குரல் கொடுக்கக்கூடிய வேளையில் நாடு முழுவதும் அங்கங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவது தெரிந்தும் அவர்களுக்காக போராடுவதில்லை, குரல் கொடுப்பதில்லை, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர மறுக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை!

இந்துத்துவ இயக்கங்களை வளர்த்துக் கொள்வதற்காகவும், பாசிஸத்தின் சுயநல அரசியலுக்காகவும், பொருளாதார இலாபம் அடைவதற்காகவும் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தலித் மக்களை பலிகடாக்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும், நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் சிந்திக்க கூடிய தருணம் இது!

குறிப்பு :

நீங்கள் வீடியோவில் பார்க்கும் இதே பள்ளிவாசலில் தான் 1997 நவம்பரில் கொல்லப்பட்ட 17 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வைக்கப்பட்டிருந்தது என்பது சமுதாயம் மற்றும் தலித் சமூகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் நினைவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது!

#படியுங்கள் #பரப்புங்கள்

No comments:

Post a Comment