Wednesday 23 September 2020

பாஜக உள்ள வந்துரும் ப்ரோ

https://www.facebook.com/100004562077325/posts/1566339686861419/


#பாஜக உள்ள வந்துரும் ப்ரோ.....


அதிகமா இணையத்துல போன தேர்தலப்போ கேட்ட வார்த்தை இது....

ஆனா இங்க ஒரு வருஷத்துல....


வீட்டு பக்கத்துல 10 நாள் முன்னாடி வரை வெறும் கொடிக்கம்பமா இருந்ததுல இன்னிக்கு பாஜக கொடி பறக்குது....


சென்னைல ஏகப்பட்ட இடங்கள்ல இதுவரை பாக்காதளவு சுவர் விளம்பரங்கள்.... பாஜகவை விளம்பரப்படுத்தி....


பெரும்பாலான மெட்ரோ ரயில்வே தூண்கள் முழுக்க பாஜக சுவரொட்டிகள்....


சேரிக்குள்ள போகுறதுக்கு அதிகாரப்பகிர்வு வேணும்ன்னு ஒரு ப்ளான்.... ஜாதித்தெருக்குள்ள போக ஆண்டைப்பெருமை பேசிட்டு இன்னொரு ப்ளான்....


பார் கவுன்சில்ல அத்தனை பேரை வளைச்சி பிடிச்சிருக்கு.... ஏற்கனவே IAS மாதிரி தேர்வுகள்ல 60-70% RSS பின்புலத்தோட செலக்ட் ஆகிருக்காங்க.... இப்போ காவலர் தேர்வுலயும் அதே மாதிரி உள்ள நுழைக்க அத்தனை வேலைகள் நடக்குது.... குடுமி மன்றத்துல சொல்லவே தேவையில்ல... எல்லாமே அவங்க ஆளுங்க தான்....


பாஜகவில் சேர வந்த ரவுடிகள் தப்பியோட்டம்ன்னு வர்ற நியூஸ்லாம் பாக்றோம்.... சேர்ந்துக்கிட்ட ரவுடிங்க எண்ணிக்கை ரொம்பவே அதிகம்....


இதுவரை திறக்கப்படாத கோவில்கள்ல கூட கண்ட கண்ட பேர்ல யாகம் பூஜைன்னு ஆளை சேர்த்து பாஜக இந்துக்களுக்கான கட்சின்னு நிறுவிட்டு இருக்கு....


இன்னொரு பக்கம் 16-24 வயசு பசங்க கிட்ட அதிகப்படியான ஜாதி உணர்வை வாட்சப் பேஸ்புக்ன்னு முடிஞ்சவரை தினசரி அவ்ளோ விஷயங்கள் மூலமா பரப்புது....


100 பேர்க்கு தெருவுல தெரிஞ்ச ஆளா இருந்தாலும் காரும் தந்து டீசல் காசும் தரேன்... அப்பப்போ இதை பேசுன்னு ஆள் சேக்குது...


பாஜகவை எதிர்த்து பேசுற பல மீம் பேஜ்கள் ரிப்போர்ட் ஆகி ஒரு காலத்துல 1 மில்லியன் ரீச் இருந்தது இன்னிக்கு 100 ஷேர்க்கு முக்குது.... ஒரிஜினல் ஐடில பேசுறவங்க இன்பாக்ஸ்ல மிரட்டல்கள் குவியுது....


கார்த்திகை செல்வன் ஹசீப் குணசேகரன் மாதிரியான மக்கள் பிரச்சினைகளை பேசுற ஊடகவியலாளர்கள் கழுத்து நெறிக்கப்படுவதும் எல்லா ஊடகங்களிலும் பாஜக சார்பு செய்திகளே அதிகமா வர்றதும் ரீசன்ட் டைம்ல நிறைய நடக்குது...


கிடைக்கிற மேடைகள்ல பாஜகவை சூசகமா சீண்டுன விஜய் சேதுபதி 'ஓம்' ன்னு டிபி வைக்கிறாரு..... விஜய் மாதிரி ஆளுங்க எதுக்குடா வம்புன்னு அடக்கி வாசிக்க தொடங்குறாங்க... பேச ஆரம்பிச்ச சூர்யாவுக்கும் சரியான இடதுசாரி ஆதரவு இல்லாததால அரசுக்கு ஆதரவா இருக்க மாதிரி காட்டிக்க தொடங்கிக்கிறாரு....


எல்லா சீரியல்லயும் முன்ன இல்லாதளவு சாமிக்குத்தம் தெய்வவாக்குன்னு அவ்ளோ மோசமா இந்துத்துவ கருத்துக்கள் திணிக்கப்படுது....


குமுதம் ஆனந்தவிகடன்னு பல வாரப்பத்திரிக்கைகளும் தன்னோட சங்கி முகத்தை நல்லா காட்ட தொடங்கிருக்கு... நக்கீரன் மாதிரி பத்திரிக்கைகளும் மன்னிப்பு நோட்டீஸ்லாம் விடுது( ஆளுநர் விஷயத்துல)


சுத்தி நல்லா பாருங்க.... இங்க பாஜக முழுசா எல்லா பக்கமும் வந்தாச்சி.... முழுசா எதிர்க்கிறவங்களையும் தன்வசப்படுத்த அதிகாரம், பணம், பதவின்னு எதையாது கொடுத்து ஈர்க்குது.... இன்னொரு பக்கம் இருக்க நட்பு சக்திகளையும் சந்தேகப்படுறதும் எதிரி கூடாரத்துக்கும் தள்ளுற வேலையும் நடக்குது...


2000 வருஷத்துக்கு மேல வேரூன்றுன மரத்தை வெட்ட ஒரே ஒரு கோடாரி பத்தாது... எல்லா பக்கமும் வெட்டாமல் ஒழிய மரத்தை சாய்க்க முடியாது... புத்திசாலியா இருந்தா என் கோடாரியை மட்டுந்தான் வச்சி வெட்டணும்ன்னு சொல்ல மாட்டான்... ஊருக்கே கோடாரி கொடுக்க நினைப்பான்... இல்ல கோடாரி பிடிச்சிட்டு வர்றவங்களுக்கு தானும் சக ஆள்ன்னு காட்டிப்பான்...


இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்ல.... ஆனா இனியும் பாஜக உள்ள வந்துரும்ன்னு சொல்ல முடியாது.... அது அல்ரெடி உள்ள வந்தாச்சி.... இன்னிக்கு இல்லன்னாலும் 10 வருஷத்துல அது பண்ண வேலைக்கான அறுவடையை எடுக்கும்... அது உறுதி....

No comments:

Post a Comment