உபியில் பள்ளி மாணவர்கள் சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளரை யோகி சிறையில் அடைத்தார்.
*
மோடியின் தொகுதியான வாரணாசியில், பசி தாங்காமல் புல்லைப் பறித்து உண்ட தலித் குழந்தைகளைப் பற்றி கட்டுரை எழுதிய எழுத்தாளரையும் யோகி சிறையில் அடைத்தார்.
*
ஆக்சிஜன் கொடுத்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய, #டாக்டர்_கஃபில்கான் யோகியால் பட்ட பாட்டை நாடறியும்.
*
இது, பாஜக என்ற நாறும் சாக்கடையின் ஒரு துளி தான்.
*
இந்த அட்டூழியத்தை எல்லாம் பார்த்ததால், மோடியால் எளிதாக தேர்தல் முறையை ஒழித்து விட்டு, நீதிமன்றத்தின் துணையோடு யதேச்சாதிகார ஆட்சி முறையைக் கொண்டு வந்து விட முடியும் என்று நான் நினைத்தது உண்டு.
*
ஆனால்..
*
ஹத்ராஸ் சம்பவத்தில் ஊடகத்துறையைச் சேர்ந்த இளம்பெண் ஊடகவியலாளர்கள், வெளிப்படுத்திய பூமியில் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தையும், நேர்மைக்கு உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்த லட்சியப் பிடிப்பையும் பார்த்த பின்பு....
*
ஒரு லட்சம் மோடிகளாலும், ஒரு கோடி அமீத்ஷாக்களாலும் யதேச்சாதிகார முறையை, இந்தியாவில் கொண்டு வர முடியாது என்பது, தெளிவாகத் தெரிந்தது.
*
செவ்வணக்கம் தோழர்களே
No comments:
Post a Comment