Sunday, 25 May 2014

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாணமை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.

துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.

இப்பரிசோதனை முகாமில் டயர், ஏசி, பிரேக், பேட்டரி உள்ளிட்டவைகள் முக்கியமாக பரிசோதிக்கப்பட்டு தகுதி வாய்ந்த டெக்னீசியன்கள் உரிய ஆலோசனை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன பரிசோதனை முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 050 269 53 53 எனும் அலைபேசி எண்ணில் முன் பதிவு செய்து தங்களது வருகையினை தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அமீரகத்தில் கோடைக்காலத்தில் நடைபெறும் வாகன விபத்துகள் அதிக அளவில் டயர்களின் முறையான பராமரிப்பின்மை காரணமாக நடைபெறுவதால் பிரத்யேக இம்முகாமிற்கு அப்கிரேட் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.








டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால்மிகையாதுபாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானதுஎனவே,வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும்எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால்உங்கள்வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும்காணலாம்உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும்அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாதுஅடுத்ததாக, 215/65R14 89H M+S என்றுகொடுக்கப்பட்டிருந்தால்அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில்குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும்இதுதவிரசாதாரண டயர்கள் Aமற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறதுஅடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால்அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டதுஅடுத்து இந்த வரிசையில்கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும்வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டுஎழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறதுமேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும்அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்இதேபோன்றுஓல்டு ஸ்டாக் டயரைகண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில்கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும்இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும்குறிக்கும்அதாவதுமார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம்மேலும்,இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின்குறியீடுஅடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடுஎதிர்காலத்தில் டயரில்ஏதாவது பிரச்னை ஏற்பட்டால்குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டுதிரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:

P-150 Kmph
Q-160 Kmph
R-170 Kmph
S-180 Kmph
T - 190 Kmph
H - 210 Kmph
V - 240 Kmph
W - 270 Kmph
Y - 300 Kmph
ZR - over 240 Kmph

பின் குறிப்பு)
டயரில் காற்று இருகின்றதா என்று பார்க்கவும்,,,,





Subject:
டயர்கள் பற்றிய தவறான எண்ணங்களும், அதன் உண்மைகளும்...!!



வாகனங்களின் மைலேஜ், நிலைத்தன்மை போன்றவற்றை அளிப்பதில் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், டயர்களை பராமரிப்பதில் வாகன உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

இந்த நிலையில், டயர்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் பலர் தவறான சில எண்ணங்களை வைத்துள்ளனர். காலங்காலமாக இதனை நம்பியும் சில தவறுகளை செய்கின்றனர். அந்த தவறான எண்ணங்களையும், அதன் உண்மையான பயன்பாடு மற்றும் காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதலில் தவறான எண்ணத்தையும், அதன் உண்மை அல்லது தீர்வை தொடர்ந்து கொடுத்துள்ளோம். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

காற்றின் அழுத்தம்
டயர்களின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ எனப்படும் டயர்களுக்கான காற்றின் அளவையே சிலர் சரியானதாக கருதுகின்றனர். ஆனால், அது சரியானதா

சரி எது?

டயர்களின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ அளவு டயரின் அதிகப்பட்ச காற்றின் அழுத்த்தை தாங்கும் திறனையே குறிக்கிறது. எனவே, உங்களது வாகனத்துககான பரிந்துரைக்கப்பட்ட அளவை தெரிந்து கொள்ள காரின் கதவின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றி காற்று நிரப்புங்கள்.


வால்வு மூடி

ட்யூபிலிருந்து காற்று வெளியேறுவதை வால்வு மூடி தடுக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.


சரி எது?

ஆனால், வால்வு மூடி காற்று வெளியேறுவதை தடுக்காது. தூசி, தண்ணீர், சேறு உள்ளிட்டவை வால்வுக்குள் புகாதவாறு தடுப்பதற்காகவே மூடி கொடுக்கப்படுகிறது.


அதிக கிரிப்புக்கு...

சிலர் டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அதிக கிரிப் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.


சரி எது?

காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது டயரில் இருக்கும் பட்டன்கள் தேய்மானம் அதிகரிக்கும். மேலும், பட்டன்களுக்கு இடையிலான இடைவெளி குறையும் என்பதோடு, தண்ணீர் எளிதாக வெளியேறாது என்பதால், அதிகம் வழுக்கும் வாய்ப்பு உள்ளது. மைலேஜும் குறையும்.


கோடை காலத்தில்...

கோடை காலத்தில் டயரில் இருக்கும் காற்று விரிவடையும் என்பதால் சில பிஎஸ்ஐ வரை குறைவாக காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.


சரி எது?

டயரில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்போது டயரில் அதிக உராய்வு காரணமாக வெப்பம் அதிகரிக்கும். இதனால், டயரின் சுவர்களில் பாதிப்பு ஏற்படும். கோடை காலங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட பிஎஸ்ஐ அளவிலேயே காற்று நிரப்புங்கள்.


குளிர்காலத்தில்...

மழை அல்லது குளிர் காலங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டயர்களில் குறைவான காற்றழுத்தம் இருந்தால், சிறப்பான கையாளுமை கிடைக்கும் என்று கருத்து நிலவுகிறது


சரி எது?

மழை அல்லது குளிர் காலங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக காற்றழுத்தம் இருப்பது நல்லது. வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும்போது 2 பிஎஸ்ஐ வரை காற்றழுத்தத்தை கூடுதலாக வைக்க வேண்டும். இல்லையெனில் டயரின் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்பதோடு, பாதுகாப்பு பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.


டிரெட் அமைப்பு

உலர்வான தரைகளில் சிறப்பான கையாளுமைக்கு டிரெட் அமைப்பு மிக முக்கியமானதாக பலர் கருதுகின்றனர்.


சரி எது?

டிரெட் அமைப்பை வைத்து காரின் கையாளுமையை நிர்ணயிப்பது கடினம். அதன் முக்கிய பயன்பாடு ஈரப்பதம் மிகுந்த சாலைகளில் செல்லும்போது, டிரெட்டுக்கு இடையிலான நீரை வெளியேற்றுவதற்காகவே கொடுக்கப்படுகிறது.


டயர் தரம்

கைகளை வைத்து அழுத்தி பார்த்தே டயர் கடினமான கட்டமைப்பு கொண்டதா அல்லது மென்மையான கட்டமைப்பு கொண்டதாக என்று தெரிந்துகொள்ளலாம் என்பது பலரின் எண்ணம்.


சரி எது?

டயரின் மேற்புறத்தை வைத்து கடிமானதா அல்லது மென்மையானதா என்று கூற முடியாது. ஏனெனில், டயருக்குள் பல்வேறு அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.


குளிர்கால டயர்கள்

பனிப்பொழிவு இல்லையெனில், பிரத்யேக அமைப்பு கொண்ட குளிர்கால டயர்கள் தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர்.


சரி எது?

பனிபடர்ந்த சாலைகள், பனிப்பொழிவு மிகுந்த நேரங்களில் மட்டுமே பயன்படும் என்பது மடமை. வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்போது குளிர்கால டயர்களை பயன்படுத்துவதே நல்லது. அதன் டிரெட் அமைப்பும், விசேஷ ரப்பரும் சிறப்பான ரோடு கிரிப்பை தரும்.


ரேஸ் டயர்

ரேஸ் கார் மற்றும் பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்களில் டிரெட் இல்லாததால் அதிவேகத்தில் செல்ல முடியும் என்ற நினைப்பு இருக்கிறது.


சரி எது?

ஃபார்முலா- 1 மற்றும் மோட்டோஜீபி பந்தயங்களுக்கான கார் மற்றும் பைக்குகளில் டிரெட் இல்லாத டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உலர்ந்த தரையில் சிறப்பான கையாளுமையை கொடுக்கும் என்பதாலேயே பயன்படுத்தப்படுகின்றன.

 பராமரிப்பு

சர்வீஸ் விடும்போது காற்றின் அழுத்தத்தை பார்த்தால் போதுமானது என்று சிலர் நினைக்கின்றனர்.


சரி எது?

உருளும்போது டயர்களில் இருந்து சிறிய அளவிலான காற்று வெளியேறும். எனவே, வாரம் ஒரு முறை டயர்களில் காற்றின் அழுத்தத்தை சரிபார்ப்பது நல்லது.




 நன்றி : தட்ஸ் தமிழ்

Saturday, 24 May 2014

துபாய் கிளை சார்பாக ART OF PARENTING குழந்தைகள் வளர்ப்பு முறை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக ART OF PARENTING குழந்தைகள் வளர்ப்பு முறை நேற்று 23.05.2014 மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 மணிவரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் மாலை சரியாக 05:00 மணியளவில் ஆரம்பிக்க பட்டது. இதில் சகோதரர் ஹுசைன் பாசா  அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் சிறப்பான முறையில் பயிர்ச்சி அளித்தார்கள். இதில் ஆர்வமுடன் 60க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். இதில் குழ்ந்தை வளர்க்கும் விதம் கையாளும் முறை, குழ்ந்தைகளிடம் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் முறை போன்ற வற்றை சிறப்பான முறையில் எடுத்து கூறினார்கள்.  இந்த பயிற்சி வகுப்பில் அபுதாபியில் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர். முஹமது லாபிர், சீனி பாவா பஹுருதீன், பேட்டை தாதா பீர் முகம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். 

மேலும் கலந்து கெண்ட அனைத்து இது மாதிரியான பயிர்ச்சி வகுப்பு யு எ  இ அனைத்து இடத்திலும் நடத்த வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 


இறுதியாக சகோதரர் A.S.இபுராகிம்  அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 





Monday, 12 May 2014

துபாயில் கடந்த 6 மதமாக நடைபெற்ற பேச்சுப்பயிற்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 6 மதமாக நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று 12.05.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு ஆரம்பிக்க பட்டது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் குவைத் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர் அப்துல் பாசித் புஹாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கலந்து கெண்ட அனைத்து பேச்சாளர்களும் சுமார் 10 நிமிடம் அவர்களது தலைப்பின் கீழ் பேசினார்கள். சகோதரர் அப்துல் பாசித் புஹாரி அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களும் எவ்வாறு  தாவ பணி செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பு சுமார் ஆறுமாத காலமாக அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் சுமார் 100 மேற்ப்பட்ட  தலைப்புகளில் உரையாற்றபட்டது. 

மேலும் சகோதரர் அப்துல் பசித் புஹாரி அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் ஒரு சுருக்கமான உரை அளித்து இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு கலந்து கொண்டதுக்கான ஆவணம் பரமக்குடி.அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக கொடுக்க பட்டது.


சகோ. முஹம்மது ரபி 


சகோ. இர்பான் அலி 
சகோ. சபியுல்லாஹ் 
சகோ. மதுக்கூர் ராவுத்தர் ஷா 

சகோ. சையது முஹம்மது 



சகோ. அப்துல் ரஹ்மான் 


முகம்மது இர்பான் அலி 



சகோ. மதுக்கூர் ஹாஜா

மேலும்  சகோ. மதுக்கூர் ஹாஜா இந்த பணி இன்ன பிற இடங்களிலும் நடைபெறவேண்டும் என கேட்டு கொண்டார்கள்..


சகோ. இபுராகிம் 
இறுதியாக இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பின் அமீர் திருச்சி இர்சாத் அஹ்மது அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 

Sunday, 11 May 2014

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கிச் சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய்ப் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்துச் சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்துச் சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டு போன கண்களும்
இருண்டு போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசை பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குத்தானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய்த் துடைத்துவிட்டு;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

Thursday, 8 May 2014

உம்ரா செய்யும் முறை மற்றும் பயிற்ச்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உம்ரா செய்யும் முறை மற்றும் பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹுவின் மாபெரும் உதவியால் பரமக்குடி அன்னை ஆயிஷா தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய தாவ பணிகள் செய்துகொண்டு இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்,



அதில் உம்ரா செல்பவர்களுக்கு அல்குரான் மற்றும் நபிவழிபடி உம்ரா செய்யும் முறை மற்றும் பயிற்ச்சி வகுப்பு நடைபெறும். துபாய் மற்றும் U.A.E லிருந்து உம்ரா செல்பவர்கள் தொடர்பு கொள்ளவும். 

தொடர்புக்கு இபுராஹிம் 971 50 2933713.

இன்ஷா அல்லாஹ் அதற்க்கு உரிய முறையில் பயிற்ச்சி ஏற்ப்பாடு செய்யப்படும். 

தலைவர்-துபாய்
அன்னை ஆயிஷா தர்ம அறக்கட்டளை
பரமக்குடி

Wednesday, 7 May 2014

அழைப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அழைப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:

1) அழைப்பு பணி செய்பவர்கள் முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்பக் காலத்தில் இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

இதற்கு உதாரணமாக: -

அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.

தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.

இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.

எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.

நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

5 விஷயங்களை,5 விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்

5 விஷயங்களை,5 விஷயங்களுக்கு முன் அரிதாகக் கருதுங்கள்
1.முதுமைக்கு முன் இளமையையும்

2.நோயக்கு முன் உடல் நலத்தையும்

 3.வறுமைக்கு முன் செல்வத்தையும்


4.வேலையில் ஈடுபடும் முன் ஒய்வையும்
 5.மரணம் வரும்முன் வாழ்க்கையையும்
அரிதாகக்கருதி பயன்படுத்திக்கொள்ளுங்கள்

அன்புடன்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்