முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Wednesday, 17 August 2016
துபை East ஹோர் அல் அன்ஸில் தொடரும் அழைப்பு பணி
இஸ்லாமிய மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 18 ஆகஸ்ட் 2016 @ 09:30 PM
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
அதே போல் இன்ஷாஅல்லாஹ் நாளை வியாழக்கிழமை 18th August' 2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு 09:30 மணி அளவில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை ) அவர்களின் தியாகமும் & படிப்பினையும் என்ற தலைப்பில் MTCT மர்க்கஸ் இல் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
துபை ஹோர் அல் அன்ஸில் .அழைப்பு பணி
நபி இப்ராஹிம் (அலை )அவர்களின் தியாகமும் & படிப்பினையும்
அதே போல் இன்ஷாஅல்லாஹ் நாளை வியாழக்கிழமை 18th August' 2016 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு 09:30 மணி அளவில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை )அவர்களின் தியாகமும் & படிப்பினையும் என்ற தலைப்பில் MTCT மர்க்கஸ் இல் சிறப்புரையாற்றஇருக்கின்றார்கள்.
Monday, 18 July 2016
Sunday, 14 February 2016
சிறந்த காண்காட்சியாக நாக்கு - இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ்
எல்லாப்புகழும் இறைவனுக்கே! Regards A.S.Ibrahim Dubai
பெரும்பாலானோருக்கு பொழுது போக்கே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.."மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள், யார் மற்றவர்களுடைய குறையை தேடி திரிகிறார்களோ, அவர்களுடைய குறையை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான், பின்னர் அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளை பகிரங்கமாக்கி அவர்களை இழிவுப்படுத்திவிடுவான் -நூல்:அஹ்மத்.
கோவையில் நடந்த வெளியீட்டு விழாவில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இக்குறும்படக்குழுவினருக்கும், தயாரிக்க உதவிய AS Ibrahim Mbaஅவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...
புறம் என்ற குறும்படம்
Monday, 25 January 2016
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
மத்திய அரசு, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.621லிருந்து ரூ.671.50ஆக 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உட்பட அனைத்து மானியத்தையும் முழுவதுமாக ஒழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 37 டாலர் அளவுக்குப் குறைந்துள்ளபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க முன்வராமல், மேலும் மேலும் விலையை உயர்த்திக் கொண்டே போவதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனத்தின் ஆலோசனைப் படி மானியங்கள் குறைப்பு, பொது விநியோகக் குறைப்பு என அதிரடியாக இரட்டைத் தாக்குதல் களை ஏழை, எளிய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது.
மேலும், சமையல் எரிவாயு போன்று மண்ணெண்ணெய் மானியத்தையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் பொதுப்பங்கீட்டுக் கடைகளில் மண்ணெண்ணெய் பெற்றுவந்த அனைவரும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அடித்தட்டு ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தையும், சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
தலைவர், ம.ம.க.