தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்...
அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.
அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...
அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்...
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்...
அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்...
"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்.
" சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் .
"அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"" என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம்.
அப்பன் -அப்பா, அத்தன் – அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.
துருக்கியனை அத்தா என்று அழைக்க காரணம் தலைவன் என்ற பொருளில்தான்
தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அத்தா !!
அப்பா என்கிறவன் தனக்கு வாழ்வு கொடுக்கிற இடத்தில் இருப்பதால் சிலர் அப்பாவை வாப்பா என்றழைப்பர்.
செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே 'எங்களுயிர்த் தமிழ் வழக்கு' என்று அன்றே பாடினார் ஆபிதீன்.
'பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே'
விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகின்றனர்.
இன்றைக்கு அத்துனை இஸ்லாமியர்கள் வீடுகளில் எல்லா நேரங்களிலும் தமிழ் நடைமுறைப் பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது
யாரெல்லாம் இன்றும் தொழுகை, நோன்பு ,ஆணம் பள்ளிவாசல்கள் என்று கூறுவாரோ அவரெல்லாம் சமணத்திலிருந்து வந்த தூய தமிழ் கடற்கரை வாழ் இஸ்லாமியர்களே!!!
தொல்காப்பியர்,திருவள்ளுவர்(வள்ளுவர் சமணரா என்ற கேள்வியும் உண்டு நாம் பிறகு பார்ப்பபோம் இதுபற்றி).
இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்; அறிவாளிகள்!!!
தமிழ்நாட்டில்:-
கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு அதிகளவில் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம்.
இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும்,மேலும் தொழுகை நோன்பு என்பன தூய தமிழ் என்பதும் அதை முழுக்க முழுக்க சமணர்களே பயன்படுத்தினார்கள்.
இஸ்லாத்திற்கு வந்த சமணர்களே இன்றும் அதாவது இன்றைய தாய்மொழி தமிழ் பேசும் முஸ்லிம்களே இந்த வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துகிறார்கள்
மூதாதயரை தேடுவோம் அழிக்கப்பட்டவரலாரை பரப்புவோம்!!
14ஆம் நூற்றாண்டுகளில்தான் இஸ்லாமியர்கள் இலக்கண இலக்கிய காப்பியங்களை இயற்றுபவர்கள் வருகை அதிகரித்தது அதிலும் கூர்ந்து கவனித்தால் தெரியும் அனைவருமே கடற்கரையை ஒட்டிய முஸ்லிம்கள் !!!
காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டார்கள் கடற்கரை சமணர்கள் !!
ஆரிய சைவ கொடுமையால் வேறு வழியின்றி தற்காப்புக்காக.இருப்பினும் சமணர்கள் இஸ்லாத்திற்கு வந்து கொள்கையான புலாலை ஆரம்பத்தில் உண்ணாமலே இருந்துள்ளனர். காலப்போக்கில் இஸ்லாமிய கொள்கையில் பற்றுகொண்டும் பல நாடுகளின் வணிகதொடர்பாலும் வழக்கம் மாறியுள்ளது!!!
மது இஸ்லாத்தில் தடை சமணரளுக்கு இஸ்லாம் ஒரு கொடை!!
சமணர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்து தமிழ்காப்பியங்களையும் இலக்கியங்களையும் தமிழ் பற்றை நிறுபித்துள்ளனர்.
நாகூர் காயல்பட்டினத்தவரே அதிகம் தமிழ் இலக்கண, காப்பியங்கள் எழுத்தாளர்களை காணமுடிகிறது!!!
காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை முழுவதும் படிப்படியாக உள்வாங்கி கொண்டு இஸ்லாத்தை ஏற்று தமிழை வளர்த்துள்ளார்கள்!!
தான் எந்த மதம் ஜாதி வந்தோம் என்பதே மறக்கடித்து மதிப்பை வழங்கும் இஸ்லாமே வாழ்க போற்றி தழைக்க மென்மேலும்!!!
இஸ்லாமியர்கள் 14ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை அதிகம் தமிழுக்கு தொண்டு செய்வதை காணலாம்
துலக்கமானவர்தான் துலுக்கன் இல்லை!!!
ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்க முளராகி"
(திருவாதவூர்ப் புராணத்தில்)
திருவாதவூரடிகள் புராணம்:-
கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.
சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன் முக்கியச் சிறப்பு இதுவேயாகும்.
மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.
கடவுள் மாமுனிவர் காலம்:-
11 ஆம் நூற்றாண்டு கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது.
13 ஆம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது.
எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.
ராவுத்தன்:-
திருநாவுக்கரசரின் தேவரத்திலும் (5-29, 5-40) , நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் (4-4) இதைப்போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன
சிவபெருமான் நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் சேர்ப்பித்தநிகழ்ச்சியில் சிவனை
இராவுத்தநாயகனாகவே சித்தரிப்பதைக் காணலாம்.
அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்காரத்தில்,
'மாமயிலேறும் ராவுத்தனே'என்றும்
கந்தர் கலி வெண்பாவில்
'சூர்க்கொன்ற ராவுத்தனே' என்றும்புகழ்ந்திருக்கின்றனர்
பூதலூர் அப்துல்மாலிக்
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Wednesday, 22 January 2020
1971 ல் சோ மன்னிப்பு கேட்டதற்கு ஆதாரம் இங்கே ! ரஜினி மன்னிப்பு கேட்ப்பது எப்பொழுது
1971 ல் சோ மன்னிப்பு கேட்டதற்கு ஆதாரம் இங்கே !
ரஜினி மன்னிப்பு கேட்ப்பது எப்பொழுது
ரஜினி மன்னிப்பு கேட்ப்பது எப்பொழுது
பெரியாரல் பயனடைந்த 90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..
*தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பை தவிர்த்தோ ஆதரித்தோ எதிர்த்தோ* எப்படி வேண்டுமானாலும் பாருங்கள் அது அவரவர்கள் உரிமை...ஆனால்
பெரியாரல் பயனடைந்த
90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..
கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலனுக்காக வாழ்நாள் முழுவதும்
போராடிய பெரியாரையும்..அதன் வழிவந்த திமுக அதிமுக வினரையும் தான் கடவுள் நம்பிக்கைவுள்ள எல்லா மற்ற எல்லா மதத்தினரும் / மக்களும் மதிப்பதற்கும்...
கடந்த 50 ஆண்டுகால தமிழக தேர்தலில்களில் திராவிட கொள்கை கொண்ட திமுக அதிமுகவினர்களுக்கே 80 % தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பதற்கு காரணம்....
பெரியார் சிந்தனைகளும் போராட்டங்களும் அப்படிபட்டது...
* மூடநம்பிக்கை எதிர்த்து
* சாதி வேறுபாடுகளை எதிர்த்து..
* ஆலய #மறுப்பை எதிர்த்து...
* குலக்கல்வியை எதிர்த்து..
* குலத்தொழிலை எதிர்த்து...
* தீண்டாமையை எதிர்த்து..
* பெண் கல்வி மறுப்பை எதிர்த்து...
* குழந்தை திருமணம் எதிர்த்து...
* விதவைகள் * மறுமணம் ஆதரித்து...
* கலப்பு திருமணத்தினை ஆதரித்து...
* பிறப்பால் ஏற்றத்தாழ்வை கண்டித்து...
* இந்தி திணிப்பை எதிர்த்து...
* அடக்குமுறைகளை எதிர்த்து...
* ஆதிக்க சக்திகளை எதிர்த்து...
* பெண்கள் சொத்துரிமைக்காக
* தமிழ் மொழி எழுச்சிககாக
* தாழ்த்தப்பட்ட மக்களுக்காக....
* அரசியல் முரண்பாடுகளை எதிர்த்து..
பெரியார் தன் கடைசி மூச்சு வரை அயராது ஓயாது போராடினார்...
மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்று தர போராடி வென்றவர்
தந்தை பெரியார் அவர்கள்...
இன்று தந்தை பெரியாரை யார் அவமதித்தாலும்...அவர்களை தமிழக மககள் புறம் தள்ளுவார்கள் என்பதினை பெரியாரை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு தமிழகத்தில் யார் அரசியல் செய்ய நினைத்தாலும் அதிகாரம் செய்ய நினைத்தாலும் அவர்கள் தோல்வியைத்தான் தழுவுவார்கள்....
ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுயமரியாதையாக வாழ வழி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்..
ஆகவே பெரியாரை எதிர்ப்பவர்களை விட பெரியாரால் பயனடைந்த இந்த தமிழ் சமூகத்தினை சேர்ந்தவர்கள் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள்...
குறிப்பாக தமிழக பெண்கள் பெரியாரின் வரலாறை படித்து தங்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி தந்து அவர்களையும் விழிப்புணர்வு கொண்ட தலைமுறைகளாக வளர்க்க வேண்டும்.
அதுவே குலத்தொழிலை சட்டமாக்கி தமிழகத்தினை கொத்தடிமைகளாக நினைத்தவர்களை வீழ்த்தி ...இன்று நம்மை அனைத்து சமூகதளத்திலும் தமிழ் மக்களை உயர்த்திய தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...
Jp..Madurai..
9789120134
Sent from my iPhone
பெரியாரல் பயனடைந்த
90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..
கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலனுக்காக வாழ்நாள் முழுவதும்
போராடிய பெரியாரையும்..அதன் வழிவந்த திமுக அதிமுக வினரையும் தான் கடவுள் நம்பிக்கைவுள்ள எல்லா மற்ற எல்லா மதத்தினரும் / மக்களும் மதிப்பதற்கும்...
கடந்த 50 ஆண்டுகால தமிழக தேர்தலில்களில் திராவிட கொள்கை கொண்ட திமுக அதிமுகவினர்களுக்கே 80 % தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பதற்கு காரணம்....
பெரியார் சிந்தனைகளும் போராட்டங்களும் அப்படிபட்டது...
* மூடநம்பிக்கை எதிர்த்து
* சாதி வேறுபாடுகளை எதிர்த்து..
* ஆலய #மறுப்பை எதிர்த்து...
* குலக்கல்வியை எதிர்த்து..
* குலத்தொழிலை எதிர்த்து...
* தீண்டாமையை எதிர்த்து..
* பெண் கல்வி மறுப்பை எதிர்த்து...
* குழந்தை திருமணம் எதிர்த்து...
* விதவைகள் * மறுமணம் ஆதரித்து...
* கலப்பு திருமணத்தினை ஆதரித்து...
* பிறப்பால் ஏற்றத்தாழ்வை கண்டித்து...
* இந்தி திணிப்பை எதிர்த்து...
* அடக்குமுறைகளை எதிர்த்து...
* ஆதிக்க சக்திகளை எதிர்த்து...
* பெண்கள் சொத்துரிமைக்காக
* தமிழ் மொழி எழுச்சிககாக
* தாழ்த்தப்பட்ட மக்களுக்காக....
* அரசியல் முரண்பாடுகளை எதிர்த்து..
பெரியார் தன் கடைசி மூச்சு வரை அயராது ஓயாது போராடினார்...
மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்று தர போராடி வென்றவர்
தந்தை பெரியார் அவர்கள்...
இன்று தந்தை பெரியாரை யார் அவமதித்தாலும்...அவர்களை தமிழக மககள் புறம் தள்ளுவார்கள் என்பதினை பெரியாரை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு தமிழகத்தில் யார் அரசியல் செய்ய நினைத்தாலும் அதிகாரம் செய்ய நினைத்தாலும் அவர்கள் தோல்வியைத்தான் தழுவுவார்கள்....
ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுயமரியாதையாக வாழ வழி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்..
ஆகவே பெரியாரை எதிர்ப்பவர்களை விட பெரியாரால் பயனடைந்த இந்த தமிழ் சமூகத்தினை சேர்ந்தவர்கள் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள்...
குறிப்பாக தமிழக பெண்கள் பெரியாரின் வரலாறை படித்து தங்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி தந்து அவர்களையும் விழிப்புணர்வு கொண்ட தலைமுறைகளாக வளர்க்க வேண்டும்.
அதுவே குலத்தொழிலை சட்டமாக்கி தமிழகத்தினை கொத்தடிமைகளாக நினைத்தவர்களை வீழ்த்தி ...இன்று நம்மை அனைத்து சமூகதளத்திலும் தமிழ் மக்களை உயர்த்திய தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...
Jp..Madurai..
9789120134
Sent from my iPhone
இந்திய தேசிய லீக் - கட்சி அறிவிப்பு உருப்படியான, நல்ல முடிவு..!
உருப்படியான, நல்ல முடிவு..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*#இந்தியதேசியலீக்கட்சியைக் கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து,*
*அதன் தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்
#எம்ஜிகே_நிஜாமுதீன்.*
“இன்றைய இக்கட்டான சூழலில் முஸ்லிம்கள் பல கட்சிகளாகவும் கட்சிக்குள் கூறுகளாகவும் கோஷ்டிகளாகவும் பிரிந்துகிடப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல.
"நலிவடைந்த கட்சிகளைக் கலைப்பது அல்லது பிற கட்சிகளோடு இணைப்பது ஆகிய நடவடிக்கை மூலமாக முஸ்லிம் கட்சிகளின் கட்டுக்கடங்கா எண்ணிக்கையைக் குறைப்பது அவசியம்” என்று நிஜாமுதீன் அவர்கள் கூறியுள்ளார்.
உருப்படியான நல்ல ஆலோசனை, நல்ல முடிவு இது.
இந்த வகையில் முன்னோடியாக இருந்தவர் அ.ச. உமர் பாரூக் அவர்கள்.
*#மறுமலர்ச்சிமுஸ்லிம்லீக் எனும் கட்சியின் தலைவராக இருந்த அ.ச. உமர் பாரூக்* ஒரு கட்டத்தில் தமது கட்சியை *எஸ்டிபிஐ கட்சியுடன் இணைத்துவிட்டார்.*
இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில
பொதுச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி வருகிறார்.
முஸ்லிம்களுக்கென்று ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் இருந்தால் போதும்.
ஆகவே சிறிய கட்சிகள் நாட்டு நலனையும் சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு தங்கள் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும் அல்லது பிற கட்சிகளுடன் இணைந்துகொள்ள வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்.
தன்முனைப்பு, ஈகோ, ‘நீ தலைவனா நான் தலைவனா” என்றெல்லாம் முறுக்கிக்கொண்டு முகம் திருப்பி நின்றால், பாசிச அலை உங்களை அடித்துச் சென்றுவிடும்.
அப்போது கதறி எந்தப் பயனும் இல்லை.
-சிராஜுல்ஹஸன்
இஸ்லாமியனாக பிறந்தது குற்றமா? இன்று முஸ்லிம்கள் நாளை நாம் துரைமுருகன் அவர்களில் உரை
இஸ்லாமியனாக பிறந்தது குற்றமா?
இன்று முஸ்லிம்கள் நாளை நாம்
துரைமுருகன் அவர்களில் உரை
https://www.facebook.com/tmmkwebnews/videos/168159184524440/
Sent from my iPhone
இன்று முஸ்லிம்கள் நாளை நாம்
துரைமுருகன் அவர்களில் உரை
https://www.facebook.com/tmmkwebnews/videos/168159184524440/
Sent from my iPhone
Tuesday, 21 January 2020
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டன
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள்.
அல்குர்ஆன் -23:1,2,9
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள்.
அல்குர்ஆன் -23:1,2,9
சட்டத்திற்கு-எதிராக-தாக்கல்-செய்த-தமுமுக-உட்பட-160-மனுக்கள்
https://www.facebook.com/243228229155092/posts/குடியுரிமை-திருத்த-சட்டத்திற்கு-எதிராக-தாக்கல்-செய்த-தமுமுக-உட்பட-160-மனுக்களுக்/1894688784009020/
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த தமுமுக உட்பட 160 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இன்று 22.01.2020 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனு உட்பட #144 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் #தமுமுக உட்பட 62 மனுக்கள் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க #4வார காலம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. CAA சட்டத்திற்கு தற்போது தடை விதிக்க இயலாது. #4வார காலத்திற்கு பிறகு மத்திய அரசு பதில் மனு அளித்த பிறகு இது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து அபபோது முடிவுச் செய்யப்படும்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த தமுமுக உட்பட 160 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இன்று 22.01.2020 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனு உட்பட #144 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் #தமுமுக உட்பட 62 மனுக்கள் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க #4வார காலம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. CAA சட்டத்திற்கு தற்போது தடை விதிக்க இயலாது. #4வார காலத்திற்கு பிறகு மத்திய அரசு பதில் மனு அளித்த பிறகு இது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து அபபோது முடிவுச் செய்யப்படும்
ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர்.
படித்தும் மனம் கனத்தது...
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் 25:74]
கணவன் என்றால்...
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...
கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத் தக்க பாட்டி
அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...
ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?
"ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....
நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....
வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....
இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
.
பெண் என்றால் அடிமையா என்ன..?
கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?
எனக்கே அசதியா இருக்கு.....
இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.
சும்மா கடுப்பேத்திகிட்டு"....
முதியவள் சிறு புன்னகையோடு,
"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!
ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....
ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!
காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...
ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....
பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....
எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...
நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...
என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...
தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வ ளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....
இப்ப அவங்க இல்லை,..
நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...
என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..
அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்க ளை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு...
அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்து ங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது..
அவங்க handphone நம்பர் இருக்கு,. ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,..
முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானு ம் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்..
இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்...
சமையலறைக்குத் தனியா போறேன்,. சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன்,..
வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவர் இல்லை.
கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை..
விழியோரம் நீர் தேங்க..,
அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..
அதிகமாக போற்றணும்...
கணவனின் வெற்றியோ தோல்வியோ,
பெருமையோ அவமானமோ...
லாபமோ... நட்டமோ...
மனைவிக்கு அனைத்திலும்.. சம பங்கு உண்டு
தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....
வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்...
மிகவும் வேதனை படுத்தும்...
எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..
பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து...
இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்...
பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...
அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.!
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது...
பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...
பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்...
இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்..
எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"
இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்...
சரி மகளே,! நான் வர்ரேன்.." என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்.....
என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்...
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...
நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்....
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே,
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...
இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...
பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம்..
அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...
அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது, ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"
வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை... மனைவி மதிக்கிறாளா...?
மனைவியை கணவன் மதிக்கிறானா...???
இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லை தான்...
கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்ட வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,
ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு
மனைவியும் சொல்றதில்லை...
மனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்.. இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மே...
இதெல்லாம் சொல்லணும்...
அப்படி *ஒருத்தரோட உணர்வை இன்னொ ருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்..
வாழ்க்கை இனிக்கும்.. ருசிக்கும்..
அகம் முகம் மலர்ந்த நட்பே..
நம்முடைய.
உறவு, நட்பு, குலம், சாதி, பங்காளி பகையாளி, இனம், சனம், பணம், முதலாளி, தொழிலாளி,. கட்சிக்காரன் எல்லாமே குறுகிய காலமே..
கணவனோ.... மனைவியோ...
மருத்துவ மனையிலோ, படுக்கையிலோ, இருந்தால் கூட இருந்து கவனிப்பவர் கணவ னோ மனைவியோ தான்...
சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....
முதல் ஒருவார காலம் பார்க்க வரும் உறவுகள் சொந்தங்கள் பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..
பின்னர் மகளோ மகனோ நெருங்கியவர்கள் மட்டுமே வந்து போவார்கள். இறுதியில் கண வன் மனைவி மட்டுமே. ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர்.
துணையை நேசிப்போம்...
படித்தது ... பகிர்ந்தேன்...
Subscribe to:
Posts (Atom)