Tuesday, 21 January 2020

துக்ளக் எழுதிய உண்மை!

துக்ளக் எழுதிய உண்மை!
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது,
"#அயோத்தியில் #அயோக்கியத்தனம்"
என்ற தலைப்பில்
துக்ளக் எழுதிய தலையங்கம்.
குரு மூர்த்திக்கும், ரஜினிக்கும்
துணிவிருந்தால்
இந்தக் கருத்தை
இப்போது
பொது வெளியில் சொல்வார்களா?
வாலைச் சுருட்டிக் கொண்டு
அடங்கி விடுவார்கள்.
ஏனெனில் சங்கி மங்கிகளின்
காலைப் பிடிப்பதுதானே
ரசினியின்
தற்போதைய பிரதானப் பணி!

(இந்த பதிவினை எனது சகோ ஜாபா் அலி பாய்க்கு சமர்ப்பிக்கிறேன்)

உலகின் முட்டாள் பிரதமர் - மோடி

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

#படித்ததில்_பிடித்தது

வட மொழி/ தமிழ் இலக்கிய வேறுபாடு: தன் கணவன் அவளை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள்.
ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன். வனத்திலேயே வாழ்கிறாள், ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
இது *ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன். மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*.

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு. தன் இடப் பக்க மார்பை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள், தன் உளளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை, ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள். மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது, 'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று.
"அட அதனாலென்ன தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல,
சுற்றுகிறாள். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.

அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.

சங்ககாலத்தில், 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளில் மூத்த மொழி என்று கூறப்படும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறப்படும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஏன் சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.

ஆனால் தங்கக் கட்டிகளிலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொரித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

Monday, 20 January 2020

பாரத ரத்னா பாதுஷா கான் ..!! நல்லவேளை நீங்கள் இன்று இல்லை..!

பாரத ரத்னா பாதுஷா கான் ..!!
நல்லவேளை நீங்கள் இன்று இல்லை..!

கஃபார்கான் அவர்கள் எப்போதும் ஒரு துணிப் பையை தன்னுடனேயே வைத்திருப்பார் . அதை தொடக்கூட யாரையும் அனுமதிக்க மாட்டாராம்.

காந்திஜி கூட இதுபற்றி பலமுறை அவரிடம் கேட்டதுண்டு - பலமுறை கிண்டல் அடித்ததுண்டு. கஸ்தூர்பா காந்தி அவர்களும் காந்தியின் கிண்டலை கண்டித்ததும் உண்டு. அப்போதும் கூட, அந்த பையில் இருப்பதை பற்றி சொன்னதில்லை - எவரையும் தொட அனுமதித்து இல்லை .

1969 ல் மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, அன்னை இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்தார். அவரை இந்திரா காந்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர் ..

நீங்கள் காண்பது அந்த படம் தான் ..!!

வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின் - மரியாதை நிமித்தமாக , அந்த பையை கொடுங்கள் , நாங்கள் கொண்டு வருகிறோம் என இந்திராஜி கேட்க - அப்போதும் அவர் அந்த பையை மற்றவர் தொட அனுமதிக்கவில்லையாம்..

அத்தோடு, இது ஒன்றாவது என்னோடு இருக்கட்டும். அதையும் பிடுங்க பார்க்கிறீர்களே என்று , கான் அவர்கள் சொல்ல - அந்த இடத்திலேயே கண்கலங்கி விட்டார்களாம் -அன்னை இந்திரா காந்தியும் , ஜேபியும்...

1985 ல் அருமைத் தலைவர் ராஜீவ் காந்தி அழைப்பின் பேரில் இந்தியா வந்தார் எல்லை காந்தி ..

மகாத்மா காந்தி கிண்டல்கள், அதற்கு காஸ்தூர்பா காந்தி கண்டனங்கள் , அன்னை இந்திராஜிக்கு நேர்ந்தது என அனைத்தையும் அறிந்திருந்த ராஜீவ் காந்தி அவர்களும் - கான் சாஹேப் கையிலிருந்த பையை காட்டி " இந்த பையில் அப்படி என்னதான் இருக்கிறது . நான் பார்க்கலாமா .. " என்று கேட்க -

ஒரு சிரிப்பு சிரித்த பாதுஷா - நீ எனது குழந்தை. உனக்கு காட்டா விட்டால் , நல்லாயிருக்காது. மேலும், இந்த கிழவன் அப்படி என்னதான் வைத்திருந்தான் என்று ஏதாவது பேசுவார்கள் . இந்தா, உனக்கு காண்பிக்கிறேன் என்று பையை திறந்து காட்டினாராம்.

அதில், உடுத்தும் உடைகள் இரண்டு செட் இருந்ததாம் ...!!

அந்த மாபெரும் மனிதருக்கு 1989 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது ..!

அவரது நினைவு நாளில் , அவரது நினைவுகளை போற்றுவோம் ...

நன்றி Kundrathu Murugaraj

முஸ்லிம் சமூகத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது,

கவனம் தேவை....!

முஸ்லிம் சமூகத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது, ஆர்எஸ்எஸ் க்காக வேலை பார்க்கின்ற ஆட்கள் முஸ்லிம் அமைப்புகளின் நிரம்பி இருக்கிறார்கள் என்ற நடிகர் பிரகாஷ்ராஜின் கருத்தையும்......

மிரட்டி,அச்சுறுத்தி, அடித்து துன்புறுத்தி வேதனை கொடுமைகள் நிகழ்த்தி, சிலரை ஆசைவார்த்தை காண்பித்து உளவுத்துறைக்காக முஸ்லிம் இளைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அவர்களுடைய கருத்தையும் அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து போக முடியவில்லை...

தேசத்தில் நாசவேலை செய்வதற்காக முஸ்லிம்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த டிஎஸ்பி தேவேந்திர சிங் டெல்லியில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து அவரது கடந்த கால நடவடிக்கைகளை மூடி மறைக்கப்படும் செயல்பாடுகளை வைத்துத்தான் பியூஸ் மனுஷ் மேலும் சொல்கிறார் காஷ்மீர் அப்சல்குரு தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் உளவுத்துறையின் கை வரிசை நீளுகிறது என சதித் திட்டங்களை போட்டு உடைக்கிறார்..

இந்தக் கருத்துக்கள் எல்லாம் போகிறபோக்கில் காற்றோடு காற்றாக கலந்து போகின்ற வார்த்தைகளோ விஷயங்களோ அல்ல. நடிகர் பிரகாஷ்ராஜூம் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷூம் முஸ்லிம் சமுதாயத்தின் செவிப்பறையை கிழித்தெறியும் விதமாக அபாய சங்கை சத்தமாகவே ஊதியிருக்கிறார்கள்..

நம்முடைய விரலை எடுத்து நம்முடைய கண்ணை குத்தும் பாசிசத்தின் பலியாடுகளாக முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை மாற்றி வருகின்ற கவலையான நிகழ்வுகளை நினைக்கும்போது நெஞ்சம் எல்லாம் வெடித்து விம்முகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இளைஞர்களையும் கூட கோடாரி காம்புகள் என்று சொல்லவும் முடியாது தூற்றவும் முடியாது . இவர்கள் உளவுத்துறையின் பலியாடுகள்..

என்ன செய்வது..?
யாரை குற்றம் சொல்ல..?
முஸ்லிம்கள் தேசத்தின் பலியாடுகள்...

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் ஒருபோதும் முஸ்லிம் சமுதாயத்தின் விடயத்தில் மாறப்போவதில்லை.
‌இந்திய அளவில் காங்கிரஸ் அரசு அமைந்தாலும் பிஜேபி அரசு அமைந்திருந்தாலும் எந்த அரசு அமைந்தாலும் அந்த அரசை இயக்குகின்ற உந்து சக்திகளாக அச்சாணி களாக இருப்பவைகள் உளவு அமைப்புகள். அந்த உறவு அமைப்புகள் 90 சதவீதம் முஸ்லிம் வெறுப்பால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் துரதிஷ்டமான உண்மை. முஸ்லிம் வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையாளர்களால் தான் எம்முடைய தேசத்தின் வழிகாட்டும் அதிகார மையம் அமைந்துள்ளதை நினைக்கும்போது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

இவைகளெல்லாம் அவர்களுடைய நீண்டகால செயல்திட்டம். நாடு விடுதலை அடைந்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய தலைமையில் அமைந்த நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தொடங்கிவைத்த தொடக்கப்புள்ளி தான் இன்று வரை நீண்டு கொண்டே வருகிறது..ஆட்சி காங்கிரசுடன் இருக்கலாம் ஆனால் அட்டூழியம் செய்வது உளவு அமைப்புகள் தானே...

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் விழிப்புணர்வோடு பயணிக்க வேண்டிய காலகட்டம் இது.!
எந்த சதிக்கும் பலியாகாமல் அமைப்பாய் திரண்டு தேசத்தின் இறையாண்மையை காக்கும் ஜனநாயக போராளிகளாக களமாடுவதில் மட்டுமே நம்முடைய கவனத்தை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்..
இஸ்லாமிய இளைஞர்களும் முஸ்லிம் அமைப்புகளின் தலைமையும் அபாயத்தை உணர்ந்து. சமூகத்திற்கு சரியான வழிகாட்டுதலையும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வையும் நெறிப்படுத்த வேண்டிய கட்டாய கடமையும் உரிமையும் அமைப்புகளின் தலைமைக்கு உண்டு.

சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டிய கடமை முஸ்லிம் அமைப்புகளின் தலைமைக்கு உண்டு என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்..

பார்ப்பன பாசிசத்தின் எந்தச் சூழ்ச்சிக்கும் பலியாகாமல் தேசம்காப்போம்.!
அமைப்பாய்த் திரள்வோம்..!!

- புளியங்குடி சே செய்யது அலி

#CAA_NRC_Protest #UttarPradesh #uttarpradeshprotests #YogiAdityanath #BJP

https://www.facebook.com/jayapluschannel/photos/a.1672681802765401/2975365229163712/?type=3


உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களின் மீது பழிக்கு பழி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த, அடுத்த நாளில் மட்டும் 16 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். #CAA_NRC_Protest #UttarPradesh #uttarpradeshprotests #YogiAdityanath #BJP

உபி : யோகி ஆதித்யநாத் கீழ் செயல்படும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வழக்கறிஞர்கள் !!!

https://fbwat.ch/1ZshaHAjmrla3dJN


உபி : யோகி ஆதித்யநாத் கீழ் செயல்படும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வழக்கறிஞர்கள் !!!

மக்களே! எம் முகநூல் பக்கத்தை லைக் செய்து ஆதரவு தரவும்!

வேலை இல்லாததால் நாட்டில் தற்கொலை அதிகரிக்கிறது ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை இதுவும் மோடியின் சாதனையா?????

https://www.facebook.com/photo.php?fbid=2747808328621604&set=a.426055930796867&type=3

வேலை இல்லாததால் நாட்டில் தற்கொலை அதிகரிக்கிறது
ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை
இதுவும் மோடியின் சாதனையா?????

எத்தனை திமிர் இந்த பாஸிச ஆரிய கும்பலுக்கு தமிழர்கள் எரும்புகளாம் அவர்கள் வாகனத்தை ஏற்றி கொன்று விடலாம் என்று கிண்லடித்திருக்கிறார் ஆரியபார்பான்

எத்தனை திமிர் இந்த பாஸிச ஆரிய கும்பலுக்கு தமிழர்கள் எரும்புகளாம் அவர்கள் வாகனத்தை ஏற்றி கொன்று விடலாம் என்று கிண்லடித்திருக்கிறார் ஆரியபார்பான்

*🟢🔵வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பாஸ்போர்ட் ... இந்த நாட்டின் குடியுரிமைக்கான, ஆதாரம்..... மும்பை உயர் நீதிமன்றம்*

*🟢🔵வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பாஸ்போர்ட் ... இந்த நாட்டின் குடியுரிமைக்கான, ஆதாரம்..... மும்பை உயர் நீதிமன்றம்* 👆👉👇