வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு வந்து தவித்த சகோதரியை மீட்ட இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
▪️திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரியானா என்ற பெண் குவைத்தில் வீட்டு பணிப்பெண் வேலைக்கு வந்துள்ளார். இரண்டு மாதம் ஒரு குவைத் நாட்டினர் வீட்டில் பணி செய்து வந்த அந்தப்பெண்ணை, அவரின் முதலாளி சவூதி அரேபியாவிற்க்கு அழைத்து சென்று தனது தாயார் வீட்டில் பணி செய்ய வற்புற்த்தியுள்ளார்.
▪️சவுதி அரேபியாவிற்கு வந்த இடத்தில் வேலை பளுவின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மிகுந்த சித்திரவதைக்கும் ஆளாகியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் மமக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜெயிலாபுதீன் அவர்களை தொடர்பு கொண்டு ரியானாவை மீட்டு தாயகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
▪️காஞ்சி ஜெயிலாபுதீன் அவர்கள் உடனே குவைத் மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் அவர்களுக்கு தகவலை தெரிவித்து அப்பெண்மணியை மீட்டு தாயகம் அனுப்ப கேட்டுக்கொண்டார்.
▪️மண்டல தலைவர் ஜபருல்லாக்கான் அவர்கள் குவைத் மண்டலச் செயலாளர் கொடிக்கால்பாளையம் கஜ்ஜாலி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். கஜ்ஜாலி அவர்கள் துரிதமாக செயல்படத் தொடங்கினார்.
▪️அதே சமயம் வழக்கறிஞர் ஜெய்லாபுதீன் அவர்களும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல வாரிய அதிகாரிகள் மூலமாக இந்திய தூதகத்தை அணுகினார்கள். அவர்கள் அப்பெண்ணின் கபிலை தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் சவூதியில் வேலை செய்கிறார். அவரது கபில் சவூதியில் உள்ளார் என்று சொல்லி சென்றுவிட்டார்.
▪️பின்னர் IWF சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களின் மூலமாக இந்திய தூதரகத்தை அணுகி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அப்பெண்ணின் குவைத் முதலாளியை தொடர்பு கொண்டு செலவுத் தொகையாக 600 திணார் பணம் கொடுத்து அப்பெண்ணை மீட்டு, நூர் முஹம்மது மூலம் ரியாத் மண்டல இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக பயணச்சீட்டு எடுத்து தந்து, ரியாத்திலிருந்து கொச்சின் வழியாக அப்பெண் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
▪️இந்த ஒப்பற்ற மனிதநேய சேவையை குவைத் மண்டலச் செயலாளர் கஜ்ஜாலி அவர்கள், சவூதி மண்டல ஒருங்கிணைப்பாளர் நூர் முஹம்மது ஆகியோரின் துரிதமான நடவடிக்கையாலும் , தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜெயிலாபுதீன் அவர்களின் தொடர் அழுத்தங்கள் காரணமாகவும் , துரிதமாக பயணச் சீட்டை எடுக்க உதவிய மாயவரம் நைனா அவர்களாலும் , பயணசீட்டுக்கு பொருளாதார ரீதியாக உதவிய தனவந்தர்களின் பெரும் முயற்சியால் அல்லாஹ்வின் அருளால் அப்பெண்மணி விரைவாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்...
▪️தாயகம் சென்றவுடன் உடனடியாக மாநில தலைமையகத்திற்கு சென்று மாநில தலைவர் அவர்களிடம் தன்னை மீட்ட தமுமுக மமக வெளிநாட்டு பிரிவான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கும் , இதற்கு ஆரம்பம் முதல் முயற்சி மேற்கொண்ட வழக்கறிஞர் ஜெயினுள் ஆபிதீன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை அந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்து கொண்டனர்.
என்றென்றும் சமுதாய பணியில்:::
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
இந்தியர் நல்வாழ்வு பேரவை
குவைத் மண்டலம் & ரியாத் மண்டலம்