Friday, 18 December 2020

ஆவண எழுத்தர்களுக்கு முறையாக லைசென்ஸ் வழங்க வேண்டும் ஏன்? புரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்!!

ஆவண எழுத்தர்களுக்கு முறையாக லைசென்ஸ் வழங்க வேண்டும் ஏன்? புரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்!!

1) நாம் இப்போ பத்திர அலுவலகத்திற்கு செல்லும் பொழுது பத்திர அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தர்கள் டாக்குமென்ட் ரைட்டர் என்று பெயர் போட்டு கிரையம் பத்திரம் ,விடுதலை பத்திரம், தான பத்திரம் தான செட்டில்மென்ட் பத்திரம் ,செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் என்று பாத்திரங்கள் பெயர் எல்லாம் வரிசையாக போட்டு பத்திரங்கள் எழுதி அல்லது அடித்து தரப்படும் அல்லது தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

2) இப்படி ஆவணம் எழுதி ஆவணம்தருபவர்களுக்கு பதிவுத்துறை உரிமம் அதாவது லைசென்ஸ் கொடுக்கிறது அந்த லைசென்ஸ் பெற்றவர்கள்தான் ஆவண எழுத்தர்கள் ஆகும்.

3)ஒரே ஒரு சார்பதிவக எல்லைக்குள் ஆவண எழுத்தர் என்றால் C லைசெனஸ் சார்பதிவு  மாவட்டதிற்கு ஆவண எழுத்தர் என்றால் B லைசென்ஸ் மாநிலம் முழுமைக்கும் ஆவண எழுத்தர் என்றால் A லைசென்ஸ் என்று ஆவண எழுத்தர்களை வகைபடுத்தி இருக்கிறது பதிவுதுறை.

4) ஒரு ஆவண எழுத்தர் அங்கீகரிக்கபட்ட பல்கலைகழகத்தில் இருந்து டிகிரியும் தமிழ் ஆங்கிலம் கீழ்நிலை அல்லது உயர்நிலை தேர்வில் தேர்ச்சியும் கணிணி பயன்பாட்டில் டிப்ளமோவும் தேவைபடுவதாக பதிவுதுறை சொல்கிறது.

5) சரி ஒரு ஆவண  எழுத்தருக்கு கட்டாயம் என்னென்ன தெரிந்து இருக்க வேண்டும்

பதிவு சட்டம் 1908 முழுமையாக தெரிந்து இருத்தல் வேண்டும். முத்திரைதாள் சட்டம் 1899 ம் அதன் கீழ் இயற்றபட்ட விதிகள் தெரிந்து இருக்க வேண்டும்.

6) சொத்துமாற்று சட்டம் 1882 அதனுடைய  மத்திய சட்டமான  4/1882 சட்டமும் நிலசீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961அதனுடைய தமிழ்நாட்டு சட்டம் 58/1961)  தமிழ்நாடு நகர்புற நில உச்சவரம்பு சட்டம்1978 அதனுடைய தமிழ்நாட்டு சட்டம் 24/1978 போன்ற சட்டங்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.

(மேற்படி சட்டங்களை புரியும்படி பாமர மொழியில் தினதந்தி நடையில் நிலம் உங்கள் எதிர்காலம் தெரிய வேண்டிய சூட்சுமங்கள் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி வகுப்பு பாண்டிசேரியில் மாதந்தோறும் நடத்துகின்றேன் விருப்பபடுகிறவர்கள் கலந்து கொள்ளவும்: தொடரபுக்கு:8110872672.

7) ஆவண எழுத்தர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல அரசின் பதிவுதுறையின் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள்  மட்டுமே உரிமம் வழங்கும் பதிவுத்துறை தலைவர் அல்லது அவர் நியமிக்கும் அதிகாரிகள் வைக்கின்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே ஆவண எழுத்தர்களாக அங்கீகரிக்கப் படுகின்றனர்.

8) எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆவண எழுத்தர்களுக்கு அரசு தேர்வு நடத்தியதாகவும் புதிய ஆவண எழுத்தர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று இதுவரை யாமறியேன் பராபரமே

9) இப்பொழுது எல்லா பத்திர அலுவலகங்களிலும் இருக்கின்ற ஆவண எழுத்தர்கள் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் தான் லைசன்ஸ் பெற்றவர்கள்தான் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

10) அப்பா தாத்தாவினுடைய ஆவண எழுத்தர் உரிமத்தை வைத்து பலர் சார்பதிவகத்திற்கு வெளியே கடை நடத்துகின்றனர்.பலருக்கு ஆவண எழுத்தர் வேலையில் நல்ல அனுபவம் இருக்கும் ஆனால் இதுவரை தேர்வு வைத்து லைசெனஸ் தராத்தால் அங்கீகாரம் பெறாத ஆவண எழுத்தராகவே இன்று வரை தொடரந்து கொண்டு இருக்கிறார்கள்.

11) இன்னும் சொல்லப்போனால் லைசென்ஸ் பெற்ற மனிதர்களை விட லைசென்ஸ் பெறாத ஆவண எழுத்தர்கள்தான் மிகச் சிறப்பாகவே ஆவணங்களை உருவாக்குகின்றனர் .

12) ஆவணங்களை சாதாரண பொதுமக்களே உருவாக்கலாம் என்று பதிவுதுறை விதிகளை உருவாக்கி உள்ளது அதற்காக சில ஆவண மாதிரிகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது அதைபார்த்து ஆவணங்களை தயாரித்து கொள்ள சொல்கிறது.

13) இந்த முடிவை பதிவுதுறை இடை தரகரை ஒழிப்பதற்காக எடுத்ததாக சொல்லபடுகிறது. ஆனால் இந்த option ஐ பயன்படுத்திதான் நிறைய பதிவு செய்யாத ஆவண எழுத்தர்கள் பொதுமக்களே ஆவணங்களை தயாரிப்பது போல் தயாரிக்கறார்கள்

14) ஆவணங்களை எந்த ஓரு சட்ட அறிவும் இல்லாத பொதுமக்கள் தயாரித்தல் கூடாது என்பதே என் கருத்து .ஏன் என்றால் பத்திரங்கள் ஒரு சட்ட ஆவணம் அதற்கென்று ஒரு சட்ட அந்தஸ்து இருக்கிறது  ஆவணங்களில் சட்ட நுணுக்கங்கள் தெரியாமல் எழுதிவிட்டு பிற்காலத்தில் சொத்து சிக்கல்களில் சட்ட குழப்பங்களில் பலர் தவித்து கொண்டு இருப்பதை பார்த்துகொண்டு இருக்கிறேன்.

15) ஆவணங்களை வழக்கிறஞர்கள் தயாரிக்கலாம் ஆனால் வழக்கறிஞர்களின் இரப்பர் ஸ்டாம்பை மட்டும் பயன்படுத்திகொண்டு இருக்கும் பதிவு செய்யாத ஆவண எழுத்தர்களை பலர் இன்னும் இருக்கிறார்கள். இப்படி ஆவண எழுத்தர்கள் துறை இயங்கி கொண்டு இருக்கிறது.

16) உண்மையில் பதிவுதுறை விதிகள்படி ஆவண எழுத்தர் இடைதரகராக செயல்பட கூடாது ஆவணபதிவில் சாட்சியாக இருக்க கூடாது பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் எவருடனும் எந்த உறவும் வைத்துகொள்ள கூடாது.ஆவண எழுத்தர்கள் சார்பதிவாளர் அழைக்காமல் பதிவு அலுவலகத்தில் வர கூடாது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடாது. ஈசி copy of the document அவர் பெயரில் கேட்டு தாக்கல் செய்ய கூடாது பதிவு செய்யும் ஆவணத்தையோ ஈசீயையோ  காப்பி ஆப் தி டாகுமெண்டையோ திரும்ப பெறுதல் கூடாது .போன்ற கூடாதுகள் விதிகளாக  இருக்கிறது

17) இந்த விதிகள் எல்லாம் களநிலவரப்படி சாத்தியம் இல்லாத நிலையில்தான் இருக்கிறது. இந்த விதி எல்லாம் வேலைவாய்பாக நினைக்கும் எந்த ஆவண எழுத்தருக்கும் பிரச்சினை இல்லை அவர்கள் கீழ்படிவார்கள்.

18) இவ்வளவு கூடாதுகள் விதிகள் இருப்பது சார்பதிவு அலுவலக அரசு ஊழியர்களுக்குதான் டாப் டூ பாட்டம் வரை தான் களநிலவரபடி கஷ்டம் அதனால் புதிய ஆவண எழுத்தர்களை  உருவாக்காமல் பதிவுதுறை தள்ளி போட்டு கொண்டே வருகிறது என்பது என் புரிதல்.

19) பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்ககூடிய ஆவண உருவாக்கும் தொழிலையும் தவறான பிழையான ஆவணங்கள் தயாரிக்கபடுவதை தடுத்து நல்ல ஆவணங்களை பெற்று பொதுமக்கள் பயன்பெறுவதையும் பதிவுதுறையே தாமதபடுத்திகொண்டு இருக்கிறது.

சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஆவணம் #எழுத்தர்கள் #டாக்குமென்ட் #ரைட்டர் #கிரையபத்திரம் #விடுதலைபத்திரம் #தானபத்திரம்  #செட்டில்மென்ட்பத்திரம்  #பாகப்பிரிவினைபத்திரம் #ஆவணம்  #பதிவுத்துறை #உரிமம்  #சார்பதிவகம் #அங்கீகாரம் #வழக்கறிஞர் #இரப்பர் #ஸ்டாம்ப் #document #driters #document #writer #copyright #licensor #description #settlement #measurement #distribution #registration  #Relative #authority  #rapper #stamp


--
Thanks & Regards

No comments:

Post a Comment