Thursday, 23 January 2020

தேர்தல்_அப்போது_உண்மையை_மறைத்துவிட்டால்

#தேர்தல்_அப்போது_உண்மையை_மறைத்துவிட்டால்_போதும்_ஆட்சியில்_அமர்ந்துவிட்டால்_என்ன_தான்‌_உண்மை வெளி வந்தாலும் ஒன்றும்‌செய்ய இயலாது மக்களால்.

பாஜக முறைகேடு செய்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றது.

ஆதாரம் 👇👇👇

வேலைகிடைக்காத விரக்தியில் குண்டு வைத்து தீவிரவாதியாக, பயங்கரவாதியாக மாறிய BE மற்றும் MBA உயர் படிப்பு படித்த இந்து சகோதரன்

வேலைகிடைக்காத விரக்தியில் குண்டு வைத்து தீவிரவாதியாக, பயங்கரவாதியாக மாறிய BE மற்றும் MBA உயர் படிப்பு படித்த இந்து சகோதரன்
இவரை #இந்துதீவிரவாதி என்று சொல்லக்கூடாது.
இவர் மோடியின் பொருளாதார மோசடி கொள்கையால் வேலைகிடைக்காத விரத்தியின் காரணமாக நன்றாக படித்த இந்து தீவிரவாதி . அவ்வளவு தான்.

பெரியார் போராட்த்தின் வெற்றி

முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன்

http://m.helo-app.com/al/esZsddwkY?c=wa



முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை, நாம் அனைவருக்குமானவர் - ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் வேண்டுமானால் பாகிஸ்தான் போகட்டும், முஸ்லிம்கள் போக வேண்டியது இல்லை என்று ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் அதிரடி தாக்கு தொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது.... பகவத் சிங்க்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை, காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை, இந்திர காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை, ராஜீவ் காந்தியை கொன்றது முஸ்லிம்கள் இல்லை, சுதந்திரத்திற்கு பாடுபட்ட எந்த தலைவர்களையும் முஸ்லிம்கள் கொள்ளவில்லை, மாறாக தனது சமூகத்தின் பெரும் பங்களிப்பை அளித்தனர், பிறகு அவர்களை எப்படி தீவிரவாதி என்று அழைக்கிறார்கள். தாகித்தவருக்கு தண்ணீர் தருவது இஸ்லாம்... இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவுவது இஸ்லாம், பசித்தவருக்கு உணவளிப்பது இஸ்லாம், அன்பு, தியாகத்தை போதிப்பது இஸ்லாம், சுயநலத்தோடு இருக்காதே என்று சொல்வது இஸ்லாம், அப்பாவிகளை கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது. இந்த நாடு பகத்சிங்கின் நாடு, இது காந்திஜியின் நாடு, இது அசப்குல்லாவின் நாடு, இது வீரன் அப்துல் ஹமீதின் நாடு. நாம் அசப்குல்லா மற்றும் மாவீரன் அப்துல் ஹமீதின் தியாகத்தை புறம்தள்ளிவிட முடியுமா? முடியாது இது அனைவருக்குமான நாடு. இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போக சொல்லும் மூடர்களிடம் இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டுபற்றை நிருப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு முஸ்லிம் நிச்சியமாக தனது இந்திய திருநாட்டை நேசிக்கும் தேசபற்றாளனாகதான் இருப்பான். கங்கை நதி அனைவருக்குமானது, ராமன் அனைவருக்கும் பொதுவானவன் அதே போல் முஹம்மது நபியும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லை நாம் அனைவருக்குமானவர், இந்த உலகமும் அனைவருக்குமானது. இறுதியாக இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூடர்களுக்கு சொல்லிகொள்கிறேன், இந்திய இஸ்லாமியர்களை பாக்கிஸ்தான் போக சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை, அப்படி பாகிஸ்தான் போக வேண்டும் என்றால் நீங்கள் செல்லுங்கள் என்று விளாசி தள்ளியுள்ளார்.

வேலைப்பளு* அதிகமென்றோ.. வேலை பார்க்கும் இடத்தில் *மன உளைச்சல்* job stress

*வேலைப்பளு* அதிகமென்றோ..
வேலை பார்க்கும் இடத்தில் *மன உளைச்சல்* என்றோ தயவு செய்து எங்கேயும் எவரிடமும் புலம்பாதீர்கள்..!!

நீங்கள் இப்படிச் சலித்துக் கொண்டு செய்யும் *இந்த வேலை தான் உங்களுக்கே...உங்களுக்கென ஒரு சமூக அந்தஸ்தையும்..*
*உற்றார் உறவினர் மத்தியில் மரியாதையையும்..* *உங்களுக்கொரு தனித்த அடையாளத்தையும்..* *இதையெல்லாவற்றை விடவும் நீங்கள் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம்..*
*பணம்,காசு எனும் வாழ்வாதாரத்தையும் உங்களுக்கு வழங்கியது* என்பதை மறந்து விட வேண்டாம்..!!

வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!!

வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களது வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்..
வலி..
வேதனை..
ரணம்..
அவமானம்..
துயரம்..
துக்கம்..
மிக மிகப் பெரியது..!!

கடலளவு கண்ணீரைச் சுமந்தபடி.. தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை..
அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!!

இங்கு எல்லோருக்கும் பிடித்த வேலை கிடைத்து விடுவதில்லை..!! பெரும்பாலும் கிடைத்த வேலையைத் தான் செய்து கொண்டிருப்பதால் இயல்பாக உருவாகும் சலிப்பும் சோர்வும் தான் நீங்கள் குறிப்பிடும் அந்த *வொர்க் பிரஷர்... ப்ரொஃபஷெனல் ஸ்ட்ரெஸ்..!!*

உண்மையில் வேலைப் பளுவென்பது நீங்கள் பெற்ற சிசு அதை நீங்கள் அள்ளியெடுத்துக் கொஞ்சும் போது உங்கள் நெஞ்சில் அது தன் பிஞ்சுக் கால்களால் எட்டி உதைப்பதற்கிணையான ஆனந்த வலி.. இன்பச் சுமை..!!
ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்...
*இந்த வேலையில்லாமல் நீங்கள் ஒரு செல்லாக்காசு* என்பது புலப்படும்..!!

வேலைக்குச் செல்லத் தகுந்த அத்தனை தகுதிகளும் நிரம்பியிருந்தும் ஏதேதோ காரணங்களால் வேலைக்குச் செல்லும் வாய்ப்பேயமையாமல் முழு நேரமும் குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கு கடைசி வரையிலும் உங்களைப் போல் ஆஃபிஸ் சென்று வருவது ஒரு கனவாகவே கரைந்து மறைந்து அவர்கள் நிராசையாகவே போய்விடுவதும் நீங்கள் வாழும் இதே நாட்டின் நிலை தான் என்பதையுணரும் போது.. வேலைக்குச் சென்று வரும் நீங்கள் எத்தனை பெரிய வரம் பெற்றவர்கள் என்பது உங்களுக்கே புரியும்..!!

வேலைக்குச் செல்லும் உங்களுக்கு நிகராக.. இல்லையில்லை உங்களை விடவும் மிக அதிக ஸ்ட்ரெஸ் மன உளைச்சல் வீட்டோடு இருந்து வீட்டையும் தன் வீட்டு வேலைகளையும் மேலாண்மை செய்யும் குடும்பத் தலைவிகளுக்கும் உண்டு..!!

தான் அதுநாள் வரை செய்து கொண்டிருந்த வேலை பறி போனவர்களுக்கும்.. குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகியவர்களுக்கும் வேலையின் அருமை என்னவென்று உணர்வுப்பூர்வமாகத் தெரிந்திருக்கும்..!!

படிப்பு முடிந்து உடனே அல்லது படித்துக் கொண்டிருக்கும் போதே
மிக இளம் வயதில் திருமணம் முடிந்து.. குழந்தைகள் பெற்று வளர்த்து அதன் பிறகும் தீராத வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு உங்கள் வேலைப்பளுவெல்லாம் தூசுக்குச் சமம்..!!

அதை
வேலைப் பளு..
சுமை..
ஸ்ட்ரெஸ்
எனக் குறிப்பிடாதீர்கள்..!!

கொஞ்சம் கூடுதல் வேலை என்பது ரசித்து இன்முகத்தோடு நீங்கள் ஏற்க வேண்டிய உங்களுக்கான வெகுமதியாகும்..!!

வேலையென்பது வேலை மட்டுமேயல்ல அது நம் வாழ்க்கையின் ஆதாரம் அஸ்திவாரம்..!!

எதற்காகவும் உங்கள் உத்யோகத்தைச் சபிக்காதீர்கள்..!! *வேலையென்பது சாபமல்ல..*
*நீங்கள் உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு..*
*வசதி..*
*வரம்..!!*

இப் பதிவை படித்தேன்.

சிந்திக்க வைத்த பதிவு.புலம்பும் நண்பா்களுக்கு புத்துணா்வை ஊட்டக்கூடிய மிக அருமையான பதிவு*


Sent from my iPhone

Wednesday, 22 January 2020

தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்

தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்...

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்.

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது...

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்...

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்...

அத்தா, அச்சன், முத்தன், அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்...

"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.

"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்.

" சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் .

"அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"" என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம்.

அப்பன் -அப்பா, அத்தன் – அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.

துருக்கியனை அத்தா என்று அழைக்க காரணம் தலைவன் என்ற பொருளில்தான்

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அத்தா !!

அப்பா என்கிறவன் தனக்கு வாழ்வு கொடுக்கிற இடத்தில் இருப்பதால் சிலர் அப்பாவை வாப்பா என்றழைப்பர்.

செம்மொழித் தமிழே தமிழக முஸ்லீம்களின் தாய்மொழி. அவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் உறைவதும் ஒலிப்பதும் செந்தமிழ். இதையே 'எங்களுயிர்த் தமிழ் வழக்கு' என்று அன்றே பாடினார் ஆபிதீன்.

'பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே'

விளக்கவுரை தேவையில்லை. ஏனம், ஆணம், நீர்ச்சோறு, சோறு முதலான எண்ணற்ற உணவு மற்றும் உறவு முறைச்சொற்களை தமிழ் முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக வழங்கி வருகின்றனர்.

இன்றைக்கு அத்துனை இஸ்லாமியர்கள் வீடுகளில் எல்லா நேரங்களிலும் தமிழ் நடைமுறைப் பேச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது

யாரெல்லாம் இன்றும் தொழுகை, நோன்பு ,ஆணம் பள்ளிவாசல்கள் என்று கூறுவாரோ அவரெல்லாம் சமணத்திலிருந்து வந்த தூய தமிழ் கடற்கரை வாழ் இஸ்லாமியர்களே!!!

தொல்காப்பியர்,திருவள்ளுவர்(வள்ளுவர் சமணரா என்ற கேள்வியும் உண்டு நாம் பிறகு பார்ப்பபோம் இதுபற்றி).

இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்; அறிவாளிகள்!!!

தமிழ்நாட்டில்:-

கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு அதிகளவில் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம்.

இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும்,மேலும் தொழுகை நோன்பு என்பன தூய தமிழ் என்பதும் அதை முழுக்க முழுக்க சமணர்களே பயன்படுத்தினார்கள்.

இஸ்லாத்திற்கு வந்த சமணர்களே இன்றும் அதாவது இன்றைய தாய்மொழி தமிழ் பேசும் முஸ்லிம்களே இந்த வார்த்தைகளை இன்றும் பயன்படுத்துகிறார்கள்

மூதாதயரை தேடுவோம் அழிக்கப்பட்டவரலாரை பரப்புவோம்!!

14ஆம் நூற்றாண்டுகளில்தான் இஸ்லாமியர்கள் இலக்கண இலக்கிய காப்பியங்களை இயற்றுபவர்கள் வருகை அதிகரித்தது அதிலும் கூர்ந்து கவனித்தால் தெரியும் அனைவருமே கடற்கரையை ஒட்டிய முஸ்லிம்கள் !!!

காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டார்கள் கடற்கரை சமணர்கள் !!

ஆரிய சைவ கொடுமையால் வேறு வழியின்றி தற்காப்புக்காக.இருப்பினும் சமணர்கள் இஸ்லாத்திற்கு வந்து கொள்கையான புலாலை ஆரம்பத்தில் உண்ணாமலே இருந்துள்ளனர். காலப்போக்கில் இஸ்லாமிய கொள்கையில் பற்றுகொண்டும் பல நாடுகளின் வணிகதொடர்பாலும் வழக்கம் மாறியுள்ளது!!!

மது இஸ்லாத்தில் தடை சமணரளுக்கு இஸ்லாம் ஒரு கொடை!!

சமணர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்து தமிழ்காப்பியங்களையும் இலக்கியங்களையும் தமிழ் பற்றை நிறுபித்துள்ளனர்.

நாகூர் காயல்பட்டினத்தவரே அதிகம் தமிழ் இலக்கண, காப்பியங்கள் எழுத்தாளர்களை காணமுடிகிறது!!!

காரணம் சமணத்திலிருந்து இஸ்லாத்தை முழுவதும் படிப்படியாக உள்வாங்கி கொண்டு இஸ்லாத்தை ஏற்று தமிழை வளர்த்துள்ளார்கள்!!

தான் எந்த மதம் ஜாதி வந்தோம் என்பதே மறக்கடித்து மதிப்பை வழங்கும் இஸ்லாமே வாழ்க போற்றி தழைக்க மென்மேலும்!!!

இஸ்லாமியர்கள் 14ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை அதிகம் தமிழுக்கு தொண்டு செய்வதை காணலாம்

துலக்கமானவர்தான் துலுக்கன் இல்லை!!!

ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்க முளராகி"

(திருவாதவூர்ப் புராணத்தில்)

திருவாதவூரடிகள் புராணம்:-

கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம்
545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல்.

சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கொள்ளலாம். இதன் முக்கியச் சிறப்பு இதுவேயாகும்.

மந்திரிச்சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் என்ற பல பகுதிகள் இப்புராணத்தில் அடங்கியுள்ளன.

சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.

கடவுள் மாமுனிவர் காலம்:-

11 ஆம் நூற்றாண்டு கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது.

13 ஆம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.

உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது.

எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.

ராவுத்தன்:-

திருநாவுக்கரசரின் தேவரத்திலும் (5-29, 5-40) , நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் (4-4) இதைப்போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன

சிவபெருமான் நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் சேர்ப்பித்தநிகழ்ச்சியில் சிவனை
இராவுத்தநாயகனாகவே சித்தரிப்பதைக் காணலாம்.

அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்காரத்தில்,

'மாமயிலேறும் ராவுத்தனே'என்றும்

கந்தர் கலி வெண்பாவில்

'சூர்க்கொன்ற ராவுத்தனே' என்றும்புகழ்ந்திருக்கின்றனர்

பூதலூர் அப்துல்மாலிக்

1971 ல் சோ மன்னிப்பு கேட்டதற்கு ஆதாரம் இங்கே ! ரஜினி மன்னிப்பு கேட்ப்பது எப்பொழுது

1971 ல் சோ மன்னிப்பு கேட்டதற்கு ஆதாரம் இங்கே !

ரஜினி மன்னிப்பு கேட்ப்பது எப்பொழுது

பெரியாரல் பயனடைந்த 90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..

*தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பை தவிர்த்தோ ஆதரித்தோ எதிர்த்தோ* எப்படி வேண்டுமானாலும் பாருங்கள் அது அவரவர்கள் உரிமை...ஆனால்

பெரியாரல் பயனடைந்த
90 சதவிகித தலைமுறைகளில் நீங்களும் நானும் ஒருவராகத்தான் இருப்போம்..

கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலனுக்காக வாழ்நாள் முழுவதும்
போராடிய பெரியாரையும்..அதன் வழிவந்த திமுக அதிமுக வினரையும் தான் கடவுள் நம்பிக்கைவுள்ள எல்லா மற்ற எல்லா மதத்தினரும் / மக்களும் மதிப்பதற்கும்...

கடந்த 50 ஆண்டுகால தமிழக தேர்தலில்களில் திராவிட கொள்கை கொண்ட திமுக அதிமுகவினர்களுக்கே 80 % தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பதற்கு காரணம்....

பெரியார் சிந்தனைகளும் போராட்டங்களும் அப்படிபட்டது...

* மூடநம்பிக்கை எதிர்த்து
* சாதி வேறுபாடுகளை எதிர்த்து..
* ஆலய #மறுப்பை எதிர்த்து...
* குலக்கல்வியை எதிர்த்து..
* குலத்தொழிலை எதிர்த்து...
* தீண்டாமையை எதிர்த்து..

* பெண் கல்வி மறுப்பை எதிர்த்து...
* குழந்தை திருமணம் எதிர்த்து...
* விதவைகள் * மறுமணம் ஆதரித்து...
* கலப்பு திருமணத்தினை ஆதரித்து...
* பிறப்பால் ஏற்றத்தாழ்வை கண்டித்து...
* இந்தி திணிப்பை எதிர்த்து...

* அடக்குமுறைகளை எதிர்த்து...
* ஆதிக்க சக்திகளை எதிர்த்து...
* பெண்கள் சொத்துரிமைக்காக
* தமிழ் மொழி எழுச்சிககாக
* தாழ்த்தப்பட்ட மக்களுக்காக....
* அரசியல் முரண்பாடுகளை எதிர்த்து..

பெரியார் தன் கடைசி மூச்சு வரை அயராது ஓயாது போராடினார்...
மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்று தர போராடி வென்றவர்
தந்தை பெரியார் அவர்கள்...

இன்று தந்தை பெரியாரை யார் அவமதித்தாலும்...அவர்களை தமிழக மககள் புறம் தள்ளுவார்கள் என்பதினை பெரியாரை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு தமிழகத்தில் யார் அரசியல் செய்ய நினைத்தாலும் அதிகாரம் செய்ய நினைத்தாலும் அவர்கள் தோல்வியைத்தான் தழுவுவார்கள்....

ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுயமரியாதையாக வாழ வழி செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்..

ஆகவே பெரியாரை எதிர்ப்பவர்களை விட பெரியாரால் பயனடைந்த இந்த தமிழ் சமூகத்தினை சேர்ந்தவர்கள் 90 சதவிகிதம் இருக்கின்றார்கள்...

குறிப்பாக தமிழக பெண்கள் பெரியாரின் வரலாறை படித்து தங்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி தந்து அவர்களையும் விழிப்புணர்வு கொண்ட தலைமுறைகளாக வளர்க்க வேண்டும்.

அதுவே குலத்தொழிலை சட்டமாக்கி தமிழகத்தினை கொத்தடிமைகளாக நினைத்தவர்களை வீழ்த்தி ...இன்று நம்மை அனைத்து சமூகதளத்திலும் தமிழ் மக்களை உயர்த்திய தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்...

Jp..Madurai..
9789120134


Sent from my iPhone

இந்திய தேசிய லீக் - கட்சி அறிவிப்பு உருப்படியான, நல்ல முடிவு..!

 #அல்ஹம்துலில்லாஹ்

உருப்படியான, நல்ல முடிவு..!  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*#இந்தியதேசியலீக்கட்சியைக் கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து,*
 *அதன் தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார் 
#எம்ஜிகே_நிஜாமுதீன்.*

“இன்றைய இக்கட்டான சூழலில் முஸ்லிம்கள் பல கட்சிகளாகவும் கட்சிக்குள் கூறுகளாகவும் கோஷ்டிகளாகவும் பிரிந்துகிடப்பது சமுதாயத்துக்கு நல்லதல்ல. 

"நலிவடைந்த கட்சிகளைக் கலைப்பது அல்லது பிற கட்சிகளோடு இணைப்பது ஆகிய நடவடிக்கை மூலமாக முஸ்லிம் கட்சிகளின் கட்டுக்கடங்கா எண்ணிக்கையைக் குறைப்பது அவசியம்” என்று நிஜாமுதீன் அவர்கள் கூறியுள்ளார்.

உருப்படியான நல்ல ஆலோசனை, நல்ல முடிவு இது.

இந்த வகையில் முன்னோடியாக இருந்தவர் அ.ச. உமர் பாரூக் அவர்கள்.

*#மறுமலர்ச்சிமுஸ்லிம்லீக் எனும் கட்சியின் தலைவராக இருந்த அ.ச. உமர் பாரூக்* ஒரு கட்டத்தில் தமது கட்சியை *எஸ்டிபிஐ கட்சியுடன் இணைத்துவிட்டார்.*

இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில 
பொதுச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி வருகிறார்.

முஸ்லிம்களுக்கென்று ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் இருந்தால் போதும்.

ஆகவே சிறிய கட்சிகள் நாட்டு நலனையும் சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு தங்கள் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும் அல்லது பிற  கட்சிகளுடன் இணைந்துகொள்ள வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம்.

தன்முனைப்பு, ஈகோ, ‘நீ தலைவனா நான் தலைவனா” என்றெல்லாம் முறுக்கிக்கொண்டு முகம் திருப்பி நின்றால், பாசிச அலை உங்களை அடித்துச் சென்றுவிடும்.

அப்போது கதறி எந்தப் பயனும் இல்லை.
-சிராஜுல்ஹஸன்

இஸ்லாமியனாக பிறந்தது குற்றமா? இன்று முஸ்லிம்கள் நாளை நாம் துரைமுருகன் அவர்களில் உரை

இஸ்லாமியனாக பிறந்தது குற்றமா?

இன்று முஸ்லிம்கள் நாளை நாம்

துரைமுருகன் அவர்களில் உரை

https://www.facebook.com/tmmkwebnews/videos/168159184524440/


Sent from my iPhone