Tuesday, 21 January 2020

சட்டத்திற்கு-எதிராக-தாக்கல்-செய்த-தமுமுக-உட்பட-160-மனுக்கள்

https://www.facebook.com/243228229155092/posts/குடியுரிமை-திருத்த-சட்டத்திற்கு-எதிராக-தாக்கல்-செய்த-தமுமுக-உட்பட-160-மனுக்களுக்/1894688784009020/

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த தமுமுக உட்பட 160 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இன்று 22.01.2020 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனு உட்பட #144 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் #தமுமுக உட்பட 62 மனுக்கள் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க #4வார காலம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. CAA சட்டத்திற்கு தற்போது தடை விதிக்க இயலாது. #4வார காலத்திற்கு பிறகு மத்திய அரசு பதில் மனு அளித்த பிறகு இது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து அபபோது முடிவுச் செய்யப்படும்

ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர்.

படித்தும் மனம் கனத்தது... 


"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர்.

[அல்குர்ஆன் 25:74]


கணவன் என்றால்...

ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...

கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத் தக்க பாட்டி

அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...

ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?

"ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....

நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....

வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....

இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
பெண் என்றால் அடிமையா என்ன..?

கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?

எனக்கே அசதியா இருக்கு.....

இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.

சும்மா கடுப்பேத்திகிட்டு"....

முதியவள் சிறு புன்னகையோடு,

"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!

ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....

ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...

ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....

பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...

நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...

என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...

தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வ ளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....

இப்ப அவங்க இல்லை,..

நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..

அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்க ளை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு...

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்து ங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது..

அவங்க handphone நம்பர் இருக்கு,. ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,..

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானு ம் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்..

இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்...

சமையலறைக்குத் தனியா போறேன்,. சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன்,..

வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவர் இல்லை.

கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை..

விழியோரம் நீர் தேங்க..,

அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..

அதிகமாக போற்றணும்...

கணவனின் வெற்றியோ தோல்வியோ,

பெருமையோ அவமானமோ...

லாபமோ... நட்டமோ...

மனைவிக்கு அனைத்திலும்.. சம பங்கு உண்டு

தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....

வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்...

மிகவு‌ம் வேதனை படுத்தும்...

எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..

பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து...

இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்...

பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...

அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.! 
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது...

பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...

பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்...

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்..

எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"

இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்...

சரி மகளே,! நான் வர்ரேன்.." என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்.....

என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்...

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...

நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்....

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, 
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...

இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம்..

அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...

அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது, ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"

வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை... மனைவி மதிக்கிறாளா...? 
மனைவியை கணவன் மதிக்கிறானா...???

இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லை தான்...

கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்ட வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,

ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு

மனைவியும் சொல்றதில்லை...

மனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்.. இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மே...

இதெல்லாம் சொல்லணும்...

அப்படி *ஒருத்தரோட உணர்வை இன்னொ ருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்..

வாழ்க்கை இனிக்கும்..  ருசிக்கும்..

அகம் முகம் மலர்ந்த நட்பே..

நம்முடைய. 
உறவு,  நட்பு, குலம், சாதி, பங்காளி பகையாளி, இனம், சனம், பணம், முதலாளி,  தொழிலாளி,. கட்சிக்காரன் எல்லாமே குறுகிய காலமே..

கணவனோ.... மனைவியோ...

மருத்துவ மனையிலோ, படுக்கையிலோ,  இருந்தால் கூட இருந்து கவனிப்பவர்  கணவ னோ மனைவியோ தான்...

சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....

முதல் ஒருவார காலம் பார்க்க வரும் உறவுகள் சொந்தங்கள் பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..

பின்னர் மகளோ மகனோ நெருங்கியவர்கள் மட்டுமே வந்து போவார்கள். இறுதியில் கண வன் மனைவி மட்டுமே. ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர்.

துணையை நேசிப்போம்...

படித்தது ...  பகிர்ந்தேன்...

தமிழ் நாட்டு அரசியலின் நிலைமை

தமிழ் நாட்டு அரசியலின் நிலைமை

ஜெயலலிதா - நடிகர்
கருணாநிதி - எழுத்தாளர்
அன்புமனி - மருத்துவர்
தமிழிசை - மருத்துவர்
விஜயகாந்த் - நடிகர்
வைகோ - வக்கீல்
சீமான் - இயக்குனர்
எடப்பாடி பழனிச்சாமி- விவசாயி
திருமாவளவன் - முனைவர் பட்டம் பெற்றவர்/ முன்னாள் அரசு ஊழியர்

இப்படி ஒவ்வொருவரும் அரசியல் இல்லைனாலும் அவங்களிடம் இருக்கும் தனி திறமையோட வாழ முடியும். ஆனால் எந்த திறமையும் இல்லாமல், எல்லா வசதிகளும் இருந்தாலும் ஒழுங்காக படிக்காம, ஆங்கிலம் தான் தெரியாம தேசிய மீடியால( development development only) அசிங்க படுரார்னு பார்த்தா தமிழும் ஒழுங்காக வராது.

இப்படி எந்த தகுதியும் இல்லாம முன்னாள் முதல்வர் பையன்னு ஒரே காரணத்திற்காக ஒரு தத்திய தலைவராக ஏற்றுக் கொள்ளும் கூட்டம் எவ்வளவு முரசொலியாக இருக்கும்?

கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் #இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999.

#வரலாற்றில்_இன்று

கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் #இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999. ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் தொண்டுகள் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் கதற கதற உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, "மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.
இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

காற்று மாசுபடும் நகரம் - உத்திரபிரதேசம் 6 இடம் பிடித்து இருக்கிறது வெட்ககேடு

எதிர் வரும் 26 01 2020 அன்று ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று காலை 8 00 to 9 00 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில்

அஸ்ஸலாமு அலைக்கும்

எதிர் வரும் 26 01 2020 அன்று ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று காலை 8 00 to 9 00 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் கள் முன்பு தேசியக் கொடியை அந்த அந்த பள்ளிவாசல் தலைவர் அல்லது நிர்வாகிகள் ஏற்ற வேண்டும் அதன் பின் பள்ளிவாசல் இமாம் மற்றும் அந்த அந்த பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் யாரோ ஒருவர் இந்திய தேச விடுதலைக்காக போராடியதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும்
மாலை 5 30 மணியளவில் ஏற்றிய கொடியை இறக்கிவிடவுடம்
மேலும் கொடியேற்றிய புகைப்படம் அந்த அந்த பள்ளியின் பெயரோடு வாட்ஸ் அப் இல் பதிவிடவும்

குறிப்பு
இதையையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் களிலும் கொடியேற்று வதற்கு வசதியாக அந்தந்த வாட்ஸ் அப் நண்பர்கள் கொண்டு செல்லவும்

இப்படிக்கு

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு
திருப்பூர் வட்டார ஐக்கிய ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்


Sent from my iPhone

பாஜகவை வீழ்த்தி மைசூர் மேயரான முஸ்லிம் பெண் வேட்பாளர்

பாஜகவை வீழ்த்தி மைசூர் மேயரான முஸ்லிம் பெண் வேட்பாளர்
****************
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதள கட்சிகள் போட்டியிட்டன.

மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பெண் வேட்பாளராக தஸ்னீம் மற்றும் துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் ஸ்ரீதர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் மேயர் பதவிக்கு கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் துணை மேயர் பதவிக்கு சந்தாமா வடிவேலு ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் உள்ள 70 ஓட்டுகளில் தஸ்னீம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் 47 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட பாஜக கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் சந்தாம்மா வடிவேலு ஆகியோர் 23 ஓட்டுக்களை மட்டுமே பெற்றனர்.

இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்னீம் மைசூரின் 33வது மேயராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் மைசூரின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
Maasha Allah
Congratulations மக்கள் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

துக்ளக் எழுதிய உண்மை!

துக்ளக் எழுதிய உண்மை!
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது,
"#அயோத்தியில் #அயோக்கியத்தனம்"
என்ற தலைப்பில்
துக்ளக் எழுதிய தலையங்கம்.
குரு மூர்த்திக்கும், ரஜினிக்கும்
துணிவிருந்தால்
இந்தக் கருத்தை
இப்போது
பொது வெளியில் சொல்வார்களா?
வாலைச் சுருட்டிக் கொண்டு
அடங்கி விடுவார்கள்.
ஏனெனில் சங்கி மங்கிகளின்
காலைப் பிடிப்பதுதானே
ரசினியின்
தற்போதைய பிரதானப் பணி!

(இந்த பதிவினை எனது சகோ ஜாபா் அலி பாய்க்கு சமர்ப்பிக்கிறேன்)

உலகின் முட்டாள் பிரதமர் - மோடி

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

#படித்ததில்_பிடித்தது

வட மொழி/ தமிழ் இலக்கிய வேறுபாடு: தன் கணவன் அவளை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள்.
ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன். வனத்திலேயே வாழ்கிறாள், ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
இது *ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*.

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் இடப் பக்க மார்பை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள், தன் உளளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள். மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று.
"அட அதனாலென்ன தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல,
சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.

அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.

சங்ககாலத்தில், 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளில் மூத்த மொழி என்று கூறப்படும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறப்படும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஏன் சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.

ஆனால் தங்கக் கட்டிகளிலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொரித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...