Sunday, 12 January 2020

மோடியின் அப்பாவுக்கு பிறப்பு சான்றிதழ் எங்கே??

மோடியின் அப்பாவுக்கு பிறப்பு சான்றிதழ் எங்கே??

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், மக்கள் விரோத குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்திய நாளில் இருந்து தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். கடந்த ஒரு மாதகாலமாக அவரது டிவிட்டர் கணக்குகள் பாஜகவை விமர்சிக்கும் பதிவுகளால் நிறம்பி வழிகின்றன. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாஜக - ஆர்எஸ்எஸ் தரப்பு மிரட்டல்களையும் எதிர்கொண்டார்

நேற்று ட்விட்டரில் மோடி படித்த உலக அரசியல் பற்றிய டிகிரி, மோடியின் பிறப்பு சான்றிதழ் மற்றும் மோடியின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கான பிறப்பு மற்றும் குடியிருப்பு ஆதார சான்றிதழ் அனைத்தையும் பார்க்க விரும்புவதாகவும், அதன் பிறகு நாட்டு மக்களின் ஆவணங்களை கேட்கட்டும் என இந்தியில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதனுடன் #F**kCAA என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்து மக்கள் அனைவரும் இதனை பின்பற்றும்படியும் கேட்டுள்ளார்.

Fight_Against_Fascism

*இப்படி ஒரு உரையாற்ற முடியாத காலக்கொடுமையில்நம்ம சட்டமன்றம்! மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு..!*

_*வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும்..!*_

*எம்.ஸ்வராஜ் MLA.,*
_CPIM, கேரளா சட்டமன்றத்தில்..._

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை ஒழிக்க முயல்கின்றன. குடியுரிமைச் சட்டம் குறித்த பொய்யான வதந்திகளை, சங்க பரிவார் இப்போது இந்தியா முழுவதும் திட்டமிட்டு பரப்புகிறது.

இன்றைய இந்தியாவில் சங்க பரிவார் அமைப்புகள் அப்பட்டமான பொய்களின் உதவியின்றி தாக்குப்பிடித்து நிற்க முடியாது என்பது இந்திய மக்கள் யாவரும் அறிந்த உண்மை. குடியுரிமைச் சட்டத்தையும் (CAA) குடியுரிமைப் பதிவேட்டையும் (NRC) ஒன்றாக இணைத்து பார்க்கும் போதுதான் முழுமையான உண்மை வெளிவருகிறது.

இந்திய மண்ணில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும், இந்தியாவின் முதல் குடிமகனான ஃபக்ருதீன் அலி அகமது அவர்களின் குடும்பத்தினர், எப்படி இந்தியர் அல்லாதவராக மாற முடியும்? கார்கில் எல்லையைப் பாதுகாத்து நின்றதற்கு ஜனாதிபதியின் பதக்கத்தைப் பெற்ற முகமது சனாவுல்லா கான் எவ்வாறு இந்திய குடிமகன் அல்லாதவர் ஆனார்?

இந்திய ராணுவத்தில் உன்னத சேவை ஆற்றிய முகமது அஸ்மல் ஹக் எப்படி இந்தியர் அல்லாதவர் ஆனார்? இதற்கெல்லாம் நீங்கள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் திரளை வேண்டுமென்றே தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்ல, திட்டமிட்டு இயற்றப்பட்ட சட்டம் இது.

மரியாதைக்குரிய, பாஜக (நேமம் தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர் ராஜகோபால் அவர்கள், தனது 90 வயதில் கூட, மனிதகுலத்தின் மீது அன்பு செலுத்தத் தகுந்த ஒரு வார்த்தையை உச்சரிக்க முடியாவிட்டால், உங்கள் அரசியல், எவ்வளவு இழிவானதும் வன்முறையானதும் என்பதை அடையாளம் கண்டுபிடித்து, அதைக் கண்டு அச்சமடைகிறோம்.

இங்கு வசிக்கும் மக்களிடம் ஆதாரங்களை கேட்கிறார்கள். இந்த மண்ணில் பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவர்களிடம், அவர்களின் குடியுரிமை பற்றி சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கிறார்கள். எல்லா மதப் பிரிவினர்களிலும் எத்தனை எத்தனை தீரம் மிக்க தியாகிகள் உள்ளனர்? கேரளாவில் எத்தனை அனுபவங்கள் உள்ளன?

முஸ்லீம் சமூகத்தை அழித்து ஒழிக்கும் நோக்கில் உள்ள இந்தச் சட்டத்தை நீங்கள் உருவாக்கும்போது, கேரளாவின் மலபாரில் நடந்த சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்தீர்களா? எத்தனை எத்தனை அனுபவங்கள் அங்கே உள்ளன?

1852 இல் பிரிட்டனுக்கு நாடுகடத்தப்பட்ட சையத் ஃபசல் பூக்கோயா தங்கள் அவர்களின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மாம்பறம் என்ற இடத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? வாழக்காடு அருகே கொந்நாரா என்ற கிராமம் உள்ளது. அந்த கொந்நாரா மக்காம் இன்றும் கூட ஒரு வரலாற்று அடையாளமாக நிற்கிறது. அது அக்காலத்தில் மசூதியாக இருந்தது. அந்த மசூதி ஆங்கிலேயர்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது ஆகும்.

அது அக்காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் மையமாக இருந்தது. இன்றும், அந்த பாதையில் கடந்து செல்லும்போது, ஆங்கிலேயர்கள் சுட்ட போது, பாய்ந்து பதிந்த தோட்டாக்கள், அகற்றப்படாமல் கொந்நாரா மக்காமின், சுற்று சுவற்றில் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

அங்கிருந்து பலப்பிரயோகம் செய்து சையத் முகமது கோயா, ஆங்கிலேயர்களால் வலுக்கட்டாயமாக கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

வாரியங்குந்நத்து குஞ்சஹம்மது ஹாஜி என்ற பெயரை நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? பிரிட்டனின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராக சவால் விடுத்து, அந்த மண்ணின் மைந்தர்களின் சொந்த தேசத்தை நிறுவியர் அவர். அவர் தனது குடியரசிற்கு 'மலையாள தேசம்' என்று பெயரிட்டார்.

ஆங்கிலேயர்கள் அவரை அடக்குமுறையை ஏவி ஒடுக்கினர். மிருகத்தனமான அடக்குமுறைக்கு ஆளாக்கி தண்டித்தனர். மீசையின் ரோமங்கள் ஒவ்வொன்றும் இழுத்து பிடுங்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்திய பிறகு, இறுதியாக அவருக்கு சலுகை ஒன்றை ஆங்கிலேயர்கள் முன்வைத்தார்கள்.

சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகி, மன்னிப்புக்கடிதம் ஒன்றை எழுதித் தருவதானால், உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அதன் மூலம், நீங்கள் மக்காவில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படுவீர்கள். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தரும் என்று ஆங்கிலேய இராணுவ தளபதி கூறினார்.

இந்த சலுகையை கேட்டதும், சித்திரவதையால் உடல் தளர்ந்து போன நிலையிலும், புன்னகை மாறாத முகத்துடன் வாரியம்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜி எவ்வாறு பதிலளித்தார் தெரியுமா?

"எனக்கு மக்காவை ரொம்பப் பிடிக்கும், ஆனால் நான் மக்காவில் பிறக்கவில்லை, போராட்ட வரலாறுகள் நிறைந்த ஏறநாடு என்ற இந்த மண்ணில்தான் பிறந்தேன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நான் இந்த மண்ணில் இறந்து வீழ்வேன். இந்த மண்ணுடன் இரண்டறக்கலந்து போவேன்" என்று தான் அவர் வீரத்துடன் கூறினார்.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. "நான் பிறந்த இந்த நாட்டிற்காக தியாகியாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது" என்று கூறினார். அவரது விருப்பப்படி, பின்னாலிருந்து சுட்டு கொள்வதற்குப் பதிலாக, முன்னால் இருந்து துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டு, கொல்லப்பட்டார்.

அக்காலத்தில், தண்டனை பெற்றவர்களின் கண்கள் கட்டப்பட்டு, பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், வாரியம்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜியின் இறுதி ஆசை என்ன என்று கேட்ட போது, "நீங்கள் என் கண்களை கட்டக்கூடாது. என்னை முன்னால் இருந்து சுட வேண்டும்." என்று வீரத்துடன் கூறிய துணிச்சலான மனிதர்களின் நிலம் தான் நமது நாடு.

இது ஆலிமுஸ்லியார் போன்ற வீரர்களின் மண். சுதந்திரப் போராட்டத்தின் எல்லா காலகட்டத்திலும், பிரிட்டிஷ் இராணுவத்துடன் சாதாரண பொதுமக்கள் நேருக்கு நேர் மோதிய வரலாறு, ஒன்றே ஓன்று மட்டுமே உள்ளது. அது இன்றைய மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பூக்கோட்டூர் என்ற இடத்தில் நடந்தது. அந்த போரை நினைவு கூரும் நினைவிடம் இன்றும் அந்த ஊரில் உள்ளது.

பிரிட்டிஷ் இராணுவத்தை தோற்கடித்த பெருமைக்குரியவர்கள் தான் ஏறநாட்டின் மாப்பிளை வம்சத்தினர். அந்த கம்பீரமான கடந்த கால வரலாறு நிலவும் நமது சமூகத்தில் தான், அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான மக்களை சந்தேகத்தின் நிழலில் வைத்திருக்கும் அணுகுமுறையை நீங்கள் எடுக்கிறீர்கள்.

1935 இல் ஹிட்லர் யூதர்களைக் கொல்ல அழித்தொழிப்பு மையங்களை உருவாக்கி, இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான். சரியாக பத்தாவது வருடம் தற்கொலை செய்து கொண்டு சாகும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்பது கடந்த கால பாசிசத்தின் வரலாறு.

இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்ற ஆஷ்ச்விட்ஸில் உள்ள அக்கால வதை முகாம், பின்னர் போர் நினைவு அருங்காட்சியகமாக மாறியது. அதன் நுழைவாயிலில், "வரலாற்றை மறந்தவர்களை வரலாறு தண்டிக்கும்" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதையே தான் இன்றைய காலகட்டம், நரேந்திர மோடியிடம், வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும் என்று கடந்த கால வரலாற்றை நினைவு படுத்துகிறது. வரலாறு தண்டிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவை இல்லை.

அகதிகளை, மதத்தைக் கருத்தில் கொள்ளாமல், மனித நேயத்தைக் கணக்கில் கொண்டு ஏற்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தும். இந்தியா தனிமைப்படுத்தப்படும்.

முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக இந்த சட்டம் இப்போது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், இது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல. இது ஒரு துவக்கம் மட்டுமே. நாளை சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் எதிர்கருத்து பேசுபவர்களுக்கு எல்லாம் எதிராக, ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களின் ஒரு முன்னோட்டமாகும்.

இது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதிக்கும் பிரச்சினை. மதச்சார்பின்மையை பாதிக்கும் பிரச்சினை. அந்த கண்ணோட்டத்தில் இந்த சட்டத்தை பார்க்க நாம் முயல வேண்டும்.

கோல்வால்கர் ஒரு இந்து மௌதூதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது போலவே மௌதூதி ஒரு முஸ்லீம் கோல்வால்கர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இவர்கள் இருவருமே மனிதநேயம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். அனைத்து மதச்சார்பற்ற மக்களும் ஒன்றிணைந்து மனிதநேயம் என்ற கருத்தை நிலைநிறுத்துவதன் மூலம், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்.

இந்த நாட்டைக் சாகடிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம். இந்தப் போராட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரானது. இந்தப் போராட்டத்தின்போது நாம் ஏந்த வேண்டிய கொடி, நமது தேசியக் கொடி ஆகும். நாம் ஒன்றுபட வேண்டும். இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டும்".

_[31.12.2019 அன்று கேரள சட்டமன்றத்தில் தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, DYFI முன்னாள் கேரள மாநிலக்குழு செயலாளரும், CPIM கேரள மாநிலக்குழு உறுப்பினரும், CPIM திர்பூணித்துறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தோழர் எம். ஸ்வராஜ் ஆற்றிய, அனைவரது கவனத்தையும் ஈர்த்த உரையின் தமிழாக்கம்._ 🌹 🌹 🌹 🌹

_(இந்த உரை இந்திய குடிமக்கள் என்ற முறையில் அனைவராலும் கேட்கப்பட வேண்டிய, படிக்கப் பட வேண்டிய, தலைமுறைகள் கடந்தும் நினைக்கப் படவேண்டிய உரை)]_

#Fight_Against_Fascism

அமெரிக்கா - ஈரான் சிக்கலில் இந்தியாவின் நிலை?*

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
ஈரான் ராணுவத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமாணியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் கொன்றது வளைகுடா பகுதியில் மீண்டும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்ற பொய்யானதொரு காரணத்தைக் கூறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் குவாத் பிரிவின் தலைமை கமாண்டரான சுலைமாணியையும், ஈராக்கின் மக்கள் அணிப் படைகளின் துணைக் கமாண்டர் அபு மகதி அல் முகாந்திசையும் பாக்தாத் நகரின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளனர்.

இப்படி மற்றொரு நாட்டின் தலைவர்கள், முக்கியத் தளபதிகளை அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படுகொலை செய்வது ஒபாமா காலத்தில் இருந்தே நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு ஏமன் போன்ற நாடுகளில் உள்ள பல தீவிரவாதக் குழுக்களின் தலைவர்கள் இப்படிக் கொல்லப்படுவது தொடர்ந்து செய்திகளாக வருகிறது. ஈரான் நாட்டின் அதிகாரபூர்வ ராணுவத் தளபதி ஈராக் நாட்டில் போர்க் குழுக்களுக்குள் உள்ள முரண்பாடுகளைக் களைவது குறித்து ஈராக்கின் அழைப்பின் பேரில் நடைபெறும் கூட்டத்துக்காக பாக்தாத் சென்றபோதுதான் அமெரிக்கா இப்படிச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தாக்குதல் ஈரான் நாட்டை மட்டுமல்ல, ஈராக்கையும் கொதிப்படைய வைத்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே ஈரானின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தது. ஒருகட்டத்தில் ஈரான் கையெழுத்திட்ட அணுசக்தி உடன்பாட்டை ஈரான் ரத்து செய்தது. இதனால் ஈரானை நெருக்கும் பொருட்டு பல்வேறு புதிய தடைகளையும் விதித்து வந்தது அமெரிக்கா. தற்போது இந்தத் தாக்குதலைச் செய்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதன் பின்னணியில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை மனத்தில் வைத்துதான் என்றும், மேலும் அமெரிக்க செனட் சபையில் ட்ரம்புக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதிலிருந்து திசை திருப்பவுமே என்று தகவல்கள் கிடைக்கின்றன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஈரான், ஈராக்கில் கடும் பின்விளைவுகளைச் சந்திக்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும், ஈராக்கிலிருந்து அமெரிக்கா மற்றும் மற்ற நாட்டு படைகளின் முகாம்களையும் களைத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டுமென்று ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது அமெரிக்காவுக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்தச் சிக்கல் மேலும் உலகளவில் பகைமையையும், போர்ச் சூழலையும் ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

ஈரானைத் தனிமைப்படுத்த நினைத்து தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க அதன் நட்பு நாடுகள் தயங்கி வருகின்றன. சுலைமாணியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று 30 லட்சம் பேர் பங்கேற்றதாகச் செய்திகள். அன்றைய தினம் ஈரானின் ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது வளைகுடா பிராந்தியத்தில் ஒருவித போர்ப் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பேரல் ஒன்றுக்கு 70 டாலராக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குக் கடும் பாதிப்பு ஏற்படவுள்ளது. இப்போதே கடுமையான பொருளாதாரச் சிக்கலில் தவித்துவரும் இந்தியா, இந்தச் சுமையைத் தாங்குவதற்குத் தயாராக வேண்டிய சூழலில் உள்ளது. இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெயின் பெரும் பகுதி ஈரானிடமிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையும், பின்விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா எண்ணெய்த் தேவையில் தன்னிறைவைப் பெற்றுவிட்டோம் என்று அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் சவூதி அரேபியா எண்ணெய் வளத்தையே நம்பியிருந்தது. இனிமேல் நியோம் நகர் திட்டத்தில் துபாய் பாணி பொருளாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துள்ளது.

இதில் இஸ்ரேலை மேற்கு நாடுகள் இதுவரை பயன்படுத்தியது. இனிமேல் இஸ்ரேலை எந்தளவுக்கு மேற்கு நாடுகள் கொண்டாடும் என்று தெரியவில்லை. ஏவுகணைத் தாக்குதலால் பெரிய சேதங்களும் தடுக்கப்பட்டுப் போர்ச் சூழல் இல்லாமல் ஆனது ஒரு திருப்தியான விஷயம் தான்.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் முட்டி மோதினாலும் அவர்களுடைய அமைதியான வாழ்வு அந்த பூமியில்தான். ஏறத்தாழ 60 லட்சம் சதுர கிலோமீட்டர் தென்மேற்கு ஆசியாவில் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடத்தை இஸ்ரேல் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற பிரச்சினை தான் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை ஆகும். இதற்கும் நடைபெற்ற தாக்குதலுக்கும் சில தொடர்புகள் உண்டு என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இன்னொரு கருத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். மத்திய கிழக்கு ஆசியா என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டாலும், புவியியல் ரீதியாகச் சரியாக ஆசியாவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கலாம்.

1. கிழக்காசியா – சீனா, ஜப்பான், கொரியா

2. தென்கிழக்கு ஆசியா – தாய்லாந்து, சிங்கப்பூர்

3. தெற்காசியா – இந்தியா, இலங்கை

4. மத்திய ஆசியா – உஸ்பெஸ்கிஸ்தான், டஷ்கிஸ்தான்

5. வட ஆசியா – ரஷ்யா

6. தென்மேற்கு ஆசியா – சவூதி அரேபியா, ஈரான், இஸ்ரேல்

இப்படியான புவியரசியலில் மதம், அரசியல் அணுகுமுறைகள், கால மாற்றங்கள், கலாச்சாரங்கள் போன்றவை வித்தியாசமானவை. மற்ற கண்டங்களைப் போல ஒற்றுமையில்லாமல் பன்மையில் ஒருமை என்ற நிலைப்பாட்டில் ஆசியா இயங்குகிறது. இந்தச் சூழலில் எண்ணெய் வளம் வளைகுடா நாடுகளில் முக்கியத்துவம் பெற்று உலகப் பொருளாதாரத்தையே கோலோச்சுகிறது.

இதுபோன்ற சிக்கலான கண்டத்தில் பிரச்சினைகளின் தீர்வுகளை எளிதில் எட்டிவிட முடியாது. ஈரானில் புரட்சி நடந்து 40 வருடங்கள் சியோனிச அரசை வீழ்த்தும் பலத்தைப் பெற்ற இஸ்ரேலையும் அழிக்க ஈரான் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறது. ஆனால், இஸ்ரேலோ சிறிய நாடாக இருந்தாலும் இந்தச் சிக்கல்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எரிவதைப் போல தன்னை திடப்படுத்தி அனைத்து சோதனைகளையும் தாண்டுகிறது. தென்மேற்கு ஆசியாவில் ஈரானையும், அதன் ஷியா வகுப்பினரையும் இஸ்ரேலின் எல்லையிலேயே நிறுத்தக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சன்னி இஸ்லாமிய அமைப்பு ரீதியான நாட்டை உருவாக்கி ஷியா முஸ்லிம்களை உருக்குலைத்து இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இஸ்ரேலோ ட்ரம்ப்பை வைத்து இந்தச் சிக்கலை உருவாக்கி சுலைமாணியைக் கொன்று பதற்ற நிலையை உருவாக்க சூத்திரத்தாரியாக இருக்கலாம்.

இந்தச் சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு, பாதுகாப்பு என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு இன்றைக்கு மேற்காசிய நாடுகளின் ஆதரவாக இருப்பது இஸ்ரேல். ஆனால், இந்தப் பதற்றத்துக்குப் பிறகு மேற்காசியாவில் அமெரிக்கா திரும்பவும் கால் வைக்குமா என்பது கேள்விக்குறி. அந்த நிலையில் பாதுகாப்பாகத் தன்னுடைய ராணுவ கமுக்கங்களுக்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள டீகோ கார்சியா தீவுகளைத் தான் மேற்காசியாவின் பிரச்சினைக்கு தன் தளமாக அமைக்கலாம். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கமும், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் இருத்தலும், பிரெஞ்சு நாட்டின் போர்க் கப்பல்கள் இந்தக் கேந்திரத்தில் சுற்றி வருவதும், ஜப்பான் நாட்டினுடைய வணிக மற்றும் சில ஆதிக்கங்களும், பிரிட்டனின் நடமாட்டங்களும் இந்தியப் பெருங்கடலில் உள்ளன.

இந்த நிலையில் மறைமுகமாக பல சிக்கல்கள் இந்தியாவுக்கு ஏற்படலாம். இந்தப் பார்வையில் இந்திய அரசு அமெரிக்கா, ஈரான், மேற்காசிய சிக்கல்களை பார்த்து தன்னுடைய அணுகுமுறைகளையும், சில தீர்மானங்களையும் முன்கூட்டி எடுக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் அமெரிக்கா, ஈரான் பிரச்சினையின் பின் தாக்கம் கவனமாகக் கையாளப்பட வேண்டும். ஐநாவினுடைய வார்த்தைகளுக்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. ஐநாவின் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டுமென இந்தியா விருப்பப்படுகிறது. அந்த விருப்பம் மட்டும் இல்லாமல் அதற்கான பார்வையும், இலக்கும் உலக புவியரசியல் ரீதியாக இந்தியா அணுக வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு

மூத்த வழக்கறிஞரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் மிக்கவர். திமுகவின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். கதைசொல்லி என்ற இலக்கிய இதழின் இணை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார். பொதிகை – பொருநை – கரிசல் பதிப்பகம் மூலம் பல்வேறு நூல்களைப் பதிப்பிக்கிறார். rkkurunji@gmail.com

எதிர்ப்பவர்களை பல்கலைக்கழகத்தில் புகுந்து அடித்தோம் இனி வரக்கூடிய நாட்களில் வீடு புகுந்து அடித்து கொல்வோம்

"அமித்ஷா மோடி கொண்டு வந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை பல்கலைக்கழகத்தில் புகுந்து அடித்தோம் இனி வரக்கூடிய நாட்களில் வீடு புகுந்து அடித்து கொல்வோம்
அவர்களை நடுவெளியில் வைத்து எரித்துக் கொல்வோம்

ஊடகங்கள், காவல்துறை, அரசு நிர்வாகம் எல்லாம் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது நம்மை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது

உபியில் என்ன செய்தோம் ? குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்கிறோம், அவர்களை சிறையில் தள்ளுகிறோம்
ஜாமீனில் வெளியே வருவதற்கும் 2,00,000 நிர்ணயித்துள்ளோம்

நம்மை கண்டு அச்சப்படுபவர்கள் நாட்டிற்கு வெளியே தள்ளுவோம்
நம்மை எதிர்த்து போராடுபவர்களை நாம் பார்த்துக் கொள்வோம் நம்மை எவனும் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது....

Well,
What we going to do for this ?
This is not creating panic video this is the real face of Hindutva RSS.
Just am humbly request you all to be unite support Your Jamath
In sha Allah rest we will take care
As they said "Jo darega desh se baahar jayega wo ladega usko hum yahan dekhlenge "
Very funny comment finally ha ha ha....

மோடியின் அப்பாவுக்கு பிறப்பு சான்றிதழ் எங்கே??

மோடியின் அப்பாவுக்கு பிறப்பு சான்றிதழ் எங்கே??

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், மக்கள் விரோத குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்திய நாளில் இருந்து தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். கடந்த ஒரு மாதகாலமாக அவரது டிவிட்டர் கணக்குகள் பாஜகவை விமர்சிக்கும் பதிவுகளால் நிறம்பி வழிகின்றன. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாஜக - ஆர்எஸ்எஸ் தரப்பு மிரட்டல்களையும் எதிர்கொண்டார்

நேற்று ட்விட்டரில் மோடி படித்த உலக அரசியல் பற்றிய டிகிரி, மோடியின் பிறப்பு சான்றிதழ் மற்றும் மோடியின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கான பிறப்பு மற்றும் குடியிருப்பு ஆதார சான்றிதழ் அனைத்தையும் பார்க்க விரும்புவதாகவும், அதன் பிறகு நாட்டு மக்களின் ஆவணங்களை கேட்கட்டும் என இந்தியில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதனுடன் #F**kCAA என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்து மக்கள் அனைவரும் இதனை பின்பற்றும்படியும் கேட்டுள்ளார்.

Saturday, 11 January 2020

குடியுரிமை போராட்ட விஷயத்தில் தளர்ந்து விட்டீர்களா அல்லது சாதித்து விட்டீர்களா?

தமிழக முஸ்லிம்களே..

குடியுரிமை போராட்ட விஷயத்தில் தளர்ந்து விட்டீர்களா அல்லது சாதித்து விட்டீர்களா?
நாம் இன்னும் எதையும் சாதிக்கவில்லை.. என்பதை மறந்து விடாதீர்கள்..
இது நம் வீட்டு பிரச்சினை .. நாட்டு பிரச்சனை..
நமது சந்ததிகளின் பிரச்சனை..

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்து கொண்டிருக்கிறது நீங்கள் மட்டும் வீரியமிக்க போராட்டங்களை செய்யாமல்.குளிர் காயலாம் என்று நினைக்கிறீர்களா?

இன்னும் மத்திய அரசு ஒரு அங்குலம் கூட இந்த சட்டத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம் என்று தெளிவாக அறிவித்துவிட்டார்கள்..

அகதி வாழ்க்கை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பிரித்து வைத்து விடுவார்கள்..
எந்த காலத்திற்கும் நீங்கள் இந்தியாவில் குடியுரிமை வாங்கி விட முடியாது..

அதிமுக அமைச்சர்களும் தமிழக முதலமைச்சரும் சொல்கிறார்கள்.. இந்த குடியுரிமை சட்டத் தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது நாங்கள் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்ற வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்...

அப்படி சொல்பவர்கள் தான் தமிழகத்தில் அகதி முகாம்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்..

இதுவரை சொன்ன எந்த கருத்தையும் அவர்கள் வாபஸ் பெறவில்லை..

போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்..

ஷேக் மைதீன்


Sent from my iPhone

Thursday, 9 January 2020

It's amazing how the Kingfisher keeps its head steady, unfortunately those who drink Kingfisher cannot do so !

அரபு நாடுகளில் இருந்து கொண்டு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலயதளங்கள் வாயிலாக இன மத ரீதியான வெறுக்கத்தக்க பேச்சுக்களை படங்களை

இந்த பதிவை அனைவரும் பகிருங்கள்

அரபு நாடுகளில் இருந்து கொண்டு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலயதளங்கள் வாயிலாக இன மத ரீதியான வெறுக்கத்தக்க பேச்சுக்களை படங்களை பதிவுகள் வீடியோக்கள் பதிவிடுபுவர்களை கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் மூலம் முறைப்பாடு செய்யலாம்.

OMAN POLICE: info@rop.gov.om

DUBAI POLICE: mail@dubaipolice.gov.ae

ABUDHABI POLICE: contactus@adpolice.gov.ae

SHARJAH POLICE: alarmsystem@shjpolice.gov.ae

QATAR POLICE: capital@moi.gov.qa

BAHRAIN POLICE: info@policemc.gov.bh

SAUDI ARABIA POLICE: info@moi.gov.sa

KUWAIT POLICE: MoiAsk@moi.gov.kw

share yazhnews lka gulf police complain.


Sent from my iPhone

Monday, 6 January 2020

உலமாக்களின் அறிவுறை

உலமாக்களின் அறிவுறை! அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன!
1.பேங்கில் மினிமம் பேலன்ஸ் மட்டும் வெய்த்துக் கொள்ளுங்கள். மற்ற அனைத்து பணத்தையும் wihtdraw செய்து வெய்த்துக்கொள்ளுங்கள்.
2.பேங்கில் உங்களுக்கு வரவேண்டிய வட்டி பணத்தையும் எடுத்து வெய்த்துக்கொள்ளுங்கள். வட்டி பணம் ஹராம் தான். ஆனால் தற்பொழுது அரசுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க இதை எடுத்து செலவு செய்யாமல் வெய்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஆட்சி மாறியவுடன் நாம் இதை பேங்கிடம் ஒப்படைத்துவிடலாம்.
3.பெரிய அளவு GST கட்டி பொருள் வாங்குவதை அடுத்து சில வருடங்களுக்கு செய்யாதீர்கள். உதாரணத்திற்கு சில CAR, AC, Mobile, TV, Fridge, Washing Machine. இருக்கும் பொருட்களை சரி செய்து சில ஆண்டுகள் பயன்படுத்துங்கள். அரசுக்கு GST பணமாக நம்மிடம் இருந்து பெரிய அளவில் போகக்கூடாது. வெறும் அத்தியாவசிய செலவு மட்டும் செய்யுங்கள்.
4. GST கட்டும் ஹோட்டல்களுக்கு சாப்பட போகாதீர்கள் சிறிய அளவு ஹோட்டல்களுக்கு போங்கள்.
5. இடம் வாங்க அல்லது வீடு கட்டும் திட்டம் இருந்தால் அடுத்த சில வருடங்களுக்கு செய்யாதீர்கள்.
6. அரசு பொருட்களை சில வருடங்களுக்கு உபயோகிக்க்காதீர்கள். உதாரணத்திற்கு அரசு பால், அரசு பஸ் போன்றவைகள்.
உம்மத்திற்காக உங்கள் ஆசைகளை சில வருடங்களுக்கு கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். தற்போதைக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஒத்துழையாமையை முடிந்த அளவு மேற்கொள்ளுங்கள்!

Sunday, 5 January 2020

.முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல.ஆபத்தனவர்கலும் அல்ல.இந்துவிர்க்கு எதிரி இந்து தான். 👇

கோவிலுக்கு சென்ற ஆதித்யா தாக்கரே யிடம் அங்குள்ள பண்டிதர் கூறுகிறார்.முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல.ஆபத்தனவர்கலும் அல்ல.இந்துவிர்க்கு எதிரி இந்து தான். அவர்களை கண்டு பிடித்து பாகிஸ்தான் அனுப்பவேண்டும்.👇