Monday, 17 June 2019

விசிட் விசாவில் அமீரகம் வேலைதேடி வரும் அன்பர்கள் செய்யவேண்டிய பட்டியல்

விசிட் விசாவில் அமீரகம் வேலைதேடி வரும் அன்பர்கள் செய்யவேண்டிய பட்டியல்
1. ECNR passport ஏற்பாடுகளை முடித்துவிட்டு வரவும்
2. Certificate Attestation ஊரில் செய்தால் சற்று முன்னரே தயார் செய்யவேண்டும் ஏனெனில் 2 மாதங்கள் ஆகலாம் செலவு குறைவு. இங்கு 2 வாரத்தில் கிடைக்கும் ஆனால் செலவு அதிகம்.
3. Two way டிக்கெட் எடுத்துவிட்டு வரவும் one way வைத்திருந்தால் இந்திய விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிடும் வாய்ப்புகள் அதிகம்.
4 . கண்ணியமான உடைகளை அணிந்து பயணம் செய்யுங்கள் சிலரின் நடவடிக்கைகளால் திருப்பி அனுப்பிய செய்திகளும் முன்னர் உண்டு.
5. முதல் பயணத்தில் நிதானம் மிகவும் முக்கியம் கேட்கபடும் கேள்விகளுக்கு குடியுரிமை அலுவலர்களுக்கு சரியான பதிலை அளிப்பது முக்கியம். மது அருந்திவிட்டு தேவையில்லாத தர்மசங்கடங்களை தவிர்க்கவும்.
6. இங்கிருக்கும் நண்பர்கள் / உறவினர்களின் தொடர்பு எண்ணை வைத்திருக்கவும் ஏதும் தேவையிருப்பின் அழைத்திட உதவும்.
7. செலவுக்கு தேவையான கையிருப்பை டாலராகவோ அல்லது திர்ஹமாகவோ வைத்திருப்பது அவசியம் கேள்விகள் கேட்கபட்டால் அதற்கு சரியான விளக்கம் சொல்லுங்கள். இந்திய மற்றும் அமீரக விமான நிலையங்களில் இந்த கேள்விகள் கேட்கபடலாம்.
8. ஊர் அனுபவங்களின் அனுபவ கடிதம் மற்றும் தொடர்புகள் இன்றைய நிலையில் update செய்துவிட்டு வருவது சிரமங்களை தடுத்திடும்.
9. வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளத்திலும் சுயவிவரங்களை பதிவு செய்திடவும். அலைபேசி எண் பின்னர் update செய்து கொள்ளலாம்.
10. General Profile உள்ளவர்கள் மூன்று விதமான சுயவிவர குறிப்பை தயார் செய்துகொள்ளுங்கள். தேவைகேற்ப சில மாறுதல்களை செய்துவிட்டு அனுப்பிட வசதியாக இருக்கும்.
வேலையில் சேர்ந்திடும் வரை செலவுகளை சற்று கட்டுக்குள் வைத்திருங்கள் தேவையிருப்பின் தேடலை நீடிக்கக்கூடிய சூழலில் இவை உதவிடும்.
உங்களது தேவையற்ற சிந்தனைகளையும் செயல்களையும் ஊரிலேயே ஒதுக்கிவிட்டு தெளிவான திட்டத்துடன் பயணம் செய்யுங்கள். தன்னம்பிக்கை அனைத்தையும் வெல்லும். இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட முயற்சிகள் தொடரட்டும் நிறைவாக.
#அமீரகவேலைவாய்ப்பு
#UAEvisitvisa

No comments:

Post a Comment