Thursday, 9 April 2020

இந்தியாவின் மக்கள் தொகை 8000 கோடிப்பு.!! 8000 கோடி நீ பாத்த.?? யோவ் YG மகேந்திரன் இதுக்கு நீயே பரவால்லையா.??

https://www.facebook.com/100001202182546/posts/2992413004142076/?d=n

இந்தியாவின் மக்கள் தொகை 8000 கோடிப்பு.!!

8000 கோடி நீ பாத்த.??

யோவ் YG மகேந்திரன் இதுக்கு நீயே பரவால்லையா.??

உங்கள் நன்பனான AS

Level 3 Ishaq

muhammad azam farooqi is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Level: 3- Quránic Values Class
Time: Apr 10, 2020 09:05 AM Dubai

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/395304891?pwd=dlljNUs5UGtMRjE5ZllmeGtpSVdvQT09

Meeting ID: 395 304 891
Password: 009529


உங்கள் நன்பனான AS

தில்லி நிஜாமுத்தீன் மர்கஸிலிருந்து இஸ்லாமியர்கள் கொரோனா பரப்புவதாக வரும் செய்திகள் அனைத்துபம் பொய்யானது...

https://www.facebook.com/100007543876251/posts/2544318802496224/?d=n

தில்லி நிஜாமுத்தீன் மர்கஸிலிருந்து இஸ்லாமியர்கள் கொரோனா பரப்புவதாக வரும் செய்திகள் அனைத்துபம் பொய்யானது...

இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை வலைதளம் நியூஸ் மீடியா யார் பரப்புரை செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் பீகார் மாநிலம் காவல்துறை உயர் அதிகாரி DGP எச்சரிக்கை...!!

உங்கள் நன்பனான AS

Tuesday, 7 April 2020

"இந்திரா என்னும் இரும்பு பெண்மணி

"இந்திரா என்னும் இரும்பு பெண்மணி..."

முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
~விகடன்~

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?' - இந்த வரலாறு முக்கியம் :

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி...

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி' அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர். எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy's Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy's Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.

பின் குறிப்பு 3: சமீபகாலமாக விண்ணில் நிகழ்ந்தவற்றை விதந்தோதி, மண்ணில் நிகழ்ந்ததை மறந்துவிடும் பழக்கம் வந்துவிட்டதோ என்ற ஐயம் என் போன்றவர்களுக்கு வருகிறது.

காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் ஓனருக்கு இருந்த கட்ஸ் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எப்போதும் இருக்காது...

👆🏻👆🏻காஸ்ட்ரோவை சந்தித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்....
#அமெரிக்கஅதிபர் #ஐசன்ஹோவர்

1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர்​. தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது. அப்போது க்யூப அதிபரான 34 வயது பிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க இடம் அளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தது. ஐ.நா. மூத்த நிர்வாகிகளை சந்தித்த காஸ்ட்ரோ எனக்கு தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள், எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்து தங்கப் போகிறேன் என்று அதிரடியாக சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர், என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தால் அமெரிக்க அதிபரின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுமே என்று தயங்குகின்றனர். அப்போது தெரேசா ஹோட்டல் என்ற சாதாரண ஹோட்டல் உரிமையாளர் காஸ்ட்ரோவுக்கு இடம் அளிக்க முன் வருகிறார். அவரின் அன்புக்காக அங்கே தங்க சம்மதிக்கிறான் காஸ்ட்ரோ.....

நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு நாடுகளுகளின் தலைவர்கள்​ சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. காஸ்ட்ரோ தங்கியிருந்த ஹோட்டல் மட்டும் வெறிச்சோடி இருந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து கொண்டு மற்ற நாட்டு தலைவர்கள் காஸ்ட்ரோவை புறக்கணித்தனர். அப்போது, "காஸ்ட்ரோவை சந்திப்பதால் என்ன நடந்துவிடும், நான் அமெரிக்காவை சாரமாட்டேன், ரஷ்யாவையும் சாரமாட்டேன்.... எனக்கென்ன பயம் என்று சொல்லி அந்த இளம் தலைவனை சந்திக்க கிளம்பினார் இந்திய பிரதமர் நேரு. காஸ்ட்ரோவின் அறைக்குள் நேரு நுழைந்தவுடன் பதற்றமாகிறார் இளம் தலைவர் காஸ்ட்ரோ. தவைவர்கள் சந்திப்பின் போது கடைபிடிக்கப்படும் சர்வதேச சம்பிரதாயங்கள் என்னவென்றே அப்போது அந்த இளம் தலைவனுக்கு தெரியாது....

அந்த சந்திப்பை பற்றி இதோ காஸ்ட்ரோ சொல்கிறார்.....

"அப்போது​ எனக்கு வயது வெறும் 34 மட்டுமே, என்னை பற்றி என் நாட்டு மக்களுக்குத்தான் தெரியுமே தவிர பிற நாட்டினருக்கு அவ்வளவு அறிமுகம் கிடையாத சமயம். அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு.... அப்படி இருக்கும் போது என்னை யாரும் சந்திக்க முன்வராத சூழ்நிலையில் நேரு போன்ற மாபெரும் தலைவர் வந்து சந்தித்தது எனக்கு ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனை உணர்ந்து கொண்ட அவர் என்னைப் பற்றி, நான் அடைந்த இலக்கை பற்றி உயர்வாக சொல்லி என்னை உற்சாகமூட்டி, பெருமிதத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகே என் பதற்றம் தனிந்து, அவருடன் உரையாடத் தொடங்கினேன், சர்வதேச அளவில் என்னை கௌரவபடுத்திய தலைவர் நேரு....

அதற்கு பிறகு காஸ்ட்ரோவை பல்வேறு நாட்டு தலைவர்கள் சந்தித்தனர்.

தலைமை பண்பு என்பது அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அடிபணியாதது....எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே....

நாமாக முன் வந்து உதவி செய்வது வேறு, மிரட்டலுக்கு அடிபணிவது வேறு...

போராடி, தியாகம் செய்து, மதச்சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான் அடக்குமுறைக்கு அடிபணியாமல் இருக்க முடிந்தது.

மன்னிப்புக்கேட்டே பழகி, மதத்தால் பிழைப்பு நடத்தியவர்கள் வழியில் வந்த மோடியால் பயப்படாமல் இருக்க முடியாது...

காஸ்ட்ரோவுக்கு தங்க இடம் கொடுத்த தெரேசா ஹோட்டல் ஓனருக்கு இருந்த கட்ஸ் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு எப்போதும் இருக்காது...

#இப்படியும்_மனித_நேயர்கள் ட்யூட்டிக்குப் போன மனைவி

#இப்படியும்_மனித_நேயர்கள்

ட்யூட்டிக்குப் போன மனைவி இந்த இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவமனையிலேயே இரவும், பகலும் அங்கேயே தங்க நேரிடுகிறது.

இதை அறிந்திருந்த கணவரும், வீட்டில் கைக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு ஒத்துழைக்கிறார்.

இது நடப்பது கேரளாவில்..

வழக்கம் போல் கணவர் போனில் மனைவியை தொடர்பு கொள்கிறார்.
இது வழக்கமான உரையாடல் தான், ஆனால் இன்று அதில் ஒரு வித்தியாசத்தை உணர்கிறார், மனைவியின் பேச்சிலிருந்து..
உற்சாகமில்லை. ஒரு சோகம் இழையோடுகிறது.

"என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" கணவர்.

மனைவி தன்னை கட்டுப்படுத்த முடியாமல தவிக்கிறார், பொங்கி வரும் அழுகையை அடக்கினாலும், உணர்வுகளை அடக்க முடியவில்லை.

மனைவிக்கு எதுவோ ஒன்று நடந்திருக்கிறது என்று உணர ஆரம்பிக்கும்போது, அடிவயிற்றில் சில்லென்ற வலி.. பயத்தால்.

" டீ, என்ன ஆச்சு? ஏன் பேச மாட்டேங்கிறே? ஏதாவது பிரச்சினையா? சொல்லு"

"ஏட்டா, கொரொனா எனக்கும் தொற்றிடுச்சு, இப்ப நான் அடைக்கப்பட்டு இருக்கேன்" கதறி வடிக்கிறார் மனைவி.

பூமி பிளந்து கால் நழுவுகிறது கணவருக்கு.
ஒரு குடும்பத்தின் அச்சாணி மளுக்கென்று முறிந்து, குடை சாய்கிறது.
சாவுக்கு பக்கத்தில் போய்விட்டாளா, இல்லை சாவு இவளுக்கு பக்கத்தில் நெருங்கி வந்துவிட்டதா?
இப்போது கணவர் வெடித்து அழுகிறார்.

ஊரைக் காப்பாற்றப் போனவளுக்கு இப்போது தொற்று,
வைரஸ்க்கு ஏது அந்த வித்தியாசம்?

இப்படி எத்தனையோ தேவதைகள், மருத்துவர் தெய்வங்கள் தெரிந்தும் தங்கள் உயிர், குடும்பம் முழுக்க அடகு வைத்து விட்டுப் போவது, சக மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற தெய்வ சிந்தனைக்கும் மேலான மனிதாபிமானம் ஒன்றே.

'குழந்தை எங்கே, பேசச் சொல்லுங்க?' பெற்ற வயிறு துடிக்கிறது.

மழலை "அம்மே,..."
"சாப்பிட்டியா.?" அம்மா..

*நீ எப்பம்மா வீட்டிற்கு வருவே.?"*

பதில் தெரியாத இளம் தாய் அழுகிறாள், தனது கனவான மருத்துவ தொழிலை, தனது இளம் வயதில் தேர்த்தெடுத்துப் படித்த அந்த தேவதை, இன்று கொடுக்கும் விலை?

இதை கண்ணீரோடு எழுதுகிறேன், ஆனாலும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கைநோடு..

*அம்மா, திரும்ப நல்லபடியா வருவாங்கடா தங்கம்..!!*

வருவார்கள், மீண்டு வருவார்கள், என் தெய்வங்களையும், தேவதைகளையும் கை தட்டி வரவேற்க காத்திருக்கிறேன் உங்களோடு நானும்.👇👆

இதுவே இறுதி சடங்கிற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள நடைமுறை

இதுவே இறுதி சடங்கிற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள நடைமுறை

Monday, 6 April 2020

கை தட்டினால் இப்படி தட்டனும்...

கை தட்டினால் இப்படி தட்டனும்...

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.

1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.

2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.

3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.

4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.

5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.

6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.

7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.

8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.

10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.

11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.

13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.

14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.

15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.

16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.

17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.

18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.

21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

உங்கள் நன்பனான AS

Saturday, 4 April 2020

சரியான விடையை தேர்ந்தெடுக்க*

*சரியான விடையை தேர்ந்தெடுக்க*

1) Feb 24 ல் டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கூட்டத்தில் சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட வெளிநாட்டுகாரர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. டெல்லி முஸ்லிம்கள்

B. கெஜ்ரிவால்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. இந்திய பிரதமர்

2) அதே Feb 24 ல் நடந்த லட்ச கணக்கான பேர் கலந்து கொண்ட 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தியது யார்? அதில் கலந்து கொண்ட பல அமெரிக்கர்களுக்கு வீசா வழங்கியது யார்?

A. கிறிஸ்தவர்கள்

B. இந்திய பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. டொனால்ட் ட்ரம்ப்

3) Feb 21 அன்று ஈஷா யோகா மையம், கோயம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சீனா, இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், லெபனான் போன்ற பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இந்தியாவிற்குள் வர வீசா வழங்கியது யார்?

A. இந்திய பிரதமர்

B. அமெரிக்கா பிரதமர்

C. பாகிஸ்தான் பிரதமர்

D. ஜக்கி வாசு தேவ்

4) டெல்லி மற்றும் பிற மாநிலங்களுக்கு பிழைக்க சென்ற மக்களுக்கு உணவளிக்காமலும் வீடு திரும்ப வழிவகை செய்யாமலும் ஊரடங்கை அமல்படுத்தி கூட்டம் கூட்டமாக ரோட்டில் அழையவிட்டது யார்?

A. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

B. அமெரிக்கா பிரதமர்

C. இந்திய பிரதமர்

D. ஆண்டி இண்டியன்ஸ்

5) வீசா வழங்கப்பட்டு இந்தியாவிற்குள் வந்தவர்களை (மத்திய அரசு கட்டுபாட்டுக்குள் இருக்கும்) ஏர்போர்ட்டில் Screening Process சரியாக செய்யாததற்
கு யார் பொறுப்பு?

A. மோடி

B. இம்ரான்கான்

C. இந்திய மக்கள்

D. கொரோனா

6) இப்பொழுது இந்தியாவில் கொரோனா பரவியதற்கு யார் காரணம்?

A. இந்து

B. முஸ்லிம்

C. கிறிஸ்டின்

D. மோடி

சங்கிகளுக்கு Questions ரொம்ப Tough ஆ இருக்கும். அதனால 6 கேள்விக்கும் சேர்த்து ஒரே ஒரு Clue கொடுக்குறேன்.

(இல்லாத ரயில்வே ஸ்டேஷனில் 'டீ' ஆத்தியவர்.)
...........................................


உங்கள் நன்பனான AS