Wednesday, 19 June 2019

Jai beem

Abdul Wahab
இன்றைக்கு பாராளுமன்றத்தில் சங்கிகளின் கதறலுக்கு உவைஸி பதிலடி முழக்கத்தில் ஒன்று ஜெய் பீம்.

ஜெய் பீம் வரலாற்றை நாமும் அறிந்து கொள்வோம்.

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள 'பீமா' என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.

1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.
அப்போது, பார்ப்பனர்களின் வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது.
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு அம்மக்கள் ஆட்பட்டனர்.

அதற்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

1817 டிசம்பர் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள 'பீமா' என்ற நதிக்கரைதான் போர்க்களம்.

2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, 'கோகலே' தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்...

500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம்...

போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின.பாஜிராவ் கைதானான். பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.

வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட 'பீமா' நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது.

1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார். அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக "ஜெய் பீம்" எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.

பார்ப்பன வேத, சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனியத்திற்கு எதிராகவும், தலித்துகளும், பிற்படுத்தப் பட்ட இந்துக்களும், சிறுபான்மையினரும் இணைந்து நடத்திய புரட்சி தான் மேற்கண்ட பீமா நதிக் கரை வரலாறு. " ஜெய் பீம் ".

தகவல் உதவி أبو بكر صديق

Monday, 17 June 2019

விசிட் விசாவில் அமீரகம் வேலைதேடி வரும் அன்பர்கள் செய்யவேண்டிய பட்டியல்

விசிட் விசாவில் அமீரகம் வேலைதேடி வரும் அன்பர்கள் செய்யவேண்டிய பட்டியல்
1. ECNR passport ஏற்பாடுகளை முடித்துவிட்டு வரவும்
2. Certificate Attestation ஊரில் செய்தால் சற்று முன்னரே தயார் செய்யவேண்டும் ஏனெனில் 2 மாதங்கள் ஆகலாம் செலவு குறைவு. இங்கு 2 வாரத்தில் கிடைக்கும் ஆனால் செலவு அதிகம்.
3. Two way டிக்கெட் எடுத்துவிட்டு வரவும் one way வைத்திருந்தால் இந்திய விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிடும் வாய்ப்புகள் அதிகம்.
4 . கண்ணியமான உடைகளை அணிந்து பயணம் செய்யுங்கள் சிலரின் நடவடிக்கைகளால் திருப்பி அனுப்பிய செய்திகளும் முன்னர் உண்டு.
5. முதல் பயணத்தில் நிதானம் மிகவும் முக்கியம் கேட்கபடும் கேள்விகளுக்கு குடியுரிமை அலுவலர்களுக்கு சரியான பதிலை அளிப்பது முக்கியம். மது அருந்திவிட்டு தேவையில்லாத தர்மசங்கடங்களை தவிர்க்கவும்.
6. இங்கிருக்கும் நண்பர்கள் / உறவினர்களின் தொடர்பு எண்ணை வைத்திருக்கவும் ஏதும் தேவையிருப்பின் அழைத்திட உதவும்.
7. செலவுக்கு தேவையான கையிருப்பை டாலராகவோ அல்லது திர்ஹமாகவோ வைத்திருப்பது அவசியம் கேள்விகள் கேட்கபட்டால் அதற்கு சரியான விளக்கம் சொல்லுங்கள். இந்திய மற்றும் அமீரக விமான நிலையங்களில் இந்த கேள்விகள் கேட்கபடலாம்.
8. ஊர் அனுபவங்களின் அனுபவ கடிதம் மற்றும் தொடர்புகள் இன்றைய நிலையில் update செய்துவிட்டு வருவது சிரமங்களை தடுத்திடும்.
9. வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளத்திலும் சுயவிவரங்களை பதிவு செய்திடவும். அலைபேசி எண் பின்னர் update செய்து கொள்ளலாம்.
10. General Profile உள்ளவர்கள் மூன்று விதமான சுயவிவர குறிப்பை தயார் செய்துகொள்ளுங்கள். தேவைகேற்ப சில மாறுதல்களை செய்துவிட்டு அனுப்பிட வசதியாக இருக்கும்.
வேலையில் சேர்ந்திடும் வரை செலவுகளை சற்று கட்டுக்குள் வைத்திருங்கள் தேவையிருப்பின் தேடலை நீடிக்கக்கூடிய சூழலில் இவை உதவிடும்.
உங்களது தேவையற்ற சிந்தனைகளையும் செயல்களையும் ஊரிலேயே ஒதுக்கிவிட்டு தெளிவான திட்டத்துடன் பயணம் செய்யுங்கள். தன்னம்பிக்கை அனைத்தையும் வெல்லும். இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட முயற்சிகள் தொடரட்டும் நிறைவாக.
#அமீரகவேலைவாய்ப்பு
#UAEvisitvisa

Saturday, 15 June 2019

கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!

 

ஆரோக்கியமாக வாழ...

 

தூங்கப் போவதற்கு முன்தினமும் கைகால்கள்முகத்தை கழுவுங்கள்பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்துநன்றாக வாயை கொப்பளியுங்கள்.

 

தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்றுஉங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால்உடலில் ஏற்படும் சுருக்கங்கள்படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.


உணவில் பச்சை காய்கறிகளையும்பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

 

முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.


தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்தொந்தியும்வயிறும் குறையும்.

 

குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும்கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.


படுக்கைக்கு அருகிலும்வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும்ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.


முளைவிட்ட கடலைசிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.


கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதைகடமையாக கொள்ளவும்.


உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.


அதிக சூடுஅதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால்மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.


இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும்பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.


கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்அதுஉடல் அழகுக்கும்ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.


தினமும் காலையில் டீயோகாபியோ குடிப்பதற்கு முன்ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.


தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

 

கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!

 

கார் ஓட்டும் போதும்சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும்கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமரஉங்கள் சீட்டை சரிசெய்து   கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம்சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பதுநமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில்   படுத்தபடி புத்தகம் படிப்பது கூடவலியை ஏற் படுத்திகழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவதுவெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம்.

 

ஒரே கோணத்தில்வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால்சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும்,முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும். இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது.

 

தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும்கழுத்து வலி ஏற்படும். "போம்தலையணைகளை விடஇறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான்கழுத்துதலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.

 

கம்ப்யூட்டர் முன்மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர்கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர்வேலையில் அதீத கவனம் செலுத்தும்போதுகழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர். 
நெடுநேரம் இப்படி வைத்திருந்தால்கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம்கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்பஉங்கள் டேபிள்மானிட்டர்நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.

 

சிலர்காலுக்குஉயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்ககம்ப்யூட்டர் மானிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொண்டால்பார்வை கெடும்அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால்கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.

 

நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதைஉங்கள் உடலியல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும்சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும்கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமரஉங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும் வகையில்அவற்றின் மீது பாதம் வைத்துக் கொள்வதும் அவசியம் என்பதால்,அனைத்தையும் கருத்தில் கொண்டுஉங்கள் சீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.

 

வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வதுகழுத்தில் ஐஸ் கட்டிசூடு ஒத்தடம் ஆகியவற்றைமாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள்ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும்வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில், 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.


 டாக்டர் பி.நாகராஜ் 

 

A.S.Ibrahim

 

தஸ்பமனி China counting mani

இதைப் பார்த்தா சைனா காரன் செய்த டஸ்ப மணிகளை உருட்டிட்டு இருக்கிற நம்ம மக்கள் கைகளில் எத்தனை.... எத்தனை பன்றி முல்லுகளால் செய்த ஹைகிலாஸ் டஸ்ப மணிகள் உருண்டுகிட்டு இருக்கோ தெரியல்லயே. எனவே இதன்பிறகு ரஸூல் ஸல் அவர்கள் சொன்ன மாதரி கைவிரல் புறுக்குகளை வைத்து எண்ணிக் கொள்வதுதான் தஸ்பி செய்வதற்கு சிறந்த வழி என்பதை ஏற்றுக் கொள்வோமா👆👆

Monday, 10 June 2019

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...
இந்தியாவை
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமியப் பேரரசர்களை எதிர்க்காத பார்ப்பனர்கள்,
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள் தெரியுமா... ?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்...!

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது

சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

Friday, 7 June 2019

Imam changing at prayer

தொழ வைக்கும் கண்ணியமிகு இமாம் அவர்களுக்கு தொண்டையில் அசௌகர்யம் ஏற்பட்டதால் உடனடி இமாம் மாறி இமாமத்தைத் தொடரும் மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டப்படியான ஒரு காட்சி

BJP - senkootaiyan speech