Friday, 18 December 2020

ஆவண எழுத்தர்களுக்கு முறையாக லைசென்ஸ் வழங்க வேண்டும் ஏன்? புரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்!!

ஆவண எழுத்தர்களுக்கு முறையாக லைசென்ஸ் வழங்க வேண்டும் ஏன்? புரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்!!

1) நாம் இப்போ பத்திர அலுவலகத்திற்கு செல்லும் பொழுது பத்திர அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தர்கள் டாக்குமென்ட் ரைட்டர் என்று பெயர் போட்டு கிரையம் பத்திரம் ,விடுதலை பத்திரம், தான பத்திரம் தான செட்டில்மென்ட் பத்திரம் ,செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் என்று பாத்திரங்கள் பெயர் எல்லாம் வரிசையாக போட்டு பத்திரங்கள் எழுதி அல்லது அடித்து தரப்படும் அல்லது தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

2) இப்படி ஆவணம் எழுதி ஆவணம்தருபவர்களுக்கு பதிவுத்துறை உரிமம் அதாவது லைசென்ஸ் கொடுக்கிறது அந்த லைசென்ஸ் பெற்றவர்கள்தான் ஆவண எழுத்தர்கள் ஆகும்.

3)ஒரே ஒரு சார்பதிவக எல்லைக்குள் ஆவண எழுத்தர் என்றால் C லைசெனஸ் சார்பதிவு  மாவட்டதிற்கு ஆவண எழுத்தர் என்றால் B லைசென்ஸ் மாநிலம் முழுமைக்கும் ஆவண எழுத்தர் என்றால் A லைசென்ஸ் என்று ஆவண எழுத்தர்களை வகைபடுத்தி இருக்கிறது பதிவுதுறை.

4) ஒரு ஆவண எழுத்தர் அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகத்தில் இருந்து டிகிரியும் தமிழ் ஆங்கிலம் கீழ்நிலை அல்லது உயர்நிலை தேர்வில் தேர்ச்சியும் கணிணி பயன்பாட்டில் டிப்ளமோவும் தேவைபடுவதாக பதிவுதுறை சொல்கிறது.

5) சரி ஒரு ஆவண  எழுத்தருக்கு கட்டாயம் என்னென்ன தெரிந்து இருக்க வேண்டும்

பதிவு சட்டம் 1908 முழுமையாக தெரிந்து இருத்தல் வேண்டும். முத்திரைதாள் சட்டம் 1899 ம் அதன் கீழ் இயற்றபட்ட விதிகள் தெரிந்து இருக்க வேண்டும்.

6) சொத்துமாற்று சட்டம் 1882 அதனுடைய  மத்திய சட்டமான  4/1882 சட்டமும் நிலசீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961அதனுடைய தமிழ்நாட்டு சட்டம் 58/1961)  தமிழ்நாடு நகர்புற நில உச்சவரம்பு சட்டம்1978 அதனுடைய தமிழ்நாட்டு சட்டம் 24/1978 போன்ற சட்டங்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.

(மேற்படி சட்டங்களை புரியும்படி பாமர மொழியில் தினதந்தி நடையில் நிலம் உங்கள் எதிர்காலம் தெரிய வேண்டிய சூட்சுமங்கள் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி வகுப்பு பாண்டிசேரியில் மாதந்தோறும் நடத்துகின்றேன் விருப்பபடுகிறவர்கள் கலந்து கொள்ளவும்: தொடரபுக்கு:8110872672.

7) ஆவண எழுத்தர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல அரசின் பதிவுதுறையின் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள்  மட்டுமே உரிமம் வழங்கும் பதிவுத்துறை தலைவர் அல்லது அவர் நியமிக்கும் அதிகாரிகள் வைக்கின்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே ஆவண எழுத்தர்களாக அங்கீகரிக்கப் படுகின்றனர்.

8) எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆவண எழுத்தர்களுக்கு அரசு தேர்வு நடத்தியதாகவும் புதிய ஆவண எழுத்தர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று இதுவரை யாமறியேன் பராபரமே

9) இப்பொழுது எல்லா பத்திர அலுவலகங்களிலும் இருக்கின்ற ஆவண எழுத்தர்கள் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் தான் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

10) அப்பா தாத்தாவினுடைய ஆவண எழுத்தர் உரிமத்தை வைத்து பலர் சார்பதிவகத்திற்கு வெளியே கடை நடத்துகின்றனர்.பலருக்கு ஆவண எழுத்தர் வேலையில் நல்ல அனுபவம் இருக்கும் ஆனால் இதுவரை தேர்வு வைத்து லைசெனஸ் தராத்தால் அங்கீகாரம் பெறாத ஆவண எழுத்தராகவே இன்று வரை தொடரந்து கொண்டு இருக்கிறார்கள்.

11) இன்னும் சொல்லப்போனால் லைசென்ஸ் பெற்ற மனிதர்களை விட லைசென்ஸ் பெறாத ஆவண எழுத்தர்கள்தான் மிகச் சிறப்பாகவே ஆவணங்களை உருவாக்குகின்றனர் .

12) ஆவணங்களை சாதாரண பொதுமக்களே உருவாக்கலாம் என்று பதிவுதுறை விதிகளை உருவாக்கி உள்ளது அதற்காக சில ஆவண மாதிரிகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது அதைபார்த்து ஆவணங்களை தயாரித்து கொள்ள சொல்கிறது.

13) இந்த முடிவை பதிவுதுறை இடை தரகரை ஒழிப்பதற்காக எடுத்ததாக சொல்லபடுகிறது. ஆனால் இந்த option ஐ பயன்படுத்திதான் நிறைய பதிவு செய்யாத ஆவண எழுத்தர்கள் பொதுமக்களே ஆவணங்களை தயாரிப்பது போல் தயாரிக்கறார்கள்

14) ஆவணங்களை எந்த ஓரு சட்ட அறிவும் இல்லாத பொதுமக்கள் தயாரித்தல் கூடாது என்பதே என் கருத்து .ஏன் என்றால் பத்திரங்கள் ஒரு சட்ட ஆவணம் அதற்கென்று ஒரு சட்ட அந்தஸ்து இருக்கிறது  ஆவணங்களில் சட்ட நுணுக்கங்கள் தெரியாமல் எழுதிவிட்டு பிற்காலத்தில் சொத்து சிக்கல்களில் சட்ட குழப்பங்களில் பலர் தவித்து கொண்டு இருப்பதை பார்த்துகொண்டு இருக்கிறேன்.

15) ஆவணங்களை வழக்கிறஞர்கள் தயாரிக்கலாம் ஆனால் வழக்கறிஞர்களின் இரப்பர் ஸ்டாம்பை மட்டும் பயன்படுத்திகொண்டு இருக்கும் பதிவு செய்யாத ஆவண எழுத்தர்களை பலர் இன்னும் இருக்கிறார்கள். இப்படி ஆவண எழுத்தர்கள் துறை இயங்கி கொண்டு இருக்கிறது.

16) உண்மையில் பதிவுதுறை விதிகள்படி ஆவண எழுத்தர் இடைதரகராக செயல்பட கூடாது ஆவணபதிவில் சாட்சியாக இருக்க கூடாது பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் எவருடனும் எந்த உறவும் வைத்துகொள்ள கூடாது.ஆவண எழுத்தர்கள் சார்பதிவாளர் அழைக்காமல் பதிவு அலுவலகத்தில் வர கூடாது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடாது. ஈசி copy of the document அவர் பெயரில் கேட்டு தாக்கல் செய்ய கூடாது பதிவு செய்யும் ஆவணத்தையோ ஈசீயையோ  காப்பி ஆப் தி டாகுமெண்டையோ திரும்ப பெறுதல் கூடாது .போன்ற கூடாதுகள் விதிகளாக  இருக்கிறது

17) இந்த விதிகள் எல்லாம் களநிலவரப்படி சாத்தியம் இல்லாத நிலையில்தான் இருக்கிறது. இந்த விதி எல்லாம் வேலைவாய்பாக நினைக்கும் எந்த ஆவண எழுத்தருக்கும் பிரச்சினை இல்லை அவர்கள் கீழ்படிவார்கள்.

18) இவ்வளவு கூடாதுகள் விதிகள் இருப்பது சார்பதிவு அலுவலக அரசு ஊழியர்களுக்குதான் டாப் டூ பாட்டம் வரை தான் களநிலவரபடி கஷ்டம் அதனால் புதிய ஆவண எழுத்தர்களை  உருவாக்காமல் பதிவுதுறை தள்ளி போட்டு கொண்டே வருகிறது என்பது என் புரிதல்.

19) பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்ககூடிய ஆவண உருவாக்கும் தொழிலையும் தவறான பிழையான ஆவணங்கள் தயாரிக்கபடுவதை தடுத்து நல்ல ஆவணங்களை பெற்று பொதுமக்கள் பயன்பெறுவதையும் பதிவுதுறையே தாமதபடுத்திகொண்டு இருக்கிறது.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஆவணம் #எழுத்தர்கள் #டாக்குமென்ட் #ரைட்டர் #கிரையபத்திரம் #விடுதலைபத்திரம் #தானபத்திரம்  #செட்டில்மென்ட்பத்திரம்  #பாகப்பிரிவினைபத்திரம் #ஆவணம்  #பதிவுத்துறை #உரிமம்  #சார்பதிவகம் #அங்கீகாரம் #வழக்கறிஞர் #இரப்பர் #ஸ்டாம்ப் #document #driters #document #writer #copyright #licensor #description #settlement #measurement #distribution #registration  #Relative #authority  #rapper #stamp


--
Thanks & Regards

Friday, 11 December 2020

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பில் நேற்று தினத்தந்தி தலையங்கம் எழுதியது. 

அதே தலைப்பில், இன்று தினமலர் சிந்தனைக் களம் பகுதியில் அரைப்பக்கக் கட்டுரை வெளியிட்டு இருக்கின்றது.

எனவே, நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அகம் எழுதிக் கொடுத்ததை, 
இவர்கள் இருவரும் வெளியிட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை புலப்படுகின்றது. 

அண்மைக்காலமாக, இந்திய நாடுகளின் ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திரர், இந்தக் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். 
அதை ஆதரித்து, அடிமை ஊடகங்கள் முழங்குகின்றன. 

இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கு 
ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்படுகின்றது. 
அதுபோல, மாநிலங்களுக்கும் சேர்த்து நடத்த வேண்டும் என்கிறார்கள். 

முதலில் அப்படித்தானே நடந்தது? 
அந்த நிலை மாறியது எப்படி? 

எதிர்க்கட்சி மாநில அரசுகள் அமைவதை 
காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உலகத்திலேயே முதன்முறையாக, 
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 1959 ஆம் ஆண்டு, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்று, 
சங்கரன் தலைமையில் ஆட்சி அமைத்தார்கள். 

அந்த அண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் இந்திரா காந்தி.
 தன்னுடைய தலைமையில் காங்கிரஸ் கட்சி தோற்று விட்டதே என்று பொருமினார் 
கேரளாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 
தந்தை நேருவுக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து, சங்கரன் ஆட்சியைக் கலைத்தார்கள். 

அதே இந்திரா காந்தி, முதன்மை அமைச்சர் ஆனபோது, எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சி ஆட்சி நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 

1975 ஆம் ஆண்டு, இந்தியாவின் 25 மாநிலங்களில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான். 

அந்த அரசுகளுக்கு ஓராண்டு ஆட்சி நீட்டிப்புகொடுத்து, தான் ஒரு தான்தோன்றி என்பதை உறுதி செய்தார் இந்திரா. 

1976 ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து விட்டார். 

அதன்பிறகு வந்த மொரார்ஜி தேசாய், 
காங்கிரஸ் அரசுகள் கூடுதலாக ஓராண்டு பொறுப்பு வகிப்பதாகக் கூறி, பத்து மாநில அரசுகளைக் கலைத்தார்.

அது சரியான நடவடிக்கை. 

இரண்டரை ஆண்டுகளில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 

1980 தேர்தலில் இந்திரா வென்றார். 
ஆட்சிக்கு வந்த உடனேயே எந்தக் காரணமும் சொல்லாமல், பத்து மாநிலங்களில் இருந்த ஜனதா கட்சி அரசுகளைக் கலைத்து விட்டார். 
தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார். 

தொடர்ந்து அரசு அமைப்புச் சட்டத்தைக் 
கொன்று குழிதோண்டிப் புதைத்தார். 

எனவேதான், மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

மற்றொரு கேடு, 
ஆளுநர் பொறுப்பு  வகிக்கின்ற ஆட்டுத்தாடிகள். 

அமெரிக்க மாநிலங்களில், ஆட்டுத்தாடிகள் கிடையாது. அங்கே, மாநில அரசை, ஒன்றிய அரசு கலைக்க முடியாது. 

எந்தக் காரணத்தைக் கொண்டும், மாநில அரசுகளைக் கலைக்க முடியாது என்ற உறுதி கிடைத்தால், மாநிலங்களும், எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடும். 

ஆனால், அதுபோன்ற உறுதியை, 
இந்தியாவில் கொடுக்க முடியாது. 
கொடுக்க மாட்டார்கள். 
மாநில அரசுகளைக் கலைக்கின்ற கத்தியைத் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள். 

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று 
நரேந்திரர் முனைந்தால், 
அவரது விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது.

அருணகிரி
--
Thanks & Regards

Wednesday, 2 December 2020

பூர்வகுடி இந்தியர்களே.. சிந்தியுங்கள்..



பூர்வகுடி இந்தியர்களே..
சிந்தியுங்கள்..

இன்னும் எத்தனை ஆண்டுகள் பிராமணர்களை குறை  சொல்லியே வாழப் போகிறோம்?

நாட்டில்  வெறும் மூன்றுசதவீதமே உள்ள பிராமணர்களையும்  ஏன் எதிர்க்க வேண்டும்?

உண்மையில் தவறு யார் மீது?

கேட்டால் பிரித்தாலும் சூழ்ச்சி , மந்திரம், தந்திரம் என்று சொல்லுகிறோம், 

எந்த பிராமணர்கள் கூட்டமாவது 1000 ரூபாய் கிடையாது ஒரு நூறு ரூபாய் டிக்கெட் எடுத்து எந்த சினிமா தியேட்டரிலாவது படம் பார்த்ததுண்டா  ? 

எந்த பிராமண கூட்டமாவது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, அந்த நடிகரின் படங்களுக்கு பாலபிஷேகம், கட்அவுட், சுவர் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற கண்றாவிகளை செய்து தங்கள் சொந்த பணத்தை யாராவது செலவு செய்து பார்த்திருக்கிறோமா ?

எந்த பிராமண கூட்டமாவது அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், தெரு மின்விளகு, இலவச மனைப்பட்டா, இலவச வீடுகள் கேட்டு எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, வட்டாட்சியர் அலுவலகம் முன்போ போராடியதை பார்த்திருக்கிறோமா ?

எந்த பிராமண கூட்டமாவது சொந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒயின் ஷாப்பில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானம் குடித்து குடும்பத்தை நடுத்தெருவுக்கு வந்ததை பார்த்திருக்கிறோமா  ? 

எந்த பிராமண கூட்டமாவது அவர்களுக்கு சம்பந்தம்இல்லாத கட்சியிலாவது கூட்டாக சேர்ந்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம்,  பேரணி , சாலை மறியல், ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை, சிறை போன்றவற்றை சந்தித்ததை பார்த்திருக்கிறோமா  ?

எந்த பிராமண கூட்டமாவது, தேர்தல் நேரங்களில் எந்த கட்சியாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காதா என்று வீட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருக்கும் அவலத்தை பார்த்திருக்கிறோமா ? 

எந்த பிராமண கூட்டமாவது அரசு அலுவலகங்களிளோ , தனியார் நிறுவனங்களிளோ கடை நிலை ஊழியர்களாக பணி செய்வதை பார்த்திருக்கிறோமா? 

எந்த பிராமண கூட்டமாவது,  உடலழைப்பு செய்தோ, விவசாயம் செய்தோ, சாக்கடை அள்ளும் வேலையிலோ, துப்புரவு பணிகளிளோ, இயற்க்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளிளோ ஈடுபட்டதை பார்த்திருக்கிறோமா? 

எந்த பிராமண கூட்டமாவது சொந்த பணத்தை போட்டு கோயில் கட்டி, கூழ் ஊத்தி, முதுகில் அலுக்கு குத்தி தேர் இழுத்தோ, காவடி எடுத்தோ, வேலை தாடையில் மற்றும் உடல் முழுவதும் குத்திக்கொண்டோ, காலில் ஆணி செருப்பு போட்டுக்கொண்டோ, சாமி வந்து மிரண்டோ பார்த்திருக்கிறோமா, ?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், 

மேற்கண்ட எதுவுமே செய்யாத 3 சதவீத பிராமண மக்களுக்கு எல்லாம் எப்படி கிடைக்கிறது?

நாட்டில் 97 சதவீதம் BC மக்களான SC /ST,  MBC/OBC Religious minorities, போன்ற சாதியமுறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் இன்னும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், இலவச மனை பட்டா, தெருவிளக்கு, சாலைவசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலைந்து, திரிந்து காத்துக்கிடக்கிறோம், , 

உண்மையில் 3 சதவீத பிராமணர்கள் 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான SC /ST,  MBC/OBC *மக்களை ஏமாற்றி அதிகாரத்தில் இருக்கிறார்களா?* 

இல்ல 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான நாம் வெறும் 3 சதவீத *பிராமணர்களிடம் ஏமாந்து போகிறோமா?* 

உண்மையில் பிராமணர்கள் நம்மை ஏமாற்றவில்லை, நாம்தான் கடந்த  மூவாயிரம் ஆண்டுகளாக பிராமணர்களிடம் ஏமாந்து நிற்கிறோம், 

காலணாவுக்கு பொறாத பூணூல் கும்பலுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் நாம் தான் அவர்களுக்கு கொடுக்கிறோம்..

கல்யாணம் தொடங்கி கருமாதி , நினைவு நாள் போன்ற வீட்டில் நடக்கும் அத்தனை சுக துக்க நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை வரவழைத்து வேட்டி, துண்டு உட்பட, பச்சரிசி, பழம், தேங்காய், நெய் போன்ற பொருட்களை கொடுத்து தட்சணையாக 2000, 3000 கொடுத்து போய்ட்டு வாங்க சாமி என்று அனுப்புவதும் நாம்தான், 

அரசியல் அதிகாரம்,நிர்வாக அதிகாரம், சினிமா, விளையாட்டு, பத்திரிக்கைகள், ஊடகங்கள் இவைகளில் கோலோச்சுவது பிராமணர்களே, ஆனால் இவை அனைத்திற்கும் பணத்தை மட்டுமே விரயம் செய்துகொண்டிருக்கும் கூட்டம் வேறு யாருமல்ல நாம்தான், 

சினிமா, ஊடகம், பத்திரிக்கைகள், விளையாட்டை நாம் புறக்கணித்து விட்டாலே 1, 1/2சதவீத பிராமண கூட்டம் துண்டை தலையில் போட்டுக்கொள்வார்கள், 

BC-(SC /ST, MBC/ OBC மத சிறுபான்மையினர்) மக்கள் தங்கள் புத்தியை தீட்டி அரசியல் ஆட்சி அதிகாரத்தை நாமே கைப்பற்ற வேண்டும்..

இதற்கு தடையாக இருக்கும் சாதிய, மத, இன, மொழி வாத பிரிவினைகளான பார்ப்பனிய  சனாதனத்தை (Brahminism) தூக்கி எறிந்துவிட்டு,

 *சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்* என்ற ஜனநாயக( Democracy) ஒற்றை முழக்கத்தோடு ஓரணியில் திரண்டு  விட்டால்..

மீதி 1,1/2 சதவீத பிராமண கூட்டம்  கைபர் போலன் கணவாய் வழியாக  இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் சாதிய ஏற்றத்தாழ்வு அடிமை முறைக்கு முடிவுகட்டமுடியும்..
     
இதையெல்லாம் விட்டுவிட்டு ..
 *சுய சாதி பெருமை, மதவாத பிரச்சினைகள், நான் பெரியவன், நீ பெரியவன் என பார்ப்பனிய சாதிய அடிமை சிந்தனையோடு நமக்குள்ளே அரைவேட்காட்டுதனமாக சண்டை போட்டுக்கொண்டு , ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு செத்து போவோமானால்,*  

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தற்போது 3 சதவீதமாக உள்ள பிராமணர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள், 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றும் கும்பல் இருந்து கொண்டே இருக்கும்..

 *மாறுவது நாம்தானே தவிர, பிராமணர்கள் அல்ல,* 

முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்,  *"நம்முடைய அனைத்து துன்ப பூட்டுகளுக்கும் "ஆட்சி அதிகாரமே திற வு கோல்",* 

ஆட்சியை மாற்றுவது நமது இலக்கல்ல..

ஆட்சியாளராக மாறுவதே நம்முடைய இலக்கு..
                                        எதிர்த்து அழித்து ஒழிக்க வேண்டியது பார்ப்பனர்களை( Brahmins) அல்ல..

பார்ப்பனியத்தை (Brahminism).  

பார்ப்பனிய கொள்கைகளான சாதி மதத்தை தாங்கி வாழும் பார்ப்பனிஸ்ட்களாகிய ( Brahminists) நம்மால் ஒரு போதும் அதைச்செய்ய முடியாது. 

நாம் பார்ப்பனிஸ்டில் இருந்து  ( brahminists) விடுபட வேண்டும்.

அப்போது தான் இந்தியாவும்..
இந்தியர்களும்..
உயர்வடைவார்கள்..👍💐
--
Thanks & Regards

List of Masajid in Dubai that will have Jumu3a prayer from next Friday

List of Masajid in Dubai that will have Jumu3a prayer from next Friday

Masajid will open 30 min before adhan

Sunday, 22 November 2020

முகம்மது (ஸல்) உடை எல்லாம் சுடர் இல்லை Mohamed (pbuh) Didn't enjoy we...


👆👆👆please click and watch 

முகம்மது (ஸல்) உடை எல்லாம் சுடர் இல்லை   Mohamed (pbuh) Didn't enjoy  
--
Thanks & Regards