Monday, 4 March 2024

செல்வபுரம் வடக்கு கிளையின் சார்பாக பொதுமக்களுக்கான இலவச நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும், 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டம் செல்வபுரம் வடக்கு கிளையின் சார்பாக

           🔥இரண்டாம் வாரமாக 🔥

பொதுமக்களுக்கான இலவச நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்

இதில் தர்பூசணியை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்

மாநில செயற்குழு உறுப்பினர்
அண்ணன் பேக் அப்பாஸ்



நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்

கிளையின் முன்னாள் செயலாளர் 
அப்பாஸ் அவர்களும் 

மற்றும் 

நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து தந்த 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பிரதிநிதி அண்ணன் 
அனல் அக்பர்


மாநில செயற்குழு உறுப்பினர்
அண்ணன் பேக் அப்பாஸ்

மனிதநேய மக்கள் கட்சியினுடைய தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் tk பஷீர் பாய் 

மனிதநேய மக்கள் கட்சியின்
மாவட்ட செயலாளர்
அண்ணன் இப்ராஹிம் 

கோவை மத்திய மாவட்டத்தின் துணைத் தலைவர் அண்ணன் நூர்தீன் அவர்களும்

தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அண்ணன் அசார் அவர்களும்

மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர்
அண்ணன் உமர் பைசல் 

 மற்றும்

இந்நிகழ்ச்சியை தலைமையேற்ற நடத்தித் தந்த 

கிளை
தலைவர்
ராஜா (எ) அப்துல் ரஹ்மான்

செயலாளர்
பாஷா பாய்

நாளை 05.03.2024 மருத்துவ முகாம் நாமக்கல் மாவட்டத்தில்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,






Sunday, 3 March 2024

வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு வந்து தவித்த சகோதரியை மீட்ட இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு வந்து தவித்த சகோதரியை மீட்ட இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

▪️திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரியானா என்ற பெண் குவைத்தில் வீட்டு பணிப்பெண் வேலைக்கு வந்துள்ளார். இரண்டு மாதம் ஒரு குவைத் நாட்டினர் வீட்டில் பணி செய்து வந்த அந்தப்பெண்ணை, அவரின் முதலாளி சவூதி அரேபியாவிற்க்கு அழைத்து சென்று தனது தாயார் வீட்டில் பணி செய்ய வற்புற்த்தியுள்ளார். 

▪️சவுதி அரேபியாவிற்கு வந்த இடத்தில் வேலை பளுவின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மிகுந்த சித்திரவதைக்கும் ஆளாகியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் மமக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜெயிலாபுதீன் அவர்களை தொடர்பு கொண்டு ரியானாவை மீட்டு தாயகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

▪️காஞ்சி ஜெயிலாபுதீன் அவர்கள் உடனே குவைத் மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் அவர்களுக்கு தகவலை தெரிவித்து அப்பெண்மணியை மீட்டு தாயகம் அனுப்ப கேட்டுக்கொண்டார்.

▪️மண்டல தலைவர் ஜபருல்லாக்கான் அவர்கள் குவைத் மண்டலச் செயலாளர் கொடிக்கால்பாளையம் கஜ்ஜாலி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கஜ்ஜாலி அவர்கள் துரிதமாக செயல்படத் தொடங்கினார்.

▪️அதே சமயம் வழக்கறிஞர் ஜெய்லாபுதீன் அவர்களும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல வாரிய அதிகாரிகள் மூலமாக இந்திய தூதகத்தை அணுகினார்கள். அவர்கள் அப்பெண்ணின் கபிலை தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் சவூதியில் வேலை செய்கிறார். அவரது கபில் சவூதியில் உள்ளார் என்று சொல்லி சென்றுவிட்டார். 

▪️பின்னர் IWF சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களின் மூலமாக இந்திய தூதரகத்தை அணுகி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அப்பெண்ணின் குவைத் முதலாளியை தொடர்பு கொண்டு செலவுத் தொகையாக 600 திணார் பணம் கொடுத்து அப்பெண்ணை மீட்டு, நூர் முஹம்மது மூலம் ரியாத் மண்டல இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக பயணச்சீட்டு எடுத்து தந்து, ரியாத்திலிருந்து கொச்சின் வழியாக அப்பெண் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.

▪️இந்த ஒப்பற்ற மனிதநேய சேவையை குவைத் மண்டலச் செயலாளர் கஜ்ஜாலி அவர்கள், சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளர் நூர் முஹம்மது ஆகியோரின் துரிதமான நடவடிக்கையாலும் ,  தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜெயிலாபுதீன் அவர்களின் தொடர் அழுத்தங்கள் காரணமாகவும் , துரிதமாக பயணச் சீட்டை எடுக்க உதவிய மாயவரம் நைனா அவர்களாலும் , பயணசீட்டுக்கு பொருளாதார ரீதியாக உதவிய தனவந்தர்களின் பெரும் முயற்சியால் அல்லாஹ்வின் அருளால் அப்பெண்மணி விரைவாக  மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அல்ஹம்துலில்லாஹ்...

▪️தாயகம் சென்றவுடன் உடனடியாக மாநில தலைமையகத்திற்கு சென்று மாநில தலைவர் அவர்களிடம் தன்னை மீட்ட தமுமுக மமக வெளிநாட்டு பிரிவான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கும் , இதற்கு ஆரம்பம் முதல் முயற்சி மேற்கொண்ட வழக்கறிஞர் ஜெயினுள் ஆபிதீன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை அந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்து கொண்டனர். 



என்றென்றும் சமுதாய பணியில்:::

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
இந்தியர் நல்வாழ்வு பேரவை
குவைத் மண்டலம் & ரியாத் மண்டலம்

இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் - IWF துபாய் மண்டலம் சார்பாக "ரமலானை வரவேற்போம் 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாப் புகழும் இறைவனுக்கே..

இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் - IWF துபாய் மண்டலம் சார்பாக "ரமலானை வரவேற்போம் 2024 "என்ற சிறப்பு நிகழ்ச்சி இன்று 24/02/2024 சனிக்கிழமை  இடம் ~ ஹோட்டல் Curry Express Hall ,Near Al Kabayel Disconut Center, அருகில் 06.30 மணியலவில் அல்லாஹ்வின் கிருபையால் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. 



இதில் மொளலவி. அலி அக்பர் உமரி அவர்கள் சிறப்புரையாறினார்.




மேலும் இதில் தமுமுக மாநில விழி அணியின் பொருளாலர் முபாரக் அலி கான், அமீரக தலைவர் அப்துல் ஹாதி, துணைத்தலைவர் இப்ராஹிம் மற்றும் , துபை மண்டல அனைத்து நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



அல்ஹம்துலில்லாஹ்..

தகவல்:-
இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம்.
துபாய்  மண்டலம். ( IWF)

சமுதாய பணியில் கடல் கடந்து; இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF ) 21வது இரத்ததான முகாம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - நஸீம் ரவ்தா கிளை 
21வது இரத்ததான முகாம்!!!
  
ஏக இறைவனின் திருப்பெயரால்...

🩸 சவூதி அரேபியா நிறுவன தினத்தை 
முன்னிட்டு 
ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர்  ஃபோரம் (IWF) - நஸீம் ரவ்தா கிளை மற்றும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 01/03/2024  வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நஸீம் பகுதியில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் சிறப்பாக நடைபெற்றது.

🩸இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும்  இறைவனின் கிருபையாலும் நஸீம் பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

🩸குறுதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது..



🩸முகாம் வெற்றிகரமாக  நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் , காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மருத்துவ ஊழியர்களுக்கும் , இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் , கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் , தண்ணீர் , தேநீர் , குளிர்பானம் மற்றும் பழங்கள் (அஜிஸியா கிளை) போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் , மதிய உணவு வழங்கிய மலபார் உணவகத்திற்கும், நோட்டீஸ், பேனர், கேடயம் உள்ளிட்ட விளம்பர பதாதைகளை தயாரித்து தந்த டிரீம் பிரிண்ட் நிறுவனத்திற்கும்  மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

🩸நஸீம் ரவ்தா கிளை சார்பாக முதன் முதலில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பம்பரம் போல் செயலாற்றிய நஸீம் கிளை மண்டல பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்..

🩸உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!!!



என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து;;;

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா

தொகுப்பு:திருச்சி மீடியா ரஹ்மத்துல்லாஹ்

https://www.facebook.com/share/p/7TEqyVzJc4mAvJf8/?mibextid=Nif5oz

நெல்லை மாவட்டம் Free medical camp - Nellai - Tamil Nadu

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



குலதீபமங்கலம் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் பாதை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குலதீபமங்கலம் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் பாதை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கேட் பிரச்சனை திருக்கோவிலூர் தாசில்தார் தலைமை நடைபெற்ற சமாதான கூட்டத்தில் சுமூகமான முடிவு தமுமுக மறியல் போராட்டம் ரத்து...

கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் கிராமத்தில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் பாதை ஆக்கிரமித்து கேட் போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இருந்த நிலையில் கமருதீன் என்பவர் இறந்து அவருடைய உடலை அடக்கம் செய்யும்போது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தமுமுகவின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட இருந்த நிலையில் இன்று திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது போடப்பட்டுள்ள கேட் ஒரு சாவியை ஜமாத் தார் இடம் ஒப்படைக்கப்படும் எனவும், இதுக்கு நிரந்தர தீர்வாக அடக்கஸ்தலத்துக்கு செல்லும் பாதையை அளவை செய்து முழுமையான பாதை அமைப்பதற்கான வேலைகளை விரைவாக முடிக்க ப்படும் எனவும் எப்போதெல்லாம் தேவைப்படுகிறது அப்போதெல்லாம் அடக்கஸ்தலத்திற்கு சென்று வர எந்த விதமான யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது...
 அல்ஹம்துலில்லாஹ் 

இந்த முடிவினை ஏற்று ஆறாம் தேதி நடைபெற இருந்த தமுமுக மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம்....

✍️
தகவல் தொழில்நுட்ப அணி தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்டம்

தமுமுக விற்கு நன்றி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக விற்கு நன்றி

பள்ளப்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி யின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளபட்டியைச் சார்ந்த அனைவரையும் ஒரே விமானத்தில் அனுப்பவும்,முதல் விமானத்தில் ஏற்பாடு செய்யவும் மற்றும் மக்காவில் ஒரே இடத்தில் தங்குமிடம் ஏற்படுத்தி தர செய்யும்படி கரூர் மாவட்ட தமுமுக தலைவர்,நம் அன்புக்குரிய சகோதரர், சாலையூத்து சாகுல் ஹமீது அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

  கரூர் மாவட்ட தமுமுக சார்பாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரான ஜனாப் அப்துல் சமத் MLA அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கையை லெட்டர் வாயிலாக அளிக்கப்பட்டது.

 கோரிக்கையை கனிவுடன் பரிசீலத்த ஹஜ் கமிட்டி தலைவர் இன்ஷா அல்லாஹ் இதை முடிந்தவரை முயற்சி செய்து ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.

 எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக தலைமைக்குத் தெரியப்படுத்தி ஒத்துழைப்பு கொடுத்த தமுமுக கரூர் மாவட்ட தலைவர் சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
நகர காங்கிரஸ் கமிட்டி
பள்ளப்பட்டி


பதிவு நாள்-02/03/ 2024

மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் நாளை காலை காது மூக்கு தொண்டை இலவச மருத்துவ முகாம்‌ நடைபெறுகிறது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் நாளை காலை காது மூக்கு தொண்டை இலவச மருத்துவ முகாம்‌ நடைபெறுகிறது 
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

மேலப்பாளையம் 50வது வார்டு கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் வேலவன் ENT கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச காது,மூக்கு,தொண்டை மருத்துவ முகாம்...

நாளை 3.3.2024 ஞாயிறு காலை 10மணி‌ முதல் மதியம் 1மணி வரை... 

மேலப்பாளையம் 50வது வார்டு ஹாமீம்புரம் தெற்கு தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெறவுள்ளது. 

முகாமை துவக்கி வைப்பவர்: கே.எஸ்.ரசூல்மைதீன்‌ தமுமுக மமக மாவட்ட தலைவர், 50வது வார்டு மாமன்ற உறுப்பினர். திருநெல்வேலி மாநகராட்சி. 

இம்முகாமில் மருத்துவர் வேலவன் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறார்...

முகாமில் இலவச செவித்திறன் பரிசோதனை, மற்றும் இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை வழங்கப்படும்,  

20% சதவீதம் சலுகை விலையில் காது கருவிகள் கிடைக்கும்.

தேவையுடைய அனைவரும் வருக! 
முன் பதிவு செய்ய 9585877134.

அழைக்கிறது...
த.மு.மு.க. 50வது வார்டு கிளை மேலப்பாளையம்

கூடலூரில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க கூட்டம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கூடலூரில் ரமலான் சிறப்பு மார்க்க விளக்க கூட்டம்!

கூடலூர் நகர இஸ்லாமிய பிரச்சார பேரவை-தமுமுக சார்பாக ரமலானை வரவேற்போம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 1-3-2024 வெள்ளிக்கிழமை மாலை 6.30 - இரவு 8.15 மணிவரை கூடலூர் நகர  தலைவர் சாகுல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாவட்ட ஐபிபி செயலாளர் நியாஸ் அஹமது கிராத் ஓதினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பரீத் அஸ்லம், அப்துல் ரகுமான், வாசிம் அக்ரம் ஆகியோர் ரமலானின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்கள்.

தமுமுக மாவட்ட துணை செயலாளர் மௌலவி.முஹம்மது ஹனிபா பத்ரி அவர்கள் ரமலானின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.




இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகர செயலாளர் முகமது ரபீக், நகர துணை செயலாளர் ராஜா முகமது, கிளை செயலாளர் ஷேக் அப்துல்லா மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
H.அப்பாஸ் மந்திரி
மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி
தேனி தெற்கு மாவட்டம்.