Saturday, 10 October 2020

மதிப்பிற்குறிய ஆலிம் பெருந்தகை. #தெஹ்லான் பாகவி அவர்களுக்கு

மதிப்பிற்குறிய ஆலிம் பெருந்தகை. #தெஹ்லான் பாகவி அவர்களுக்கு ஏக  இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்களின் மீது என்றென்றும் பொழியப்படட்டுமாக ( ஆமீன்)

வரக்கூடிய 2021தமிழக சட்டமன்ற தேர்தலை சமுதாய கட்சிகள் இயக்கங்களோடு ஒன்றாய் இணைந்து தேர்தலை சந்திக்க தயார்!  என்று நீங்கள்  கூறிய செய்தியை பார்த்தோம்!

ஒரு அரசியல் கட்சியின் தேசிய துணைத்தலைவர் உங்களுக்கு தெரியாது அல்ல தமிழகத்தின் அரசியல் சூழல்!

சமுதாய கட்சிகள் இயக்கங்கள் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்பது  சாத்தியமில்லை என்பது தங்கள் அறியாதது அல்ல அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னவென்று உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரிந்தும்!

உங்களை உங்களின் கட்சியை ஒற்றுமையின் தூதுவர்களாக காட்டிக் கொள்ள நீங்கள் உதட்டளவில் பேசும் வசனங்கள் என்பதை சமுதாயம் அறியும்.

நீங்கள் கட்சி நடத்தும் கேரளத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 27%  கர்நாடகத்தில் 13% இங்கெல்லாம் நீங்கள் இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டனி அமைத்துதான் கடந்த காலங்களில் போட்டியிட்டிர்களா?

அல்லது இம்மாதம் தேர்தல் நடைபெறும் 17%முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட பீஹாரில் முஸ்லிம் கட்சிகளுடன் மட்டுமே கூட்டனி வைத்துதான் போட்டியிடுகிறிர்களா?

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களிளேயே இந்த முயற்சியை செய்யாத நீங்கள்!

வெறும் 6% முஸ்லிம்கள் உள்ள தமிழகத்தில் இது  சாத்தியமில்லை என்று தெரிந்தும் நீங்கள் இப்படி பேசுவது நியாயம் தானா?

நாம் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் முஸ்லிம்கள் மட்டுமே 50%மேல் உள்ள பல சட்டமன்ற தொகுதிகள் உள்ளன

தமிழகத்தில் 50%மேல் முஸ்லிம்கள் மட்டுமே உள்ள ஒரே ஒரு சட்டமன்ற தொகுதியை காட்டுங்கள்?

உள்ளாட்சி தேர்தல்களில்  வேண்டுமானால் தேர்தல் நேர சமுதாய ஒற்றுமை நமக்கு நன்மை பயக்கலாம்!

விகிதாச்சார தேர்தல் முறையில்  தேர்தல் நடந்தாலே அன்றி தற்போது உள்ள எண்ணிக்கை தேர்தல் முறையில் தேர்தல் நேர திடீர் சமுதாய ஒற்றுமை என்பது தேவையில்லாத ஆணி!

நீங்கள் நல்லவர்தான் ஆனால் அதற்காக மற்ற கட்சிகளை இயக்கங்களை கெட்டவர்களாக ஒற்றுமைக்கு எதிரானவர்களாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?

இந்தியாவைப் பற்றி ஒரு வாசகம் சொல்வார்கள் வேற்றுமையில் ஒற்றுமை கானும் தேசம் என்று அது இந்தியாவிற்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழகத்திற்கு 100% பொருந்தும் வாசகம் இது!

ஆம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் உபியில் மாட்டின் பெயராலும் கேரளத்தில் அரசியல் முன்விரோதத்தாலும் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டது போல்

தமிழகத்தில் எந்த சங்கியாவது நம் மீது கை வைத்து விட முடியுமா?

பாப்ரி பள்ளி இடிக்கப்பட்ட போது அயோத்தி தொடங்கி ஐதராபாத் வரை 6ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.

தமிழகத்தில் கலைஞர் தொடங்கி கமலஹாசன் வரை நமக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள் ஆம் அதுதான் தமிழகம் சமூகநீதி மண்!

ஆம் இங்கு மதத்தை முன்னிறுத்தியோ அதன் கொள்கைகளை  முன்னிறுத்தியோ யாரும் வெற்றி பெற முடியாது!

இந்த மண்ணிண் மரபணு பகுத்தறிவு மரபணு!

நாம் எல்லாம் ஒன்றுபட்டு தேர்தலில் போட்டியிட்டால் வெல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிற ஒரு தொகுதியின் பெயரைச்  சொல்லுங்கள்!

தமிழகத்தில் இன்றும் நாம் தனித்து வெற்றிபெறுகின்ற இடத்தில் இல்லை என்பதே யதார்த்தம்!

ஆனால் வெற்றி தோல்விகளை தீர்மானிக்க கூடிய இடத்தில் உள்ளோம்

கடந்த 2016தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக.மதிமுக.விசிக.இடதுசாரிகள் போன்ற பெரிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த மநகூ வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா 6.07.%

நீங்கள் உள்பட இஸ்லாமிய கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா? 1.26%

சுயேச்சைகளை விட நாம் பெற்ற வாக்குகள் குறைவு. 1.44%

ஒரு பேச்சுக்கு நாம் எல்லாம் ஒன்றுபட்டு தேர்தலில் நின்று ஒரு 5%வாக்குகளை பிரிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த 5% வித்தியாசத்தில் மீண்டும் அதிமுக அறியனை ஏறி விட்டால்  நட்டம் நமக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கான பெருநட்டம் அது!

கடந்த 2016சட்டமன்ற தேர்தலில் வெறும்  1%வாக்குகளால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது!

வரும் தேர்தலில் அடிமை அதிமுகவின் துணை கொண்டு எப்படியாவது சட்டமன்றத்தில் காலூன்றி விட வேண்டும் என்று துடிக்கிறது பாசிச பாஜக

தனது பாசிச திட்டங்களை பின்வாசல்  வழியாக திணித்திட துடிக்கின்றது

இந்த இக்கட்டான வேளையில் இந்த விஷப்பரிட்சை தேவையற்றது இது சமுதாயத்திற்கு எந்த நன்மையையும் அளிக்காது!

நீங்கள் 100தொகுதிகளில் போட்டியிட ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக ஒற்றுமைக்கு நாங்கள் தயார் என்று கூறுவதன் மூலம் பழியை மற்ற கட்சிகள் அமைப்புகள் மீது சுமத்த பார்க்காதீர்கள்.

2009நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேயமக்கள் கட்சி இருபெரும் திராவிட கட்சிகளுக்கு எதிராக தனித்து தேர்தலை சந்தித்தபோது உங்களில் எத்தனை சமுதாய கட்சிகள் மமகவை ஆதரித்தீர்கள்?  ஆதரவை விடுங்கள் மாறாக எதிர்த்து அல்லவா பிரச்சாரம் செய்தீர்கள்!

இந்த குருட்டு தேர்தல் நேர ஒற்றுமை எனும் வெற்று முழக்கம் யார் மூலமாக இங்கே திணிக்கப்படுகிறது என்ற யதார்த்த அரசியலை சமுதாயம் அறியாமல் இல்லை!

உண்மையிலேயே உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் சமுதாய ஒற்றுமையில் அக்கரை இருந்தால் சமுதாய இயக்கங்கள், கட்சிகள் அங்கம் வகிக்கின்ற மதசார்பற்ற கூட்டனிக்கு நீங்கள்தான் வர வேண்டும்!

ரமலான்.ஹஜ்ஜூப் பெருநாள் பிறைகளில் வராத,  ஒற்றுமை
ஒரு குடும்பத்தில் ரத்த சொந்தங்களுக்குள் வராத ஒற்றுமை, ஒரு மஹல்லாவில் ஜமாத்துகளுக்குள் வராத ஒற்றுமை, ஒரு மாநிலம் முழுக்க வந்துவிடுமா?
சிந்தியுங்கள் மக்களே!

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த திடீர் தேர்தல் நேர ஒற்றுமை சமுதாயத்திற்கு நன்மை பயக்குமா! சமுதாயத்திற்கு சாதகமா? பாதகமா? என்று சீர்தூக்கி பார்த்தோமேயானால் பாதகமே அன்றி வேறில்லை!

இப்படி எல்லாம் பேசுவதனால் நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல தேர்தல்கள யதார்த்தத்தை கூறுகிறேன் உண்மையை கூறுகிறேன்!

அடித்தளம்.ஹபிபுல்லாஹ்

No comments:

Post a Comment