அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ்
துபாய் மண்டலம் *தமுமுக* சார்பாக அன்று 15/02/2019 வெள்ளிக்கிழமை
மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி விபரங்கள்...
தமுமுக மண்டல மர்கஸில் இஷா தொழுகைக்கு பிறகு
சகோதரர் A.S. இப்ராஹிம் அவர்களும்,
சோனாப்பூர் பல்தியா கேம்பில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சகோதரர் அதிரை சாகுல் ஹமிது தமுமுக துபாய் மண்டலம் அவர்களும்
சோனாபூர் MLSS கேம்பில் ஜீம்ஆ குத்பா உரை சகோ ஆய்ங்குடி சலிம் ரப்பானி தமுமுக ஷார்ஜா மண்டல தலைவர் அவர்கள்
உரை நிகழ்த்த உள்ளார்கள்
இந்த மார்க்க நிகழ்ச்சியில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவும்..
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)
(அல்குர்ஆன் : 41:33)
*தகவல்*
--------------------
கடையநல்லூர் முகம்மது தமுமுக தலைவர் சோனாபூர் கிளை
அனைவரையம் அன்புடன் அழைக்கிறது தமுமுக துபாய்
சோனாபூர் கிளை🏴🏳🏴🏳
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Thursday, 14 February 2019
Tuesday, 12 February 2019
பெப்ரவரி 14 – காதலர் தினமும் இஸ்லாத்தின் நிலையும்.

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. 'பெற்றோர் தினம்', பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற அம்சங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்கள். ஆனால், காதலர் தினம் காதல் எனும் ஹராத்துக்கு ஹலால் அந்தஸ்து வழங்கப்படும் தினமாக உள்ளது.
இன்றைய மீடியாக்கள், சினிமாக்கள் இலக்கியங்கள் அனைத்துமே முழுக்க முழுக்க காதலை ஊக்குவிப்பதாகவும் அதை மையமாகக் கொண்டதாகவுமே அமைந்துள்ளன. இதனால் மாற்றுப் பாலினத்தினருடன் காதல் கொள்வதென்பது இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் செயலாகும். காதல் என்ற விடயம் சமூகத்தில் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. காதலர் தினங்களில் ஆரம்ப வகுப்பு மாணவ மாணவிகள் முதல் சகல வகுப்புக்களிலும் இனிப்புக்களும், அன்பளிப்புக்களும் பரிமாறிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தலை தூக்கியுள்ளது.
காதல் எனும் வார்த்தை குறிப்பாக அன்பையும், நேசத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் இவ்வார்த்தை எதிர்ப் பாலினர் மீது இளம் வயதினருக்கு ஏற்படும் ஈர்ப்பையும் அதன் மூலம் ஏற்படும் தொடர்பையும் குறிக்கும் விதத்திலேயே இப்பதம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தக் காதல் மூலமாக சமூகத்தில் நிறையவே பாதிப்புக்கள்தான் ஏற்பட்டு வருகின்றன. மதம் மாறி, இனம் மாறி காதல் கொண்டதனால் பல்வேறுபட்ட மத, இனக் கலவரங்கள் உருவாகியுள்ளதுடன் அது வளர்ந்த வண்ணமும் உள்ளது. ஒரு பெண்ணை பலர் காதலித்ததனால் அல்லது ஒரு பெண் பலபேரைக் காதலித்ததனால் சண்டைகள், கத்திக் குத்துக்கள், கொலைகள் என ஏராளமான பிரச்சனைகள் நடந்துள்ளன.
காதலின் பெயரில் பல இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு அவர்களது கற்பு சூறையாடப்பட்ட பின்னர் கைவிடப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். காதலனை நம்பி வீட்டை விட்டும் ஓடிவந்த பெண்கள் காதலித்தவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் சேர்த்து பலிகொடுக்கப்பட்டு கைவிடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. இவ்வாறு கைவிடப்பட்ட பெண்களில் பலர் நிரந்தர விபச்சாரிகளாகவும் மாறியுள்ளனர்.
இவ்வாறே இதன் இழப்புக்களும், இழிவுகளும், அழிவுகளும் தொடர்ந்தாலும் 'காதல்' வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. முற்போக்குவாதிகள் என வாதிக்கும் பலரும் காதலை வரவேற்கின்றனர். திருமணத்திற்கு முன்னரே ஒருவருடன் ஒருவர் பேசி, பழகி, ஒருவரையொருவர் உணர்ந்து மணம் செய்தால் அந்தத் திருமணம் நீடிக்கும் என்று ஒரு நியாயத்தை வேறு சொல்கின்றனர்.
ஆனால், காதல் திருமணங்களை விட குடும்பத்தின் சம்மதத்துடன் பேசித் தீர்த்து நடாத்தும் பாரம்பரியத் திருமணத்திற்குத்தான் ஆயுசு கெட்டி என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. காதல் திருமணங்களே இன்று அதிகமான விவாகரத்தில் முடிகின்றன என்பது புள்ளிவிபரத்தின் கணிப்பாகும்.
உண்மையில் காதலிக்கும் போது யாரும் யாரையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் தொட்டுக் கொள்ளவும் ஒட்டிக் கொள்ளவுமே முயற்சிக்கின்றனர். ஒருவர் மீது மற்றவர் அளவுக்கு அதிகமாக அன்பு காட்டுகின்றோம் என காட்டிக் கொள்ள போலியாக நடிக்கின்றனர். திருமணத்திற்குப் பின்னர் நடிக்கும் தேவை அற்றுப் போவதால் அவரவர் சுயரூபம் வெளிக்கிளம்ப ஆரம்பிக்கும். இதுவே அதிகமான மண முறிவுகளுக்குக் காரணங்களாக அமைந்து விடுகின்றது.
கடந்த கால காதல் என்பது ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்ப்பது, கையால் மற்றும் கண்களால் சாடை காட்டுவதுடன் நின்றுவிடும். இந்தக் காலக் காதலில் காமமே மிகைத்து நிற்கும். காதல் அரும்பியதும் தொலைபேசியில் முகம் பார்த்துப் பேசிக் கொள்கின்றனர். அந்தரங்கக் காட்சிகளைப் பார்த்துக் கொள்கின்றனர். சில வேளை இந்தப் பேச்சுக்கள், காட்சிகள் தொலைபேசி மற்றும் கணனிகளால் திருடப்பட்டு அல்லது வேறு வழிகளில் பெறப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றவர்களும் உள்ளனர். இது போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர்.
எனவே, கடந்த காலக் காதலை விட இந்தக் காலக் காதல் ஆபத்தானது| அருவருப்பானது| எதிர் காலத்தைப் பாதிக்கக் கூடியதது.
இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் கூறுவது போல், காதல் உருவானால் அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாகும். கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திவிட்டால் அதைவிடப் பெரிய சோதனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படாது. காதலைக் கட்டுப்படுத்த முடியாதவர் காதலித்தால் அதைவிடப் பெரிய சோதனைகளைத் தாங்க நேரிடும் என்று குறிப்பிடுகின்றார்கள்.
போலிக் காதலில் மாட்டிக் கொண்டால் நாம் நிம்மதியை இழக்க நேரிடும். பெண்ணாயின் கற்பையும் ஆணாயின் காசையும் இழக்க நேரிடும். உண்மைக் காதலாக இருந்து அது கைகூடாவிட்டால் பிரிவு என்கின்ற மிகப் பெரும் துயரத்தைச் சுமக்க நேரிடும். எனவே, மனம் தடுமாறும் போது உறுதியாக இருந்து எம்மைக் காத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
காதல் போதையில் இருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்வதென்றால் மார்க்க வரம்புகளைப் பேண வேண்டும். ஆண்-பெண் தொடர்பாடலின் இஸ்லாத்தின் வரையறைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்த்தரப்பின் பேச்சில் ஏதாவது நெருடல் தென்பட்டாலும் உறுதியாக இருந்து விலகிக் கொள்ள வேண்டும். காதலுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் உள்ளத்தில் புகுந்து குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிடும். அதன் பின்னர் என்றுமே விரட்ட முடியாது. விரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தலைக்கு மேல் பிரச்சனைகள்தான் வந்து குவியும்.
திருமணம் முடிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அப்போது அதற்குரிய வழிவகைகளைக் காண வேண்டும். திருமணத்திற்கு முன்னர் இப்படியான உறவுகளை உள்வாங்கிக் கொள்வது உங்களுக்கும் உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் சில போது உங்கள் சமூகத்திற்கும் இழிவைத் தேடித் தரலாம்.
எனவே, முறையற்ற காதலைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்வதுடன் முறையான இஸ்லாமிய வழிகாட்டலுடனான உறவுமுறைகளை நம்மில் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்வது முக்கியமானது. அத்துடன் அதற்கான வழிகாட்டல்களை பெற்றோர், குடும்ப உறவுகள், புத்திஜீவிகள், உலமாக்கள், தலைவர்கள்…. என சகலரும் மேற்கொள்வதும் காலத்தின் கட்டாயமாகும்.
ஆகவே, இதற்கான முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள முயற்சிப்போமாக! இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
தொகுப்பு--S.H.M.இஸ்மாயில் (ஸலபி)

Sunday, 10 February 2019
Wednesday, 6 February 2019
இந்தியாவின் வேலையின்மை கடந்த 45 வருடங்கள் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
*வெளியே வந்தது பூனை..! பிஜேபி ஆட்சியில் பறிபோன வேலை வாய்ப்பு..! மறைக்க முயன்ற பாஜக அரசு...!*
*இந்தியாவின் வேலையின்மை கடந்த 45 வருடங்கள் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய புள்ளிவிவர ஆணையம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரை எடுக்கப்பட்ட வேலையின்மை பற்றிய புள்ளிவிவரத்தில் இது தெரியவந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளது என்றும் மேலும் இந்தியாவின் வேலையின்மை 6.1%-ஆக இருக்கிறது என்றும் அந்த ஆய்வுத் தெரிவித்துள்ளது.*
*இந்த அளவு அதிகமான வேலையின்மை கடந்த 1972-73 ஆண்டுகளில் இருந்தது. அதன்பின் 45 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்த அளவு வேலையின்மை உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-12 ஆண்டின் வேலையின்மை 2.2%-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.*
*இந்த வேலையின்மை புள்ளிவிவரத்தில் மற்றொரு முக்கிய தகவலும் தெரியவந்துள்ளது.*
*மொத்த வேலையின்மை 6.1%. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது 15 முதல் 29 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களே..!*
*இதில் கிராமப்புற இளைஞர்களில் ஆண்களின் வேலையின்மை 17.4%-ஆக உயர்ந்துள்ளது.*
*இது கடந்த 2011-12-ம் ஆண்டில் 5%-ஆக இருந்தது. அதேபோல் கிராமப்புற பெண்களின் வேலையின்மை 13.6%-ஆக உயர்ந்துள்ளது.* *இது 2011-12-ம் ஆண்டில் 4.8%-ஆக இருந்தது என அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.* *மேலும் நகர்ப்புறங்களில் இந்த வேலையின்மை ஆண்களுக்கு 18.7% எனவும், பெண்களுக்கு 27.2% எனவும் 2017-18 ஆண்டில் உயர்ந்துள்ளது.*
*வேலையின்மையில் அதிகமாக இருப்பது படித்த இளைஞர்களாகவே உள்ளனர்.* *கிராமப்புற பட்டதாரி பெண்களின் வேலையின்மை 2017-18-ல் 17.3%-ஆக உள்ளது. இது 2004-05-ல் 9.7%-ஆகவும், 2011-12-ல் 15.2%ஆகவும் இருந்தது என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.* *மேலும் கிராமப்புற பட்டதாரி ஆண்களின் வேலையின்மை, 10.5%-ஆக 2017-18 ஆண்டில் உயர்ந்துள்ளது.* *இது 2004-05-ல் 3.5% எனவும், 2011-12-ல் 4.4% எனவும் இருந்தது என முடிவுகள் தெரிவிக்கிறது.*
*இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த மாதமே தயாரிக்கப்பட்டும் இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவில்லை என்று, கடந்த 29-ம் தேதி தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் தலைவரான பி.சி.மோகனன் மற்றும் ஆணையத்தின் மற்றொரு உருப்பினர் மீனாட்சி ஆகிய இருவரும் பதவி விலகியுள்ளனர்.*
*'ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம்' என்ற கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்ததும், இந்த ஆய்வு முடிவுகளும் மற்றும் தயாரிக்கப்பட்டும் வெளியிடாமல் தாமதிப்பதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு மறைக்க முயற்சித்திருக்குமோ எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.*
*பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நடத்திய முதல் வேலையின்மை தொடர்பான ஆய்வு இது என்பது கவனிக்கவேண்டியது.*
*நன்றி நக்கீரன்*

ஹிஜாபை பேணும் முதல் பாரள மன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு இஸ்லாமிய பெண்ணை அமெரிக்க நாடளமன்றத்திற்குள்
முஸ்லிம்களை அமெரிக்காவில் நுழைய விடமாட்டேன் என்றார் டிரம்ப்
ஹிஜாபை பேணும் முதல் பாரள மன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு இஸ்லாமிய பெண்ணை அமெரிக்க நாடளமன்றத்திற்குள் நுழைத்து விட்டான் இறைவன் !
அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் நுழைய விட மாட்டேன் என்று சபதம் செய்தார்
ஆனால் ஹிஜாபை பேணும் இஸ்லாமிய சகோதிரியை அமெரிக்க நாடாள மன்றத்திற்குள் நுழைய வைத்து விட்டான் இறைவன்
அமெரிக்க நாடளமன்ற வரலாற்றில் ஹிஜாபை பேணும் முதல் அமெரிக்க நாடளமன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு அமெரிக்க நாடளமன்றததிற்கு தேர்வு செய்ய பட்டிருக்கிறார்
சகோதரி இல்ஹாம் உமர்
33 வயதாகும் இல்ஹாம் உமர்
மினசோட்டா(Minnesota)மாநிலத்தில் இருந்து அமெரிக்க நாடளமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்
அவர்களும் சூழ்ச்சி செய்தனர் இறைவனும் சூழ்ச்சி செய்தான் இறைவன் சிறந்த சூழ்ச்சியாளன் என்ற இறைவசனம் தான் நினைவுக்கு வருகிறது

Sunday, 3 February 2019
சமூக - புலன் விசாரணை
_அநீதிக்கு எதிரான குரல்✒_
━━ *பதிவு நாள் : 03/02/2019* ━━
⚖ *_சட்டம் அறிந்துகொள்வோம்!_*
🔘 *நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?*
▪ *கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.*
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்…
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்

Saturday, 2 February 2019
அர்ஜுன் சம்பத் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்
சம்பத் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்
முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள் ! முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள்!
பள்ளிவாசலை நோக்கி கதறி ஓடிவந்த (தலித் சமூகம்) இந்து சமுதாய மக்கள்!
கோவையில் ஜுமுஆ தொழுகை நேரத்தில் திரண்டு வந்த தலித் சமூக மக்கள் பள்ளிவாசல் முன்பு வந்து ஜமாத்தார்களிடம் முறையிட்டதால் பரபரப்பு!
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கலவரத்தை உருவாக்க எந்த சமூக மக்களை காவல்துறையினர் பயன்படுத்தினார்களோ அதே சமூக மக்கள் காவல்துறையினரால் விரட்டப்பட்டு முஸ்லிம்களே எங்களை காப்பாற்றுங்கள் எங்கள் வீடுகளை அபகரிக்கிறார்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள் எனக் கூக்குரல் இட்டு முஸ்லிம் பகுதிகளுக்குள் ஓடிவந்து பள்ளிவாசல் முன்பு வந்து முஸ்லிம்களே உதவி செய்யுங்கள், காப்பாற்றுங்கள் என - 01/02/2019 நேற்று ஜும்ஆ தொழுகை நேரத்தில் முஸ்லிம்களிடம் உதவி கேட்டனர்!
கோவை உக்கடம் பகுதியில் கெம்பட்டி காலனி, மற்றும் CMC காலனி, கீரைக்கார வீதி, ராமர் கோவில் வீதி உட்பட சுமார் (3000) மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது, மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், அதற்குத் தேவையான சாலை விரிவாக்கத்திற்காக ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது!
நேற்றைய தினம் திடீரென 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலித் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து அங்கே பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை வீடுகளைக் காலி செய்யச் சொல்லி மிரட்டியுள்ளனர்..
அப்போது பல காலமாக அங்கே குடியிருந்து வரும் தலித் மக்கள் நாங்கள் பல ஆண்டுகளாக இங்கே தான் வசித்து வருகிறோம் எங்கள் அனைவருக்கும் மாற்றுக் குடியிருப்பு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர், 1,500 வீடுகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டதால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த சூழ்நிலையில் 1,500 வீடுகளை மட்டுமே அரசு தரப்பில் ஒதுக்க முடியும் என்று அதிகாரிகள் சொன்னதால், ஆத்திரமடைந்த தலித் மக்கள் எங்கள் அனைவருக்கும் வீடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர்!
அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று கூறி காவல்துறையினர் அவர்களை சூழ்ந்து மிரட்டியுள்ளனர், அதனால் அச்சமடைந்த தலித் மக்கள் அனைவரும் உக்கடம் கோட்டை மேடை நோக்கி முஸ்லிம்களே எங்களைக் காப்பாற்றுங்கள் என கோசமிட்டபடி ஓடிவந்தனர்!
நாங்கள் எங்களுக்கான நியாயத்தை நீதியை ஜமாத்தார்கள், பள்ளிவாசல் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்து, மக்களுக்கும் தெரியப்படுத்தி நியாயத்தைப் பெற்றுக் கொள்கிறோம் என்று கோசமிட்டவாறே கோட்டை மேட்டுக்குள் நுழைந்து பள்ளிவாசல் முன்பு திரண்டு வந்து நின்றனர்!
இச்சம்பவம் முந்தைய வரலாற்றை நினைவுபடுத்தித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
இவர்கள் குடியிருக்கும் பகுதியில்தான் இந்து சமுதாயத்தின் பாதுகாவலர் என தன்னைத் தானே கூறிக் கொண்டு தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் குடியிருப்பும் உள்ளது, ஆனால் அர்ஜுன் சம்பத் குடியிருப்பது மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட்!
இந்த தலித் மக்களை வைத்துதான் அர்ஜுன்சம்பத் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல் பிழைப்பு நடத்தி வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை!
ஆனால் தற்போது அர்ஜுன் சம்பத்திற்கு இந்து சமுதாயம் மற்றும் தலித் மக்களைப் பற்றிய கவலையோ அக்கறையோ சிறிதளவும் இல்லை, அர்ஜுன் சம்பத்தின் நோக்கம் அனைத்தும் பார்ப்பனர்களை புகழ்வதும், பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர்களுக்காக குரல் கொடுப்பதும், RSS, BJP உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி கும்பல்களுக்கு வக்காலத்து வாங்குவதும்தான்!
அர்ஜூன் சம்பத் வசிக்கும் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தன் சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் என்பதும், இந்து சமூக மக்கள்தான் என்பதையும் உணர்ந்துள்ள அர்ஜுன் சம்பத் இந்து மதத்தின் காவலர் என தன்னைத் தானே கூறிக் கொள்வதும், பார்ப்பனர்களுக்கும், RSS, BJP உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி கும்பல்களுக்கும் தொடர்ந்து வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது அனைத்தையும் பார்க்கும் பொழுது அர்ஜுன் சம்பத்தின் அரசியல் பச்சோந்தி தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது!
1997 ல் கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து CMC காலனி, கெம்பட்டிக் காலனி, கீரைக்கார வீதி போன்ற இப்பகுதி மக்களைத்தான் காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுத்த அர்ஜூன் சம்பத் மூலம் பயன்படுத்தினார்கள் என்பதும், இப்பகுதியில் வசித்து வரும் தலித் மக்களைத்தான் கடைவீதியில் ஷோபா துணிக்கடை உட்பட முஸ்லிம்களின் அனைத்து வியாபாரக் கடைகளையும், வணிக நிறுவனங்களையும் சூறையாடப் பயன்படுத்தினார்கள் என்பதும் வரலாறு!
காவல்துறையினரே கலவரத்தில் ஈடுபட்டதால், மத்திய அரசால் கோவைக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு - கலவரத்தில் சூறையாடப்பட்ட பொருட்களையும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் அர்ஜுன் சம்பத் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு பின்புறம் உள்ள பழைய லட்சுமி தியேட்டரில் கொண்டுவந்து வைக்குமாறு காவல்துறையினரால் மைக்கில் உத்தரவிட்டதின் பேரில் சூறையாடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியை கொண்டு வந்து அந்த மக்கள் அந்த தியேட்டரில் வைத்தனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய சம்பவம்!
அர்ஜுன் சம்பத் போன்ற முகவரியில்லாமல் இருந்த தருதலைகள், கேடு கெட்டவர்கள் மற்றும் இந்துத்துவ மத வெறி இயக்கங்கள் எல்லாம் இந்தப் பகுதி மக்களை வைத்து அரசியல் லாபம் அடைந்த பின்னர் வழக்கம்போல் இந்த தலித் மக்களையும் கைவிட்டு விட்டனர்!
இங்கே கோவையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை உருவாக்குவதற்கும், RSS, VHP, பஜ்ரங்தள், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி கொண்ட, பாசிஸ வர்க்கத்தினர் பயன்படுத்துவது இந்த தலித் சமூக மக்களைத்தான், கலவரம் உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் தலித் சமூக மக்களின் நலனுக்காக ஒருபோதும் பாசிஸ பயங்கரவாத கும்பல் குரல் கொடுப்பது கிடையாது!
ஒட்டுமொத்த ஹிந்துத்துவா இயக்கங்களும் பார்ப்பணர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு குரல் கொடுக்கக்கூடிய வேளையில் நாடு முழுவதும் அங்கங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவது தெரிந்தும் அவர்களுக்காக போராடுவதில்லை, குரல் கொடுப்பதில்லை, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர மறுக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை!
இந்துத்துவ இயக்கங்களை வளர்த்துக் கொள்வதற்காகவும், பாசிஸத்தின் சுயநல அரசியலுக்காகவும், பொருளாதார இலாபம் அடைவதற்காகவும் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தலித் மக்களை பலிகடாக்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும், நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் சிந்திக்க கூடிய தருணம் இது!
குறிப்பு :
நீங்கள் வீடியோவில் பார்க்கும் இதே பள்ளிவாசலில் தான் 1997 நவம்பரில் கொல்லப்பட்ட 17 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வைக்கப்பட்டிருந்தது என்பது சமுதாயம் மற்றும் தலித் சமூகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் நினைவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது!
#படியுங்கள் #பரப்புங்கள்

உடலின் மொழி
*உடலின் மொழி*
1. உடல் - உணவை கேட்கும் மொழி - *பசி*
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - *தாகம்*
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - *சோர்வு, தலைவலி*
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - *தும்மல், சளி, இருமல்.*
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *காய்ச்சல்*
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - *வாய் கசப்பு மற்றும் பசியின்மை*
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - *உடல் அசதி*
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *வாந்தி*
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *பேதி*
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *வியர்வை*
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - *உறக்கம்*
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *சிறுநீர் கழித்தல்*
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *மலம் கழித்தல்*
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
*நம் உடலை நேசிப்போம்.....*

Friday, 1 February 2019
முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை
✏ 'உளவு' பார்க்கச் சென்றோம்...!
முழு 'நிலவு' பார்த்து நின்றோம்...!
[அமெரிக்காவின் 03.03 மில்லியன் சனத்தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள்,
பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள்,
மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து,
எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் 'ஜேம்ஸ் பி கொமி'யும் அதன் முன்னாள் அதிகாரி 'கேசி ஹன்னா'வும்
சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் சாராம்சம் இது!]
🌸 உலக மதங்களில் மிகப்பெரிய மதம் இஸ்லாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அது எந்த அளவு சர்வதேச அளவில் எல்லாரையும் ஈர்க்கத்தக்க மதம் என்ற எதார்த்தத்தை உணர்ந்து கொண்டோம்.
🌸 இஸ்லாமிய உலகம் எத்துணை அதி அற்புத மான செயல்திறன் மிக்க பகுதிகளைக் கொண்டி ருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டோம்.
🌸 முஸ்லிம்களின் பல இல்லங்களுக்குள் நாங்கள் ஊடுருவி ஆய்வு செய்தபோது, உணர்வுப்பூர்வ மான அறபு எழுத்துக்களையும் திரைச்சீலைகளை யும் கண்டோம்.
🌸 இஸ்லாமிய இல்லங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்த நூலகங்களில் - நூல்களில் விரவிக் கிடந்த இறைத்தூதர் முஹம்மதின் நேரடி வார்த்தைகளான ஹதீஸ் (நபிமொழி)களால் பெரிதும் கவரப்பட்டோம்.
🌸 பல வகையான அரேபிய இந்தோனேசிய மற்றும் ஆப்பிரிக்க உணவுகளை ருசித்து உண்டோம். அத்தகைய உணவுகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சுவைத்ததே இல்லை. அவர்கள் அருந்தும் தேநீர் கூட தேனாமிர்தமாக இருந்தது. அதையும் அவர்கள் ரசித்து, ருசித்து அருந்தினார்கள்.
🌸 மேற்கத்திய பெண்கள் பெற்றுவரும் சொத்து ரிமையை விட அதிகமான சொத்துரிமையை, முஸ்லிம் பெண்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் புரிந்து கொண்டோம்.
🌸 ஏன் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி உண்ப தில்லை என்பது முதல், முஸ்லிம்களின் விடுமுறை நாள்கள் எவை, முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மூடியவாறு உடையணிகிறார்கள் என்பது வரை யிலான பல்வேறு வினாக்களுக்கு விடைகள் பெற்றோம்.
🌸 சில முஸ்லிம் குடிமக்களை அவர்களது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி பல நாள்களாக, பல வாரங்களாக, ஏன், சிலநேரம் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைத்திருந்த போது, அவர்களிடமிருந்து இஸ்லாமின் உன்னதத் தன்மையை உணர்ந்தோம்.
🌸 பல்லாயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம் களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களது கடன் திட்டங்கள், கணக்குகள் அனைத்திலும் வட்டி தவிர்ந்து கொள்ளப்பட்டி ருந்தமையைக் கண்டு, எப்படி இப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.
🌸 சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐம்பெரும் தூண்களாகக் கருதப்படும் இஸ்லாமின் ஐந்து கடமைகளே முஸ்லிம்களின் ஆன்மிக வாழ்வை வழிநடத்துகின்றன என்ற கருத்தில் நம்பிக்கை யற்று இருந்தோம். ஆனால், அது உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.
🌸 இறுதியாக, 'என்னே, இனிமையான மக்கள்;
என்னே, இனிய மார்க்கம்' என்று அதிசயித்து, 'இத்தருணத்தில் இஸ்லாமையும் அதன் உயரிய கலாச்சாரத்தையும் எங்களுக்குக் கற்றுத் தந்த மைக்காக அமெரிக்க வாழ் முஸ்லிம்களுக்கு எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம்' என அறிக்கை முடிவுற்றிருந்தது.
(இலங்கை அல்ஹஸனாத் -ஜன 2017 இதழ் - இரண்டு பக்கக் கட்டுரையின் சுருக்கம்)
🌸 சுப்ஹானல்லாஹ்! என்னே, ஆச்சரியம்...!
'உளவு பார்க்கச்சென்றோம்; முழு நிலவு பார்த்து நின்றோம்' என்ற உன்னத நிலை பாருங்கள்...!
✏ அனைத்துப் புகழும் இறைவனுக்கே...!

Subscribe to:
Posts (Atom)