நடந்து முடிந்த ஒரு நீண்ட உண்மை வரலாறு
முஸ்லிம்கள் அனைவரும் நேரம் ஒதுக்கி முழுமையாக படித்து அறிந்து கொள்ள வேண்டும்
குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்திய நாட்டை உருவாக்கிய இஸ்லாமியர்களை வெளியேற்ற முயலும்
மத்தியஅரசே..! மதவாத அரசே..!
முகலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை...
#சிந்தனைக்கு......
ஒருவேளை முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்....?!
வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை.
அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
.
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
.
இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.
.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன.
.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள்.
எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும்,
.
அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும்,
.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,
.
இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும்,
.
இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும்,
.
இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை.
.
ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.
.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.
.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று.
.
இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்
மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது
.
அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட,
.
குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரிய போது,
.
இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.
.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.
.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை.
.
அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான்.
.
இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
.
ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான்.
.
வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான்,
ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர்.
இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர்.
ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை.
தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.
.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது.
இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். "ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?" என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர்
.
இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும்.
.
அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.
– பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர், அரசு கல்லூரி
இந்தியாவின உயர்விற்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் அயாராது உழைத்துள்ளனர்
.
இந்தியா என்ற அகண்ட ஒரு நாட்டை உருவாக்கியவர்களும் அதை கட்டியழுப்பியவர்களும் முஸ்லிம்களே !
.
குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடே என்ற பெருமை நிறைந்த முழக்கத்தை நாம் செவியுறுகிறோம்
.
ஆனால் குமரி முதல் இமயம் வரை மட்டும் இல்லாமல் பாகிஸ்தானையும் வங்காள தேசத்தையும் இணைத்த ஒரு அகண்ட பாரதத்தை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.
.முஹலாய மன்னர்களின் வருகைக்கு முன்னால் குமரி முதல் இமயம் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை
நாம் வாழும் தமிழகமே சேர நாடு சோழ நாடு பல்லவ நாடு பாண்டிய நாடு என ஒரு 50 துண்டுகளாகவாவது இருந்திருக்கும்
.
தமிழகமே இத்தனை துண்டுகளாக இருந்தது என்றால் இந்தியா எத்தனை துண்டுகளாக நொறுங்கி கிடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள்
.
இப்படி நொறுங்கி கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்து அகண்ட பாரதமாக உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள்
.
இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் இந்திய சுதந்திரம் பெறப்பட்டது .
.
இஸ்லாமியர்களின் தியாகமும்—-இந்திய சுதந்திரமும்……..
.
இந்திய சுதந்திர போரில் இந்திய நாட்டில் வாழ்ந்த மக்கள் தொகையில் சிறு பாண்மையினராக இருக்கக்கூடிய முஸ்லிம் மக்கள் தங்களின் சதவீதத்தைவிடவும் மிக அதிகமாக தங்களின் இன்னுயிரையும் ,பொருளாதாரத்தையும் இழந்து,
.
ஆங்கிலேயர்களால் பலவித கொடிய இன்னல்களை அனுபவித்தும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வேளையில்,
.
ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்தும் அவர்கள் போடும் எழும்பு துண்டாண சர் பட்டத்திற்காகவும்,அவர்களிடம் அடிமை வேளை பார்க்கவும் முறை வாசல் செய்து வந்தவர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தேறிகளாக வந்த பார்ப்பனர்கள் தான் என்பது உண்மை வரலாறு.
.
இன்று இந்தியாவை இந்து மயமாக்குவோம் என்று முழங்கும் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் அன்று காட்டிக்கொடுப்பவர்களாகவே இருந்தனர்.
.
ஏன் வாஜ்பாயும் கூட காட்டிக்கொடுத்தவர்களில் ஒருவர் அதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது.
.
காட்டிக் கொடுத்து பதவி சுகம் பெற்ற இவர்களால் ஆங்கிலம் பேசுவதும் ஹராம் என்று மார்க்கக் கட்டளையிட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதோடு
.
இன்றைக்கு முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க பார்ப்பன பணியா கும்பல் தங்களின் ஊடகங்கள் வாயிலாக முற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளன.
.
சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாததோடு சுதந்திரப் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்த ஒரு கூட்டம் இந்தியாவை உரிமை கொண்டாடுகிறது.
.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த முஸ்லிம்களுக்கு குடியிருக்க வாடகைக்குகூட வீடு கிடைக்காத நிலை இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது.
.
சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகியும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமையும் வேதனையளிக்கிறது.
.
ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ,எந்த கொள்கையை சார்ந்தவர்களோ அவர்களுக்கு சாதகமான வரலாற்றை கல்வியில் புகுத்தியும்,தனக்கு எதிரான கொள்கையுடையவர்களைப் பற்றி தவறான செய்திகளை புகுத்தியும் உண்மையான வரலாற்றை திரித்து வைத்திருக்கின்றனர்.
.
கர்னாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் அங்கே பகவத் கீதையை கல்விகூடங்களில் புகுத்த முயற்சிக்கிறது.
.
பீகாரில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி நடத்தும் நிதீஷ் குமார் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோவால்கர் உடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது.
.
இது போன்றே முன் சென்ற ஆட்சியாளர்கள் உண்மையான இஸ்லாமியர்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகத்தை மறைத்து காந்தியை சுட்டுக்கொன்றவர்களின் தியாகம் போற்றப்படுகிறது.
.
இதுபோன்ற தவறான செய்திகளை மீண்டும் மீண்டும் (கோயபல்ஸ்தத்துவம்) கேள்விப்படும் மக்கள் (இஸ்லாமியர்கள் உள்பட) இந்த வரலாறு உண்மையாக இருக்குமோ? என்று நினைக்கின்றனர்.
.
அவர்களுக்காக,மற்றும் இஸ்லாமியர்களைப்பற்றி தவறாக விளங்கியுள்ள மற்றவர்கக்கும் உண்மையை விளக்கும் விதமாக இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
.
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட இஸ்லாமியர்களைப் பற்றிய ஒரு சில செய்திகளை அறிந்துகொள்வது நல்லது.
.
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களைப்பற்றி 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
.
இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
.
அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
.
சுதந்திர வரலாற்றில் இந்திய அளவில் இல்லாது தமிழகத்திலும் ஏராளமானவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். .
.
இந்தியாவை கட்டிஎடுழுப்பியது போலவே இந்தியா அணுஆயுத வல்லரசாக உருவாகுவதற்கும் ஒரு முஸ்லிமின் உழைப்பே அடிப்படையானது
.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் முக்கிய பங்களிப்பில் நடத்தபட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகுதான் இந்தியா உலக அரங்கில் வலிமையுடன் உயர்ந்து நின்றது
.
அந்த நிகழ்வுக்கு பிறகு தான் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க ஆரம்பித்தது
.
ஏவுகளை தொழில் நுட்பமானாலும் ராக்கெட் தொழில் நுட்பமானாலும் அணுஆயுத தொழில் நுட்பமானாலும் அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்கியதில் அப்துல் கலாமின் பங்கு அளபெரியது
.
இந்த தொழில் நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்கி இந்தியாவை சிறப்பின் சிகரத்தில் அமரவைத்து உலகில் இருந்து விடை பெற்றிருக்கிறார்
இசுலாமியரான அப்துல் கலாம்...
இந்தியா என்ற ஒரு தேசத்தை உருவாக்கிய இசுலாமியர்களை வெளியேற்ற நினைப்பது
களிறு தன் மீது மண்ணை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Sunday, 15 December 2019
Wednesday, 11 December 2019
பகவத் கீதை சொல்லிக் கொடுப்பது பாலியல் பலாத்காரமா?
*"பகவத் கீதை சொல்லிக் கொடுப்பது பாலியல் பலாத்காரமா?"*
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாக செய்திகள் வந்தவாறு இருக்கும் நிலையில், ஆந்திரமாநிலம் கடப்பாவில் 14 வயது சிறுமி கோவிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரட்டிவாரியப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் அர்ச்சகராக வேலைபார்த்துவருபவர் சத்யநாராயணா. இவருக்கு கடப்பாவைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள இந்துக்களுக்கு சமஸ்கிருதம், பகவத் கீதை, இராமாயணம் கற்றுக்கொடுக்க இந்து அமைப்பினர் வழங்கும் நிதியை ஊதியமாக வழங்கி வருகின்றனர்.
இந்த ஊதியத்தைக் கொண்டு இவர் கடப்பா மாவட்டத்தில் வீடுகட்டி குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார். இவர் ரட்டிவாரியப் பள்ளியில் உள்ள கோவிலில் பகவத்கீதை வகுப்பு நடத்தினார். *கடந்த 5 ஆம் தேதி மாலை "பகவத்கீதை" படிக்கவந்த* அனைவரும் சென்றுவிட 14 வயது சிறுமி தனது பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியிடம் சத்யநாராயணா கைப்பேசியில்
ஆபாசப்படம் காட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக யாரிடமும் கூறினால் கடவுளின் சாபம் உன்னையும், உனது குடும்பத்தாரையும் பிடித்துக் கொள்ளும் என்று மிரட்டியுள்ளார். இந்த நிலையில் தனது பெற்றோருடன் வீடுதிரும்பிய சிறுமிக்கு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது, மருத்துவர் சிறுமியிடம் விசாரணை செய்த போது அர்ச்சகர் கோவிலில் வைத்து பாலியல்வன்கொடுமை செய்த விவரம் தெரியவந்தது, இதனை அடுத்து மருத்துவர் கடப்பா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்தனர். மேலும் குற்றவாளியான அர்ச்சகரைத் தேடி கோவிலுக்குச் சென்றனர்.
இதற்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் காவல்துறை தன்னை தேடுகிறது என்று தெரிந்துகொண்ட அர்ச்சகர் சத்யநாராயாணா தனது குடும்பத்தோடு தலைமறைவானார்.
ரயில் மூலம் நாக்பூருக்கு தப்ப இருந்த அர்ச்சகரை அவரது கைப்பேசி சிக்னலைக் கொண்டு அனனவரம் ரயில் நிலையத்தில் கடப்பா காவல்துறை கைதுசெய்தது. பின்னர் அர்ச்சகரும், அவரது குடும்பத்தினரும் கடப்பா காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். விசார ணைக்குப் பிறகு அர்ச்சகரைக் கைதுசெய்தனர்.
அவரை பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த கோவிலுக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள பல கோவில்களில் அர்ச்சகராகவும், பகவத்கீதை சொல்லித் தருபவராகவும் இருந்துள்ளார். பிற கோவில்களிலும் இது போன்று யாரையேனும் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் *ஆந்திராவில் கோவிலில் வைத்தே - பகவத்கீதை சொல்லித்தருகிறேன் என்று கூறி சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*பகவத் கீதை சொல்லிக் கொடுப்பவர் பாலியல் வன்கொடுமை செய்யலாமோ என்று யாரும் கேட்க முடியுமா?*
பார்ப்பன அர்ச்சகரைக் கேட்டால் அவர் சொல்லக் கூடும்; *பகவான் கிருஷ்ணனே செய்யாத பாலியல் லீலைகளா? அறுபதினாயிரம் கோபிகாஸ்திரிகளிடம் அவர் அடித்த லீலைகள் கொஞ்சமா நஞ்சமா என்று கேட்க மாட்டாரா?*
*காஞ்சிபுரத்தில் மச்சேந்திரன் கோயிலில் தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் கோயிலிலேயே லீலைகள் செய்து விபச்சார விடுதி ஆக்கிவிடவில்லையா? திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் பத்ரிநாத் என்ற பார்ப்பான் பாலியல் வேட்டை நடத்திடவில்லையா?*
*இந்து மதத்தின் கடவுள்களுக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணம் - ஒன்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பக்தியால் ஒழுக்கம் வளராது என்பதுதான் அந்த மாபெரும் உண்மை.*
*நன்றி : "விடுதலை" நாளேடு தலையங்கம் 11-12-2019.*

Tuesday, 10 December 2019
வரலாற்றில்_பொன்னெழுத்துக்களால்_பொறிக்கப்பட_வேண்டிய_இரு_பாராளுமன்ற_உரைகள்
#வரலாற்றில்_பொன்னெழுத்துக்களால்_பொறிக்கப்பட_வேண்டிய_இரு_பாராளுமன்ற_உரைகள்
#காங்கிரஸ்_கட்சியைச்_சேர்ந்த_திரு_மனீஷ்_திவாரி_அவர்கள்
#திமுகவைச்_சேர்ந்த_திரு_தயாநிதி_மாறன்_அவர்கள்
யாராலும் குறிப்பிடப்படாத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை மனீஷ் அவர்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
#ICCPR எனப்படும் சர்வதேச சமூக மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights) இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் இது ஒரு இன்றியமையாத அம்சம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஐநா பொது கவுன்சிலால் டிசம்பர் 19,1966 அன்று கொண்டு வரப்பட்டு, மார்ச் 23,1976 அன்று முதல் அமுலுக்கு வந்த உடன்படிக்கை அது.
#Refoulment என்று சொல்லப்படக் கூடிய, அகதிகள் சொந்த நாட்டிற்குத் திரும்பினால் அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்ற நிலை இருக்குமேயானால், அபயம் அளித்த நாடு அபயம் தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதும் இந்த உடன்படிக்கையின் முக்கிய சாராம்சம்.
இது நாட்டில் உள்ள அகதிகள், குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பது நாம் கவனிக்க வேண்டியதாகும்.
இதை எதிர்த்துப் பேசிய அமைச்சர் அமித் ஷாஜி, மனீஷ் திவாரி அவர்களின் விளக்கத்திற்குப் பின் எதிர்வாதம் புரியாமல் தலை குனிந்து உட்கார்ந்தார்.
#முஸ்லிமாக_இருப்பது_ஓர்_க்ரிமினல்_குற்றமா?
திரு தயாநிதி மாறன் அவர்களின் 13 நிமிட பேச்சின் சாராம்சமாக இந்த ஒற்றைக் கேள்வி அவரது உரையில் வெளிப்பட்டது.
20 கோடி இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் எழும் கேள்வியை அவர் பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார்.
மாலத்தீவில் வாழும் இந்திய வம்சாவளியினர் முதல், இலங்கைத் தமிழர்கள் வரை தொட்டு அவர் ஆற்றிய உரை நம் நன்றிக்கு உரியது.
திருமனிஷ் திவாரி அவர்களின் உரை
https://m.facebook.com/story.php?story_fbid=2642464335866222&id=351616078284404
திரு. தயாநிதி மாறன் அவர்களின் உரை
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=0qQaSUhUMjs

சித்தார்த் நாட்டைபற்றி உண்மையான அக்கறை
சித்தார்த் நாட்டைபற்றி உண்மையான அக்கறையுடனும் கவலையுடனும்
உள்ளதை பேசுகிறார் இந்த துணிச்சலும் தையிரியமும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
உள்ளதை பேசுகிறார் இந்த துணிச்சலும் தையிரியமும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
NRC இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!
NRC இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!
" "இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே." என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார்.
"தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கான (சிஏபி) எதிர்ப்பானது நம் நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராக அமையும். அதனை தலைமை தாங்கி வழிநடத்தவும் நான் தயார்." என்று கடந்த வெள்ளிக் கிழமையன்று (5-12-19) மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
"
"இது நமது தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக மாறும். நாம் போராடியே ஆக வேண்டும், நாம் போராடியே தீருவோம். இறுதி கட்டம் வரை போராடுவோம். இத்தனை காலமாக மக்களை வழிநடத்தி வந்துள்ளோம். இந்த முறையும் (இந்த பிரச்னையிலும்) வழி நடத்துவோம். அதுவும் முன்னிருந்து வழி நடத்துவோம். இதன் (என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றின்) இயல்பு தன்மையும் சாராம்சமும் பாபசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய நம் நாட்டின் அரசியலமைப்புக்கே எதிரானது." என்று மயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மம்தா பானர்ஜி முழங்கினார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமும் அம்பேத்கர் நினைவு தினமும் ஒருங்கே டிசம்பர் 6 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட சன்ஹதி திவாஸ் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் மம்தா பானர்ஜி இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைப் பற்றி பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலம் அடிப்படை பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை போன்றவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப பாஜக அரசு முயற்சிப்பதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
நீங்கள் உங்கள் உடலின் கையையோ, காலையோ துண்டிப்பீர்களானால், உங்கள் உடலால் எப்போதும் போல சரிவர இயங்க முடியாமல் போகும். அதே போல தான் மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த அடையாளத்தின் அடிப்படையிலோ நீங்கள் -உடலில் (நாட்டில்) வேறுபாடு காட்ட ஆரம்பித்தாள் நம் நாடு இத்தனை ஆண்டுகளாக எப்படி இருந்து வந்ததோ அப்படிபட்ட நாடாக இருக்காது. என்ஆர்சி என்பது உடலில் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பதற்கு சமானம் . சிஏபி என்பதோ உடலில் தலையை துண்டிப்பதற்கு சமானம் என்று அவர் மேலும் கூறினார்.
1947 அல்லது 1971 ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் மக்களின் குடியுரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம்..? ஒரே இரவில் இவர்கள் அனைவரையும் அந்நியநாட்டவர் என எப்படி அறிவிப்பீர்கள்.? 6 ஆண்டுகள் வரை அந்நிய நாட்டவராக தங்க வைப்பீர்கள், பிறகு சில பாகுபாடான சட்டங்களின் அடிப்படையில் சிலருக்கு மட்டும் குடியுரிமையை வழங்குவீர்கள்? இதையெல்லாம் முக்கியத்துவத்துடன் மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக எதிர்பார்கிறதா? மேற்குவங்கத்தில் என்ஆர்சி யை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டோம்.
மேலும் இந்தியா போன்றதோர் மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை ஒருபோதும் வழங்கப்பட கூடாது என மம்தா கூறினார்.

பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா
பாராளுமன்றத்தில் தூள் கிளப்பிய தயாநிதி மாறன்.
பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா
பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா
குடியுரிமை சட்டம்
குடியுரிமை சட்டம் அமலில் வந்தால் நான் முதலில் முஸ்லிம் ஆவேன் .இரண்டாவது குடியுரிமையை நிருபிக்க எந்த ஆவணத்தையும் சமர்பிக்க மாட்டேன். முன்றாவது இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு எந்த முஸ்லிமையும் கைது செய்தால் நானும் அவர்களில் ஒருவன் ஆவேன்!
-ஹர்ஷ் மந்தர்!
(குஜராத் படுகொலைகள் 2002இல் நடந்தபோது அம்மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஹர்ஷ் மந்தர். அந்த நிகழ்வுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் சமூகப் பணியாற்றி வருகிறார்)

Monday, 2 December 2019
102:2
حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் wவரை.
(அல்குர்ஆன்: 102:2)
Sent from my iPhone
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் wவரை.
(அல்குர்ஆன்: 102:2)
Sent from my iPhone
Tuesday, 26 November 2019
இவர்தான் ராஜதந்திரி
இவர்தான் ராஜதந்திரி
கடந்த வாரம் சிவசேனா கட்சி தாங்கள் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட போது, காங்கிரஸ் தலைவர் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவளிக்காமல் காலம் தாழ்த்தினார். காரணம், பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்களும், எம்,எல். ஏக்களும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவசரமாக செயற்குழு கூட்டப்பட்ட பின்பும் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் சரத்பவரின் ஆலோசனைப்படி குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் சிவசேனாவிற்கு ஆதரவளிக்க முன்வந்தார். இந்த காலகட்டத்தில் தான் ஆளுநர் ஆட்சி, பாஜக இரவோடு இரவாக பதவியேற்றது போன்ற கூத்தெல்லாம்..
கடந்த வாரம் மட்டும் சோனியா காந்தி அவசரமாக எதாவது முடிவெடுத்திருந்து சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தால், மகாராஷ்ட்ரியாவில் காங்கிரசில் அதிருப்தி எம்எல்ஏகள் உருவாகியிருப்பார்கள்.காங்கிரஸ் கட்சி உடைந்திருக்கும் அவர்களுக்கு தூண்டில் போட்டிருக்கும் பாஜக. ஆனால் அதற்கான வாய்ப்பை சோனியாதான் தடுத்தெறிந்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆட்சிக்கு ஆசைப்பட்டு சிவசேனாவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியையும் தேசியத்தை காங்கிரசையும் எல்லா தரப்பு மக்களும் தூற்றியிருப்பார்கள். எந்தவித பேச்சுக்கும் வழிவகுக்கும் அமைதியாக சாதித்திருக்கிறார் சோனியா. உண்மையிலேயே இவர்தான் ராஜதந்திரி
இப்படிப்பட்ட சூழலில் தான் , ஆட்சியை பிடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய ஒட்டு மொத்த இமேஜியையும் இழந்திருக்கிறது பாஜக. அதோடு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளை தொங்கலில் விட்ட , பாஜகவை இனி ஒரு போதும் எவரும் ஆதரிக்க முன் வர மாட்டார்கள். 'நண்பனின் பகை மிகவும் ஆபத்தானது, என்று சொல்வார்கள் அதுபோல பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த சிவசேனாவும், பாஜகவும் இன்று எதிரெதிர் துருவத்தில்... பாஜகவின் அஸ்தமனம் மஹாராஷ்ட்ராவிலிருந்து ஆரம்பமாகப்போகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் முயற்சித்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் கொண்டு வரமுடியும். அதற்காகத்தான் வரும் நவம்பர் 30ல் சோனியா தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இந்திய அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும்.
-ஏஜிஎம்

Subscribe to:
Posts (Atom)