Thursday, 7 September 2023

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன்

 

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன்

 

சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன.

 

சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம்.

 

இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல மக்கள் மீது அடக்குமுறை பாய்ந்தது.

 

அவர்கள் உயர்குல மக்கள் வசிக்கும் இடங்களில் வசிக்கக் கூடாது.ஊரின் ஒதுக்குப் புறமாக வசிக்க வேண்டும்.ஊரின் பொதுக் கிணற்றிலுள்ள தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.உயர்சாதியினருக்கு முன் தலைகுனிந்து நடக்க வேண்டும்.உயர்குலத்தவர் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களைத் தொட்டுவிடக் கூடாது.உயர்குலத்தவரின் வீட்டுக்குள் சென்றுவிடக் கூடாது.

 

இப்படிப் பல்வேறு விதங்களில் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் பல இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

 

இத்தகைய, தீண்டாமையை ஒழிப்பதற்கு இஸ்லாம் மட்டுமே தகுந்த தீர்வை முன்வைக்கிறது. தகுந்த நடவடிக்கைகள் மூலம் உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்துகின்றதுசுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தின் அடிவேரையும் அதன் கிளைகளையும் முழுமையாக வெட்டி எறிகின்றது.

 

இந்தச் சீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஒரே ஒரு திருமறை வசனம் போதும். அதை அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டால் போதும். இதோ படைத்தவன் பேசுவதைக் கேளுங்கள்.

 

4:1   يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

 

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

 

(அல்குர்ஆன்:4:1.)

 

ஒரேயொரு ஆண், பெண்ணில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித இனமும் பல்கிப் பெருகியது என்று குர்ஆன் சொல்கிறது. இந்த வசனம் ஒட்டுமொத்த தீண்டமையையும் ஒழிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.

 

ஏனென்றால், தங்களை மேன்மையாகவும் அடுத்தவர்களை இழிவாகவும் இறைவன் படைத்திருப்பதாக சிலர் ஆழமாக நம்புகிறார்கள். கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவன் உயர்ஜாதி என்றும் கால் பகுதியிலிருந்து படைக்கப்பட்டவன் தாழ்ந்த ஜாதி என்றும் அவர்கள் நம்பும் வேத நூல்களும் சொல்கின்றன. இதுதான் தீண்டாமையின் தொடக்கம்.

 

இந்த மனநிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே தீண்டாமையை ஒழிப்பது சாத்தியமாகும். அப்போதுதான் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்ஆகவே, ஓர் உலகளாவிய உண்மையை எடுத்துரைத்து மக்களிடமுள்ள குருட்டு நம்பிக்கையை முதலில் குர்ஆன் களைகிறது. தீண்டாமை எனும் ஆலவிருட்சத்தை முளையிலேயே முற்றாகக் கிள்ளி எறிந்து விடுகிறது.

 

மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு தாய் தந்தையரின் தொடர்ச்சி என்பது மட்டுமல்ல! அவர்களைப் படைத்த இறைவனும் ஒருவன் தான் என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

 

39:6   خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ؕ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ‌ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ فَاَ نّٰى تُصْرَفُوْنَ‏

 

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

 

(அல்குர்ஆன்:39:6.)

 

இந்த வசனம் தீண்டாமைக்கு எதிராக மற்றொரு சம்மட்டி அடியைக் கொடுக்கிறது. எப்படி?

 

தீண்டாமையின் பெயரில் மக்களைக் கூறுபோட்டவர்கள் ஒருகட்டத்தில் கடவுள்களையும் பிரித்துக் கொண்டார்கள். உயர்குல மக்களுக்குரிய தெய்வங்கள் வேறு; தாழ்ந்த குல மக்களுக்குரிய தெய்வங்கள் வேறு என்று பிரித்தார்கள்.

 

எந்தளவுக்கு என்றால் உயர்குலமென தம்பட்டம் அடிப்பவர்கள், தாழ்ந்த சாதியினரின் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள், அவர்கள் வணங்கும் தெய்வங்களை வணங்க மாட்டார்கள், அந்த தெய்வங்களை திருவிழாக்களின் போது  தங்கள் பகுதிக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இதற்காக இன்றளவும் பல கலவரங்கள் நடக்கின்றன. இதில் கொல்லப்படுவோரும் உள்ளனர்.

 

இதற்கெல்லாம் முக்கியக் காரணம், அவர்கள் நம்பும் பொய்யான வேத நூல்களும் அதன் அடிப்படையிலான கடவுள் கொள்கையும் தான்.

 

இதற்கு மாறாக, திருக்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கமாகத் திகழ்கிறது. அது கூறும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் கோட்பாட்டில் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும். இதோ குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

 

49:13   يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

 

மனிதர்களே! உங்களை ஓர் ஆண்ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்நன்கறிபவன்.

 

(அல்குர்ஆன்:49:13.)

 

மனிதர்களிடம் இருக்கும் அனைத்து வித்தியாசங்களும் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிந்து கொள்வதற்குத் தானே தவிர அதன் மூலம் பெருமை அடிப்பதற்கு, சண்டையிட்டு சீரழிந்து போவதற்கு அல்லஇதை உணர்ந்து கொள்ளாத மக்கள் குலச் சண்டைகள், இன மோதல்கள் மூலம் சமூகத்தை நாசப்படுத்துகிறார்கள். இதுபோன்ற சீர்கேடுகளை விட்டும் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு ஒரே வழி குர்ஆனிய போதனகளை ஏற்று நடப்பதுதான். இதற்கு வரலாற்றில் நிறைய சான்றுகள் உள்ளன.

 

முஹம்மது நபியவர்களின் காலத்தில் குறைஷ் எனும் குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மிகவும் உயர்வாகக் கருதினார்கள்.

 

ஹஜ் எனும் வணக்கத்தில், மக்களெல்லாம் அரஃபா எனும் இடத்தில் தங்கும் போது இவர்கள் மட்டும் முஸ்தலிஃபா எனும் இடத்தில் தங்குவார்கள். இதன் மூலம் மற்ற குலத்தினரை இழிவாகக் கருதினார்கள். இதைத் திருக்குர்ஆன் மூலம் இறைவன் கண்டித்தான்இனிமேல் அனைவரும் ஒரே இடத்தில் தான் தங்க வேண்டும்; இதற்கு முன்பு மற்றவர்களிடம் பாகுபாடு காட்டியதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கட்டளையிட்டான்.

 

2:199   ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

 

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.

 

(அல்குர்ஆன்:2:199.)

 

(ஆரம்ப காலத்தில் ஹஜ்ஜின் போது) மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

 

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி-1665

 

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் கொள்கையைச் சாந்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கி விடுவார்கள். (ஹரம்புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதிமிக்கவர்கள்' எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் ஒன்பதாவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்' எனும் (திருக்குர்ஆன்-02:199வது) இறைவசனமாகும்.

 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 

நூல்: புகாரி-4520

 

மேற்கூறிய இறைவசனம் இறங்கிய பிறகு, ஹஜ் எனும் முக்கியக் கடமையில் அனைவரையும் சமமாக நடத்தியதன் மூலம் இனவெறியை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது. இதிலும் அகில மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

 

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், "இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?" என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

 

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

 

நூல்: புகாரி-1664

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவை நோக்கி) சென்றார்கள். குறைஷிகள், அறியாமைக் காலத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த அதே வழக்கப்படி நபி (ஸல்) அவர்களும் முஜ்தலிஃபாவில் உள்ள மஷ்அரில் ஹராமில் நிற்பார்கள்! அவர்களின் தங்குமிடமும் நிச்சயமாக அங்கு தான் அமையும் என்று உறுதியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் (அதற்கு மாற்றமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஜ்தலிஃபாவில் தங்காமல்) கடந்து சென்று அரஃபாவுக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். நமிராவில் அவர்களுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் இருக்கக் கண்டு அங்கேயே தங்கினார்கள்.

 

(நூல்: முஸ்லிம்-2137)

 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் அவர்கள் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் பாராமல் மக்களோடு மக்களாக ஒரே இடத்தில் தங்கினார்கள். அதுமட்டுமல்லஇனவெறிக்கு, குலவெறிக்கு எதிராக அழுத்தம் திருத்தமாக எச்சரிக்கை விடுத்தார்கள்.

 

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

 

இதுபற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?" என்று கருதினார்கள். உஸாமா நபி (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?" என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை  நிகழ்த்தினார்கள்

 

"உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்என்று பிரகடனம் செய்தார்கள்.

 

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

 

நூல்: புகாரி-3475

 

சட்டம் எல்லோருக்கும் பொதுவானதே! எனது மகளாக இருப்பினும் ஒரே நீதி தான் என்பதன் மூலம் மக்கள் அனைவரும் சமம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்இனம், குலத்தின் பெயரால் மக்களிடம் பாரபட்சம் காட்டுவது சமூகத்தை அழித்துவிடும் என்பதோடு அது அறிவற்றவர்களின் அடையாளம் என்றும் கடுமையாக எச்சரித்தார்கள்.

 

"(தன்) இனத்தை ஆதரித்துகுருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டுக் கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமேஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ்

 

நூல்முஸ்லிம்-3770 (3440)

 

நாங்கள் (பனூ முஸ்தலிக் எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த முஹாஜிர், "முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார்.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து), "இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவைஎன்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

 

நூல்: முஸ்லிம் (5041)

 

தனது இனத்தைச் சேர்ந்தவன் என்ன தவறு செய்தாலும் எப்போதும் அவனுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும் என்கிற இனவெறியை விட்டொழிக்க வேண்டும்அதுமட்டுமல்ல! அவர்களிடம் மற்றொரு மாற்றமும் வர வேண்டி இருக்கிறது.

 

இந்தியா போன்ற நாடுகளில் ஜாதியின் பெயரால் மக்கள் ஒதுக்கப்படுவதைப் போன்று அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நிறவெறி தலைவிரித்து ஆடுகிறதுமனித இனத்திற்கு அப்பாற்பட்ட தனி இனத்தைப் போன்று கருப்பு நிற மக்களை வெள்ளையர்கள் கேவலமாக நடத்துகிறார்கள்.

 

இவ்வாறு நிறத்தின் பெயரால் பாகுபாடு பார்ப்பவர்களும் திருந்த வேண்டும். அவர்களுக்காகவும் முஹம்மது நபி () அவர்கள் சமத்துவம் குறித்துப் பாடம் நடத்தியுள்ளார்கள்

 

"அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாகஉங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்.

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

நூல்: புகாரி (5011)

 

'நான் அபூதர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்!

 

உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்.

 

அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்' என அபூதர் கூறினார்.

 

அறிவிப்பவர்: மஃரூர், நூல்: புகாரி (30)

 

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

 

நூல்கள்: நஸாயி (4192), திர்மிதி (1706)

 

அறிவியல் சிந்தனைகள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் கூட இன வெறி, நிற வெறி பல நாடுகளில் இன்னும் சாகாமல் இருக்கிறதுஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் அடிமைத்தனத்தை பூண்டோடு ஒழித்தார்கள்.

 

கருப்பு நிற அடிமை தலைவராக இருந்தாலும் கட்டுப்படு என்ற தமது கட்டளையை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

 

கருப்பு நிற அடிமையாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய தோழர் பிலால் (ரலி) அவர்களை தொழுகைக்கு மக்களை அழைக்கும் உன்னதமான பொறுப்பை கொடுத்தார்கள்.

 

இதன் மூலம் இறைவனின் அன்பையும் அருளையும் பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகளுக்கு உயர்ந்த குலத்தவராகக் கருதப்படும் நபர்கள்தான் தலைமையேற்க வேண்டும் என்கிற மரபை நபியவர்கள் மாற்றினார்கள். அதுபோன்று நெடுங்காலமாக மக்களிடம் குடி கொண்டிருந்த மொழி வெறியையும் மாய்த்தார்கள்.

 

அரபி மொழிதான் உயர்ந்த மொழி; அந்த மொழியைப் பேசத் தெரியாதவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு அரபிகள் மொழி வெறி முற்றியவர்களாக இருந்தார்கள். இந்த சிந்தனைப் போக்கும் தவறென முஹம்மது நபியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

 

அரபிமொழியல்லாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபியல்லாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

(நூல்: அஹ்மத்-22391)

 

இன்றும் கூட தங்கள் மொழியே தேவ மொழி; சொர்க்கத்தின் மொழி என்றெல்லாம் பெருமை பீற்றிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பிற மொழி பேசுவோரை ஏளனமாக நினைக்கிறார்கள். இத்தகைய ஆட்களுக்கும் குர்ஆன் அழகிய அறிவுரை வழங்கியுள்ளது.

 

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும்உங்கள் மொழிகளும்உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளனவையே. திண்ணமாகஇவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

 

(அல்குர்ஆன்:30:22.)

 

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.

 

(அல்குர்ஆன்:14:4.)

 

மனிதர்கள் பல மொழிகள் பேசுவது அவர்களைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கும் அவன் அனைத்து ஆற்றலும் கொண்டவன் என்பதற்கும் பெரும் சான்றாகும்அனைத்து சமுதாயத்திற்கும் அவர்களின் தாய்மொழியிலேயே தூதர்கள் வந்தார்கள். இதன் மூலம் எல்லா மொழியும் சமம் என்று குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.

 

இப்படி தீண்டாமைக்கு எதிராகப் பல கோணங்களில் இஸ்லாம் சாட்டையைச் சுழற்றுகிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இனம், மொழி, நிறம்செல்வம் போன்ற வேறுபாடுகள் மூலம் பெருமை கொள்வதில் அர்த்தமில்லை.

 

ஒவ்வொரு நொடியும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனுக்குப் பயந்து, நமது சிந்தனைகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்வதில் தான் உயர்வு இருக்கிறது என்று குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் விளக்குகின்றன.

 

அவற்றின் மாமிசங்களோஅவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

 

(அல்குர்ஆன்:22:37.)

 

அல்லாஹ்உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாகஉங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

நூல்: புகாரி (5012)

 

அழியும் இந்த உலக வாழ்வுக்குப் பிறகு நிரந்தரமான வாழ்க்கை உள்ளது. அதில் சொர்க்கம் செல்பவர்களாக இருக்க வேண்டுமெனில் இங்கு ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக இருப்பது கட்டாயம்இத்தகைய இஸ்லாம் தான் அனைத்துப் பிளவுகளையும் மோதல்களையும் தடுத்து நிறுத்துவதற்குரிய வழிமுறை என்பதைப் பிறமத சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

செல்வம், கல்வி, அதிகாரம், ஆட்சி என்று தேவையானவற்றை எல்லாம் அடைந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதப்படுபவர்கள் சரி சமமாக மதிக்கப்படுவதில்லை. அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

 

காரணம் தீண்டாமை உணர்வு, ஆன்மீக நம்பிக்கையுடன் இரண்டறக் கலந்து வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது. அந்த அர்த்தமற்ற ஆன்மீக சிந்தனையை விட்டு வெளியே வந்து, திருக்குர்ஆன் ஒளியில் இஸ்லாத்தில் பயணத்தைத் தொடரட்டும். மறுநொடியே தீண்டாமைக் கொடுமையை விட்டும் அவர்களுக்கு முழுப்பாதுகாப்பு கிடைக்கும்.

Friday, 18 August 2023

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டியது

*வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய அவசியமான 31 வகையான கிராம ஊராட்சி பதிவேடுகள்.*


கிராம ஊராட்சி பதிவேடு எண்.1

வீட்டு வரி கேட்பு தொகைக்கான அறிவிப்பு:

வீட்டு உரிமையாளர்களின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்பப்பட வேண்டிய அறிவிப்பாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.2

வீட்டு வரி ரசீதுகள்: வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.3

வீட்டு வரி (நிலுவைத்தொகை நடப்பு வரித்தொகை) கேட்புத்தொகைப் பதிவேடு: இப்பதிவேடு 5 ஆண்டுகளுக்கு நடை முறையிலிருக்கும். புதியதாக வீட்டுவரி செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம். நீக்கம் செடீநுய வேண்டியிருப்பின் நீக்கம் செடீநுயலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு வரி வீதம் மற்றும் அடிப்படை வகைப்பாடு (மூலதன மதிப்பு அல்லது பரப்பளவு மதிப்பு ஆண்டு வாடகை மதிப்பு) அதற்கான நிர்ணயம் செடீநுயப்பட்ட தீர்மானத்தை இணைக்க வேண்டும். மேலும் வரி விகிதம் நிர்ணய தீர்மானத்தையும் இணைக்க வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.4

தொழில் வரி பற்றுச்சீட்டு: தொழில் வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் இரசீதாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.5

தொழில் வரி (நிலுவைத்தொகை, நடப்பு கேட்புத்தொகை) கேட்புத்தொகை பதிவேடு: தொழில் வரி செலுத்த வேண்டியவரின் பெயர் மற்றும் விவரங்கள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.6

பல்வகை பற்றுச்சீட்டு: பல வகையான கட்டணங்கள் ஊராட்சியில் பெறப்படுவதற்கு அத்தாட்சியாக அளிக்கப்படும் இரசீதாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.7

வரிகள் மற்றும் பல்வகை இனங்களில் வசூல் பதிவேடு: வீட்டு வரி தொழில் வரி மற்றும் விளம்பர வரி இதர ஊராட்சி நிர்ணயிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை வசூல் செடீநுய வேண்டிய பதிவேடாகும்.


எண்.8 மானியங்கள், ஒதுக்கப்பட்ட இனங்களில் வசூல் பதிவேடு: மாநில நிதி மான்யம் மற்றும் ஒதுக்கீட்டு வரவினங்கள் ஆகியவற்றை குறிக்கும் பதிவேடாகும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.9

கிராம ஊராட்சி நிதி சிட்டா: இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்படும் வரவினங்கள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.10

பல்வகை வரவு, வசூல் நிலுவைப் பதிவேடு:

அனைத்து வரியினங்கள் மற்றும் குத்தகைக் கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவற்றின் கேட்பு விவரம், வசூல் செடீநுத விபரம் மற்றும் நிலுவைகள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண் .11

ரொக்கப் புத்தகம் (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): ஒவ்வொரு நிதிக் கணக்கிற்கும் தனித்தனியே ரொக்கப் புத்தகம் பதிவு செடீநுயப்பட வேண்டும். இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்பட்ட வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.12

திருப்பி வசூலிக்கத்தக்க முன்பணங்கள் பதிவேடு: கிராம ஊராட்சி ஏதேனும் ஒரு செலவிற்காக முன் பணம் அளித்தால் இப்பதிவேட்டில் பதியப்பட்ட பின்னரே முன்பணம் வழங்கப்பட வேண்டும். பின்னர் வசூலிப்பதை கண்காணிக்கப்படல் வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.13

வகைப்பாடு செடீநுயப்பட்ட தொகை செலுத்தங்கள் பதிவேடு அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு:


பட்டியல் அனுமதிக்கப்பட்ட பின்னர் ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வழங்கப்படும் அனைத்து இனங்களும் இப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.14

பற்றொப்பப் பதிவேடு: கொடுக்கப்படும் பணத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதிவேடாகும்


கிராம ஊராட்சி பதிவேடு எண்.15

மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): ஊராட்சி நிதி மூலம் எடுக்கப்படும் பணிகளுக்கு மதிப்பீடு மற்றும் வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை ஆகியவை பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.16

கிராம ஊராட்சியின் சொத்துக்கள் பற்றிய பேரேடு: ஊராட்சி நிதி மூலம் ஏற்படுத்தப்படும் அனைத்து சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஊராட்சிகளின் சொத்துக்கள் இனவாரியாக பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.17

பராமரிப்பு பதிவேடு: ஊராட்சி சொத்துக்கள் பராமரிப்பு செலவுகள் ஆகியவை பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.18

தெரு விளக்குப் பொருள்கள், கைப்பம்புகளின் உதிரி பாகங்கள், பொதுச் சுகாதாரம் தொடர்பான பொருள்கள் மற்றும் ஏனைய பயனீட்டுப் பொருட்கள் இருப்புப்பதிவேடு:

ஊராட்சியினால் வாங்கப்படும் அனைத்து பொருட்களின் விவரங்கள் இருப்பு பதிவேட்டில் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.19

செலவுச்சீட்டு:

இரசீது புத்தகங்களின் விவரங்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.20 தொகை மதிப்பு படிவங்கள் குறித்து இருப்புப் பதிவேடு,

அளவுச் சுவடிகள், ஒப்பந்தப் படிவங்கள் முதலியவை: பண மதிப்புப் படிவங்கள், அளவு புத்தகங்கள், ஒப்பந்தப் படிவங்கள் மற்றும் இதர படிவங்கள் ஆகியவற்றின் இருப்புக்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும். பண மதிப்பு படிவங்கள்: வீட்டு வரி இரசீது புத்தகம், தொழில் வரி இரசீது புத்தகம், விளம்பர வரி இரசீது புத்தகம், இதர பல்வகை இரசீது புத்தகங்கள், எழுது பொருட்கள் இருப்பு பாதுகாப்பு வைப்புகள்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.21

விற்பனையாகாச் சரக்குப்பதிவேடு (முடங்கு பொருள் பதிவேடு):

பழுதடையக் கூடிய மற்றும் உபயோகமற்ற பொருட்களின் இருப்புகள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.22

சிமெண்ட், உருக்கு நிலக்கீல், கதவுகள், சன்னல்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் ஏனைய பொருட்கள் குறித்த இருப்பு பதிவேடு:

ஊராட்சியின் மூலம் பெறப்பட்ட சிமெண்ட், இரும்புக் கதவுகள், சன்னல்கள், தார் மற்றும் இதர பொருட்களின் இருப்புகள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.23 ரொக்கப்புத்தகம்(அளிக்கப்பட்ட மானியக் கணக்கு வகை செடீநுயப்பட்டுள்ளது):

மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்காக வழங்கப்படும் அனைத்து வரவினங்களும் இப்பதிவேட்டில் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.24 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலுத்தங்கள் பற்றிய பதிவேடு (அளிக்கப்பட்ட மானியக் கணக்கு):

பன்னிரெண்டாவது நிதிக்குழு மான்யத்தொகை, இறுதிச் சடங்குத்தொகை ஆகியவற்றின் வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.25

மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய பதிவேடு

(அளிக்கப்பட்ட மானிய கணக்கு): ஒதுக்கீட்டு மானிய கணக்கில் மேற்கொள்ளப்படுகின்ற மூலதன மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரம் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.26

ரொக்கப் பதிவேடு புத்தகம் (திட்ட நிதிக் கணக்கு):

கிராம ஊராட்சி திட்ட நிதி கணக்கிற்கு வரவு (ம) பணிகள் செடீநுத செலவு குறித்த விபரம் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.27 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலவுகள் பதிவேடு (திட்ட நிதிக்கணக்கு) :

இந்திரா குடியிருப்புத் திட்டம், மத்திய ஊரக துப்புரவு திட்டம் ஆகியவற்றின் கீடிந பெறப்படும் வரவுகள் மற்றும் தொகை வழங்கல் விபரம் இதில் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.28

திட்டப்பணிகள் பதிவேடு:

கிராம ஊராட்சியின் பயனுக்காக அனைத்து திட்டப் பணிகளின் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் பற்றிய விவரம் இதில் பதியப்படும்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.29

திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் விபரம் அடங்கிய பதிவேடு :


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(அ)

திட்டப் பயனாளிகள், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(ஆ)

இந்திரா வீட்டு வசதித்திட்டம் (தொகுப்பு வீடுகள்): இத்திட்டத்தின் கீடிநபயனடைந்தோர் விபரம், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(இ)

மத்திய ஊரக சுகாதாரத் திட்டம் பதிவேடு (ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய கழிப்பிடங்கள்): தனிநபர் கழிப்பறைகள் கட்டிய நபர்கள் விபரம் மற்றும் பயன்பெற்ற மான்ய விபரம் ஆகியன பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(ஈ)

ஏனையவை: மேற்கண்ட திட்டங்கள் தவிர மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்களின் கீடிந பயன் பெறுபவர்கள், பயன் பெற்ற மான்ய விபரம் குறித்துப் பதியப்படும்


கிராம ஊராட்சி பதிவேடு எண்.30

கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஆடீநுவாளருக்கு அனுப்பப்பட வேண்டிய மூன்று வகைக் கணக்குகளுக்கான வகைப்படுத்தப்பட்ட வரவுகள்–செலவுகள் குறித்த மாதாந்திர விபரம்.


கிராம ஊராட்சி பதிவேடு எண்.31

கிராம ஊராட்சிகளின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான

மாதிரிப்படிவம்

சென்ற ஆண்டின் வரவு – செலவு விபரமும், எதிர்வரும் ஆண்டிற்கு உத்தேசமாக மேற்கொள்ளவுள்ள வரவு – செலவு விபரமும் இதில் குறிப்பிடப்படும்.


இந்த பதிவேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எப்படி பெற இயலும் பெற்று எப்படி அவற்றில் உள்ள குற்றங்குறைகளை மோசடிகளை கண்டறிவது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



* *இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்




🇮🇳. *இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்*


🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது சுமார் *95,300* சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் *61,945 (அ) 61, 395 பேர் முஸ்லிம்கள்.*


🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய கீதம் தற்போதுள்ள *"ஜன கண மன"* அல்ல, *அல்லாமா இக்பால்* அவர்கள் இயற்றிய, *"ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா"* என்ற பாடல் தான்.


🇮🇳. ஷேகுல் ஹிந்த் எனப்படும் *மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்)* அவர்கள் *மால்டா* சிறையில் இருக்கும் போது, ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவர்களின் இடுப்பில் சூடு போடுவார்கள், அதனால் அவர்களின் இடுப்பில் சதையே இல்லை.


🇮🇳. காந்திக்கு *"மகாத்மா"* என்று பெயர் சூட்டயதே *அப்துல் பாரீ ஃபரங்கி மஹல்லி (ரஹ்)* அவர்கள் தான்.


🇮🇳. *40 உலமாக்கள்* நிர்வாண நிலையில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள், *14,000 ஆலிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.*


🇮🇳. *பகதூர் ஷா* அவர்களின் இரு மகன்களின் தலைகளை வெட்டி தட்டில் வைத்து அவர்களுக்கே கொடுக்கப்பட்டது.


🇮🇳. தேசிய கொடியை வடிவமைத்தவர், *"சுரையா தியாப்ஜி"* என்ற இஸ்லாமிய பெண்.


🇮🇳. வா. உ. சி - க்கு சுதேசி கப்பல் வாங்க *ஹாஜி ஃபக்கிர் முஹம்மது சேட் என்பவரே 80 % சதவீத பணம் தானமாக வழங்கினார்.*


🇮🇳. இந்தியாவின் பாரம்பரிய ஆடையான *கதர்* ஆடையை முதன்முதலில் இராட்டையில் திரித்து , ஆடையாய் நெய்து காந்திக்கு போர்த்தி அந்த ஆடைக்கு *"கதர் ஆடை"* என்று பெயர் வைத்தவர் *மௌலானா முஹம்மது அலி அவர்களின் தாயார்.*



பத்திரம் பதிவு பற்றிய தகவல்கள்

பத்திரம் பதிவு பற்றிய தகவல்கள்


1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும். 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.


Zero value நிலம்.....


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான் நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.


2.Double Document அல்லது சந்தேகம் உள்ளதா என்று கேள்வி கேக்க வேண்டும் உரிமையாளர் விடம்


Power of attorney(POA) double document....


POA நிலத்தை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோடு, சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தை power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.


அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா? என்று கேளுங்கள்.


அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள்.முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம். விற்றால் அது double டாக்குமெண்ட் ஆகும்.


3.உயில் பத்திர நிலத்தில்.....double document உள்ளதா


உயில் மூலம் உரிமை மாறி இருக்கா?


உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.


எது இறுதி/கடைசி உயில்? என்று கவனமாக பார்க்க வேண்டும்.பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.


பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கா? ன்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும்.இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.


4.Settlement பத்திர நிலம்....(double document) ஆகும்


Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும்.


1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலமாக தான் ரத்து பண்ண முடியும்.


பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால். அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.


5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-.....(double document.).....


1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.


அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document ஆகும்


6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?....


அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் என்ற பாருங்கள்?.


DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.


Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority )என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.


அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.


Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள்.


நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள். எனவே ஜாக்கிரதை.


பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.


நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும். உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.


VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள்.

RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .


5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.....


கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு.பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம். அதனாலே, விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள்.அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்....


நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில்க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கவேண்டும்.


7. பட்டாவின் பயனாளி யார்?......


முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்


மேஜர் இனாம் நிலம்......


ராயட்டு வாரி

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரியாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை. உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.


Minor இனாம் நிலம்,

சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்.


தொழில் முறை இனாம் நிலம்.....


தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன், கர்ணம்,தலையாரி,வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.


ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)

settlement etc என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகைபாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தவை. சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்ட (HSD பட்டா ,

D-பட்டா,

நமுனா பட்டா,

TKT பட்டா,

F-பட்டா,

B-memo பட்டா,

அனுபந்த பட்டா,

Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா.....

என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு, revenue டிபார்ட்மென்ட் வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.


Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் நிலத்தை வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.


1956-பூமி தான நிலம்....


Manual EC

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம்(கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும்.


Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும். பூமி தான நிலம் வாங்காதீர். பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு. எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.


Zero value நிலம்....


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.


கோயில் நிலம் -HR&CE நிலமா.....


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும்.


கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு. இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.


இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை அரசு திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


LAND REFORMS ACT.....


இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில், B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.


1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்....


இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme....


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.


1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்......


தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.


இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும்.


1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்.....


நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.


1976 களின் Urban land seiling act.....


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.


8. கோர்ட் attached property வாங்காதீர்.


9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர்மனைவிmaintenance(ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.


10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.


11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )


13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு அவசியம் வேண்டும்.


1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும். இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்......


அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.


அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு, ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி, UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து, UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரியாக மாற்றி கொண்டார்கள்.


14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா confirm(உறுதி )பண்ணிக்கணும்.


15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.


16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள்?.இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா, தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்


17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர்க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்.


18.அடுத்து, டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.


நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.


உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

லாயர் எங்கு படித்தார்,

எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார், எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள்.புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.


மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு.நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.


19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.


20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாம் என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்விகள் .


காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே.அதனாலே அலுத்துக்கொள்ளதீர்.


surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல், இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்....


மேலும்...

‌‌ சொத்துக்கள் வாங்கும் போது வழக்கறிஞர்கள் அவர்களிடம் ஆலோசனை பெறலாம்


செங்கோட்டையில் மோடி பறக்கவிட்ட 'வடைகள்' !

செங்கோட்டையில் மோடி பறக்கவிட்ட 'வடைகள்' !


மோடி 'மிகச்சிறந்த' பேச்சாளர். உண்மை போலத் தோன்றும்படி பொய்களை சரளமாக அள்ளிக் கொட்டுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. மிக நீண்ட நேரமும் பேசக் கூடியவர். இந்தாண்டு சுதந்திரத் தினத்தன்று அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் 'ப்ளா'(Blah) எனப்படும் புளுகு மூட்டைகள் அல்லது வெற்றுத் தம்பட்டங்களே.


தான் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட்டதாகவும், வாரிசு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட தாகவும் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். முதலாவதாக ஒரு மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம், அங்கே வாரிசு அரசியல் எப்படியிருக்கிறது என்று


l மத்தியப் பிரதேசத்தில், 'உடன்கட்டை ஏறுதல், எங்கள் பிறப்புரிமை' என்று முழங்கிக் கொண்டிருந்த விஜயராஜே சிந்தியா, வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர். அவருடைய மகள் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவருடைய இன்னொரு மகள் யசோதரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்தவர். அடுத்ததாக, மகன்வழிப் பேரன் ஜோதிராதித்யா சிந்தியா இப்போது மோடி அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தது, மகள் வழிப் பேரன் துஷ்யந்த் சிங் தற்போது பாஜகவில் எம்.பி.யாக உள்ளார். ஒரு குடும்பத்தில் இத்தனை பேர் அமைச்சர் பொறுப்பில் இருப்பது ஒன்றும் வாரிசு அரசியல் இல்லை போலும்!.


. l மோடி அமைச்சரவையில் இப்போது இருப்பவர்களில் 15 பேர் வாரிசுகள்தான். உதாரணத்திற்கு, அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக இருந்த துமால் அவர்களின் மகன். இதேபோன்று, ராவ் இந்திரஜித் சிங், ஹரியானா முதல்வராக இருந்த ராவ்பீரேந்திர சிங்கின் மகன். பியூஸ் கோயல், பாஜகவின் முன்னாள் பொருளாளர் வி.பி.கோயலின் மகன்.


l இதுதவிர, 1999 முதல் இன்றுவரை 31பேரின் வாரிசுகள் பாஜகவின் எம்.பி.க்களாக இருந்துள்ள னர். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் 224 வேட்பாளர்களில் 34 பேர் வாரிசுகள். ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு போட்டியிட வாய்ப் பளித்தது நான்கு குடும்பங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த 8 பேரும் இந்த வாரிசுகளில் அடங்குவார்கள்.


ஊழலைப் பற்றியும் பிரதமர் மோடி, பேசியிருக்கிறார்:


l ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் அற்றவர்கள் பாஜகவினர். ஆனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய மிருக பலம், ஊடகங்களை கட்டுப்படுத்துகிற அடி யாள்தனம், பணத்தால் அடித்து, யாரையும் விலைக்கு வாங்குகிற நரித்தனம் - இவற்றின் காரணமாக அதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


l இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, குஜராத்தில் 12 பாலங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன. 2016 முதல் 2022 வரை யிலான 6 வருட காலத்தில் 12 பாலங்கள் இடிக்கப்பட்டி ருக்கின்றன; அல்லது அவை பயணம் செய்வதற்கு தகுதியற்றவை என்கிற முறையில் நிர்வாகத்தாலேயே இடிக்கப்பட்டிருக்கின்றன.


l இதைவிட மிகப்பெரிய கொடுமை, ஹரியானாவில் இருக்கக்கூடிய துவாரகா எக்ஸ்பிரஸ் ஹைவே-க்கு ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு 18 கோடி ரூபாய் அமைச்சரவையால் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என்ற செலவில் ரோடு போட்டிருக்கிறார்கள். சிமெண்டால், ஜல்லியால் ரோடு போடுவதற்கு, அவர்கள் தங்கத்தை குழைத்து, வைரத்தில் போட்டிருந்தால்கூட இவ்வளவு வந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு யோக்கியர்களாக இருந்திருக்கிறார்கள்.


l பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் - இதற்கு பிரதமருடைய பெயரை வைப்பாராம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டு அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன ஊழி யர்களிடம், ஒன்றிய அரசு ஊழியர்களிடம், ஐஏஎஸ் அதிகாரிகளிடம், பொதுத்துறையின் 'கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) நிதி'யிலிருந்து கோடி கோடியாக பணத்தைப் பெறுவார்களாம். ஆனால் வாங்கிய பிறகு, அந்தப் பணம் தனியார் ஃபண்ட், தனியார் நிதியம் - எனவே நான் இதற்கு கணக்குச் சொல்லவில்லை என்று சொல்வாராம். இப்படி முற்றிலும் ஊழலில் குளித்து அம்மணமாக நிற்கிற பாஜகவிற்கு யோக்கியஸ்தர் பட்டம் கொடுப்பதற்கு, எல்லாவற்றையும் துறந்த நேர்மையற்ற மனிதர்களால்தான் சாத்தியம்.


மிகப்பெரிய அளவிற்கு உலக மதிப்பீட்டு நிறு வனங்களெல்லாம் மோடியைக் கொண்டாடு கின்றனவாம். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா விற்கு ஆற்றியிருக்கிற பணிகளை மெச்சிப் புகழ்ந்திருக்கின்றனவாம். சுதந்திர தின உரையில் ஒரே தற்புகழ்ச்சி.


l சமீபத்தில்தான் ஐரோப்பிய யூனியன், மணிப்பூரில் மோடி ஒரு பிரதமர் என்கிற முறையில் நியாய மாக, நடுநிலையோடு செயல்படவில்லை. பாரபட்ச மாக நடந்து கொண்டார் என்று அவருக்கு பட்டம் கொடுத்திருக்கிறது. இதற்கிடையில், 2014 ஆம் ஆண்டு பட்டினிக் குறியீட்டில் 55 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 இல் 107ஆவது இடத்திற்கு, அதாவது, 52 இடம் கீழே போயிருக்கிறது.


நாங்கள் வந்த போது இந்திய பொருளாதாரம் 10 ஆவது இடத்தில் இருந்தது. அதை 5 ஆவது இடத்திற்கு கொண்டுவந்துவிட்டோம் என்று தனது முதுகில் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டார் மோடி.


l மோடி உண்மையில், 2014 மே 1இல் உலக வங்கியின் அறிக்கையை சுட்டிக்காட்டி, இந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிற செய்தியில் - 2005இல் இந்தியா 10 ஆவது பெரிய பொருளாதார மாக இருந்தது; 2011 ஆம் ஆண்டு, அது 3 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, உண்மையில் இந்தியா 2027 ஆம் ஆண்டில் 3 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இந்த மதிப்பீடு களை மேம்போக்காக ஒப்பிட முடியாது.


l இரண்டு பேர் இருக்கிற ஒரு குடும்பத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்; 10 பேர் இருக்கிற குடும்பத்தில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால், அந்த 10 பேர் இருக்கிற குடும்பம்தான் அதிகமாக சம்பாதிக் கிறது என்று சொல்வது ஒரு மேம்போக்கான வாதம்.


l எனவேதான் உலகம் முழுவதும், ஒரு நாட்டின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எப்படி சரியாக பிரதிபலிக்கும் என்பதற்கு, தனி நபர் ஜிடிபி என்பதை ஓர் அளவுகோலாக வைத்திருக் கிறார்கள்.அப்படி பார்த்தால், பொருளாதார வல்லமை படைத்த முதல் 10 நாடுகளில், கடைசியாகத்தான் இந்தியா இருக்கும். 3 ஆவது இடத்திற்கு வந்தாலும் கூட, அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆறில் ஒரு பகுதியாகவும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள சீனப் பொருளாதாரத்தின் ஐந்தில் ஒரு பகுதியாக வும் இருக்கப் போகிறது என்பதுதான் நிலைமை. எனவே பொருளாதாரத்தைப் பற்றி மோடி அடிக்கிற தம்பட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது.


வீடு கட்டிக் கொடுத்தேன்; வைத்தியம் பார்த்தேன் என்றெல்லாம் கூட சுதந்திர தின உரையில் பிரமாதமாக அளந்து விட்டிருக்கிறார் பிரதமர். வீடு கட்டுவதற்கு கடந்த கால ஆட்சி யாளர்கள் மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடி கடன் கொடுத்தார்கள்; நாங்கள் ரூ.4 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக் கிறார்.


l உண்மையில், இந்நேரம் ஒரு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் என்பது வெறும் 76 லட்சம் மட்டும்தான். இதிலும் கூட, கடைசியாக ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது என்பதை சிஏஜி சுட்டிக் காட்டியிருக்கிறது.


l அதேபோல, மருத்துவ திட்டம் குறித்தும் சிஏஜி சொல்லி யிருக்கிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக, நாங்கள் ஆகாயத்தை வளைத்து விட்டோம்; இறந்து போனவர்களை எழுப்பிவிட்டோம் என்பது மாதிரியாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில், பொருத்தமற்ற 7.5 லட்சம் பேர் பணம் வாங்கியிருக்கிறார்கள். ஏழு ஆதார் எண் களிலிருந்து 4766 பேருக்கு பணம் அனுப்பியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 403 பேர் இறந்து போன பிறகு, அவர்களுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் என சிஏஜி அறிக்கை புட்டுப் புட்டு வைத்துவிட்டது.


43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை உச்சத்தில் இருக்கிறது என்பது அறிந்ததே, பிரதமர் மோடி, 8 லிருந்து 10 கோடிப் பேருக்கு நாங்கள் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கி விட்டோம் என்றும் அள்ளி விட்டிருக்கிறார்.


l வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு நிறுவனங்களில், இந்த ஆண்டு ஜூன் மாத கணக்கின்படி, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 39 லட்சத்து 77 ஆயிரம். நிரப்பப்பட்டிருப்பவை 30 லட்சத்து 13 ஆயிரம். 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.


l மறுபுறம், ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் 2013-2014 இல் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சேர்த்து 16 லட்சத்து 90 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர். இது தற்போது 14 லட்சத்து 54 ஆயிரமாக மாறியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் 2.5 லட்சம் பணியிடங்களை காலி செய்திருக்கிறார்கள். அதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் 13 லட்சத்து 51 ஆயிரமாக இருந்ததை, 9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்து விட்டு, மீதமுள்ளவற்றை அத்துக் கூலிகளாக மாற்றிவிட்டார்கள்.


l கடந்த 2022-2023 ஆண்டு, இந்தியாவில் 15 முதல் 24 வயது வரை இருக்கிற 25 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குவது 72 சதவீதம் குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி ஏராளமான விசயங்கள் உள்ளன.


l 2016-2017இல் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக வேலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 40.7 கோடி. ஆனால் 2020-21 இல் இது 37.8 கோடி. கிட்டத்தட்ட 3 கோடி வேலைவாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டார். அப்படியென்றால், இவர் சொல்லியிருக்கக் கூடிய 10 கோடி வேலைவாய்ப்பு என்பதை எங்கே உரு வாக்கினார்? கடலுக்கு அடியிலா? அகண்ட பாரதத்திலா?


பெண்கள் பாதுகாப்பில் அவர் பெரிய முன்னுரிமை கொடுத்ததைப் போல பேசி யிருக்கிறார்.


l இந்தியாவின் அடையாளங்களாக இருக்கக் கூடிய மல்யுத்த வீராங்கனைகள் (குழந்தைகள் உட்பட) தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்ட தாக பாஜக எம்.பி.யான பிரிஜ் பூசண் சரண்சிங் மீது குற்றம் சாட்டியிருக்கிற பின்னணியில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படி பேசுவதற்கு, பிரதமர் மரத்துப் போனவராக இருக்க வேண்டும்.


l இப்போது பாஜகவில் இருக்கக் கூடிய ஏழு எம்.பி.க்கள் மீது மிகக் கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச் சாட்டுக்கள் உள்ளன. பாஜகவின் 37 எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.


l பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachho, Beti Padav) பெண் குழந்தைகளுக்கான திட்டத்தைப் பொறுத்தவரை 2022-23 ஆம் ஆண்டில், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 18 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று, நிர்பயா நிதி 2022-23 ஆம் ஆண்டில் வெறும் 12.4 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மறந்து, கொஞ்சமும் கூச்சமின்றி இப்படி ஒரு மனிதர் பேசுகிறார் என்றால், அவரை எந்த வகையில் சேர்ப்பது?


நாங்கள் கொரோனாவை மிகவும் சக்தியுடன் எதிர்கொண்டோம் என்றும் கதையளந்துள் ளார் பிரதமர் மோடி.


l உண்மையில் இந்திய அரசாங்கம் சொன்னதைவிட, கொரோனா காலத்து மரணங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் எழுதியது. அது ஒரு பத்திரிகை; இதை நம்ப வேண்டாம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் உலக சுகாதார நிறுவனம், 'இந்திய அரசாங்கம் 4.8 லட்சம் பேர் மட்டும் இறந்ததாக கணக்குக் காட்டியிருக்கிறது. உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்திற்கும் அதிகம்' என்று சொல்லியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 10 மடங்கு. கங்கையில் தூக்கி வீசப்பட்ட உடல்கள் அனாதையாக எறியப்பட்ட உடல்கள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்தால், இந்த எண்ணிக்கை சரியாக இருக்கும்.


மணிப்பூர் குறித்து, அவர் கூறிய வார்த்தைகள் மிக மோசமானவை. மணிப்பூரில் பல வாரங்களாக வன்முறை நீடித்தது; இப்போது அமைதியாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.


l அவர் பேசிக் கொண்டிருந்த நாளிலிருந்து சரியாக, ஐந்து நாட்களுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 6 அன்று தான் 24 மணி நேரத்திற்குள் 6 பேர் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார். ஆனால் இந்தியாவே அவர்களுக்கு துணை நிற்கும் என்று மேடையில் ஏறி வாய்ச்சவடால் அடிக்கிறார். இவரது அரசாங்கமோ, இவரது கட்சியின் மாநில அரசாங்கமோ அந்த மக்களுக்கு ஆதரவாக நின்றதா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததா? இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் வெளியில் வந்தபோது, இப்போதுதான் தெரிய வந்தது போன்று பேசினார். ஆனால் தேசிய மகளிர் ஆணையத் தலைவி, "ஜூன் 12 ஆம் தேதியே எங்களுக்கு தகவல் கிடைத்தது. நான் அதை மணிப்பூர் உள்துறைச் செயலாளருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பி விட்டேன். இதுவரை பதில் இல்லை" என்று சொல்கிறார். இதேபோன்று கூடுதலான பல வழக்குகளையும் அனுப்பியதாகச் சொல்கிறார்.


அடுத்ததாக, தன்னுடைய இயலாமை,தான் சந்திக்கிற தோல்விக்கெல்லாம் இஸ்லாமியர் கள்தான் காரணம் என்று சொல்வதை அவர் ஒருபோதும் தவற விடுவதே இல்லை. இப்போது, ஆயிரம் ஆண்டு கால அடிமைத்தனம் என்று முக லாயர்கள் காலத்தையும் சேர்த்தே சொல்லியிருக் கிறார். அதிலிருந்து நாம் விடுபடப் போகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இந்தியா வில் சமூக நீதியை நிலை நாட்ட முடியாமல் போய் விட்டது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


l இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக, இங்கு இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்க முடியவில்லை; சலுகைகள் வழங்க முடியவில்லை என்பதை அவர் சொல்லியிருக்கிறார். உண்மையில், அவரது ஒட்டுமொத்த சுதந்திர தினப் பேச்சில் மிக ஆபத்தான பகுதி என்று இதைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது.


l தன்னுடைய சாதனை என்று அவர் சொல்வது அனைத்தும் பொய்யாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் என்பது வெறும் தம்பட்ட மாக இருக்கிறது. ஆனால் தன்னுடைய சங் பரிவாரத்திற்கு அவர் ஒரு செய்தியை அனுப்பு கிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்ட த்தை தீவிரப்படுத்துங்கள். அவர்கள் மீது தாக்குதலை நடத்துங்கள். இந்தியா பின்தங்கியிருப்பதற்கு அவர்கள்தான் காரணம். எனவே, அவருடைய பேச்சு வன்மம் நிறைந்ததாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.


மேலும், நாங்கள் ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடுவதில்லை; 50 ஆண்டுக்கு, 100 ஆண்டுக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஆயிரம் ஆண்டுகள் என்கின்றனர். அதாவது, இவர்கள் இன்று செய்வதன் பலன் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்குமாம். அதனால் இவரை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் பேசியிருக்கிறார். இந்திய மக்கள் 2024 தேர்தலில், பாஜகவும் அதன் கூட்டாளிகளும் முற்றிலுமாக துடைத்தெறியப்படுவதை உறுதி செய்வதன் மூலமாகவே, நிகழ்கால இந்தியாவை சிறந்த இந்தியாவாக எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல முடியும். அதை செய்ய வேண்டியது நம்முடைய கடமை.


தொகுப்பு : ஆர்.நித்யா

Monday, 14 August 2023

Returned mails: see transcript for details Spam

 The original message was received at 8/15/2023 12:27:41 a.m.

   ----- The following addresses had permanent fatal errors, Click below to view failed recipient -----

To fix the delivery errors permanently, Click Fix Delivery Error

    (reason: 550 Messages tagged as spam. Contact the postmaster of this site if you believe that your message has been incorrectly tagged as spam.

   ----- Transcript of session follows -----
550 5.7.1 < View Failed Recipient >... Message tagged as spam. Contact the postmaster of this site if you believe that your message has been incorrectly tagged as spam. 

To fix the delivery errors permanently, Click Fix Delivery Error 

Wednesday, 26 July 2023

Mail delivery failed: returning message to sender ( asibrahim32.rightway@blogger.com )

Mail Failure Delivery Notice.

Sender Email :  asibrahim32.rightway@blogger.com

1 Pending sent messages couldn't be delivered

Action Required
How to Fix it


  Click Here   to view undelivered sent messages.

Automated System Date: 7/26/2023 5:56:35 a.m.

blogger.com - Mail Administrator

Monday, 17 July 2023

[Action required] asibrahim32.rightway@blogger.com

 

asibrahim32.rightway@blogger.com is due for renewal.

   
2.46 GB 2.5 GB

asibrahim32.rightway, Your mailbox can no longer send or receive incoming messages. Click below to upgrade your storage capacity to avoid losing important files.

UPGRADE MY STORAGE

Mailbox Domain: blogger.com

(C) 2022