இஸ்லாமிய இயக்கங்களை/கட்சிகளை குறை கூறி புறம் பேசி திரிபவர்களுக்கு.....
வாட்ஸ் அப் மூலம் வந்தது..!
சிறப்பு வாய்ந்த பதிவு...!
சில மாற்றங்களுடன் பகிர்கிறேன்....
மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் திறன் கொண்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான பதில்கள்.!!
முதலில் இயக்கங்களை குறை சொல்லும் முன்பாக நாம் இஸ்லாமிய சமூகத்திற்கு செய்த பணிகள் என்ன.? என்று உங்கள் உள்ளத்தை கேட்டுப்பாருங்கள்...
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஊர்களில் அதிமுக திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலம் பெற்றிருக்கிறார்கள். ஜமாஅத்தின நிர்வாகிகள் அக்கட்சியில் நிர்வாகிகளாக செயல்படுகிறார்கள்
அதே பகுதியில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கங்களுடனும் கட்சிகளுடனும் ஜமாத்தார்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.
அவர்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இரத்தம் தேவைப்பட்டால் கொரானா இறப்பு, ஜனாஸா அடக்கம் செய்ய, காதல் வலையில் பெண்கள் யாரும் ஓடிவிட்டால் அதை மீட்டெடுக்க, ஜமாத் பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்துக்குச் செல்வதற்கு, இஸ்லாமியர்களை யாராவது தாக்கிவிட்டால் அதற்காக களம் காணுதல்,, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நம் பிள்ளைகளை அழைத்து வருவதற்கு, சிறைவாசிகளின் விடுதலைக்காக போராடுவதற்கும், அரசாங்கம் தரக்கூடிய இலவசத் திட்டங்களை பெற்றுத் தருவதற்கு, அரசு வேலைகளில் சேர்வதற்கு, தேர்வு முகாம் வழிகாட்டி மையங்கள் அமைத்து தருவது, சமூகத்தில் பின்தங்கிய நபர்களுக்கு பொருளாதாரத் தேவைக்கு, இயற்கை பேரிடர் நிகழும்போது, பெருவெள்ளம் புயல் காலங்களிலும் உயிரை அடகு வைத்து மீட்பு பணிக்கும், நோய்க் காலங்களில் மருத்துவ முகாம் நடத்துவதற்கும், நம் சமூகம் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு களத்தில் போராடுவதற்கும், சிறை செல்வதற்கும், வழக்குகள் வாங்குவதற்கும், ஏன் உயிர் இழப்புகளை சந்திப்பதற்கும் இஸ்லாமிய இயக்கங்கள் நாங்கள் தேவை எங்களை அழைப்பீர்கள். உங்கள் பிரச்சினைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகளின் தேவை..
தேவைகள் முடிந்த உடன் குறைசொல்ல கிளம்பி விடுவது . இவைகள் எந்த வகையில் நியாயம்..?
இன்றைக்கு R.S.S சங்க்பரிவார பாசிச அமைப்புகள் தங்கள் நடத்தக்கூடிய அத்தனை நிகழ்ச்சிகளையும் அவர்கள் பகுதியிலுள்ள கோயில்களில் நடத்துகிறார்கள். முழு ஒத்துழைப்பையும் கோவில் நிர்வாகிகள் அவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
ஆனால் என்றைக்காவது இஸ்லாமிய இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் பள்ளிவாசல் இடம் அளித்தது உண்டா? ஜும்மா பயான் களில் அறிவிப்பு செய்வதற்கு பயம். சமுதாய பணிகளுக்கு பக்கபலமாக ஆதரவாக இருந்து உள்ளார்களா?
கொரானா நோயால் இறந்த மக்களை நல்லடக்கம் செய்த இஸ்லாமிய அமைப்பு, கட்சிகளை எந்த ஜமாத்திலாவது எந்த நடுநிலைவாதிகளாவது தங்கள் ஊரில் கௌரவித்துள்ளீர்களா? பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளீர்களா? அல்லது சேவைகளை பாராட்டி உள்ளார்களா? நடுநிலைவாதிகள் இதை எங்காவது பேசியது உண்டா?
அல்லாஹ்வின் தூதரைப் பற்றி இழிவான செய்திகளும் படங்களும் வந்த போது 25 வருட காலமாக தமிழ் சினிமாக்களில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தியும் தீவிரவாதிகள் என்று காட்டக்கூடிய காட்சிகள் வந்தபோதும், 92ல் பாபர் மசூதி இடித்த பொழுதும், 2002 குஜராத் கலவரம் நடந்த போது நடுநிலைவாதிகள் என்ன செய்தீர்கள்?
மாட்டின் பெயரால் நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை அடித்தும் ஏரித்தும் கொன்றார்கள். தாங்கள் பார்வையாளராக மட்டும் இருந்தீர்கள்
காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்க தாங்கள் என்ன செய்தீர்கள்?
டெல்லியில் CAA போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தி 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலை செய்யப்பட்டதை கண்டித்து தாங்கள் என்ன செய்தீர்கள்? எதிர்ப்பு கண்டனத்தை பதிவு செய்தீர்களா? பிந்தைய காலங்களில் தங்கள் ஊரின் சார்பாக நடுநிலைவாதிகள் நீதிக்காக ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி உள்ளீர்களா?
ஏன் ஒரு போஸ்டர் ஒட்டி இருப்பீர்களா? அவ்வாறு செய்தால் வழக்கு வரும் சிறை செல்ல வேண்டுமென்று பயமா? இல்லை ஊருக்கு என்று நாலு பேரை நேந்து விட்டிருப்பார்கள் கட்சிக்காரன், இயக்கத்துக்காரன் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று என்னமா? ஏன் இயக்கவாதிகளுக்கு மட்டும் சமுதாய அக்கறை வேண்டும? ஏன் அவர்களுக்கு தான் தலையெழுத்தா? நடுநிலை வாதிகளுக்கு தேவை இல்லையா?
இயக்க வாதிகளுக்கு மனைவி பிள்ளை குடும்பமும் தொழில்கள் கல்வி படிப்பு இல்லையா? அவர்கள் என்ன நாடோடிகள் என்று உங்களுக்கு எண்ணமா...?
இன்று சங்பரிவார்கள் ஆர் எஸ் எஸ் பிஜேபி தலைவர்கள் செய்யக்கூடிய அத்தனை சமூக விரோத செயல்களுக்கும் அவர்களுக்கு அந்த சமூகம் பாதுகாப்பாகவும் பக்கபலமாக இருக்கிறார்கள்
நீங்கள் இஸ்லாமிய கட்சி அமைப்பின் தலைவர்கள் செய்த சமுதாய நன்மையான பணிகளுக்கு உழைத்த தலைவர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் போது அவர்களுக்கு நீங்கள் என்ன உதவிகள் செய்தீர்கள்.?
சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் இந்தியாவிற்குள் நுழைய தடை என்று பஜக அரசு சொன்னபொழுது நடுநிலைவாதிகள் என்ன செய்தீர்கள்.?
சமூகத்திற்காக உயிர் நீத்த அல்ஹாஜ் ஷஹீத் பழனி பாபா அவர்களை ஜமாத்தார்கள் நடுநிலைவாதிகள் எவ்வாறு அவரை உதாசீனப்படுத்தினீர்கள்? இறந்த தினத்தில் கூட நினைவஞ்சலி நிகழ்ச்சிகள், ஏன் ஒரு போஸ்டர் ஒட்டியது உண்டா.?
சமுதாய பணிகளை ஜமாத்தார்கள் நடுநிலைவாதிகள் செய்யாத விளைவே இன்றைக்கு இஸ்லாமிய அமைப்பு கட்சிகள் சமுதாய பணிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறார்கள்
இஸ்லாமிய கட்சிகளின், அமைப்புகளின் பிரிவை நான் ஆதரிக்கவில்லை. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டி நாம் கோரிக்கை வைக்கலாம். அதுவல்லாமல் உலகமகா குற்றவாளிகள் போன்று கட்சிகளையும் அமைப்புகளையும் களங்கப்படுத்த வேண்டாம். எந்த இயக்கம் தவறு செய்கிறதோ அந்த இயக்கத்தை மட்டும் சுட்டிக்காட்டுங்கள். எல்லா அமைப்பையும் குறை சொல்லாதீர்கள். அதேநேரத்தில் சமுதாய கட்சிகள் அமைப்புகளிடம் மட்டுமே பிளவுகள் இருப்பதுபோன்று சுட்டிக் காட்டாதீர்கள்.
ஜமாத்தில் ஊர் நிர்வாகத்தில் பிரிவுகள் இல்லையா? ஒரே குடும்பத்தில் பிளவுகள் சண்டை சச்சரவுகள் சொத்து தகராறு நடப்பதில்லையா? நாம் வசிக்கும் தெருவில் எத்தனை முன்விரோதம்? ஜென்ம பகைகள் குரோதம் இருக்கின்றன.
இஸ்லாமிய இயக்கங்களிடம் ஒற்றுமை இருக்கு இல்லை என்பது இருக்கட்டும். தாங்கள் இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் நடத்தும் பத்திரிக்கைகளை வாங்கி நாம் பத்திரிகைத்துறையில் வளர்வதற்கு உதவி செய்தோமா? நமக்கு எதிராக செய்திகள் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கும் ஆர்வம் ஏன் சமுதாய பத்திரிக்கை வளர்வது பற்றி மட்டும் அக்கறை இல்லையா?
பிற கல்லூரிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கும் நாம் இஸ்லாமியர் நடத்தும் பள்ளி கல்லூரியில் நம் பிள்ளைகளை சேர்ப்பதற்கும் இஸ்லாமிய சமூக மக்கள் வைத்திருக்கும் நிறுவனத்தில் பொருட்களை வாங்குகிறோமோ என்று சிந்தியுங்கள்?
அதேபோல் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் தங்களின் தேவைக்காக கொடி பிடிக்கவில்லை. சமூகப் பிரச்சினைக்காக, சமுதாய தேவைக்காக கொடி பிடிக்கிறார்கள். அந்த போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். அவர்கள் செய்யும் உழைப்பையும் தியாகத்தையும் விமர்சனமும் கேலியும் செய்யாதீர்கள்.
அமைப்புகள் கட்சிகள் இப்போது கொரானா காலகட்டத்தில் தப்லிக் ஜமாத் கைது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றதும், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த காட்சிகளை நீக்கம் செய்ய நாம் செய்த போராட்டமும், அதன் வெற்றியும் தற்போது முகநூலில் ஆர்எஸ்எஸ் பிஜேபி நபர்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாத்தையும் தவறாக ஆபாசமாக விமர்சனம் பதிவு செய்தவர்களை புகார் செய்து சிறையில் தள்ளிய வெற்றியும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகளின் பணிகள் என்பதை மறந்து விடாதீர்கள்
அதேபோல் முஸ்லிம்கள் கட்சிகள் இயக்க பிரிவுகள் என்பது இந்த காலத்தில் மட்டும் உள்ளதுபோல் எண்ணாதீர்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யம் வீழ்ந்தது எதிரிகளால் மட்டுமல்ல. நயவஞ்சகத்தாலும் உண்டு.
எல்லா காலகட்டத்திலும் நயவஞ்சகர்கள் கூட்டமும் உண்டு. ஏன் அல்லாஹ்வின் தூதரின் காலகட்டத்திலும் நயவஞ்சகர்கள் உண்டு. அவ்வாறு இருக்க இப்போது இருப்பது ஆச்சரியமில்லை. பதவி மோகத்தாலும் ,தன்னைத் தவிர வேறு எவரும் இயக்க தலைமைக்கு வந்து விடக்கூடாது என்கின்ற ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட சில பேர் பிளவுகளை ஏற்படுத்தும் தவறு செய்கிறார்கள் அதை நாம் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் இதுபோன்ற குள்ள நரிகளும் குற்றவாளிகளும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது வரலாற்றில் பல இடங்களில் நாம் பார்த்துள்ளோம்.
மேலும் மற்றவர்களின் நன்மை தீமை பற்றி தாங்கள் எடை போடாதீர்கள். தங்களின் செயலைப் பற்றியும் தங்களின் குடும்பத்தார்கள் மனைவி பிள்ளைகளின் நன்மை தீமை பற்றியும் தாங்கள் சிந்திப்பதே கால சிறந்தது
ஆகையால் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகளின் பிளவுகள் சமூகத்திற்கு பின்னடைவு அல்லது பெரும் இழப்பு அல்ல.! காலப்போக்கில் அவர்களையும் அந்த அமைபையும் சமூகம் அங்கீகரிக்காது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்
இயக்கங்கள் இத்தனையும் இருந்து இந்த நிலை என்றால்.....
இயக்கங்கள் இல்லை என்றால் பிணம் தின்னும் கழுகுகள் போல் உங்களை எதிரிகள் வேட்டையாடி இருப்பார்கள்.
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் வலைதளத்தில் வீரம் காட்டாமல் தங்களின் நேரம் செல்வம் உடல் உழைப்பு அறிவு ஆகியவற்றை சமூகத்திற்கு தந்து சமூகத்தை பலப்படுத்த தாங்கள் இணைந்து சமூக பணி செய்திட ஒற்றுமையாக செயல்பட்டு பாசிசத்தை வீழ்த்தி வெற்றி பெறுவோம் சமூகம் முன்னேற்றம் அடைய இறைவன் நல்லருள் புரிவானாக .!
--
Thanks & Regards