Wednesday, 23 September 2020

மரணஅறிவிப்பு

மரணஅறிவிப்பு...

இன்ஷா அல்லாஹ்.


மனைவி படிக்க மறுக்கும் வரிகள்.

மற்றவர் படிக்க வேண்டிய வரிகள்.


அந்த நாள்

ஐம்புலன்களும் ஒடுங்கி..

ஜனாஸா நிலையில், நான் இறையடி சேர்ந்தவனாய்.


அந்த கணம் எப்படி இருந்தால், நன்றாக இருக்கும், என ஒரு சிறு சிந்தனை.

இவை நடந்தால், நான் நல்லவன் என்று உறுதியாக சொல்ல முடியாது,

ஆனாலும் ஓர் நப்பாசை.


ஒரு நல்ல தந்தையை இழந்த நிலையில் குழந்தைகள்..

நல்ல நினைவுகளோடு என் மனைவி.

சிறந்த நண்பனை பிரிந்தவர்களாக, என் நண்பர்கள்.

நன்றியோடு அண்டை வீட்டுக்காரன்

நல்ல பணியாளை இழந்த ஊழியர்கள்.

நல்ல முதலாளியை இழந்த தொழிலாளிகள்.

நான் கற்பித்த கல்வியோடு.. சுற்றும் பல மாணவர்கள்.

உண்மை துஆக்களோடு பல உறவுகள்

ஜனாஸாவில் எதிர்பார்த்திராத கூட்டம்.

மொத்தத்தில் எனைப்பற்றி கசப்பான அனுபவத்தை பேசாத மனிதர்கள்.


உலக மார்க்க கல்வியோடு மகன் மகள்கள்.

பொதுப் பணியோடு குடும்பம் பேணும் மனைவி.

பெற்றோரின் துஆவில் என்றும் நான்.

நல்ல தகவல்களோடு மிளிரும் எனது Website.

அழகிய போஸ்ட்களோடு என் facebook பக்கம்.

நல்ல வீடியோக்களோடு எனது youtube சேனல்.

நான் எழுதிய நல்ல புத்தகங்கள் உங்கள் வீடுகளில்.

மொத்தத்தில் அனைத்தும் நான் விட்டுச் சென்ற நிரந்தர கல்வியாக.


எந்த வங்கியிலும் லோன் இல்லை.

எந்த நபருக்கும் கடன் இல்லை.

என் பேர்ஸில் எந்த credit card உம் இல்லை.

பெரிய சொத்துக்கள் இல்லை.

குழந்தைகளிடம் சொத்தாசையும் சொத்து சண்டையும் இல்லை.

ஆனாலும் என் குடும்பம் யாரையும் தங்காது

இருக்க நிலையான வருமானம்.

அமானிதங்கள் கையில் இல்லை.

நிறைவேற்றாத எந்த வாக்குறுதியும் இல்லை.

நிலையான தர்மத்தில் என் கண்ணுக்குப் பிறகும் சந்தோஷப்படும் சில நல்லுள்ளங்கள்.

என்னால் இனிய மார்க்கத்தில் நுழைந்த குறைந்தது ஒரே ஒரு நபர்.


அன்றைய நாளில்...

எல்லா ஜமாத்தையும் பேணி இருக்க வேண்டும்.

குர்ஆனின் சில வரிகளை ஓதி இருக்க வேண்டும்.

தர்மம் செய்திருக்க வேண்டும்.

துஆ கேட்டிருக்க வேண்டும்.

அந்த இறுதி கணம் வரை, என் வேளையை நானே கவனித்து ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் கடமையையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


இறுதி கணம்..

அழுகையின் நடுவேயும் மன தைரியம் உடையவராக என் மனைவி மக்கள்.

ஆண்களும், பெண் மஹ்ரமிகளும் மட்டுமே பார்க்கும் என் ஜனஸா..

என்னை குளிப்பாட்டுவதும் என் உறவு.

எனக்காக தொழுகை நடத்துவதும் என் நெறுங்கிய உறவு.

நல்ல நறுமணத்தொடு

யாருக்காகவும் காத்திராமல்

சூட்டோடு வேகமாக எடுக்கப்படும் என் ஜனாஸா.

இறந்த ஊரிலேயே அடக்கம்.

பித்அத்துக்கு இடமில்லை.

கத்தம் சாப்பாடும் இல்லை.

சுன்னாஹ்வுக்கே முக்கியத்துவம்..

ஒப்பாரிகள் இல்லை.

அமைதியான சூழல்.

ஒரு கணம், முழு உள்ளத்தோடு எனக்காக இறைஞ்சும் உள்ளங்கள்.


மரணத்தின் பின்னும் நாம் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளது என கூறும் படியான வாழ்க்கை.


நப்பாசைதான்.... துஆ செய்யுங்கள்.

இன்ஷா அல்லாஹ், அவன் நாடினால் எதுவும் நடக்கும்...,



No comments:

Post a Comment