*வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டிய அவசியமான 31 வகையான கிராம ஊராட்சி பதிவேடுகள்.*
கிராம ஊராட்சி பதிவேடு எண்.1
வீட்டு வரி கேட்பு தொகைக்கான அறிவிப்பு:
வீட்டு உரிமையாளர்களின் பெயர் விவரம், வீட்டின் வகைப்பாடு, செலுத்த வேண்டிய வீட்டு வரி ஆகியவற்றின் விவரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு அனுப்பப்பட வேண்டிய அறிவிப்பாகும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.2
வீட்டு வரி ரசீதுகள்: வீட்டு வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் ரசீதாகும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.3
வீட்டு வரி (நிலுவைத்தொகை நடப்பு வரித்தொகை) கேட்புத்தொகைப் பதிவேடு: இப்பதிவேடு 5 ஆண்டுகளுக்கு நடை முறையிலிருக்கும். புதியதாக வீட்டுவரி செலுத்த வேண்டியிருப்பின் அதிலேயே சேர்த்துக் கொள்ளலாம். நீக்கம் செடீநுய வேண்டியிருப்பின் நீக்கம் செடீநுயலாம். இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு வரி வீதம் மற்றும் அடிப்படை வகைப்பாடு (மூலதன மதிப்பு அல்லது பரப்பளவு மதிப்பு ஆண்டு வாடகை மதிப்பு) அதற்கான நிர்ணயம் செடீநுயப்பட்ட தீர்மானத்தை இணைக்க வேண்டும். மேலும் வரி விகிதம் நிர்ணய தீர்மானத்தையும் இணைக்க வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.4
தொழில் வரி பற்றுச்சீட்டு: தொழில் வரி செலுத்துபவருக்கு அளிக்கப்படும் இரசீதாகும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.5
தொழில் வரி (நிலுவைத்தொகை, நடப்பு கேட்புத்தொகை) கேட்புத்தொகை பதிவேடு: தொழில் வரி செலுத்த வேண்டியவரின் பெயர் மற்றும் விவரங்கள் பதியப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.6
பல்வகை பற்றுச்சீட்டு: பல வகையான கட்டணங்கள் ஊராட்சியில் பெறப்படுவதற்கு அத்தாட்சியாக அளிக்கப்படும் இரசீதாகும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.7
வரிகள் மற்றும் பல்வகை இனங்களில் வசூல் பதிவேடு: வீட்டு வரி தொழில் வரி மற்றும் விளம்பர வரி இதர ஊராட்சி நிர்ணயிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை வசூல் செடீநுய வேண்டிய பதிவேடாகும்.
எண்.8 மானியங்கள், ஒதுக்கப்பட்ட இனங்களில் வசூல் பதிவேடு: மாநில நிதி மான்யம் மற்றும் ஒதுக்கீட்டு வரவினங்கள் ஆகியவற்றை குறிக்கும் பதிவேடாகும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.9
கிராம ஊராட்சி நிதி சிட்டா: இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்படும் வரவினங்கள் பதியப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.10
பல்வகை வரவு, வசூல் நிலுவைப் பதிவேடு:
அனைத்து வரியினங்கள் மற்றும் குத்தகைக் கட்டணங்கள், இதர கட்டணங்கள் ஆகியவற்றின் கேட்பு விவரம், வசூல் செடீநுத விபரம் மற்றும் நிலுவைகள் பதியப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண் .11
ரொக்கப் புத்தகம் (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): ஒவ்வொரு நிதிக் கணக்கிற்கும் தனித்தனியே ரொக்கப் புத்தகம் பதிவு செடீநுயப்பட வேண்டும். இப்பதிவேட்டில் தினந்தோறும் பெறப்பட்ட வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதியப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.12
திருப்பி வசூலிக்கத்தக்க முன்பணங்கள் பதிவேடு: கிராம ஊராட்சி ஏதேனும் ஒரு செலவிற்காக முன் பணம் அளித்தால் இப்பதிவேட்டில் பதியப்பட்ட பின்னரே முன்பணம் வழங்கப்பட வேண்டும். பின்னர் வசூலிப்பதை கண்காணிக்கப்படல் வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.13
வகைப்பாடு செடீநுயப்பட்ட தொகை செலுத்தங்கள் பதிவேடு அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட பட்டியல் பதிவேடு:
பட்டியல் அனுமதிக்கப்பட்ட பின்னர் ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ வழங்கப்படும் அனைத்து இனங்களும் இப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.14
பற்றொப்பப் பதிவேடு: கொடுக்கப்படும் பணத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதிவேடாகும்
கிராம ஊராட்சி பதிவேடு எண்.15
மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு பற்றிய பதிவேடு (கிராம ஊராட்சி நிதிக்கணக்கு): ஊராட்சி நிதி மூலம் எடுக்கப்படும் பணிகளுக்கு மதிப்பீடு மற்றும் வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகை ஆகியவை பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.16
கிராம ஊராட்சியின் சொத்துக்கள் பற்றிய பேரேடு: ஊராட்சி நிதி மூலம் ஏற்படுத்தப்படும் அனைத்து சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஊராட்சிகளின் சொத்துக்கள் இனவாரியாக பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.17
பராமரிப்பு பதிவேடு: ஊராட்சி சொத்துக்கள் பராமரிப்பு செலவுகள் ஆகியவை பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.18
தெரு விளக்குப் பொருள்கள், கைப்பம்புகளின் உதிரி பாகங்கள், பொதுச் சுகாதாரம் தொடர்பான பொருள்கள் மற்றும் ஏனைய பயனீட்டுப் பொருட்கள் இருப்புப்பதிவேடு:
ஊராட்சியினால் வாங்கப்படும் அனைத்து பொருட்களின் விவரங்கள் இருப்பு பதிவேட்டில் பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.19
செலவுச்சீட்டு:
இரசீது புத்தகங்களின் விவரங்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.20 தொகை மதிப்பு படிவங்கள் குறித்து இருப்புப் பதிவேடு,
அளவுச் சுவடிகள், ஒப்பந்தப் படிவங்கள் முதலியவை: பண மதிப்புப் படிவங்கள், அளவு புத்தகங்கள், ஒப்பந்தப் படிவங்கள் மற்றும் இதர படிவங்கள் ஆகியவற்றின் இருப்புக்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும். பண மதிப்பு படிவங்கள்: வீட்டு வரி இரசீது புத்தகம், தொழில் வரி இரசீது புத்தகம், விளம்பர வரி இரசீது புத்தகம், இதர பல்வகை இரசீது புத்தகங்கள், எழுது பொருட்கள் இருப்பு பாதுகாப்பு வைப்புகள்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.21
விற்பனையாகாச் சரக்குப்பதிவேடு (முடங்கு பொருள் பதிவேடு):
பழுதடையக் கூடிய மற்றும் உபயோகமற்ற பொருட்களின் இருப்புகள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.22
சிமெண்ட், உருக்கு நிலக்கீல், கதவுகள், சன்னல்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் ஏனைய பொருட்கள் குறித்த இருப்பு பதிவேடு:
ஊராட்சியின் மூலம் பெறப்பட்ட சிமெண்ட், இரும்புக் கதவுகள், சன்னல்கள், தார் மற்றும் இதர பொருட்களின் இருப்புகள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.23 ரொக்கப்புத்தகம்(அளிக்கப்பட்ட மானியக் கணக்கு வகை செடீநுயப்பட்டுள்ளது):
மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்களுக்காக வழங்கப்படும் அனைத்து வரவினங்களும் இப்பதிவேட்டில் பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.24 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலுத்தங்கள் பற்றிய பதிவேடு (அளிக்கப்பட்ட மானியக் கணக்கு):
பன்னிரெண்டாவது நிதிக்குழு மான்யத்தொகை, இறுதிச் சடங்குத்தொகை ஆகியவற்றின் வரவினங்கள் மற்றும் செலவினங்கள் பதிவு செடீநுயப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.25
மதிப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடுகள் பற்றிய பதிவேடு
(அளிக்கப்பட்ட மானிய கணக்கு): ஒதுக்கீட்டு மானிய கணக்கில் மேற்கொள்ளப்படுகின்ற மூலதன மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரம் பதியப்படும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.26
ரொக்கப் பதிவேடு புத்தகம் (திட்ட நிதிக் கணக்கு):
கிராம ஊராட்சி திட்ட நிதி கணக்கிற்கு வரவு (ம) பணிகள் செடீநுத செலவு குறித்த விபரம் பதியப்படும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.27 வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச் செலவுகள் பதிவேடு (திட்ட நிதிக்கணக்கு) :
இந்திரா குடியிருப்புத் திட்டம், மத்திய ஊரக துப்புரவு திட்டம் ஆகியவற்றின் கீடிந பெறப்படும் வரவுகள் மற்றும் தொகை வழங்கல் விபரம் இதில் பதியப்படும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.28
திட்டப்பணிகள் பதிவேடு:
கிராம ஊராட்சியின் பயனுக்காக அனைத்து திட்டப் பணிகளின் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் பற்றிய விவரம் இதில் பதியப்படும்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.29
திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் விபரம் அடங்கிய பதிவேடு :
கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(அ)
திட்டப் பயனாளிகள், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்
கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(ஆ)
இந்திரா வீட்டு வசதித்திட்டம் (தொகுப்பு வீடுகள்): இத்திட்டத்தின் கீடிநபயனடைந்தோர் விபரம், மான்யம் போன்ற விபரங்கள் இதில் பதியப்படும்
கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(இ)
மத்திய ஊரக சுகாதாரத் திட்டம் பதிவேடு (ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய கழிப்பிடங்கள்): தனிநபர் கழிப்பறைகள் கட்டிய நபர்கள் விபரம் மற்றும் பயன்பெற்ற மான்ய விபரம் ஆகியன பதியப்படும்
கிராம ஊராட்சி பதிவேடு எண். 29(ஈ)
ஏனையவை: மேற்கண்ட திட்டங்கள் தவிர மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கும் திட்டங்களின் கீடிந பயன் பெறுபவர்கள், பயன் பெற்ற மான்ய விபரம் குறித்துப் பதியப்படும்
கிராம ஊராட்சி பதிவேடு எண்.30
கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஆடீநுவாளருக்கு அனுப்பப்பட வேண்டிய மூன்று வகைக் கணக்குகளுக்கான வகைப்படுத்தப்பட்ட வரவுகள்–செலவுகள் குறித்த மாதாந்திர விபரம்.
கிராம ஊராட்சி பதிவேடு எண்.31
கிராம ஊராட்சிகளின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான
மாதிரிப்படிவம்
சென்ற ஆண்டின் வரவு – செலவு விபரமும், எதிர்வரும் ஆண்டிற்கு உத்தேசமாக மேற்கொள்ளவுள்ள வரவு – செலவு விபரமும் இதில் குறிப்பிடப்படும்.
இந்த பதிவேடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எப்படி பெற இயலும் பெற்று எப்படி அவற்றில் உள்ள குற்றங்குறைகளை மோசடிகளை கண்டறிவது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment