ஆரோக்கியமாக வாழ...
* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
* தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.
* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.
* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.
* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.
* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.
* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.
* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.
* உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.
* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.
* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.
* தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!
கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம், சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட, வலியை ஏற் படுத்தி, கழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவது, வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம்.
ஒரே கோணத்தில், வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால், சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும்,முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும். இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது.
தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும், கழுத்து வலி ஏற்படும். "போம்' தலையணைகளை விட, இறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான், கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.
கம்ப்யூட்டர் முன், மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர், வேலையில் அதீத கவனம் செலுத்தும்போது, கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர்.
நெடுநேரம் இப்படி வைத்திருந்தால், கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம், கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப, உங்கள் டேபிள், மானிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.
சிலர், காலுக்கு, உயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்க, கம்ப்யூட்டர் மானிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொண்டால், பார்வை கெடும்; அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால், கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை, உங்கள் உடலியல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர, உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும் வகையில், அவற்றின் மீது பாதம் வைத்துக் கொள்வதும் அவசியம் என்பதால்,அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் சீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.
வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? கழுத்தில் ஐஸ் கட்டி, சூடு ஒத்தடம் ஆகியவற்றை, மாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள், ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும், வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில், 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
டாக்டர் பி.நாகராஜ்
A.S.Ibrahim
No comments:
Post a Comment