Tuesday, 10 December 2019

சித்தார்த் நாட்டைபற்றி உண்மையான அக்கறை

சித்தார்த் நாட்டைபற்றி உண்மையான அக்கறையுடனும் கவலையுடனும்
உள்ளதை பேசுகிறார் இந்த துணிச்சலும் தையிரியமும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

NRC இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!

NRC இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!

" "இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே." என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார்.

"தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கான (சிஏபி) எதிர்ப்பானது நம் நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராக அமையும். அதனை தலைமை தாங்கி வழிநடத்தவும் நான் தயார்." என்று கடந்த வெள்ளிக் கிழமையன்று (5-12-19) மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
"
"இது நமது தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக மாறும். நாம் போராடியே ஆக வேண்டும், நாம் போராடியே தீருவோம். இறுதி கட்டம் வரை போராடுவோம். இத்தனை காலமாக மக்களை வழிநடத்தி வந்துள்ளோம். இந்த முறையும் (இந்த பிரச்னையிலும்) வழி நடத்துவோம். அதுவும் முன்னிருந்து வழி நடத்துவோம். இதன் (என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றின்) இயல்பு தன்மையும் சாராம்சமும் பாபசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய நம் நாட்டின் அரசியலமைப்புக்கே எதிரானது." என்று மயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மம்தா பானர்ஜி முழங்கினார்.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமும் அம்பேத்கர் நினைவு தினமும் ஒருங்கே டிசம்பர் 6 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட சன்ஹதி திவாஸ் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் மம்தா பானர்ஜி இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைப் பற்றி பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலம் அடிப்படை பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை போன்றவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப பாஜக அரசு முயற்சிப்பதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

நீங்கள் உங்கள் உடலின் கையையோ, காலையோ துண்டிப்பீர்களானால், உங்கள் உடலால் எப்போதும் போல சரிவர இயங்க முடியாமல் போகும். அதே போல தான் மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த அடையாளத்தின் அடிப்படையிலோ நீங்கள் -உடலில் (நாட்டில்) வேறுபாடு காட்ட ஆரம்பித்தாள் நம் நாடு இத்தனை ஆண்டுகளாக எப்படி இருந்து வந்ததோ அப்படிபட்ட நாடாக இருக்காது. என்ஆர்சி என்பது உடலில் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பதற்கு சமானம் . சிஏபி என்பதோ உடலில் தலையை துண்டிப்பதற்கு சமானம் என்று அவர் மேலும் கூறினார்.
1947 அல்லது 1971 ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் மக்களின் குடியுரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம்..? ஒரே இரவில் இவர்கள் அனைவரையும் அந்நியநாட்டவர் என எப்படி அறிவிப்பீர்கள்.? 6 ஆண்டுகள் வரை அந்நிய நாட்டவராக தங்க வைப்பீர்கள், பிறகு சில பாகுபாடான சட்டங்களின் அடிப்படையில் சிலருக்கு மட்டும் குடியுரிமையை வழங்குவீர்கள்? இதையெல்லாம் முக்கியத்துவத்துடன் மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக எதிர்பார்கிறதா? மேற்குவங்கத்தில் என்ஆர்சி யை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டோம்.
மேலும் இந்தியா போன்றதோர் மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை ஒருபோதும் வழங்கப்பட கூடாது என மம்தா கூறினார்.

பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா

பாராளுமன்றத்தில் தூள் கிளப்பிய தயாநிதி மாறன்.

பேயடிச்ச பெருமாளா அமர்ந்திருந்த அமித்ஷா

குடியுரிமை சட்டம்

குடியுரிமை சட்டம் அமலில் வந்தால் நான் முதலில் முஸ்லிம் ஆவேன் .இரண்டாவது குடியுரிமையை நிருபிக்க எந்த ஆவணத்தையும் சமர்பிக்க மாட்டேன். முன்றாவது இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு எந்த முஸ்லிமையும் கைது செய்தால் நானும் அவர்களில் ஒருவன் ஆவேன்!

-ஹர்ஷ் மந்தர்!

(குஜராத் படுகொலைகள் 2002இல் நடந்தபோது அம்மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஹர்ஷ் மந்தர். அந்த நிகழ்வுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்வகையில் சமூகப் பணியாற்றி வருகிறார்)

Monday, 2 December 2019

102:2

حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏ 
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் wவரை.
(அல்குர்ஆன்: 102:2)


Sent from my iPhone

Tuesday, 26 November 2019

இவர்தான் ராஜதந்திரி

இவர்தான் ராஜதந்திரி

கடந்த வாரம் சிவசேனா கட்சி தாங்கள் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட போது, காங்கிரஸ் தலைவர் சோனியா சிவசேனாவிற்கு ஆதரவளிக்காமல் காலம் தாழ்த்தினார். காரணம், பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்களும், எம்,எல். ஏக்களும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவசரமாக செயற்குழு கூட்டப்பட்ட பின்பும் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னர் சரத்பவரின் ஆலோசனைப்படி குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் சிவசேனாவிற்கு ஆதரவளிக்க முன்வந்தார். இந்த காலகட்டத்தில் தான் ஆளுநர் ஆட்சி, பாஜக இரவோடு இரவாக பதவியேற்றது போன்ற கூத்தெல்லாம்..

கடந்த வாரம் மட்டும் சோனியா காந்தி அவசரமாக எதாவது முடிவெடுத்திருந்து சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தால், மகாராஷ்ட்ரியாவில் காங்கிரசில் அதிருப்தி எம்எல்ஏகள் உருவாகியிருப்பார்கள்.காங்கிரஸ் கட்சி உடைந்திருக்கும் அவர்களுக்கு தூண்டில் போட்டிருக்கும் பாஜக. ஆனால் அதற்கான வாய்ப்பை சோனியாதான் தடுத்தெறிந்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆட்சிக்கு ஆசைப்பட்டு சிவசேனாவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியையும் தேசியத்தை காங்கிரசையும் எல்லா தரப்பு மக்களும் தூற்றியிருப்பார்கள். எந்தவித பேச்சுக்கும் வழிவகுக்கும் அமைதியாக சாதித்திருக்கிறார் சோனியா. உண்மையிலேயே இவர்தான் ராஜதந்திரி

இப்படிப்பட்ட சூழலில் தான் , ஆட்சியை பிடிக்க ஆசைப்பட்டு தன்னுடைய ஒட்டு மொத்த இமேஜியையும் இழந்திருக்கிறது பாஜக. அதோடு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளை தொங்கலில் விட்ட , பாஜகவை இனி ஒரு போதும் எவரும் ஆதரிக்க முன் வர மாட்டார்கள். 'நண்பனின் பகை மிகவும் ஆபத்தானது, என்று சொல்வார்கள் அதுபோல பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த சிவசேனாவும், பாஜகவும் இன்று எதிரெதிர் துருவத்தில்... பாஜகவின் அஸ்தமனம் மஹாராஷ்ட்ராவிலிருந்து ஆரம்பமாகப்போகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் முயற்சித்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் கொண்டு வரமுடியும். அதற்காகத்தான் வரும் நவம்பர் 30ல் சோனியா தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இந்திய அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும்.

-ஏஜிஎம்

Good simply advise

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்)

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....
குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ ,
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும்
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு.
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்.
படித்ததில் பகிர நினைத்தது....


Sent from my iPhone

Give respect take respect

இழந்தோம்_ஒரு_பாபரி_பள்ளிவாசலை வென்றோம்_பல_இந்துக்களின்_இதயங்களை

#இழந்தோம்_ஒரு_பாபரி_பள்ளிவாசலை
#வென்றோம்_பல_இந்துக்களின்_இதயங்களை

🎯👆👌💐💐💐👏🏻#மதத்தினுள் #அடங்கா #மாந்தர்

வாழ்த்துக்கள் #பத்மாவதி பாட்டி. தங்களது செயலை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்.

சேலம் முதல் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் பத்மாவதி பாட்டி, அங்குள்ள ஜாமியா பள்ளிவாசலின் புனரமைப்பிற்கு நன்கொடையாக ரூ.10,000 தானம் கொடுத்துள்ளார். அதற்கான ரசீதில் அவர் கைரேகையை ஒப்பிட்டுக்கொடுத்துள்ளார். பாராட்டுவோம் வாழ்த்துவோம்.

கடந்த வாரம் லக்னோ பகுதியில் ஒரு கேன்டிட் வீடியோ நிகழ்ச்சியை நடத்திய ஒரு சமூக ஊடக சேனல் வெளியிட்ட தரவுகளின்படி....லக்னோவிலிருக்கும் பிரபல மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களிடமும், தலையில் தொப்பி,தாடி ,ஜுப்பாவுடன் முஸ்லிம் அடையாளங்களோடு வலம்வந்தவரிடையேயும் அருகிலிருக்கும் ஒரு கோவில் புனரமைப்பிற்காக நன்கொடை கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மறுப்பேதும் செல்லாமல் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினி நீட்டிய உண்டியலில் தங்களால் இயன்ற தொகையை போட்டுவிட்டனர்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கின் ,இஸ்லாமிய விரோதப்போக்கு தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக உபியில் முஸ்லிம்களின் மனநிலை எப்படியுள்ளது என்பதை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட நாடக நிகழ்ச்சி அது. அதில் 100% முஸ்லிம்கள் எங்களது மனங்களை வென்றுவிட்டார்கள், அவர்களிடம் விரோதம், காழ்ப்புணர்ச்சி, குரோதம் என எந்தவித ஆவேசங்களும் இல்லை என ஊடகத்தினர் சார்பில் தரவுகள் பகிரப்பட்டது. அவர்கள் செய்த செயலைவிட நமது பத்மாவதி பாட்டி செய்த தானம் தான் போற்றுதலுக்குறியதாகப்படுகிறது.
#நன்றி #பாட்டி.

Saturday, 23 November 2019

பாத்திமா(ரலி)

பாத்திமா(ரலி) அவர்களுடைய கணவர் பெயர்: அலீ(ரலி). [1] பாத்திமா(ரலி) அவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் 3 ஆண் மக்கள் [ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி),முஹ்ஷீன் (ரலி)]2 பெண் மக்கள்[,உம்முகுல்தூம்(ரலி),ஜைனப்(ரலி