Sunday, 3 March 2024

DMK 40 / 40 - Election 2024 in Tamil Nadu

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர் / 2024 மார்ச் 07 வியாழன் மாலை 4 மணி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மௌலானா ஆசாத் கல்விச் சங்கத்தை கலைப்பது..!

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கியோரை மீட்ட வாகீல் ஹசன் வீட்டை இடிப்பது..

வழிப்பாட்டுத் தலங்களை சிதைப்பது… 

உள்நோக்கத்தோடு உலமாக்களை கைது செய்து வதைப்பது..




எனஅராஜகத்தின் உச்சம் காட்டும் 
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

களம் :பனகல் மாளிகை அருகில், சைதாபேட்டை
காலம்:மார்ச் 07 வியாழன் மாலை 4 மணி

அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர்

அழைக்கிறது
மனிதநேய மக்கள் கட்சி
தென் சென்னை மேற்கு மாவட்டம்

https://www.facebook.com/share/p/HcZqoZUoHMNLKpSu/?mibextid=Nif5oz
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு,,,,

ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் லிப்ட் அமைக்க வேண்டும் என்கிற பக்தர்களின் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையிலும்  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரிடத்திலும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக ரூ 3.56 கோடி மதிப்பீட்டில் லிப்ட் அமைக்கும் பணியை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின்  கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதியன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த பணி இன்னும் சில மாதங்களில் உபாயதாரர்களின் பங்களிப்புடன் துவங்க உள்ளது, இதற்கான கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற உள்ளது. 

இந்த பணிகள் நடைபெற உள்ள இடத்தை  பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் வரைபடம் செயல்படுத்த உள்ள இடம் என்பது குறித்து விளக்கமாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்பொழுது இந்து சமய அறநிலையத்துறை கோவில்  துணை ஆணையர் உமாதேவி, சட்டமன்ற உறுப்பினரிடம் இந்த திட்டம் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார்.,,



அப்பொழுது எம்எல்ஏ உடன் சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி சிவக்குமார், திமுக பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம், திமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், குணாளன், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், துணை செயலாளர் வீரமணி, பேரூர் தலைவர் புர்க்கான் அலி, முஸ்தபா, மற்றும் திமுக, மமக, நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள், திருக்கோயில் பணியாளர்கள், உள்பட பலர் உடன் இருந்தனர்.

பாபநாசம் - அரியலூர் ரயில் நிலையம் இடையே பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாபநாசம் - அரியலூர் ரயில் நிலையம் இடையே பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி.. 

பாபநாசம் - அரியலூர் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து சேவை துவக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா வலியுறுத்தி பேசினார். 

அவரது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எஸ் எஸ் சிவசங்கர் அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் ரயில் நிலையம் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 




கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். 463B, புதிய பேருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 7.00 மணிக்கு நடை எடுத்து பாபநாசத்தில் 7.35 மணிக்கு புறப்பட்டு கபிஸ்தலம் -திருவையாறு -அரியலூர் புகைவண்டி நிலையம் என 4 நடைகளாக இயக்கப்படும் தடத்தில் புதிய பேருந்தினை (03.03.2024)  காலை 07.00 மணிக்கு பாபநாசம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா

தேர்வு எழுதும் மாணவர்களே கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுங்கள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று தேர்வுகள் துவங்குகின்றன.

தேர்வு எழுதும் மாணவர்களே கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுங்கள் :

👉 தொழுகையில் தான் வெற்றி இருக்கிறது.ஐவேளைத் தொழுகையை பேணுதலோடு பின்பற்றுங்கள். 

👉 தேர்வுகளை இலகுவாக்கித் தர அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுங்கள்.  மனமுறுகி துஆ செய்யுங்கள். 

👉 இரவில் விரைவாக உறங்கி இரவின் பின்னேரம் எழுந்து தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு பாடங்களை படியுங்கள்.அந்த நேரத்தின் மகிமை உங்களின் நினைவுத் திறனையும் சிந்தனையையும் தூண்டிவிடும்.

👉 தேர்வுக்கு செல்லும் முன்பு 2 ரக்அத்கள் தொழுதுவிட்டு செல்லுங்கள். அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.  

👉 தேர்வெழுத துவங்கும் போது பிஸ்மில்லாஹ் என்று துவங்குங்கள்.நீங்கள் படித்ததை அது சரியான நேரத்தில் நினைவுபடுத்தும்.  

👉 பொய் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும்.  

👉 மொபைல் போனை குறைவாக பயன்படுத்துங்கள். அது உங்கள் மனதுக்கு அமைதியை கொண்டுவரும்.குறிப்பாக போனை தலைக்கு அருகில் வைத்து உறங்காதீர்.

👉 சத்தான உணவை குறைவாக உண்ணுங்கள்.அது உங்கள் மூளைத் திறனை அதிகரிக்கும்.நிறைய தண்ணீர் அருந்துங்கள்.   

👉 அவசரத் தேவைக்கு தவிர மருந்து மாத்திரை தைலங்களை அதிகம் பயன்படுத்தாதீர்.நீங்கள் உற்சாகமாக இருப்பதற்கு அது காரணமாக அமையும். 

👉 யாரிடமும் எதற்காகவும் கோபப்படாதீர். கோபமும் பதற்றமும் நினைவாற்றலை மழுங்கடித்து விடும்.  

👉 தேர்வுகள் முடிவல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள். பள்ளி இறுதித் தேர்வுகள், நீண்ட நெடிய கல்விப் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே.

👉 பெற்றோர்களே...பிள்ளைகளுடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

👉 பிள்ளைகளிடம் எதிர்மறையான எந்த பேச்சையும் பேசாதீர். அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருங்கள். 

இன்றைய ஜுமுஆ உரையில் இந்த செய்திகளையும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

CMN SALEEM

உத்தரகாண்ட் சுரங்க மீட்பு ஹீரோ ஹசன் வீட்டை இடித்த அரசு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

"முஸ்லிம் என்ற காரணம்”.. உத்தரகாண்ட் சுரங்க மீட்பு ஹீரோ ஹசன் வீட்டை இடித்த அரசு -ஜவாஹிருல்லா காட்டம் By Noorul Ahamed Jahaber Ali Updated: Saturday, March 2, 2024, 12:24 [IST] சென்னை: உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "உத்தரகாண்ட் சுரங்கத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட போது மண்ணுக்குக் கீழ் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிக்கு தலைமை தாங்கிய கிழக்கு டெல்லியில் உள்ள வாகீல் ஹசனின் வீடு உட்படப் பல முஸ்லிம்களின் வீடுகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) இடித்துள்ளது. இந்த மனிதாபிமானற்ற நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், சில்க்யாரா சுரங்கப் பாதையில் இருந்து 41 உயிர்களைக் காப்பாற்றுவதில் ஹசனின் துணிச்சலை பொறுத்துக் கொள்ளாத ஒன்றிய அரசின் கைப்பாவையான தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்தக் கொடூரமான செயல் முஸ்லிம் என்பதற்காக அரங்கேற்றப்பட்டுள்ள அராஜகமாகும். உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களைக் காப்பாற்றத் தைரியமாக களமாடியவர் இன்று பாசிச அரசின் வெறுப்பரசியலின் காரணமாக நசுக்கப்பட்டுள்ளார். இந்தச் செயலுக்கு ஒன்றிய அரசும், தில்லி மேம்பாட்டு ஆணையமும் வெட்கி தலை குனியவேண்டும். 

இது ஒரு சோகமான, இதயமற்ற செயல். வாகீல் ஹசனை, மக்கள் ஒரு ஹீரோவாக பார்த்தனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிச அரசின் கைப்பாவையான தில்லி மேம்பாட்டு ஆணையம் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. வசந்த் குஞ்சில், ஒரு தற்காலிக மாற்று வீடு ஏற்படுத்தித் தரப்படும் என தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலர்கள் ஹசனிடம் கூறினர். வாய்மொழியாக அல்லாமல், அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை தர வேண்டுமென ஹசன் முறையிட்டார். ஆனால் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் தில்லி மேம்பாட்டு ஆணையம் நிராகரித்து இருப்பது மனிதாபிமானமற்ற செயல் ஆகும். 

மிக முக்கியமாக, அகற்றுவதற்கு முன்பு குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் விதி, மீறப்பட்டு உள்ளது. இடிக்கப்பட்ட வீட்டின் வெளியே உள்ள நடைபாதையில், வாகீல் ஹஸன் தனது குடும்பத்தினருடன் இரவை கழித்திருப்பது மிக வேதனையான ஒன்றாகும். 
தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகளால் முஸ்லிம் நெஞ்சங்களில் ஏற்கனவே உள்ள வலிகள் மேன்மேலும் ஆழமடைகிறது.

 கடந்த மாதம், குதுப்மினார் அருகே உள்ள அகுன்ஜி பள்ளிவாசலும் இதே கதியை எதிர்கொண்டது, ஜனவரி 30 அன்று இரவு புல்டோசரை கொண்டு, "சட்டவிரோதக் கட்டுமானம்" என்று முத்திரை குத்தப்பட்டு இடிக்கப்பட்டது. 30 நாட்களுக்குள் அதே தில்லி மேம்பாட்டு ஆணையத்தினால் அரங்கேற்றப்படும் இன்னொரு முஸ்லிம் வெறுப்புச் செயல்தான் இது. இத்தகைய புல்டோசர் கொடுங்கோன்மைகள் வெறுப்பு அரசியலின் உச்சமாக உள்ளன. மனவேதனை நிறைந்த இந்த நிகழ்வில், மக்களால் "ஒரு ஹீரோ" வாக புகழப்பட்டஒருவரின் வீடு பாசிசத்தின் கொடூரக் குணத்தால் இன்று இடிபாடுகளாக மாறியது. அதிகாரம், ஒரு மதத்தினரைக் குறிவைத்து, அவர்களுக்கு எதிராக இரக்கமற்று செயல்படுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஒரு ஹீரோவின் வலிகள் இன்று புறக்கணிக்கப்படுகிறது. இடிக்கப்பட்ட அந்தச் சுவர்கள் போலவே, இந்திய நாட்டின் மதச்சார்பின்மையும் இந்தப் பாசிசச் சக்திகளால் உடைக்கப்படுகின்றது. தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் செயல்கள் நீதியின் கண்களை மூடுவதாக மட்டுமல்லாமல், ஒருமித்த மதச்சார்பற்ற இந்தியா என்னும் பெரும் சிந்தனையை ஒழிக்கச் செய்கின்ற செயல்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த திட்டமிடப்பட்ட அநீதியைக் கடுமையாக மனிதநேய மக்கள் கட்சி எதிர்க்கிறது. வாகீல் ஹசன் போன்ற சமூகச் சிந்தனையுடையவர்களுக்கு அவமரியாதையையும், இடர்களையும் பரிசளிக்கும் இதயமற்ற பாசிச பாஜக ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிக்க மேலும் வலிமையாகப் பணியாற்ற உறுதி எடுப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.



Thanks Tamil one india 

உறவு பற்றிய தொடர் தினம் ஒரு Al Quran வசனம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உறவு பற்றிய தொடர் தினம் ஒரு வசனம்

03.03.2024 Sunday 

مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ
‘ யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காக வெறுத்தால் அவனது ஈமான் நிறைவு பெற்றுவிட்டது’ என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
 நூல்: அபூதாவூத்-4681 (4061

திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை உதயம்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை உதயம்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் படியூர் பகுதி ரோஸ் கார்டனின் தமுமுக மமக புதிய கிளை உதயம்... 




இன்று 03.03.2024 தமுமுக மாவட்ட தலைவர் நசீர்தீன் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் MJ. அபுசாலி மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் மாவட்ட துணை தலைவர் நாசர் விவசாய அணி செயலாளர் ஜாபர் கனி முன்னிலை வகித்தனர் மேலும் கிளை தலைவராக #முகம்மதுராஜா தமுமுக செயலாளர் #நவ்ஷத் மமக செயலாளர் #சையதுஇஸ்மாயில் பொருளாளராக #அலாவுதீன்_பாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார் மேலும் செய்யது பாய் மற்றும் ரஹீம் பாய் உடன் இருந்தனர் இந்த நிகழ்வில் 20 மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர்...
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......https://www.facebook.com/share/p/C321FZBL56aBUBMd/?mibextid=oFDknk

MODI vs NOBODY ஏன் பயப்படுறீங்க?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

MODI vs NOBODY ஏன் பயப்படுறீங்க?
மமக பொதுகூட்டத்தில் மமக மாநில அமைப்புச்செயலாளர் மாயவரம் அமீன் கேள்வி



https://www.facebook.com/100044352853233/posts/pfbid0Pyu4WpMmf7RjF2Ya56pNox72XvUi5zXyb94cT3Pc3zp1QP9FEHSnhKt1dTvo255Ql/?app=fbl 

அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் B பாசிடிவ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்று 03.03.2024 திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சகோதரர் #காளிதாஸ் அவர்கள் அறுவை சிகிச்சைக்காக ஒரு யூனிட் B பாசிடிவ் தேவைப்பட்டது முகம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் உடனடியாக மருத்துவமனை துணைச் செயலாளர் பாஷா அவர்கள் தொடர்பு கொண்டு கூத்தம்பாளையம் கிளை சேக் அவர்களின் ஏற்பாட்டில் அரவிந்த் என்ற சகோதரர் மூலமாக ஒரு யூனிட் பி பாசிடிவ் கொடுக்கப்பட்டது என்றும் சமுதாயப் பணியில் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம்




https://www.facebook.com/share/p/tUVPkjrkXNWA5MDs/?mibextid=oFDknk