Friday 4 March 2011

முதுகு வலி, மூட்டு வலி தொல்லை... ஏன்? தீர்வு என்ன?

முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்பு வலி, மூட்டு வலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறு வயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.அதற்குக் காரணமே சிறு வயதிலேயே டூ வீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்ஸார்பர் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க் (வட்டுகள்)கள் இருக்கும்.மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.
அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால் குடைச்சல், கால் மரத்து விடுதல், முதுகு வலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதைச் சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டு விடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.
ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் இரண்டாவது நிலை'.
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால் குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களைக் கதி கலங்க வைத்து விடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.
மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.
கால் குடைச்சல், மரத்துப் போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் ஃபிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
இதற்கு ஃபிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி. (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச் சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து இறுகிப்போன தசைகளை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.
மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இரு வகை உண்டு.
சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்.
அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து விட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தைத் திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனைப் பெற முடியாது.
மேலும் டூ வீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்து போன டயர், ஷாக் அப்ஸார்பரில் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட் பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.

உட்காரக்கூடிய சேர் முதுகுப் பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகு வலி, மூட்டு வலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.

Wednesday 2 March 2011

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும் Register with the Embassy of India

U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக  இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும்.

அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும்.

பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும்.

அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்



Tuesday 1 March 2011

IAS, IPS படிக்க Civil Services தேர்வு

IAS, IPS படிக்க Civil Services  தேர்வு
கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான  நுழைவு தேர்வை
மத்திய அரசின்  UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்)  காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட  24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...)  முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011  விண்ணப்பம் தற்போது  வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம்.  இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும்  மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும்.  இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.
முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம்.  சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும்  இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.  இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள்  உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள்இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருதாக்கத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.
இதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்சி  பெற  வேண்டும்,
தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
இந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது?
 இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும். அந்த அளவிற்க்கு இந்த தேர்வுகள் பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேர அறகட்டளை நடத்து பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.
 முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர்.  சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ.M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது.  கள்ளகுறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக கள்ள குறிச்சி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எப்போது நாம் இதில் தேர்சி பெறுவது?

 பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை ( இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை, பொருமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு, படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் மிக குறைவும். ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொருமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற வாழ்கையே அதுவல்ல, முஸ்லீம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.
தேர்வை பற்றிய முழு விபரங்களும் ஆங்கிலத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறியவும் தேர்விற்க்கு தயாரவாதற்க்கான வழிமுறைகள் பற்றி அறியவும்  Sithiqu.mtech@gmail.com  என்ற E -  மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
 S.சித்தீக்.M.Tech
Civil Services Examination - 2011 தேர்வை பற்றிய விபரம்.
இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதக் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 21/03/11   இன்ஷா அல்லாஹ்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் அழுவலகங்கள்
கட்டணம் : விண்ணப்பத்தின் விலை  ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary,
Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New
Delhi - 110069
தேர்வு நடைபெறும் தேதி : 12/06/11 இன்ஷா அல்லாஹ்
வயது வரம்பு : 33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட
வகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது
தேர்வு எழுத தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


எச்சரிக்கை தகவல்

அஸ்ஸலாமு அலைக்கும்,
>
>
அன்பு சகோதரர்களே,
>
>
சில தினங்களாக நமது சகோதரிகளின்  செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாக சொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில் நாங்கள் தங்கி உள்ளோம்,தற்பொழுது வெகேசனில்  வந்துள்ளோம்   உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்து பேச சொன்னார், நல்லா  இருக்கீங்களாபிள்ளைகள் நல்லா இருக்கா என்றெல்லாம் விசாரித்து  அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள்,
>
>
சம்பந்தப்பட்ட சகோதரிகள் தங்கள் கணவருக்கு போன் செய்து விபரம் கேட்கும் பொழுது அது பொய்யான தகவல் என்று தெரிகிறது.
>
>
இவர்களின் நோக்கம் என்ன?உறவினர்கள் யாரும் கேலி செய்கிறார்களா என்று விசாரிக்கும் பொழுது அதுவும் இல்லை!அவர்களுக்கு நமது சகோதரிகளின்  போன்  நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை  பற்றிய  தகவல்கள்  அவர்களுக்கு   கிடைக்கின்றனமிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது.
>
>
வெளிநாடுகளில் உள்ள சகோதர்கள் அனைவரும் உடனடியாக தம் தம் மனைவியருக்கும்குடும்பத்தாருக்கும் இத்தகவலை தெரிவித்து இது போல் யாரும் போன் செய்து பேசினால் வேறு எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>
>
நேற்று (20.02.11) இரவு 09.30 மணிக்கு எனது மனைவிடம் இருந்து call me என்று ஒரு SMS வந்தது  உடனடியாக நான் அவருக்கு போன் செய்யும் பொழுது லயன் பிசியாக இருந்தது, 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தேன்
>
மனைவியின் குரலில் ஒரு பதஷ்டம் என்ன என்று கேட்கும் பொழுது உங்களுக்கு SMS செய்த மறு நொடி ஒரு போன் வந்தது நீங்கள் தான் என்று நினைத்து நலம் விசாரித்தேன் அதற்கு அவன் சொல்லு சொல்லு என்று சொன்னான்,  மறுபுறம் குரலில் வித்தியாசம் இருந்ததால்  உடனே கட் செய்து விட்டேன் திரும்பவும் அவன் நம்பரில் இருந்து உங்கள் பெயர் மட்டும் போட்டு SMS வந்தது மீண்டும் அவன் போன்
செய்தான்,நீங்கள் தான் என்று நினைத்து மறுபடியும் எடுத்தேன், யார் பேசுவது? இது எந்த ஊர்? என்று கேட்கிறான், நான் பயந்து வைத்துவிட்டேன் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நம்பர் வருவதாக சொன்னார்கள் நம்பர் என்ன வென்று கேட்டு வாங்கிக்கொண்டு நான் அவனுக்கு போன் செய்தேன்,உறக்கத்தில் இருந்து எடுப்பவனைப் போல் எடுத்து
ஹலோ என்று சொன்னான், யார் நீ? உனக்கு எந்த நம்பர் வேண்டும் ஏன் இதற்கு SMS செய்தாய் எப்படி உனக்கு இத நம்பர் கிடைத்தது என்று கேட்டவுடன் இணைப்பை துண்டித்துவிட்டான்.
>
>
ஆகையால் நண்பர்களே,
>
>
நம்மை நோக்கி எதுவோ? யாரோ? குறி வைக்கிறார்கள் அதில் நமது குடும்பத்தார்கள் சிக்கி விடாமல் இருக்க அனாமத்தான  கால்கள் எதுவும் வந்தால் அதற்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று தங்கள் மனைவிமார்களிடமும்  குடும்பத்தார்களிடமும்   எச்சரிக்கை  செய்யவும் .
>
>***
ஊரில்உள்ளநண்பர்கள்அந்தநம்பரைடிரேஸ்செய்துவிசாரிக்கமுடியுமானால்எனக்கு Akbar Ali HR <https://mail.visionem.net/owa/UrlBlockedError.aspx> மெயில்செய்யவும்அந்தநம்பர்களைதருகிறேன்.
>
>
வாழ்க வளமுடன்,
>
என்றும் அன்புடன்,
>
அக்பர் அலி HR
>Madukkur