Tuesday, 31 December 2019

*இஸ்லாம் என்றால் என்ன?

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

▪களவெடுக்கக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விடயம் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪மிருக வதை கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

றசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை,அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!
ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!


Sent from my iPhone

No comments:

Post a Comment