#வரலாற்றில்_பொன்னெழுத்துக்களால்_பொறிக்கப்பட_வேண்டிய_இரு_பாராளுமன்ற_உரைகள்
#காங்கிரஸ்_கட்சியைச்_சேர்ந்த_திரு_மனீஷ்_திவாரி_அவர்கள்
#திமுகவைச்_சேர்ந்த_திரு_தயாநிதி_மாறன்_அவர்கள்
யாராலும் குறிப்பிடப்படாத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை மனீஷ் அவர்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
#ICCPR எனப்படும் சர்வதேச சமூக மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights) இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தில் இது ஒரு இன்றியமையாத அம்சம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஐநா பொது கவுன்சிலால் டிசம்பர் 19,1966 அன்று கொண்டு வரப்பட்டு, மார்ச் 23,1976 அன்று முதல் அமுலுக்கு வந்த உடன்படிக்கை அது.
#Refoulment என்று சொல்லப்படக் கூடிய, அகதிகள் சொந்த நாட்டிற்குத் திரும்பினால் அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்ற நிலை இருக்குமேயானால், அபயம் அளித்த நாடு அபயம் தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதும் இந்த உடன்படிக்கையின் முக்கிய சாராம்சம்.
இது நாட்டில் உள்ள அகதிகள், குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கும் பொருந்தும் என்பது நாம் கவனிக்க வேண்டியதாகும்.
இதை எதிர்த்துப் பேசிய அமைச்சர் அமித் ஷாஜி, மனீஷ் திவாரி அவர்களின் விளக்கத்திற்குப் பின் எதிர்வாதம் புரியாமல் தலை குனிந்து உட்கார்ந்தார்.
#முஸ்லிமாக_இருப்பது_ஓர்_க்ரிமினல்_குற்றமா?
திரு தயாநிதி மாறன் அவர்களின் 13 நிமிட பேச்சின் சாராம்சமாக இந்த ஒற்றைக் கேள்வி அவரது உரையில் வெளிப்பட்டது.
20 கோடி இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் எழும் கேள்வியை அவர் பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார்.
மாலத்தீவில் வாழும் இந்திய வம்சாவளியினர் முதல், இலங்கைத் தமிழர்கள் வரை தொட்டு அவர் ஆற்றிய உரை நம் நன்றிக்கு உரியது.
திருமனிஷ் திவாரி அவர்களின் உரை
https://m.facebook.com/story.php?story_fbid=2642464335866222&id=351616078284404
திரு. தயாநிதி மாறன் அவர்களின் உரை
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=0qQaSUhUMjs
No comments:
Post a Comment